சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

மைத்ரேயன், ப்ளிஸ், ராமச்சந்திர கோபால், அருணகிரி, ஜடாயு


மைத்ரேயன்

திண்ணையில் நான் பூவாஹ் பற்றி எழுதியதை காட்டமான தாக்கல் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. நான் மிக மென்மையாகத்தான் உண்மையைச் சொல்லி இருக்கிறேன். பூவாஹ்ஹும் சார்த்தரும் என்ன அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதைப் பற்றி ஒரு முழுப் புத்தகமே இருக்கிறது. இது வெறும் தனிமனித ஆபாசம் இல்லை. அவர்கள் இருவரும் நிர்வாணமாக நடுத்தெருவில் கலவி செய்திருந்தாலும் எனக்கு அதைப்பற்றி ஏதும் பிரச்சினை இல்லை. உலகில் எத்தனையோ பித்துக்குளித்தனம் இருக்கிறது, இவர்களின் பித்துக்குளித்தனம் இந்த வகை என்று போயிருப்பேன். ஆனால் இவர்கள் தம் சூழலில் இருந்தவர்களை, அதுவும் இளைஞர்களை உருப்படாமல் அடித்து, தம் பாலுறவுச் சோதனைகளுக்கு அவர்களை ஆட்படுத்தியதைப் பற்றிப் படித்த பின்னரே இவர்களை எல்லாம் எப்படி சிந்தனையாளர்கள் என்று கருதுகிறோம் என எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. இங்கு ஒரு புத்தகத்தின் விமர்சனம், அவர்களுடைய கேவல வாழ்க்கை பற்றி.

http://www.guardian.co.uk/books/2008/apr/13/biography.simonedebeauvoir

The odd couple’s special relationship The extraordinary 50-year partnership of Jean-Paul Sartre and Simone de Beauvoir is to life brought to life in Carole Seymour-Jones’s A Dangerous Liason, says Elizabeth Day

இது கதோலிக்கப் பத்திரிகையின் பார்வையில் நவீன கர்த்தாக்களின் தனிமனித வாழ்வின் அவலங்களைச் சொல்கிறது. ஆமாம், ரூஸோ என்னும் ‘ஆழ்ந்த’ சிந்தனையாளர், உலக மனித குலம் எப்படி ஒன்று கூடி வாழவேண்டும், போராட்டங்கள் இல்லாத கதகதப்பான கர்ப்பப் பை போன்ற சுகம் தரும் கம்யூன் கட்டி அதில் உலகமே வாழ வேண்டும் என்ற அசாத்தியமான எதார்த்தத்தோடு சிறிதும் உறவில்லாத கற்பனை அவரது. மார்க்ஸுக்கு இந்தக் கற்ப்னை மீது மேலும் கட்ட முடிந்தது. ஆனால் எப்படிப்பட்ட மனிதர் இவர்? படியுங்கள்.

http://www.thecatholicthing.org/2010/modern-scoundrels.html

இதில் முரண்நகை என்னவென்றால் இதை எழுதும் கதோலிக்கருடைய மடாலயக் காவலர்கள் தனிமையில் என்னென்ன வக்கிரங்களுடன் உலவினார், உலவுகிறார் என்று இன்று நமக்குத் தெரியும் உலகெங்கும் சில ஆயிரம் குழந்தைகளையாவது சீரழித்திருக்கிறார்கள். இது சென்ற நூற்றாண்டில் மட்டும். முந்தைய இரண்டாயிரம் வருடங்களில் என்னென்ன அக்கிரமங்கள் நடந்தன என்று நாம் ஊகிக்கத்தான் முடியும்.

ப்ளிஸ்

கட்டுரையில் ஓவர் ஸிம்ப்ளிக்கேஷன்கள் இருக்கும்போல இருக்கே.

இறைவன் மற்றும் மதம் சார்ந்த சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்க நாத்திகர்கள் (க்மயூனிஸ்ட்டுகள்) முயல்வார்கள் என்ற தொனி தென்படுகிறது.

அத்தோடு டி ப்யூவாஹ், சாத்ரே மீது வைத்திருந்த மதிப்பைக் காதலாகக் காட்டுகிறது. இறுகிய கட்டுப்பாடுகள் உள்ள ஒரு சமூகமே சரியான சமூகம் என்ற மதிப்பீட்டை மறைவாய் இடுகிறது.

ஸாத்ரே அசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். அதே போன்ற வாழ்க்கையை வாழும் கேப்பிட்டலிஸ-லிபரலிஸ ஆட்களும் இருக்கிறார்களே.

கம்யூனிஸக் காழ்ப்பு நியாயமானதுதான். ஆனால், வெறுப்பின் அடிப்படையில் குற்றம் சொல்லுவதற்காகவே வலிந்து எழுதுவது கம்யூனிச செயல்பாட்டில் இருந்து வேறு பட்டதல்லவே. கார்டியன் அதைச் செய்கிறதா?

ஆனால், இந்த அக்கிரமங்கள் கிறுத்துவ இறையியலுக்கு எதிரானவை. எக்ஸிஸ்டென்ஷியலிசம் அப்படி எதையும் சொல்வதில்லை அல்லவா?

மைத்ரேயன்

கார்டியன் இடதுசாரி. அனேகமாக தீவிர சோஷலிசத்துக்கு அருகில் உள்ள பத்திரிகைதான். பத்தியாளரில் பலரும் குறைந்தது ட்ராட்ஸ்கியைட்களாக இருந்திருப்பார்கள். ஹிட்சென்ஸ் மாதிரி வலது சாரிக்குப் போய் இருக்க மாட்டார்கள், ஆனால் ஹிட்சென்ஸும் முழுவலது அல்ல. இரண்டு பக்கமும் கத்தி வெட்டுப் போடுபவர். இன்று இஸ்லாமிசத்துக்கு எதிராக முதலியத்தில் யூரோப்பிய பண்பாட்டுக் காவலராக இருக்க முயலும் குழுக்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். அவர்களில் பலர் வலது சாரிகள், பலர் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்று அவியல் கூட்டம். கார்டியன் அந்த வகை அல்ல. இன்னமும் ஜனநாயக சோஷலிசத்தில் நம்பிக்கை உள்ள, உழைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பத்திரிகை.

சார்த்தர் அண்ட் பூவாஹ் கூட்டத்தின் தத்துவங்கள் வேறு, சொந்த வாழ்க்கைத் தேர்வுகள் வேறு. நீங்கள் கூடதிக எளிமைப்படுத்தல் இருக்கும் கட்டுரை என்று எதைச் சொல்கிறீர்கள்? எந்தக் கட்டுரையை? கார்டியன் கட்டுரை ஒரு புத்தக விமர்சனம். புத்த்கத்தை எழுதியவர் இந்த ஜோடியின் வாழ்வில் நிறைய பேர் அவர்களது சுயமைய உளைச்சல்களால் பாதிக்கப்பட்டுப் பலியானார்கள் என்று சுட்டுகிறார். யானை நடந்தால் எறும்புகள் சாகத்தான் சாகும் என்ற வாதம் நமக்கு உதவுமா என்று யோசிக்கலாமே? யானைகள் சகல ஜீவராசிகளும் ஒன்றே என்று அரசியல் செய்வதில்லை அல்லவா?

ப்ளிஸ்

கார்டியனில் வந்த விமர்சனத்தைச் சொன்னேன். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் கார்டியன் எழுதும் விஷயங்கள் கலவையானவை என்று தெரிகிறது. ஆனால், எங்கு எப்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு திரும்புகிறது என்பது சுவாரஸ்யமான அனுமானங்களைத் தரக்கூடும்.

விமர்சனத்தில் காய்ச்சப்படும் கம்யூனிஸத்தை விட்டுவிடுவோம். ஆனால், சமூகக் கட்டுமானங்களை உடைப்பது குறித்து விமர்சனம் வைக்கும் பார்வை தெளிவாக இல்லையே.

மேலும், இந்த புத்தக விமர்சனம் புத்தக விமர்சனமாக இல்லை; புத்தகம் விமர்சிப்பதையே விமர்சிக்கிறது. இது என்னவகை விமர்சனம்?

விமர்சிக்கப்படும் புத்தகம் ஒருவித பயோக்ரஃபி. பெண் விடுதலை பேசிய பூவாஹ் சார்த்தருக்கு மாமா (மாமி?) வேலை பார்த்ததாலும், பற்றற்று வாழ்வதைப் பற்றிப் பேசி ஆனால் சார்த்தரின்மேல் பற்றோடு வாழ்ந்ததாலும் ஒட்டுமொத்த எக்ஸிஸ்டென்ஷியலிஸ தத்துவமே தப்பு என்று விமர்சனம் வாதிடுகிறது.

அது சரி என்று எடுத்துக் கொண்டாலும், பூவாஹ் போதித்ததில் இருந்து தவறி வாழ்ந்து இருக்கலாம், ஆனால் சார்த்தர் தவறவில்லையே. அவர் போதித்தபடிதானேவாழ்ந்திருக்கிறார்?

விமர்சனம் இந்த வித்தியாசத்தைப் பற்றிப் பேசவில்லையே.

வேறு: உங்களுடைய திண்ணை கட்டுரையை சற்று நிதானமாகப் படிக்க வேண்டும். பல கோணங்களில் இருந்து அணுகுகிறது.

மைத்ரேயன்

சார்த்தர் உலக விடுதலை, அதற்குத் தனிமனிதப் பொறுப்பு, மேலும் சமத்துவ சமுதாயம் இத்தியாதிகள் பற்றிப் பேசினார். கூடவே இன்னொருவர் என்பது நரகம் போல என்றும் பேசினார். இன்னொருவர் என்பதே நரகம் என்பதை அத்தனை சரியில்லாத கருத்து என்று அவர் தொழிலாளிகள் நடுவே இறங்கி ஒரு முறை இயங்கியபோது கண்டார் என்று இடது சாரிகள் ஒரு கதை சொல்கிறார்கள். அது உண்மையா புனைவா என்பதை ஆழமாக ஃப்ரெஞ்சு இலக்கியம், சரித்திரம் எல்லாம் படித்தவர்கள்தான் சொல்ல முடியும். நான் படித்த புத்தகங்கள் அந்த வகைச் சரித்திரத்தின் மீது கட்டப்பட்ட data mining projects. இவை எத்தனை உண்மை பொய் என்பதை ஃப்ரெஞ்சுக்காரர்களோ ஃப்ரெஞ்சு வரலாறு தெரிந்தவர்களோதான் சொல்ல முடியும்.

ஆனால் பல கோணங்களில் இருந்து இந்தப் பிரச்சினையை, authenticity என்பதை அணுக முயன்றேன். எனனால் இயன்றதெல்லாம் ஆங்கிலோ-சாக்ஸன் (ஜெர்மானியக் கூட்டப் பண்பாடு) அணுகுமுறைதான். இந்தக் கூட்டத்திற்குத் தனிமனித ஒழுக்கம் என்பது குறித்த உளைச்சல் கூடுதல். அது ஓரளவு ப்ராடஸ்டண்ட் பண்பாட்டு விழுமியம். சார்த்தருடைய பின்னணி என்ன கிருஸ்தவம் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் ஃப்ரெஞ்சு நாகரீகத்தில் கதோலிக்கப் பாதிப்பு அதிகம். அதனால்தான் டேகார்த் நாட்டை விட்டு ஓடினார். கார்டினல் ரிஷெல்யு (Richelieu) என நினைக்கிறேன், அவர் காலத்து ஃப்ரான்ஸில் ஒரே மதங்களின் சண்டை அல்லது கிருஸ்தவப் பிரிவுகளிடையே வெட்டு குத்துச் சண்டை. ப்ராடஸ்டண்ட்டுகள், ஜெசூட்கள், ஜென்ஸனியர்கள், இன்னும் என்னென்னவோ பிரிவுகள். கால்வினியர்கள் அருகாமையில் இருந்த டச்சுக் குடியரசில் கோலோச்சினார்கள். டேகார்த்- அவர் நல்ல வசதியான நிலக்கிழார் குடுமப்த்தைச் சார்ந்தவர்- சொத்துபத்துகளையெல்லாம் விற்று விட்டு எல்லாவற்றையும் அரசு உண்டியலாக்கிக் கொண்டு (Treasury bonds) அதில் வரும் வருமானத்தை வைத்து வாழும் சுலபமான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டார். டச்சுக் குடியரசில் இருந்த பல்கலைகளீல் கணிதம், குவிஆடிகள் பற்றிய ஒளி இயற்பியல் என்று பல அருமையான துவக்க கால இயற்பியலுக்கு அடிகோலிய சிந்தனையாளர்கள் இருப்பதால் அங்கு குடிமாறினார். அங்கும் மத அரசியல் துரத்தி, கடவுள் நிந்தனை என்ற பெயரில் சிறை வாசம் கிட்டும் போல இருந்ததால், ஸ்வீடனின் அரசிக்கு கணிதம், இயற்பியல் சொல்லித்தரும் ஆசிரியராக வேலை பார்க்கப் போய் நள்ளிரவில் அரண்மனைக்கு வரச் சொன்ன அரசியின் குறும்புத் தனத்துக்கு இரையாகி நிமோனியாவில் இறந்தார். ஏராளமான உளைச்சல்களுக்கு நடுவேதான் மேற்கின் அறிவியலும், சந்தேகப் பார்வையும், தத்துவமும், மதத்தின் பிடியில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டன. இன்னும் கிருஸ்தவம்தான் மேற்கின் அனைத்துத் தத்துவங்களுக்கும், சமூக் ஆய்வுகளுக்கும் நடுவில் இருந்து ஆட்டிப் படைக்கிறது. தொடர்ந்து எல்லா குழுக்களையும் ஒருபோல ஆக்கியே தீருவோம் என்ற வெறி பலபண்பாட்டியம் என்பதைக்கூட கிருஸ்தவ விழுமியங்களின் மூலம் இயக்குகிறது.

சார்த்தர்- பூவாஹ் விவகாரத்தை நீங்கள் அணுகும் விதம் சரியல்ல. அதில் வெறும் ஒழுக்கப் பிரச்சினை அல்ல நான் சுட்டுவதோ, கார்டியன் விமர்சனம் சுட்டுவதோ. திண்ணைக் கட்டுரையில் என்னால் தெளிவாகச் சொல்ல முடியாத் ஒரு முடிவு என்னவென்றால் இதை ஒழுக்கப் பிரச்சினையாக அணுகுவதல்ல நமக்குத் தெளிவு புகட்ட வழி. சக மனிதர்களைச் சிறிதும் சுரண்டக் கூடாது, இன்னொருவர் மீது நம்மைச் சுமத்துவதே வன்முறை என்று கருத்தியல் பிரசாரம் செய்தவர்கள் இருவரும். ஆனால் இருவரும், குறிப்பாக பூவாஹ், தன்னிடம் போதனை கேட்டு வரும் இளம் பெண்கள்- 14, 17 வயதினரைக் ‘கெடுத்து’ அனுபவித்து விட்டு, அவர்களைச் சார்த்தருக்கு அனுப்பி வைத்தார். சார்த்தருக்குக் கன்னிமையை அழிப்பதில் ஒரு ஆழ்ந்த அவா இருந்ததாம். அவருடைய ஒரு வைப்பு பின்னால் பேட்டியில் சொல்கிறார். ‘சார்த்தருக்குப் பாலுறவில் அத்தனை ஈடுபாடு இல்லை. அவருக்கு ஒவ்வொரு பெண்ணும் ஒரு வெற்றி வாய்ப்பு, ஆதிக்க முயற்சி’ என்று (conquest) இவர்தான் உலக மக்களுக்கு எப்படி ஆதிக்கமே இல்லாத, சுரண்டலே இல்லாத சமூகத்தைக் கட்ட வேண்டியது அவசியம் என்று போதிக்கிறார். ரூஸோ எப்படி உலகச் சமுதாயம் ஒருங்கிணைந்து அரவணைப்பில் வாழ வேண்டும் என்று போதித்தாரோ அதே போல. அவருக்கு ஐந்து ஆறு குழந்தைகள், பலவேறு பெண்களிடம். ஒரு குழந்தையைக் கூடத் தன்னுடையது என்று அவர் ஏற்கவும் இல்லை, அவற்றைப் பராமரிக்க எந்த உதவியும் செய்ததில்லை. இவர் சமூகத்தில் இருந்து தனிமனிதன் பிரிந்தது பெரும் சோகம் என்று கதை கட்டிய பெருமான்.

உலகைச் சாடும் ஒரு மனிதர் தன் சிறு அளவில் கூட ஒரு சாதாரணச் சுரண்டலை நிறுத்தத் தயாராக இல்லை. மு.க சமூக நீதி என்று கேட்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? சுஸானா ராய் மாவோயிஸ்டுகளைத் துப்பாக்கி ஏந்திய காந்தியர்கள் என்று சொல்வதைப் போல இருக்கிறது உங்கள் வாதம். பலரோடு படுத்தார் சார்த்தர் என்பதா நான் சொல்லும் குறை? இந்தக் கட்டுரையுமே அதையா சொல்கிறது? இல்லை.

பொறுப்பு என்பது என்ன? அறம் என்பது என்ன? அதை உலகுக்குப் போதிக்க முயன்ற பூவாஹோ, சார்த்தரோ அந்தக் கருத்துகளை என்ன அடிப்படையில் உருவாக்கினர்? 100 சதவீத அறம் சார்ந்த நடத்தை மொத்த சமுதாயமும் கோணலாக இருந்தால் சாத்தியம் இல்லை. அப்படி ஒரு பெரும் வன்முறையா 1950-80 ஃப்ரான்ஸில் இருந்தது? சட்டம் ஒழுங்கு விதிகள் ஏதுமில்லாத போர்ச் சமூகமா அது? இல்லையே. அதில்தான் ரேமண்ட் ஆரானில் துவங்கி பல நூறு ஃப்ரெஞ்சு அறிவாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன 14-15 வயதுப் பெண்களைக் கெடுத்துத்தானா வாழ்க்கையில் பூரணத்துவம் தேடினார்கள்?

எந்த ந்டுவயதினருக்கும் அவர் என்ன தத்துவம் பேசினாலும், அறம் கைக்கொண்டாலும் அடிப்படை மனித தர்மம் ஒன்று உண்டு. அது அறியாதவருக்குத் தன்னால் இயன்ற அளவு உதவுவது என்பது. மாறாக அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வாழ்வைக் குப்பையாக்குவது அறமாகாது. பணத்தையும், சொத்தையும் கொள்ளை அடித்தால் அது பெரும் அநீதி என்று சொல்வது சரி. உழைப்பைச் சுரண்டிக் கசக்கி வேலை வாங்கி, பட்டினி போட்டு உழைப்பாளர் குடும்பங்களை ஒழிப்பது அநீதி. வாலிபரை எந்த அன்பும் இல்லாது, உறவிலும் நாட்டம் இல்லாது வெறும் பாலுறவுக்கு மட்டும் பொருள் போலப் பயன்படுத்தினால் அது வெறும் ஒழுக்கக் கேடு மட்டும் என்றா வாதிடுவீர்கள்? அது என்ன சும்மா துடைத்துப் போடும் செயலதானா? அப்படியா சார்த்தர் தன் கருத்தியலில் சொல்கிறார்?

வன்முறை என்பது சுட்டுக் கொல்வதும், உழைப்பைச் சுரண்டுவது மட்டும்தானா? குடும்பத்தில் உள்ள பெண்கள்மீது ஆண்கள் செலுத்துவதும் வன்முறை என்று பூவாஹ் சொன்னதைப் படித்து ஆமோதித்துப் பிரசுரிக்கத் தூண்டியது யார்? சார்த்தர்தானே?

http://www.cjsonline.ca/reviews/socofphil.html

கூகுள் புத்தக இணைப்பு

ஒன்று ராண்டல் காலின்ஸ் உடைய புத்தகத்தின் விமர்சனம். அந்தப் புத்தகம் Sociology of Philosophies என்ற புத்தகம். முதல் சுட்டி அப்புத்தகத்துக்கு ஒரு சீர்தூக்கல். இரண்டாவது சுட்டி கூகிள் புத்தகத்தில் டேகார்த் இத்தியாதியோர் ஏன் டச்சு குடியரசுக்குப் போனார்கள் என்று விவரிக்கும் பக்கங்களைக் கூகிள் புத்தகத்தில் உள்ள காலின்ஸ் புத்தகப்பக்கங்களுக்கான சுட்டி.

ராமச்சந்திர கோபால்

கத்தோலிக்க பத்திரிக்கையில் வந்ததை இங்கே ரெபரன்ஸுக்காக குறிப்பிடுகிறேன்.

Jean-Jacques Rousseau (1712-1778) virtually invented the radical modern critique of existing societies, blaming everything on social influences and exonerating individuals, especially himself. He therefore sought to alter human behavior by creating a social contract giving the state a claim to represent the General Will. Rousseau’s totalitarian state would, in the name of humanitarianism, coerce citizens to submit to a new order that promised to regenerate mankind and eliminate perceived injustices, miseries, and disorders.

Rousseau believed he was a compassionate servant of the people directing mankind toward a higher state of being. “I feel too superior to hate,” he declared. “I love myself too much to hate anybody.” But in fact, he was a self-centered scoundrel who treated people like dirt. He condemned his five illegitimate children at birth to the dreaded Paris orphanage system in which the life expectancy for two- thirds of the inmates was less than a year. I. W. Allen has described Rousseau as a “masochist, exhibitionist, neurasthenic, hypochondriac, onanist. . . .incipient paranoiac, narcissistic introvert. . . .a kleptomaniac, infantilist, irritable, and miserly.”

Karl Marx (1818-1883), was a heavy drinking, bad tempered, disorderly slob who browbeat family, colleagues, and followers (he also had an affair with the housemaid). A rabid anti-Semite, he declared that if the world was to be saved, it must emancipate “itself from hucksterism and money, and thus from the real and practical Judaism.” “Marx,” Mikhail Bakunin observed, “does not believe in God, but he believes much in himself and makes everyone serve himself. His heart is not full of love, but of bitterness, and he has very little sympathy for the human race.” To judge by results, leaders of Marxist regimes seem to have followed the master’s life as much as his ideology.

Bertrand Russell (1872-1970), a philosopher and intellectual aristocrat, who made himself publicly notorious as an anti-nuclear crusader, was in private a dedicated lecher who despised and pitied average people and felt above the rules of society, except when he found them useful.

Jean-Paul Sartre (1905-1980), the super egoist, who, when not overindulging in alcohol and barbiturates, had long-term companion Simone de Beauvoir serve as his sexual procuress. Sartre and Beauvoir loudly pursued Nazi collaborators after World War II, but during the Nazi occupation they themselves got along fine with the authorities and lived very well indeed. Their books continued to be published and their plays produced.

ராமச்சந்திர கோபால்

இந்த விவாதங்களை தொடர ஒரு மெடா- அனாலிசிஸ் தேவைப்படுகிறது.

சுரண்டல் இல்லாத வாழ்க்கையை விரும்புவது தவறா தவறில்லையா? அல்லது சுரண்டல் இல்லாத வாழ்க்கை சாத்தியமானதா அல்லவா? சுரண்டல் இல்லாத வாழ்க்கையை விரும்புவது என்பது சோம்பேறித்தனத்தின் பக்கவிளைவா?

எந்த நீதியை போதித்தோமோ அந்த நீதியையாவது நடைமுறையில் பய்னபடுத்தியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?

அப்படி தானே போதித்த நீதியை தானே செய்யமுடியாதவர்கள், நடைமுறைக்கு ஒவ்வாத நீதியையே போதிக்கிறார்கள் என்றுதான் எடுத்துகொள்ளவேண்டுமா?

அருணகிரி

Define சுரண்டல். மெடா- அனாலிசிஸ்க்கு அது அவசியம்.

“எந்த நீதியை போதித்தோமோ அந்த நீதியையாவது நடைமுறையில் பய்னபடுத்தியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?” அப்படி தானே போதித்த நீதியை தானே செய்யமுடியாதவர்கள், நடைமுறைக்கு ஒவ்வாத நீதியையே போதிக்கிறார்கள் என்றுதான் எடுத்துகொள்ளவேண்டுமா?”

Good questions. பொதுவில் போதிப்பதை தனி வாழ்வில் கடைப்பிடிக்காமல் இருப்பது ஒன்று; பொதுவில் எதிர்ப்பதை தனி வாழ்வில் கடைப்பிடிப்பது இன்னொன்று. இரண்டுமே ஹிப்போக்ரஸி என்றாலும் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன்.

மைத்ரேயன்

அவ்வளவுக்கு உதாரண புருஷர்களாக/ மனிதர்களாக இருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இந்தக் கருத்தை கே.பாலச்சந்தர் கூட ஒரு படத்தில் கையாண்டு பார்த்திருக்கிறார். சத்தியம் என்பதை ரொம்பத் தொலைவு எடுத்துக் கொண்டு போக முடியாது, ஏனெனில் நம் சமூக வாழ்வு பூராவும் பொய்மை நிரம்பி இருக்கிறது. இது இன்றைய தமிழகம் என்றில்லை. மனிதர்கள் தம் அந்தரங்கம் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பிற மனிதரிடம் காட்ட முடியாத ஜீவராசிகள். ஏனெனில் குரங்குகளை எடுத்துப் பேசுவோம். ஒரு குரங்கு கூட்டத் தலைமைக்கு ஆசைப்படுகிறது என்று வைப்போம். கூட்டத் தலைமைக் குரங்குக்கு இதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆகாது, ஏனெனில் வளரும்போதே எந்தெந்தெக் குரங்குகள் தன் தலைமையை எதிர்க்கும் என்று அக்குரங்கு ஒரு ஊக முடிவு கொண்டிருக்கும். அதனால் அது அவ்வப்போது அந்த எதிர்காலத் தலைமைகளைத் தட்டி வைத்துக் கொண்டிருக்கும். தட்டுவது நாளாவட்டத்தில் கடினமாகிக் கொண்டிருக்கும்போது தலைக் குரங்குக்கு சரி இனி நம் காலம் ஆயிற்று என்று தோன்றத் துவங்கும். இதற்கு ஒரு காரணம்- அதாவது இந்த முறை ஓரளவு வெளிப்படையாக நடப்பதற்குக் காரணம், குரங்குகளிடையே இப்படி தலைமை தொடர்ந்து எதிர்க்கப்படுவது குறித்து ஒழுக்க, அறக் கருத்தியல் பிரச்சினைகள் ஏதும் இலலை. உணர்ச்சிகளை உடனடியே சந்தர்ப்பத்தைப் பொறுத்து வெளிப்படுத்துவது குரங்குகளின் இயல்பு மட்டுமல்ல, அதுதான் அந்தக் கூட்டத்தில் எதிர்பார்க்கப் படுகிறது எனலாம்.

நாம் விலங்கினத்திலிருந்து விலகி வருவதற்கும், அவற்றை விட பிரமாதமாக ஒரு ஜீவராசி என்ற அளவில் வெற்றி பெறுவதற்கும் அடிப்படைக் காரணமே நாம் குறியீடுகளை உருவாக்கி அவை மூலம் உலகை அறிவுக்கு ஆட்படுத்தி கருத்துகள் மூலம் உலகை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று தொடர்ந்து முயல்வதும், கல்வி என்ற ஒரு சாதனம் வழியே நேர்த்தொடர்பு இல்லாமல் கூட பல நூறு தலைமுறைகளின் அனுபவங்களை, முடிபுகளைக் கைமாற்றித் தருவதும் எனலாம். இதற்கு ஒரு காரணமே, நாம் குறியீடுகளுக்கு நம் உடனடி உணர்ச்சிகளை வணங்க வைப்பது என்று நான் கருதுகிறேன். குறியீடுகளுக்கே வணக்கம் என்றால் அவற்றின் தொகுப்பான கருத்துக் கட்டமைப்புக்கு ஏன் வணங்க மாட்டோம். வணக்கம் என்பதை ஏதோ பக்தி என்று புரிந்து கொள்ள வேண்டாம். அக்கட்டமைப்புக்கு நாம் உடன்படுவது அல்லது கற்க முனைவது அல்லது அது குறித்து மேலும் சிந்திபபது அல்லது அதை ஆராய்வது அல்லது எதிர்ப்பது எல்லாம் வணங்குவதைச் சாரும் என்று கருதுகிறேன். வணங்கி உட்காருலே என்று சொல்வார்களே அந்த வணக்கம்.

நம் opacity (non transparency) என்பது நமது உறவுகளை ஒரு புறம் வழவழப்பாக்கும் மசை. இன்னொரு புறம் உறவுகளைச் சிக்கலாக்கும் பசை. மூன்றாவது பக்கம் உறவுகளைக் கரியாக்கும் விஷம். நான்காவது பக்கம் உறவுகளைக் கணுவாக்கி, சங்கிலியாக்கி, மேல் செல்ல உதவும் தொடர் நூலேணி? இப்படி முழுதும் புரியாத தன்மை என்பது அத்தனையும் எதிர் அல்ல. பகுதி எதிர், பகுதி நலம்.

மேற்சொன்ன பன்முகத்தன்மையால்தான் ஆதரவும், பரிவும், பராமரிப்பும் சில உறவுகளில் கிட்டுகின்றன, சந்தேகமும், விலக்கலும், எதிர்ப்பும் வேறு சிலவற்றில் கிட்டுகின்றன. நம் அன்பர்களே கூட சில நேரம் தாங்க முடியாத பளுவாகி விடுவார்கள். அதே போல விரோதிகள் வேண்டியோ, வேண்டாமலோ நம் உதவியாளர்களாக ஆகக் கூடும். சுரண்டல் பல நேரம் தெரிந்தும் நடக்கிறது, தெரியாமலும் நடக்கிறது. பல்லடுக்கு சமுதாயங்களில் – அடுக்கு என்றால் மேல் கீழ் என்றுதான் அர்த்தப்பட வேண்டும் என்பதில்லை. வெங்காயத்தின் அடுக்கும் அடுக்குதான். உள்-வெளி. அடுத்தடுத்த அடுக்குகளும் அடுக்குதான். பிரபஞ்சத்தில் சூரியனை மையம் என்று கொண்டால் பல கிரகங்கள் சுற்றுவதை அடுக்காகப் பார்க்க முடியும். அது தூரம், உஷ்ணம் ஆகியவற்றால் அளக்கப்பட்டால் ஒரு வித உயர், தாழ் அடுக்காகும். ஆனால் அந்த அளவைகளைப் பயன்படுத்தாமல் பிரபஞ்ச மையம் என்று ஏதும் ஊகித்து அத்தோடு கிரகங்களை வைத்துப் பார்த்தால் அடுக்குக்கு என்ன அர்த்தம் கிட்டும்? அனேகமாக அந்த வேறுபாடுகளுக்கு ஒரு பொருளும் இராது. பூமியின் மேற்பரப்பில் உள்ள எறும்புக்குப் பிரபஞ்சம் எப்படி இருந்தாலென்ன? கொல்லாமல் இருந்தால் போதும்.

[அர்த்தம் என்பதே ஒரு விஷயம் நமக்கு அருகில் உள்ளதும், அதன் தாக்கம் நம்மீது உள்ளதும் ஆன தரங்களை, குணங்களைப் பொறுத்தது. மங்கோலியர் மத்திய ஆசியாவில் இருந்திருந்தால் இந்தியாவின் தென் கோடியில் நமக்கென்ன பிரச்சினை. அவர்கள் இருப்பதே கூட நமக்குத் தெரியப் போவதில்லை. ஆனால் படையெடுத்து வந்து நம்மை அழிக்க முனையும்போது அங்கு ஊடகத் தன்மை குறைந்ததால் எதிர்ப்பு வருகிறது, வன்முறை வருகிறது. நம்மைத் தெரிந்து கொண்டால் அவர்கள் வன்முறையை விடுவார் என்று சொல்ல முடியாது. தெரிந்த சேரரும், பாண்டியரும்தானே வெட்டிக் கொன்று கொண்டு வாழ்ந்தார்கள்? ]

சுரண்டல் ஒரு வன்முறை. ஒரு opacity induced process. ஒரு விதமான மற்றவனாக்கும் செயல். இந்த மற்றவனாகும் செயலைத்தான் மேற்சொன்ன ‘மேதைகள்’ நீக்க முடியும் என்று கருதினார்கள். தன்னுள்ளேயே, ஒரு மனிதனின் cognitive process இலிருந்தே பிரச்சினை துவ்ங்குகிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு மரத்தை நான் பார்க்கும் விதம் ஒவ்வொரு நாளும் ஒரு விதமாக இருக்க வாய்ப்புண்டு. சில நாள் என் உடல், மன ரசாயன, மின்சார இயக்கங்களுக்கு ஏற்ப மரம் படு உற்சாகம் தரும் பொருளாகவோ, அல்லது சலிப்பூட்டும் பொருளாகவோ, ஏன் பயப்படுத்தும் பொருளாகக் கூட இருக்கலாம். மரமே இப்படி என்றால் மனிதர் எப்படி இருப்பர்? அந்தப் பொருள், மனிதர், உறவுகள், குறியீட்டு அமைப்புகள், கல்வியில் படிந்த படிமங்கள், படுகைகள் என்று ஏதேதோ நம்முள் தொடர்ந்த இயக்கம் உண்டு. இவை அனேக நேரம் பிரமாதமான சொல் திறனும், சிந்தனைக் கூர்மையும் கொண்ட மனிதருக்கே வசப்பட்டு பணிந்து நிற்காத இயக்கங்கள். இவற்றைச் சக மனிதருக்கு உடனே புரியும் வகையில் வெளிப்படுத்த பெருவாரி மனிதருக்கு ஆகாது. மொத்த மனிதருக்குமே ஆகாது என்றே கூடச் சொல்வேன். அப்படி வெளிப்படுத்தி utterly transparent மனிதனாக நின்றால் கூட அது ஏற்கப்படும் என்று ஒரு அவசியமும் இல்லை. திகம்பரர்களைக் கல்லால் அடி என்று சொல்லும் ஈவெராவியர்கள் அல்லது எவாங்கலிய மூடர்கள் இருக்க வாய்ப்புண்டு. நிர்வாணம் என்று புத்தரும், மஹாவீரரும் தேடியது இந்த முழு வெளிப்பாட்டைந்த நிலை, அந்த நிலையில் புறமும் அகமும் ஒன்றாகி விருப்பு வெறுப்பு இல்லாது காரண காரியங்கள் இல்லாது போய் துவக்கமும் முடிவும் இல்லாதாகும். சக்கரம் உடைக்கப்பட்ட நிலையில் ஒரு ஜீவன் புறத்தோடு ஒன்றாகி விடும். அதற்குத் தொடரத் தேவை இல்லை, ஆனால் தன் உடலின் கட்டமைப்பின் மீது அதற்குத் தனிக்கட்டுப்பாடு ஏதும் இல்லாததால் உடலம் தொடர்கிறது. அறிவு, ஞானம் எப்படி ஆனாலும் வயிறு ஒரு உலை. தன் வேலையைச் செய்கிறது.

அந்தத் திகம்பர, நிர்வாண நிலை அனைத்துமனிதருக்கும் வேண்டும்போதெல்லாம் சாத்தியமானால், அல்லது எப்போதுமே உள்ள நிலையானால் இனப்பெருக்கம் என்பது நடக்குமா என்பது சந்தேகமே. ஜீவராசி தொடர்வதால் என்ன பயன்? பிரபஞ்சத்தின் பெருவெளியில் ஒரு ஜீவராசிக்கு என்னதான் பொருள் இருக்கும்? We are so insignificant, so why continue with the agonistic existence? இதில் ஒரு வேளை எக்சிஸ்டென்ஷியலிஸத்தின் துவக்கம் இருக்கலாம். அதாவது பொருளற்ற உயிர்ப்புக்குத் தற்காலிக அர்த்தங்களோடு வாழ்ந்தால் போதும், சங்கிலித் தொடர் கருத்தியல் சுமைகள் தேவையற்ற துன்பம். குரங்காக இருப்பது போதும் என்று நினைத்தாரோ என்னவோ சார்த்தர்.

ஆக சுரண்டல் என்பது இல்லாத கூட்டு வாழ்வு அனேகமாக இராது. இதில் விரும்பிச் செய்த சுரண்டலைக் குறைக்க வழி உண்டு. தெரியாமல் செய்யும் சுரண்டலை எப்படிக் குறைப்பீர்கள். கரை புரண்டு ஓடும் காவிரி உங்கள் ஊரை மூழ்கடிக்கப் போகிறதென்றால், அதை வடிக்க ஏதாவது செய்தாக வேண்டி இருக்கும். அணையைத் திறந்துதான் விடுவீர்கள். திறந்தால் முடிவில் உள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு செய்ய முயலலாம். ஆனால் அறிவித்தாலும் அவர்களும் ஊரை விட்டு ஓடித்தானே ஆகவேண்டும். பெருநகரத்தின் பல லட்சம் பேரை ஒப்பிட்டால் சில கிராமங்களின் சில ஆயிரங்கள் ஓடினால் பரவாயில்லை என்று முடிவு செய்வோம். இதை பகுத்து அறிதல் என்று எல்லாரும் ஒத்துக் கொள்வர். சிலரைத் தவிர. என்ன காரணத்தாலும் புழுவுக்கும் துன்பம் விளைக்கக் கூடாது என்று திகம்பரர்கள் கருதக் கூடும். அதை விடுவோம். ஆக சுரண்டல் என்பது விருப்பம் இல்லாமலும் நேரும். பல நேரம் அறியாமையாலும் நேரும்.

சுரண்டல் இல்லாத வாழ்வு என்பது சோம்பேறித்தனம் என்று கருதுவதை விட, கூட்ட வாழ்வின் இயல்பு தெரியாத வெகுளித்தனத்தில் பிறக்கும் ஆசை எனலாம். எந்தச் செயலிலும் கவனம் இல்லாத, ஊன்றிக் கற்க முடியாத ஒரு மனிதரை அல்லது மனிதர் குழுவை விட, ஊன்றிக் கவனித்து, செயல் திறனைக் கவனத்தோடு வளர்த்து, கூட்டத்தின் எதிர்கால நலனுக்குத் தேவையான வளங்களைப் பெருக்க வாய்ப்புள்ள ஒரு குழுவுக்கு கூட்டத்தின் வளங்களைக் கையாளும் வாய்ப்புகள் கூடுதலாகத் தருவதன் மூலம்தான் ஒரு கூட்டம் நின்று நிலைத்து வாழ முடியும். இது எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் சில தியாகங்கள் செய்யும் முறை. இன்று கிட்டுவதை இன்றே தின்று தீர்ப்பது என்பதான கூட்டு வாழ்க்கை முடிந்து சேமித்து வைத்து மாரிக்காலம், குளிர்காலம் ஆகியனவற்றைக் கூட்டம் தாண்டும் முறை எப்போது துவங்கியதோ அப்போதே முடிவுகளில் ஏறத்தாழ விநியோகம் என்பது துவங்கி விடும்.

திறன் பாகுபாடு என்பது தானாகத் தோன்றவில்லை. கூட்டத்தின் பிழைத்திருத்தல் என்பதை கூட்ட உணர்வோடு, கூட்ட வாழ்வு குறித்த தீர்க்கப் பார்வையோடு, குறியீட்டு வெளியில் சிந்தித்துக் கருத்துச் சங்கிலிகளை உருவாக்கிய போதே துவங்குகிறது. இதையே சுரண்டல் என்று பார்ப்பது ரூசோ, சார்த்தர், மார்க்ஸ் ஆகியோரின் குரங்கு வாழ்வு மீதான பிரேமை. இனம் இனத்தைச் சேரும். பிற பின்.

//பொதுவில் போதிப்பதை தனி வாழ்வில் கடைப்பிடிக்காமல் இருப்பது ஒன்று; பொதுவில் எதிர்ப்பதை தனி வாழ்வில் கடைப்பிடிப்பது இன்னொன்று. இரண்டுமே ஹிப்போக்ரஸி என்றாலும் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன்.//

அருணகிரி,

You are cutting to the chase, I see that. Also predefined variables are a bit easy to handle than unexplained. I spoke of the opacity of humans in another post. It extends to intentions, postures, actions, words, and feelings too. That may be why western analyses these days talks about performative ethics. நடைமுறைப்படுத்தப்பட்ட அறம் என்று அதை எடுத்துக் கொள்கிறேன். பேச்சில் அறமும், கருத்தில் அறமும், திட்டத்தில் அறமும், முனைப்பில் அறமும் இருந்தாலும் செயலில் அறம் இல்லாது போக வாய்ப்பு உண்டு. அறம் என்பதை இங்கு தற்காலிகமாக equity in dealing என எடுத்துக் கொள்கிறேன். [Deal என்பதே பரிமாற்றம் அல்லது கைமாற்றம் அல்லது உடன்படிக்கை என்பதாக ஒரு துவக்க நிலை உழைப்புப் பாகுபாடு அல்லது முயற்சிப் ப்குப்பைச் சுட்டுகிறது. உறவையும். ] சந்தை அளவு போகாமல் உணர்வு வழி உறவுகளில் கூட உறவுகளில் சமன்பாடில்லாமை துவங்கலாம். இருவர் பேசுகையில் ஒருவர் மிக்க கவனம் செலுத்திக் கேட்கையில் இன்னொருவர் தன்னுள் ஆழ்ந்திருப்பதைக் கூட அசமத்துவம் என்று சொல்லலாம். அங்கு தகவல் பரிமாற்றத்தில் சமன்பாடு இருப்பது கடினம். ஆனால் பெரும் திறன் உள்ள ஒருவர் சிறிது பேசினாலும் அதில் பொருள் கொடுப்பது அதிகமாகவும், இன்னொருவர் ஏகமாகப் பேசினாலும் அதில் பொருள் கொடுப்பது சிறிதாகவும் இருக்க வாய்ப்புண்டு. நேரம் அளவையாக வைத்து அசமத்துவத்தைத் தீர்மானிக்க முடியாது. எல்லா அசமத்துவமும் அசமத்துவம் அல்ல.

அதனால்தான் performative ethics என்று சொன்னார்கள் போலிருக்கிறது. Ethics என்பதை அறம் என்று நாம் மொ.பெயர்த்தாலும் அது சமத்துவம் என்று ஆகிவிடாது.

ஆக நாம் பயன்படுத்தும் சொற்களின் உள்ளே புகுந்து ஒரு பொது பயன்மொழியை உருவாக்க வேண்டுமோ என்னவோ.

நீங்கள் சொல்வதற்கு வருகிறேன். சொன்னதைச் செய்ய முடியாமல் போவதும், சொலவதைச் செய்யாததோடு அதை உடைப்பதாகச் செய்வதும் வேறு வேறு என்கிறீர்கள். வாக்குத் தவறுவது பிழை. வாக்கைச் செய்ய உத்தேசம் இல்லாமல் சொல்வது பிழை மட்டுமல்ல, குற்றம். அல்லது போலித்தனம்.

அதே நேரம் தன் சுய வாழ்வில் கடைப்பிடிக்காததும், கடைப்பிடிக்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காததுமான் ஒரு போக்கைத் தான் கொண்டிருக்கையில், அந்த கருத்தியலைக் கடைப்பிடிக்காத பல லட்சம் மனிதரைக் கட்டாய உழைப்பு முகாம்களில் போடுவது சரிதான் என்றே வாதிடும் ஒரு மனிதரை நாம் என்னவென்று கருதுவோம். ஸ்டாலினிய முகாம்கள், மாவோவிய முகாம்களை எதிர்க்காததோடு, அந்த வழிமுறை சரி என்றே வாதிட்டவர் சார்த்தர். பூவாஹும் மாவோயிஸ்டு என்று சொல்லப்படுகிறது.

வியத்நாம் கிராமத்து மனிதரைக் கொளுத்தியதற்கு உலகு பொறுப்பேறக வேண்டியது அவசியமானால், ஸ்டாலினிய முகாம்களுக்கும் உலகு பொறுப்பேற்க வேண்டும். சார்த்தர் ஏன் ஏற்கவில்லை, சொல்லளவில் கூட?

ப்ளிஸ்

உங்களது திண்ணை கட்டுரை சார்த்தர் முன்வைத்த தத்துவம் அவர் மற்றவரைச் சுரண்டவே பயன்பட்டது என்பதைக் காட்டுகிறது.

சார்த்தர் நடத்தியது அநியாயமாகத்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது. தனது தத்துவம் தன்னைப் பாதிக்காதவாறு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, தன்னிடம் இருந்து வேறுபட்ட வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அவர் வாழ்ந்திருக்கிறார்.

ஆனால், நான் கேட்கும் கேள்வி வேறு.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், மற்றும் கார்டியன் விமர்சகர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு விமர்சிக்கிறார்களா அல்லது குறை சொல்ல வேண்டும் என்று விமர்சிக்கிறார்களா?

கேள்விகள்: அந்தப் பெண்கள் சார்த்தர்-பூவாஹ் கொள்கையால் ஈர்க்கப்பட்டுச் சென்றார்களா, சுயவிருப்பத்துடன் தான் சென்றார்களா, நடப்பது என்ன என்ற தெளிவு அவர்களுக்கு இருந்ததா, பிற்காலத்தில் இந்தப் பெண்கள் அவர்களுக்கு சார்த்தருடன் நடந்த உறவைப் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடாமல், சார்த்தர் செய்தது அநியாயம் என்று சொன்னால் அந்த விமர்சனம் நடுநிலையானதா?

அது பற்றி அறிய விரும்புகிறேன்.

ராசகோ, நீங்கள் கேட்டுள்ளவை ஆராய வேண்டிய கேள்விகள். அத்தோடு இந்தக் கேள்வியையும் சேர்க்கலாமா?

சுரண்டலற்று இருப்பது நடக்காது எனின், சுரண்டலின் எல்லைகள் எது? அதை யார் வரையறுக்கிறார்கள்?

மைத்ரேயன்

ஒரு கால்வாசிப்பதில். மூளை எங்கோ போய் அலைந்து விட்டது. இழுத்து வந்து உங்களுக்குப் பதில் சொல்ல இன்னொரு பதிவு தேவைப்படும். 🙁 இனி ஏற்கனவே எழுதிய பதில். ________________________________________________________________________ நான் எக்சிஸ்டென்ஷியலிசத்தால் சார்த்தர் மற்றவரைச் சுரண்டினார் என்று திண்ணைக் கட்டுரையில் சொன்னேனா என்று எனக்கே தெரியவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அது சரியான கருத்தாகாது. சார்த்தரைப் பொறுத்தவரை எக்சிஸ்டென்ஸ் என்பது குறிப்பும் (Goal) திட்டமும் (plan) இல்லாத ஒரு நிலை, இயக்கமும் (function) கூட. இது ஓரளவு டார்வினியப் பார்வையில் பரிணாம இயக்கம் குறித்த கருத்துகளில் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.

Aside: That life does not have any teleologically specific goal. But survival according to conditions. Hence the seeds of structuralism are here. Or the two philosophies co-existed and nurtured each other. For althusser, existence is limited and enabled by structures that preexist the being, and often the being is overdetermined by structures. Of course these are all kind of the egg and hen riddles. If stuructures pre-existed how did life begin, and if life began how did it create structures out of nothing? Just saying interactive process brought about the two doesn’t cut, because Mxism, which informs both Sartre’s philosophy and Althussers during the 50s and 60s does not allow for invisible hand moving history. Purposive action or historical contradictions sharpening to a conflict move the society forward, according to this theology. A famous phrase, ‘in the final analysis’ often forcibly brings things to a conclusion in Mxism. So either or solutions are necessitated by the logic of such an approach. If that is the way Sartre has to argue, then he has to choose between the agent or the strucutre. He chooses the agent’s penchant for freedom and equity as the engine that creates action. However when it comes to taking responsibility, he resorts to the collective as the weight bearing pillar. The Individual has to abide by the collective guilt and act to mitigate the problems created by the collective actions. Exceptions are people like Sartre, because they are the beacons of light, but therefore are excluded from responsibility to moral action, self-discipline and so on. They create their own rules and live by it, because they know better. (Not that he claims these rights. I am attributing these to him, by looking at his behavior.)

I checked a book to see how much my intuitive leap into the unknown was appropriate or not. The book is rather dense, but if you don’t fall by the wayside, distracted by all the jargon, you can easily read it through. The trick is to look just for the answers to your questions, and not go with the author’s many obsessions. The author has too many bees in his bonnet and he is pursuing each bee to its logical flight path. As a result even though he has clearly delineated his explanations by headings etc (a la arunagiri’s method) it still doesn’t help if you read it with a short term agenda. Either you are with the author or not. Like G.W. bush, ‘my way or highway’. So you can ignore the author’s predilections and go for the jugular, or your favorite vein and drink the blood deeply. Fortunately he is intelligent enough to give an intro where he tackles many of the things we are discussing here. Particularly the relationship between Sartre, Foucault, Saussure are worth pondering. 2 books below deals with Sartre and Foucault. One article, short, talks about how structural linguistics worked in France for a while before dropping out in contest with other phenomena.

In my first paragraph (English one) I may have overstated my case for Sartre’s arguments for the ambiguity of existence. Apparently Sartre was more teleologically bound, and believed that the end results often explain the process better. Foucault calls such resoning as mistaken. Teleological thinking is necessary, as I rightly argued earlier, for goal oriented action. That is both Materialism and historicity coupled- historical materialism. But the legacy of phenomenology that Sartre inherited caused a conflict for him. In a way some theoreticians classify this as a conflict between synchronous approach and diachronous one. Historical materialism demands diachrony. Saussurean approach demands synchronous understanding. However langue (language) is a system of parole (speech). So has a hitory and structures that history builds into it. Saussure focused on parole to get at the process of how a langue is formed. A necessary step at the time he started it. But study of langue as a system, is what people like Claude Levi-Strauss and Chomsky later followed. They apparently operate under the assumptions that all humans have common biology and therefore their ways of comprehending the phenomena and reality must adopt similar systems of signs. The structures behind the signs must have a commnality.

Yes, they do. But they also have differences which aren’t insignificant. I have a lot more to say on all these. But I will leave this at this point. No point in loading up the short discussion with the ideas from many disciplines which, of course, I too don’t know all that well. I am like a dog that is licking at the ocean from the shore.

Sartre, Foucault, and historical reason: A poststructuralist mapping of history Thomas R. Flynn/ U of Chicago Press/ 2005 $30

Deconstruction and the remainders of phenomenology: Sartre, Derrida, Foucault, Baudrillard Tilottama Rajan

http://www.selectedworks.co.uk/structuralism.html

(தொடர்ச்சி) சார்த்தருக்கு இந்த இழுபறியில் பல நேரம் தனிமனிதத் தேர்வுகளில் சுதந்திரம் வேண்டும், அதைக் கொணரும் சமுதாயமே சுதந்திர சமுதாயம் என்று தோன்றி இருக்க வேண்டும். மற்ற நேரம் இருக்கும் அமைப்புகள் எல்லாம் மனிதரை விலங்கு போட்டுப் பிணைப்பவை, இந்த விலங்குகளை உடைத்து வேறு ஒரு சமுதாயத்தைக் கட்டி மனிதரைச் சுதந்திரத்தை அனுபவிக்க விடும் அமைப்பைப் பெற வேண்டும். அதற்கு கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு இயக்கம், தற்காலிகத் தணிப்பு (தனிமனித வேகங்களை) எல்லாம் தவிர்க்க முடியாதவை என்று அவர் எண்ணி இருக்க வேண்டும். இருத்த்லியலை ஒழுங்காக அவர் புரிந்து கொண்டிருந்தால், மனிதம் ஒரு போதும் அத்தகைய சுதந்திரத்தைப் பெறாது என்பது புரிந்திருக்கும். புத்தரோ, இந்துமதமோ, மஹாவீரரோ நிரம்ப தூலக்கடப்பியலால் நிரம்பிய கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அக்கருத்துகளில் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. மனிதம் உழற்சியில் இருந்து விடுபட் வாய்ப்பில்லை. வாய்ப்புகள் விருப்புகளை விடப் பன்மடங்கு அதிகரித்தாலும், விருப்புகளை வாய்ப்புகளுக்கேற்ப உயர்த்த மனிதருக்குச் சிறிதளவு நேரமே தேவைப்படும். இதை ஸ்பஞ்ச் பாப் ஸ்கொயர் பாண்ட்ஸ் என்கிற 7 வ்யதுக் குழந்தைகளுக்கான அமெரிக்க கேபிள் டிவி கார்ட்டூன் காட்சித் தொடர் கூட அருமையாக அடிக்கடிச் சுட்டுகிறது. அதன் விடை? சில நேரம் அபரிமிதமான வளத்தில் ஊறி அழுக்காகிப் பின் மீள்வது. பல நேரம் எந்தப் பெருவளத்தையும் ஏற்காது தூர எறிந்து, அன்றாட வாழ்வின் எளிமையில் ஊறி அதையே சுகமாகக் கருதக் கற்றுக் கொள்வது. எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் இருப்பதே வளம் என்று புரியும். செய்ய ஏதோ தினம் இருப்பதே ஒரு வித விடுதலைதான் என்று இந்த கார்ட்டூன் படம் தினம் சொல்கிறது.]

அல்லது டார்வினியப்பார்வையில் வாழ்வின் போக்கு குறித்து கிட்டிய முடிபுகள் உரமாக அணைக்கப்பட்டு இருக்கலாம். அதாவது மனித குலத்துக்குக் குறிப்பிட்ட இலக்கு என்று ஏதும் இல்லை, பிழைத்திருப்பது ஒன்றே இலக்கு. எதற்குப் பிழைத்திருப்பது என்ற கேள்விக்கு டார்வினியம் பதில் சொல்ல முனையவில்லை. இதைத்தான் மேலே சொன்ன கார்ட்டுன் சிறுவர் தொடரும் பின்பற்றுகிறது. சிறிது யோசித்தால் இந்து தத்துவத்தின் மையத்தில் இதுவே இருக்கிறது என்பதும் புரியும். தற்காலிக இலக்குகள் வாழ்வை முன் நகர்த்துகின்றனவோ இலலையோ, வாழ்வை நடத்த உதவும். தேக்கம் என்பது நாளாவட்டத்த்தில் சுகமான நிலையில் இருந்து க்ஷீணித்துப் பெரும் பளுவாக மாறும். அதற்காகவே தேங்காமல் தொடர்ந்து ஓட்டத்தோடு சேர்ந்து இருப்பது நல்லது. தேங்கும் wildbeast தன் இடம் பெயரும் கூட்டத்தின் அணைப்பில் இருந்து விலகியதும், தொடர்ந்து வரும் ஓநாய்களால் வேட்டையாடப்பட்டு உயிரிழக்கும். எல்லா இடம் பெயரும் மிருகங்களும் ஏதோ கட்டத்தில் ஓநாய்களுக்கோ, இயற்கை விபத்துகளுக்கோ, முதுமைக்கோ பலியாகித்தான் தீர வேண்டும். ஆனால் அந்தக் கட்டம் வரும்வரை ஒவ்வொரு மிருகமும் தான் சாஸ்வதம் என்பது போல ஓடிக் கொண்டிருப்பது அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. தன்னர்த்தம் பல நேரம் பொது அர்த்தத்தை விட வலுவானது. காத்திரமானது. வாசகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் எனக்கு அர்த்தம் பெறும் வகையில் எழுதிப் போவது இந்த வகை இயக்கம் என்று இந்தக் கணம் எனக்குப் புரிந்தது. இரண்டாம் உலகப் போரில் இருந்து மீண்டு வந்த ஃப்ரான்ஸில் வாழ்ந்த சார்த்தர்-பூவாஹ் ஆகியோர், மனித ’இயல்பு’ குறித்துப் பெருத்த சந்தேகங்களும், ஏன் அவநம்பிக்கையும் கொண்டிருப்பது எனக்கு இயல்பான நிலையாக, நகர்வாகத் தெரிகிறது. மேலே சொன்னபடி human nature என்பது ஏற்கனவே உள்ளுறைந்த ஒன்றல்ல, உருவாக்கப்பட்டது. இதே காலத்தில் From Wiki: According to Alison Assiter, there are four common ideas regarding structuralism that form an ‘intellectual trend’. First, the structure is what determines the position of each element of a whole. Second, structuralists believe that every system has a structure. Third, structuralists are interested in ‘structural’ laws that deal with coexistence rather than changes. And finally structures are the ‘real things’ that lie beneath the surface or the appearance of meaning.[2]

மேலே கண்ட கருத்துகளைப் பின்பற்றி எழுத நிறைய இருக்கிறது. கீழே உள்ளது முதலில் நான் மறுவினையாக எழுதியது. இப்போது அது எத்தனை பொருந்தும் எனத் தெரியவில்லை. அதை வெட்டி விடாமல் அனுப்புகிறேன். இருக்கட்டும்.

அவர்கள் போர்க்காலத்தில் பெருத்த நஷ்டம் அடைந்ததாக எனக்கு விவரம் இல்லை. [ஆனால் பூவாஹ் இளைஞரைக் கெடுத்தார் (Pederasty) என்று வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். அதை எதிர்த்து அவர் மனுக் கொடுத்துப் போராட்டம் நடத்திப் பார்த்து வெல்லவில்லை.] போர் முடிந்து ஓரளவு நிலை நிதானமானபோது இருவருக்கும் நல்ல பொருளாதார நிலைதான் இருந்தது. இலக்கியத்தில் ஸ்தானம். உலகெங்கும் புத்தகங்கள் விற்றன. பூவாஹ் ஒரு கல்லூரியில் போதித்தார். சார்த்தர் நிறைய கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள், முன்னுரைகள் எழுதி அவற்றுக்குப் பொருளும் ஈட்டினார். தவிர நாவல்கள், நாடகங்கள் விற்றன. இவை எல்லாம் இருவரும் வெறுத்த ‘அன்னியமான’ உலகின் patronage இல் வந்தவை. சந்தையின் ஊதியம். முகம் தெரியாத மனிதர்களின் போஷிப்பு. டேகார்த் இருந்த பாதிகிராம, பாதி நகர நாகரீகத்திலோ, இவர்களுடைய அபிமான சோசலிச சமுதாயத்திலோ இவர்கள் எழுத்துகள் பாராட்டப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குரியது. முந்தையதில் இவர்களது சொந்த வாழ்வின் bizarreness ஒரு விற்பனைக்குரிய தன்மையாக இருந்திருக்கலாம். சோசலிச சமுதாயத்தில் இவர்கள் பொறுப்புள்ள மனிதர்களாகித் தம்மைத் தேடி வந்தவர்களைப் பலியாக்காமல், தாமே பராமரிப்பாளர்களாக ஆகியிருக்கலாம். ஆனால் அப்போது இருத்தல் நிலை வாதம் எழுந்திராது.

அதனால்தான் நான் கேள்வி எழுப்பியது. சோசலிசத்தின் மீது அத்தனை நம்பிக்கை இருந்தால் அங்கே போய் அதைக் கட்டிப் பெரிதாக்க முயன்றிருக்கலாமே? ஸ்டாலின் காலத்து ரஷ்யா உலகத்துக்கு முன்மாதிரி என்றால், அது நாற்புறமும் தாக்கப்படுகிறது என்பது அவலம் என்று கருதினால், இவர்கள் இருவரும் அங்கே போய் அந்த துளிருக்குப் பாதுகாப்பு அளிக்கப் போராடி இருக்கலாமே? ஏன் அவலமான பூர்சுவா நாகரீகத்தில் இருந்து கொண்டு அத்தோடு உளைச்சல் பட்டுக் கிடக்க வேண்டும்? ரஷ்யாவில் ஃப்ரெஞ்சு மொழிக்கு நிறையவே பாதிப்பு இருந்தது. மொத்த ஆளும் வர்க்கமும் ஃப்ரான்ஸில் பயின்ற நாடு அது. அந்த வர்க்கம் அழிக்கப்பட்டு விட்டது என்றாலும், ஃபரெஞ்சுப் புரட்சியின் வித்துகள்தாமே ரஷ்யப் புரட்சிக்குக் காரணம். ஆக இந்த இரட்டையருக்கு ரஷ்யாவில் நிறையவே வரவேற்பு இருந்திருக்கும். அந்தப் பொறுப்பு ஏன் ஏற்கப்படவில்லை?

உங்கள் கேள்விகளுக்கு நேராகப் பதில் சொல்லாமல் எங்கெங்கோ போய் வந்தேன். இன்னொரு தடவை முயன்று நேராகப் பதில் சொலலப் பார்க்கிறேன்.

ராமச்சந்திர கோபால்

//இருத்த்லியலை ஒழுங்காக அவர் புரிந்து கொண்டிருந்தால், மனிதம் ஒரு போதும் அத்தகைய சுதந்திரத்தைப் பெறாது என்பது புரிந்திருக்கும். புத்தரோ, இந்துமதமோ, மஹாவீரரோ நிரம்ப தூலக்கடப்பியலால் நிரம்பிய கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். //

தூலக்கடப்பியல் என்று எதை சொல்ல வருகிறீர்கள்?

— முன்னரே நீங்கள் சொன்னது போல தனக்கு வேண்டுமென்பதற்காக உலகத்துக்கே அதே விஷயத்தை போதித்த கும்பல்கள் இவர்கள். ரோஸோவிலிருந்து சார்த் வரை நீளுகிறது இந்த பட்டியல். எல்லையற்ற தனி மனித சுதந்திரம் என்பது காபிடலிஸத்தின் உப விளைவாக இவர்களாலேயே கட்டமைக்கப்பட்டுவிட்டதோ என்னவோ.

கடவுள் செத்திருந்தால், ஒழுக்கமே இல்லை என்பது மேற்கத்திய சிந்தனையின் இயலாமைக்கான போதாமைக்கான அறிகுறி. (ஒருவேளை இதனால்தான், “மேற்கத்திய கலாச்சாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “What do I think of Western civilization? I think it would be a very good idea.” என்று சொன்னாரோ என்னவோ?) அதே போல கடவுள் செத்திருந்தால் ஒழுக்கமே இல்லை என்று சொல்வது கிறிஸ்துவ இறையியலால் முழுகையாக காயடிக்கப்பட்ட அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அதனால்தான் காயடிக்கப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக, சார்த் போன்றோர்கள் தப்பிக்கமுடியாத கிறிஸ்துவ நாத்திகத்திலும், அதனால் மூடப்பட்ட ஒழுக்கத்தின் கதவுகளுக்கும் வெளியே நின்று புலம்புகிறார்கள். தாங்கள் செய்வது எதுவானாலும், அது நியாயமானதே என்றும் ஆழ்ந்து கருதுகிறார்கள். தங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பவும் வேண்டியதில்லை. அதுவும் ஒரு ஒழுக்க நிலைப்பாட்டின் எதிர்பார்ப்பே என்றும் கருதியிருக்கலாம்.

மைத்ரேயன்

இந்த இடதுசாரி மேதைகளெல்லாம் ‘metaphysics’ என்ற சொல்லைக் கேட்டால் கொதிப்பார்கள். அதுவும் நம் ஊர் அரை வேக்காடு மார்க்சியர்களுக்கு அதை என்னவென்று தெரியாமலே அருவருப்பு. அதனால் அருமையான meta-physics என்கிற சொல்லை ‘இயக்க மறுப்பு வாதம்’ என்று முழி பெயர்த்து அதைப் பரப்போ பரப்பு என்று தமிழகம் எங்கும் பூசி வைத்திருக்கிறார்கள். மாட்டுச் சாணியைக் கரைத்துப் பூசினாலாவது anti fungal குணங்கள் சிறிது கிடைக்கும். மார்க்சியச் சாணி எதற்கு உதவும்? இருக்கிற குறை அறிவையும் மழுங்கடிக்கத்தான் சுயத்தை மறக்கத்தான் உதவும்.

அது தூல உலகைக் கடந்த இயல். physical world +meta. நியாயமாகப் பார்த்தால் அது தூல உலகைக் கடக்கவும் வாய்ப்பில்லை. தூலத்தை மிக உயரத்தில் இருந்து பார்க்கும் பார்வை. பொதுமைப்படுத்தலில் பல பயனற்ற பாகுபாட்டுப் பிரச்சினைகளைத் தாண்டி நின்று பார்க்கும் பருந்துப் பார்வை. மார்க்சியத்தின் மையமே மெடஃபிஸிக்ஸ் தான். ஏதோ ஒரு காலத்தில் அரசு உதிரும் என்பது என்ன ஒரு நம்பிக்கைதானே? முதலியம் வீழ்ந்து பாட்டாளிகள் கிளர்ந்தெழுந்து ஒரு ஜீவராசிக் கூட்டம் என்று அறிவர் என்பதும் அத்தனை தொலைநோக்குடையது, மெடஃபிஸிக்ஸ்தான். வழிமுறைகளோடு உறுதிப்படுத்தப்படாத எந்த hypothesis உம், எதை சோதனைகளால் சரிதப்பு கூடப் பார்க்க முடியாதோ அதெல்லாம் மெட ஃபிஸிக்ஸ்தான்.

தூலக் கடப்பியல் என்று நான் அதை மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரும் இதைச் சொல்லிக் கேட்டதில்லை.

ராமச்சந்திர கோபால்

metaphysics ஐ சமஸ்கிருதத்தில் தத்வமீமாம்சை என்று விக்கிப்பீடியாவில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது சரியா?

மைத்ரேயன்

மீமாம்சை என்பதற்குத் தமிழ் நிகர் என்ன? அது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது, ஏனெனில் மீமாம்சம் என்பதன் நேரான பொருள் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எனக்குத் தெரிந்து பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. உத்தர மீமாம்சத்தில் குமரிலரின் பார்வை ஒன்று, ப்ரபாகரரின் பார்வை ஒன்று. ப்ரபாகரருடைய முக்கியப் புத்தகம் முழுதும் கிட்டவில்லை என்று ஒரு புத்தகம் சொல்கிறது. (ராமகிருஷ்ணா மட வெளியீடு). குமரிலரின் விசாரணை ஆறு விதமாக ‘அறிதலை’ச் சொல்கிறது. பிரபாகரர் ஒன்றை விலக்கி ஐந்தைத்தான் சொல்கிறார். புரியாமை என்பதை அவர் விலக்குகிறார், அவருக்கு அது ஒரு நிரூபணமாகாது. (ரா.கி மடப்புத்தகம் இதை Non-apprehension- அனுபலாப்தி) என்று சொல்கிறது. பூர்வ மீமாம்சம் (கர்ம மீமாம்சம்) பற்றிய முக்கியப் புத்தகம்- பார்த்தசாரதி மிஸ்ராவுடையது என்று சம்ப்ரக்ஷானந்தா சொல்கிறார். சாலிகநாத மிஸ்ரா எழுதிய உரை ப்ரபாகரரின் கருத்துகளை விளக்குகிறது.

இந்த மொத்த அத்தியாயத்தில் தத்துவ மீமாம்சை என்ற சொல்லைக் காணோம். எங்கே பார்த்தீர்கள்? அது இம்சையாக இருக்க வழியில்லை. மீமாம்சா அல்லது மீமாம்ச என்று இருக்க வேண்டும் இல்லையோ? நான் பார்ப்பதெல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். சரியான சம்ஸ்கிருத வடிவம் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் நான் மொழி பெயர்த்தது அனேகமாகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த அத்தியாயத்தில் சில பத்திகள் மெடஃபிஸிக்ஸ் என்றால் என்ன என விவாதிக்கிறார்கள். இன்னொரு அத்தியாயத்தில் காணப்படும் வரி இது: The realism of Mimamsa is of course different from empiricism, which does not recognize suprasensible facts. Apparently kumarila’s mimamsa does not even acknowledge Isvara as the efficient cause of the universe! So much for it being the ‘Asthika’ approach to life. However Purva mimamsa does say karma can explain universe adequately and so holds that doing rituals (and being righteous in deeds) are enough to attain the final goal of release from Karma. Righteous deed sounds to me suspiciously like ethical behavior, to me. 🙂 Advaita does not accept this contention. Work can’t yield the eternal. What begins will need to end. So work induced heaven can’t be final release. Advaita argues that work produces self-knowledge, which then helps a person to seek Jnana and then final release. Apparently the influence of Mimamsa on us in modern life is great, due to British intrusion again. According to this book, much of the property rights and Civil code that control Hindu life in India through civil law was codified out of Mimamsa maxims by the British. Who knew?

ஜடாயு

// According to this book, much of the property rights and Civil code that control Hindu life in India through civil law was codified out of Mimamsa maxims by the British.

Who knew?//

The Hindu law was codified from the Dharma Shastra corpus, a vast body of literature that includes Smriti books of Narada, Parashara, Manu, Yagyavalkya etc., Grihya Sutras of Apastamba, Bodhaya, Gautama etc. & also some medieval, regional Smriti books. I dont think that can be called “Mimamsa maxim”.

The word Mimamsa literally means investigation / quest / search.

Purva Mimamsa is one of the 6 schools of Hindu philosophy (Darshana). Kumarila was the last pioneer of this school.

Uttara Mimamsa is nothing but another name for Vedanta.

If I remember Prabhakara’s school, actually called by a separate name called “Prabhakara Mimamsa” is a form of Bhedabheda Vedanta – similar to that of Bhatta Bhaskara who was defeated by Sankara – his school was also called Bhaskara Mimamsa.

ராமச்சந்திர கோபால்

இது தொடர் விவாதமாக இருக்கலாம்.

அடுத்து, மூலக்கட்டுரையில் நித்யானந்தா ரெபரன்ஸை தவிர்த்திருக்கலாம். ஏனெனில், ஏதோ நித்யானந்தாவை காப்பாற்ற முயல்கிறார் போன்றதாக புரிந்துகொள்ளப்பட்டுவிடலாம். ஆனால், தமிழகத்து அறிவுஜீவிகளின் மேல்நாட்டை வழிபடும் போக்குக்கு காண்ட்ராஸ்ட் செய்ய அது உதாரணம் மட்டுமே என்ற அளவில் சரியாக இருக்கலாம்.

— இந்த விவாதம் தொடரலாம்..

Series Navigation

ஜடாயு

ஜடாயு

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

மைத்ரேயன்


ஜெர்மனி, ஃப்ரான்ஸ் என்று பல யூரோப்பிய நாடுகள் பற்றிய கட்டுரைகள், புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சற்று முன் படித்தது ஒரு புத்தகவிமர்சனம். ஹென்ரி து மோந்தர்லாண்ட் (Henry de Montherlant) என்கிற ஃப்ரெஞ்சு நாவலிஸ்ட் 1963ல் எழுதிய ஒரு நாவலைச் சமீபத்தில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். அவர் 1936-1939களில் எழுதிய 3 நாவல்களை இந்த நாவ்லோடு ஒப்பிட்டு அட்லாண்டிக் மந்த்லி என்கிற பத்திரிகையில் விமர்சனம். ஓரளவு இது அவருடைய இலக்கிய இயக்கத்தையே எடை போடும் முயற்சியாகவும் உள்ளதெனலாம். இவர் பெயரை நான் இதற்கு முன்னர் கேட்டது கூட கிடையாது. உலக இலக்கியத்தில் எத்தனை புதைந்து கிடக்கிறதென்று இப்படி ஏதாவது கிடைத்தால்தான் தெரிகிறது.
கட்டுரையாசிரியர், மயர்ஸ் என்கிற விமர்சகர். சுளுவான நடையில் இலக்கியம், தத்துவம், அரசியல் என்று பல அரங்குகள்/ பரிமாணங்களில் இருந்து வரலாற்று இழைகளைக் கொணர்ந்து நல்ல கட்டுரையைப் பின்னியிருக்கிறார். கூடவே நாவலாசிரியரை முன்னர் விமர்சித்தவர்களையும், பிரசுரித்த நிறுவனத்தின் இயலாமைகளையும் பின்னி எடுத்திருக்கிறார். பிரபலர்களான ஆந்த்ரே ழீட் போன்று மொந்தர்லாண்ட்டை வியந்தவர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்.
இதுவரை இந்த விமர்சகரைப் படித்த, அல்லது பெயரைக் கவனித்த நினைவில்லை. இனி கவனிக்க முடிவு செய்யும்படியான தரமான விமர்சனம். நிறைய கயிற்று மேல் நடக்கும் லாகவமும் கொண்டது. ஒரு புறம் மொந்தர்லாண்ட்டை சிலாகித்த வண்ணம், அவருடைய குறைகளையும் சொல்லி, அவை விமர்சகர்கள் சொன்ன விதமான குறைகள் அல்ல, வேறு வகையானவை என்று சுட்டும் லாகவம். வேறு விதமான குறை என்று நம்மை ஒத்துக் கொள்ள வைத்தால் விமர்சகர்கள் தரமற்ற விமர்சனம் செய்தவர் என்று உறுதி செய்யும் விதமான வாதங்கள். புத்தக விமர்சனத்தில் கூட இத்தனை அரசியல், தத்துவம், சமூக விமர்சனம் எல்லாம் உண்டு, அதுவும் சுருக்கமாக நான்கு பக்கங்களில் (சுமார் 7 1/2 பத்திகள்தாம்.) முடிகிறது என்றால் சாமர்த்தியம்தானே?
இந்த கயிற்றுமேல் நடை ஏனெனில் மோந்தர்லாண்டிற்குச் சம காலப் புனைகதையாசிரியரும், சமீபத்தில் ஃப்ரெஞ்சு தத்துவாளர்களில் குறிப்பிடத் தக்கவர் என அறியப்பட்டு வருபவருமான, சிமோன் து பூவாஹ் (Simon de Beauvoir) இந்த நாவலாசிரியரை திமிர் பிடித்தவர், பெண்களை வெறுக்கும் தரமற்ற எழுத்தாளர் என்று அறிவித்து, அவருடைய ‘பெண்கள்’ என்ற மூன்று வரிசைப் நாவல்களைக் கிழித்திருக்கிறார் என்பதைக் கவனித்து, அதைக் கடக்க வேண்டிய அவசியம் விமர்சகருக்கு எழுகிறது.
இன்றைய இலக்கிய விமர்சனக் காலம் பெண்ணியத்தின் உச்ச கட்டக் காலம். இன்று உலகளாவிய நிலையில் எங்கும் செலாவணி உள்ள ஒரு சில விமர்சனக் கருத்தியல்களில் பெண்ணியம் ஒன்று. இனமைய எதிர் விமர்சனம், ஏகாதிபத்தியம்/ காலனியம் ஆகியவற்றுக்கெதிரான விமர்சனம், மேலும் அடையாள அரசியல் சார்ந்த விமர்சனம் என்று வெகுசிலவே உலகச் செலாவணி உள்ள கருத்தியல்கள். முன்பு போல வலது, இடது என்ற பாகுபாடுகள் அத்தனை வீரியம் உள்ளன அல்ல. மார்க்சியம் போன்ற காலாவதி ஆகி செல்லரித்துப் போன கருத்தியல்களும் இன்று உலகச் செலாவணி அற்றவை.
(செல்லரித்த என்றால் செல் ஃபோன் அரித்த என்று கருத வேண்டாம். ஒரு விதத்தில் அது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் டான் கிஹோட்டே (Don Quijote) போல, செல் ஃபோன் டவர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கிறார்கள் இன்றைய லுட்டைட்களான இந்திய மாவோ-இஸ்டுகள். )
உலக இலக்கிய நூல்களின் பெருவாரி வாசகர்களும் சரி, எழுதுவோரும் சரி பெண் எழுத்தாளர்களே. ஆண்கள் உலகெங்கும் புத்தகம் படிப்பதை நிறுத்தியாயிற்று என்றே கருத்து உலவுகிறது. பிரசுரகர்த்தர்கள் புத்தகங்களைப் பிரசுரிக்குமுன் ‘பெண்’ பார்வையில் அவை விற்குமா என்று யோசித்தே பிரசுரிக்கிறார்கள். மேலும் பிரசுர நிறுவனங்களில், உலகளவில் பெருவாரி பதிப்பாசிரியர்களும் பெண்களே என ஒரு தோற்றம் காணப்படுகிறது. மொத்தத்தில் பார்த்தால் பெண்ணியவாதிகளின் கருத்துகள் உலகச் சந்தையில் அனேக இலக்கியப் புத்தகங்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன என்றே சொல்லலாம்.
திரளுக்கு வைக்கோலாகப் போடப்படும் புத்தகங்கள் மட்டும் இப்படிப் பெண்ணியத்துக்குப் பயந்து ஒடுங்கி நிற்பதில்லை. அவை எப்போதும்போல மிருக உந்துதல்களுக்கு எத்தனை தீனி போடுகின்றனவோ அதைப் பொறுத்து ஏராளமாகவோ அல்லது சுமாராகவோ விற்கின்றன. பெண்ணியத்தால் அச்சுறுத்த முடியாத ஒரு வகைக் கூழ் இலக்கியம் புல்லரிப்பூட்டும் அல்லது கிளுகிளுப்பூட்டும் புனைகதைகள் (Romance fiction) . அவற்றின் இயல்பு சிறிது மாறி இருக்கிறதென்றாலும், அவையும் ஒன்றும் எளிதில் மரிப்பதாயில்லை.
மற்றபடி ‘இலக்கியம்’ என்று மேற்கோள்களில் அடக்கப்பட்டு அறியப்படும் வகை இலக்கியத்தில் ஸ்தானம் வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் சிமோன் து புவாஹ் போன்றாரின் பேனாமுனை தம்மை எப்படிப் பதம் பார்க்கும் என்று பயப்பட்டே ஆக வேண்டும். பூவாஹ் இறந்து போனாலும், அவருடைய புத்தகங்களும், கருத்துகளும் அனேகப் பல்கலைகள், கல்லூரிகள், ஏன் உயர்நிலைப்பள்ளிகளில் கூட போதிக்கப்படுகின்றன அல்லது பாடப்புத்தகங்களைத் தாண்டிய உபரி இலக்கியமாக வற்புறுத்தப்படுகின்றன. க்ல்லூரிகளிலும், பல்கலைகளிலும் சமூக அறிவியல் துறைகள் பெரும்பாலானவற்றிலும் பூவாஹ் ஒரு தலையாய அறிவாளராக அறிமுகப்படுத்தப்பட்டு நாயகியாக பீடத்தில் இருக்கிறார். எனவே அவருடைய கருத்தைத் தாண்டாமல் மயர்ஸ் போன்ற விமர்சகரால் ஒரு புத்தகத்தைச் சிலாகிக்க முடியாது.
இருந்தும் மயர்ஸ் இந்த எதிர்விமர்சனத்தை எளிதே தாண்டி விடுகிறார். எப்படி?
மோந்தர்லாண்ட் தன் நாயகப் பாத்திரத்தை (கோஸ்டல்ஸ் என்ற ஒரு எழுத்தாளப் பாத்திரம்) ஒரு சிங்கம் என வருணித்ததைப் பூவாஹ் முழு இகழ்ச்சியுடன் பார்க்கிறார். எந்தப் பெண்ணையும் மணக்கத் தயாராக இல்லாத கோஸ்டல்ஸ், ஒரு பெண்ணை மணம் செய்ய ஒத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் ஓடிப் போய்விடுகிறார். அதெல்லாம் நடக்கும் அதே நேரத்தில் இன்னொரு மெத்தப் படித்த ஒரு பெண் இவருக்கு மிக ஆர்வமீதூக்கிய காதல் கடிதங்கள் எழுதி வருகிறார், அதை கோஸ்டல்ஸ் இன்னொரு புறம் ஊக்குவித்தும் வருகிறார். இப்படி ஒரு ஓடுகாலி ஆணை அப்படி ஒரு சிந்தனையாளியான பெண் காதலிப்பதை பூவாஹ் அறவே வெறுக்கிறார் என்று சுட்டும் மயர்ஸ், அந்த வெறுப்பு வெறும் கருத்தியல் சார்ந்த வெறுப்பு மட்டுமல்ல, பூவாஹ்ஹின் சொந்த வாழ்வின் பிரதிபலிப்பும் என்று சுட்டுகிறார்.
சமீபத்தில் பூவாஹ் பற்றி எழுதும் விமர்சகர்கள் அவர் தன் சொந்த வாழ்வில் தன் கருத்துகளுக்கு எதிரான நடத்தையைப் பல பத்தாண்டுகள் கடைப்பிடித்தார் என்று சுட்டத் துவங்கி இருக்கிறார்கள். அவருடைய ’இரண்டாம் பால்’ [அல்லது ‘இரண்டாம் வகை’] (The Second Sex) என்று தலைப்புள்ள புத்தகம் உலகப் புகழ் பெற்று விட்ட ஒன்று. பெண்கள் உலகெங்கும் பல நாடுகள், பண்பாடுகளிலும் வரலாறு நெடுகவே, ஆண்களோடு உடற்கூறளவில் ஒப்பிடப்பட்டு, ஆண்களின் உடலை அளவையாக வைத்து மதிப்பிடப்பட்டு, அதற்கு ஈடுகொடுக்க முடியாதவராக நோக்கப்பட்டு அதனால் படிநிலையில் கீழே வைக்கப்பட்டு உள்ளனர் என்று சுட்டும் பூவாஹ், இந்த வகை உறவு, கிட்டத்தட்ட எஜமானர்-அடிமை உறவுமுறை, இதில் குடும்பம், பாசம், உறவு முறை எல்லாம் வெறும் முலாம் என்று கருதுகிறார். பெண்கள் இந்த உறவுச் சிக்கலில் மாட்டி அவதிப்பட்டாலும், தாம் எல்லாம் ஒரு வகை என்பதை அறிந்து ஒன்று திரண்டு தமக்கியல்பாகக் கிட்ட வேண்டிய சமநிலையைப் பெறப் போராடாமல், பல காரணிகளால் பிளக்கப்பட்டு, தாம் சார்ந்த ஆண்களோடு ஒன்றி இருப்பவராகக் கருதியவர் பூவாஹ். (ஹெகலிய வரலாற்றியல் அடிப்படை. மார்க்ஸியமும் இதில் உண்டு. ஆனால் பூவாஹ் தனக்கென தனிப்பாதையையும் வகுத்தே எழுதினார்.) தனிநபர் அளவில் தமக்காகவும், பெண்கள் என்ற தம் பாலாருக்காகவும் ஒன்றிணையும் உணர்வோடு எழுந்தால்தான் பெண்கள் சமநிலை அடைவர் எனக்கருதி அதற்கான வழிகள் பற்றித் தொடர்ந்து யோசித்து எழுதியவர் பூவாஹ்.
இப்படிப் பெண்களின் ‘விடுதலை’க்காகப் புத்தகங்கள் எழுதியவர் பெண்களைத் தொடர்ந்து மோசடி செய்யும் அப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி வேறெப்படி எழுதுவார்? அந்த விமர்சனத்தை மேயர்ஸ் நிராகரிக்கவில்லை. மாறாக, கோஸ்டல்ஸை இன்னொரு இடத்தில் மோந்தர்லாண்டே ஒரு கடுவாய் (கழுதைப்புலி, Hyena) என்றும் சித்திரிக்கிறாரே என்று சுட்டுகிறார். அத்தோடு, ஓரிடத்தில் உடலுறவு கொள்வதற்காகத் தன் முன்னால் படுக்கையிலுள்ள பெண்ணை இந்தக் கதாபாத்திரம், அறுப்புக்காக மேஜையில் கிடத்தப்படும் தவளை போல இருப்பதாக்க் கருதுவதாக மோந்தர்லாண்ட் எழுதுவது அந்தப் பாத்திரத்தை மெச்சவோ அல்லது உயர்த்தவோ அல்ல என்றும் சுட்டுகிறார். அதாவது மொந்தர்லாண்ட் தன் கதாநாயகரை மட்டும் இப்படிக் கறாராகப் பார்க்கவில்லை, ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் அவரால் எல்லாரும் கடும் விமர்சனப் பார்வையில்தான் பார்க்கப்படுகிறார்கள். மொந்தர்லாண்ட் வெறும் பெண் வெறுப்பாளர் இல்லை, ஆண்களும் அவரிடம் தப்பிப் பிழைக்கவில்லை. மொந்தர்லாண்ட் மனிதர்கள் மீது அத்தனை நம்பிக்கை உள்ளவரல்ல, தன் சொந்த வாழ்வில் அவர் தன் நட்பு வட்டத்திடம் அருமையாகவே பழகினார் என்ற போதும், அவர் மனிதரிடம் இருண்ட நோக்கைச் செலுத்தியவர் (Misanthropic not Misogynist) என்பது மயர்ஸின் வாதம். இத்தகைய அவநம்பிக்கை இரண்டாம் உலகப் போர், தவிர போருக்குப் பிந்தைய பல பத்தாண்டுகள் ஃப்ரெஞ்சு எழுத்தாளரிடம் நிறையவே வெளிப்பட்டன என்பதை மயர்ஸ் சுட்டி, இது ஒரு நீண்ட கால ஃப்ரெஞ்சு இலக்கிய மரபு என்றே கருதுகிறார்.
இதில் விசித்திரம் என்னவென்றால், பூவாஹ் மொந்தர்லாண்ட்டையும் அவரது பாத்திரத்தையும் பெண் வெறுப்பாளர் என்று கருதி ஒதுக்க முயல்கிறார். மயர்ஸ் இல்லை, இல்லை, அவர்கள் இருவரும் பெண் வெறுப்பாளர் மட்டுமல்ல, ஆண்களையும், ஏன் எல்லா மனிதர்களையுமே ஒன்றும் நேசிக்கவில்லை என்று பூவாஹ்ஹின் விமர்சனத்தை விடக் கடுமையான ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார். அதே நேரம் அந்த விமர்சனம். பூவாஹ்ஹின் இலக்கிய நுட்ப அறிவுணர்வு அத்தனை சிலாக்கியமானதல்ல என்று நமக்குச் சுட்டி விடுகிறது மட்டுமல்ல, இப்படி ஒரு இருண்மை ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் 20 ஆம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்களிடம் சகஜமாகக் கிட்டுவதுதான், இதை ஏதோ தனிப்பட்ட களங்கம் என ஒதுக்கி விட முடியாது என்றும் சுட்டி, பூவாஹ்ஹின் இழிப்பிலிருந்து மொந்தர்லாண்டை மீட்டும் விடுகிறார். இதைத்தான் கயிற்று மேல் நடை என்று முன்னால் சுட்டினேன்.
இது பூவாஹுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது வேறு விஷயம் என்பது மயர்ஸின் வாதம். அதற்கும் மேல் போய் மயர்ஸ் இன்னொன்றும் செய்கிறார். அதுதான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணமே.
கோஸ்டல்ஸ் என்ற பாத்திரத்தை விமர்சிப்பதையும் விட பூவாஹ் மேலும் எரிச்சலுடன் விமர்சித்த ஒரு பாத்திரம், கோஸ்டல்ஸுக்கு காதல் கடிதம் எழுதிய மெத்தப் படித்த பெண் பாத்திரம் (Blue stocking என்று வருணிக்கப்படுபவர்). இந்தப் பெண் பாத்திரத்தை விமர்சிக்க பூவாஹ் போன்ற ஒரு நபருக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே அவருடைய வாதம். பூர்சுவா மரபுகளை நிராகரித்தவர் பூவாஹ்ஹும், சார்த்தரும், இன்னும் பல இடதுசாரி விமர்சக/எழுத்தாளர்களும் மட்டுமல்ல. காம்யு, ழீட் மற்றும் மொந்தர்லாண்ட் போன்ற பல கட்சி அல்லது சாரிச் சார்பு இல்லாத எழுத்தாளர்களும் இந்த வகை விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பூவாஹ் மறக்கிறார் அல்லது கவனிக்கவில்லை.
பூவாஹ் ஒரு புறம் பெண் விடுதலை குறித்துப் புத்தகங்கள் எழுதிக் கொண்டு, இன்னொரு புறம் தன் நெடுநாள் காதலனும், தன்னெறி தவிர வேறு எந்த நெறியும் மனிதருக்குத் தேவை இல்லை என்றும் வாதிட்டுக் கொண்டிருந்த சார்த்தருக்கு (Jean Paul Sartre) அவர் அனுபவித்துக் களிக்க இளம் பெண்களை ‘அனுப்பிக்’ கொண்டிருந்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரின் ‘அறிவுஜீவி’ ஸ்தானம், மேலும் ’புரட்சிகர’ எழுத்துகளைப் படித்துப் புளகாங்கிதம் அடைந்து இவர்களிடம் சிட்சை பெற்றால் தம் வாழ்வு உன்னதமாகும் என்று மூடத்தனமாக நம்பி வந்து சேர்ந்த இளம்பெண்கள் பலர். அவர்களைத் தானும் ’கெடுத்து’ (seduce) அனுபவித்து, தனக்கு ருசி தீர்ந்தபின், சார்த்தருக்கும் அனுப்பி வைத்த பெருமாட்டி பூவாஹ் என்று அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகளை வெளியிட்டு உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள் ஃப்ரெஞ்சுப் பிரசுரகர்த்தர்கள். ஆம், பூவாஹ் இரு பாலாரிடம் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர். எனினும் நெடுநாள் உறவுகள் அல்லது தொடர்ந்த உறவுகள் என்பதை ஆண்களோடுதான் அதிகம் கொண்டிருந்தார். வரம்பு மீறுதல், அல்லது மரபை உடைத்தல் என்ற கணக்கில் இருபாலுறவுகளைப் பயின்றாரா என்பதை மேலும் படித்தால் காணலாம்.
இதை அவதூறு என்று விலக்க தமிழக அறிவு சீவிகள் யாரும் எழுந்து வரக்கூடும். இந்தக் கடிதங்களைப் பிரசுரிக்க வழி செய்ததே பூவாஹ்ஹின் வாரிசு, வளர்ப்புப் பெண் சீல்வீ லு பான் (Sylvie Le Bon) என்பவர்தான்.
பூவாஹ் உடைய பல முக்கியக் கருத்தாக்கங்களில் அவருடைய அறம் குறித்த விசாரணைகள் மெச்சிக் கவனிக்கப்பட்டவை. எது அறம் என்பதைக் குறித்து ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். ஆனால் அதன் தலைப்பு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ’இருதலைக் கொள்ளி நிலையின் அறம்’என்று அதை மொழிபெயர்க்கலாம். (The Ethics of Ambiguity) இன்னும் செம்மையாக மொழி பெயர்க்க முடியலாம். ஆனால் இங்கு நாம் கருதவிருக்கும் பொருளைக் குறித்தவரை இந்தத் தலைப்பு பொருந்தும் என்பதால் இத்தோடு விடுகிறேன். இருதலைக் கொள்ளி நிலை என்பது ஒன்றும் மோசமில்லை, கறாராக முடிவு எடுத்து, பிடிவாதமாக அதில் ஊறி இருந்து பெரும் தவறுகளைச் செய்வதை விட இருதலைக் கொள்ளியாக இருப்பது மேல் என்பதாக முடிவு செய்கிறார். அதைத் தவிர அறம் என்பதே எப்படி பலவகையில் கத்தி முனை நடப்பு, அதில் கறார் நிலைபாடுகள் சாத்தியமில்லை என்பதாகவும் இவருக்குத் தோன்றுகிறது. என்றாலும் இவர் ஒரு மாவோயிஸ்டாக இருந்திருக்கிறார் என்றால் அதை என்ன சொல்வது?
அதேபோல, இவருடைய நெடுநாள் அன்பரான-(சரி, காதலர், மணம் செய்துகொள்ளாது இணையாக வாழ்ந்தவர், ஆனால் பூவாஹ் என்றும் தனக்கென ஒரு வீடு (அபார்ட்மெண்ட்) வைத்திருந்தார்.)- சார்த்தர்தான் உலக மானுடருக்கு விடுதலை பெற்றுத் தர ஸ்டாலினியம் நல்ல வழி என்றும், ஸ்டாலினின் கொடும் பாசறைகள் பற்றிய விவரங்களெல்லாம் உலகுக்குத் தெரிந்த பின்னும் ரஷ்யக் கொடுங்கோலுக்கு ஆதரவு தெரிவித்தும் நின்ற பெருமான்.
இதைச் சொல்வதற்கும் நம் நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவிப்பர். உண்மை என்னவென்றால் சார்த்தர், பூவாஹ் சொன்ன வகை இருதலைக் கொள்ளி அறத்தைக் கைப்பிடிக்க மாட்டாதவர். ஏனெனில் அவருக்கு ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டும் என்பதான ஒரு மனநிலை இருந்திருக்கிறது. இதனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக நிறைய நிலைப்பாடுகளைக் கைக் கொண்டிருக்கிறார். சாராமல் விலகி நிற்பதை அவர் குற்றம் எனவே கருதுகிறார், என்றாலும் தன் வாழ்நாளில் பல பத்து வருடங்கள் உறுதியான நிலைபாட்டைக் கொள்ள முடியாத இருதலைக் கொள்ளி நிலையில் இருந்தவர்தான் அவர். முதலியமும், சமூக ஜனநாயகமும், சோவியத்தியமும், மாவோயிசமும் எல்லாமே தோற்றுப் போனது மட்டுமல்ல, மானுடருக்கு மனிதம் லபிக்காத வகைகளில் எதிரிடைகளாகவே இருக்கின்றன என்பதை அவர் கண்டிருந்தும் அவ்வப்போதைய பிரச்சினைகளுக்கு அவ்வப்போதைய நிலைபாடுகள் எடுப்பது சரியே என்று கருதியவர். ஃபூகோ பற்றிச் சொல்கையில் மற்றவர்கள் அவசியமான நிலைகளில் கவனம் செலுத்தி பிறழ்வுகள், நெருக்கடிகளை ஓரம் கட்டி வரலாறு, தத்துவம், சமூகவியல் போன்றனவற்றை இயக்கியபோது, பிறழ்வு, நெருக்கடி நிலைகளில் உள்ள அவசியத்தைக் கவனித்துத் தம் ஆய்வுகளை நடத்தியவர் அவர் என்று சொல்கிறார்கள். அதே போல சார்த்தர் மனித வாழ்வில் உள்ள தற்காலிக நெருக்கடிகளில் கவனம் செலுத்தியவர்.
இப்படி எழுதினால் அவர் என்ன செய்தார் என்பது சட்டெனப் புரியாது. விளக்கினால் புரியலாம். நேற்று சோவியத் யூனியனில் முழு விமர்சன சுதந்திரம் இருக்கிறது என்று எழுதுவார். இன்று ஸ்டாலினியத்தால்தான் கம்யூனிசம் மலட்டுச் சிந்தனையாயிற்று என்று எழுதுவார். ஹங்கேரியில் ஸ்டாலினிய அடக்குமுறை மனித விடுதலைக்கே இழுக்கு என்று நாளை எழுதுவார். ஆனால் ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒரே மேடையில் இணைந்து உலகப் புரட்சிக்குக் கொடி பிடிப்பார். பின் ரஷ்யக் கம்யூனிசத்தைக் கைவிட்டு மாவோயிஸ்டுகளின் பத்திரிகையைத் தெருவில் கூவி விற்று ஸ்டண்ட் அடிப்பார். இப்படி ஒருவர் இருந்தால் நம் ஊரில் அவரை நம்பி எதையும் செய்ய முடியாது, மண் குதிரை என்று சொல்வார்கள். ஏன் ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களே அவரை நாயே பேயே என்றெல்லாம் ஏசி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், மேடைப் பிரசங்கங்கள் செய்திருக்கிறார்கள்.
பாமரர் நம்பகத்தன்மையை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் பாமரருக்கு எப்படி விடுதலையை அடைவது என்று சொல்லிக் கொடுப்பதே தம் வாழ்நாளின் மொத்த லட்சியமும் என்று பறை சாற்றும் ‘புரட்சியாளர்களோ’ சார்த்தரின் இந்த அந்தர்பல்டிகளெல்லாம் ‘இயங்கியல்’ சிந்தனை என்றும், வரலாற்று நிர்ப்பந்தங்கள் என்றும் வெள்ளை அடித்து மறைக்கப் பார்ப்பார்கள். உண்மை இரண்டுக்கும் நடுவில் உள்ளது, அதாவது சார்த்தருடைய கருத்துகள் எல்லாம் கோணல் அல்ல. ஏதோ ஒரு கோணத்தில் அவர் மனித விடுதலையை விரும்பினார், அதற்கே செயல்பட்டார். ஆனால் எப்படி அதை அடைவது என்று அறிய அவரை நம்பி எதிலாவது நாம் இறங்கினால் நாம்தான் வடிகட்டின முட்டாள்களாவோம். அவருக்கு அப்படி எந்த வழியும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ‘விடுதலை’ என்ன குணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விலாவாரியாக அவர் விளக்கியும் இருக்கிறார் என்று தெரிகிறது. அவற்றை நாம் படிப்பது நமக்கு உதவக் கூடும். அவருக்கு ஊகமாகத் தெரிந்த எதையும் அவர் சொற்களால் போட்ட பாதைகள் வழியே அடையத் தீவிரமாக முயன்றிருக்கிறார். 3000 பக்கங்களுக்கு மேலாக ஒரு இலக்கிய விமர்சனம் எழுதியவர் அவர். கூஸ்தாவ் ஃப்ளூபேர் (Gustave Flaubert) என்கிற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் பற்றிய ’குடும்ப மூடன்’ (The Family Idiot) என்ற விமர்சனப் புத்தகக் கொத்து ஒன்றை பல ஆண்டுகள் எழுதினார். காஃப்கா, நபகோவ், குட்ஸீய (Coetzee), ஜேம்ஸ் உட் போன்ற பல பிரபல எழுத்தாளர்களால் உலக நவீன இலக்கியத்தில் ஒரு பெரும் ஆளுமை என்று புகழப்படும் ஃப்ளூபேரை சார்த்தர் உள-ஆய்வியல் பார்வையிலும், மார்க்சியப் பார்வையிலும் இணைந்து விமர்சிக்க முயன்ற பெரும் கொத்துப் புத்தகம் அது. அது பூர்த்தி செய்யப்படாது நின்றது. மூவாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியும் அவரால் எதையும் விளக்கவோ நிறுவவோ முடியவில்லை என்று பலர் விமர்சித்திருக்கிறார்கள். இப்படி சார்த்தரின் உளைச்சல்களின் மையத்தில் இருந்த பலவும் 19ஆம் நூற்றாண்டின் கருத்தியல் பிரச்சினைகள். ஃபூகோ ஒரு கட்டத்தில் சார்த்தர் 19ஆம் நூற்றாண்டின் மனிதர், 20 ஆம் நூற்றாண்டை அறிந்து அது குறித்து சிந்திக்க முயன்று தோற்றவர் என்றே குறிக்கிறார்.
இந்த அறிவுத் திலகங்களின் சொந்த வாழ்க்கையை அதிகம் ஆழமாகப் பார்த்து விடக் கூடாது. ஒரே இருட்டாகத் தெரியும், அல்லது நிறைய மனோவக்கிரங்கள்தாம் நம் கண்ணில் படும். ஏனெனில் உலக மனிதருக்கு அறம், தனிமனிதப் பொறுப்பு என்பது குறித்துப் பெரிய லெக்சரெல்லாம் அடித்த இவர்கள் இருவரும் தம் சொந்த வாழ்வில் தம்மைச் சுற்றிய பலரைச் சுரண்டத் தயங்கவில்லை என்பதாகவே நான் அறிகிறேன். இது குறித்து நிறைய பேர் பேசுவதில்லை. ஆனாலும் தகவல் இன்று கிட்டி வந்துள்ளது. அதே நேரம் எல்லாரையும் இவர்கள் சுரண்டவும் இல்லை. சார்த்தர் தன் ‘வைப்பாட்டிகளாக’ இருந்த சில பெண்களுக்கு அவர்களோடு தொடர்பு விட்டுப் போன பின்னும் பல பத்தாண்டுகள் தொடர்ந்து ‘மானியங்கள்’ கொடுத்துக் கொண்டிருந்தார் எனவும் தகவல் கிட்டுகிறது. ஆக பாம்பும் இல்லை, பழுதையும் இல்லை. எப்போது கொட்டுவார் என்பதை மட்டும் நம்மால் ஊகிக்க முடியாத விசித்திரங்கள் இருவரும்.
தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இந்த இரண்டு ‘அறிவுத் திலகங்களுக்கு’க் கொடி பிடிக்க ஏராளமான பல்கலை மாணவர்களும், அறிவு சீவிகளும் உண்டு. அதாவது இவர்களுடைய கொள்கைகள், கருத்துகளுக்கு எதிராக அவர்களே நடந்ததை எல்லாம் சுத்தமாகக் கவனிக்க மறுத்து, அவர்கள் என்ன சிந்தித்தார்கள் என்பதைப் பாருங்கள், எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்க்காதீர்கள் என்று வாதிடவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். எனக்கு அந்த வாதம் ஏற்புடையது அல்ல. ஆனாலும் இந்த இரு சிந்தனையாளர்களும், தம்மளவில் என்ன குப்பை மனிதர்களாக இருந்தாலும், சிந்தனை என்று வரும்போது நிறைய நுட்பமாகச் சிந்திக்க முடிந்தவர்கள் என்பதை நானும் ஒத்துக் கொள்வேன்.
மேற்படி நம் நாட்டு அறிவு சீவிகளுக்கு என் கேள்வி என்னவாக இருக்கும்? இப்படி அன்னிய அறிவு ஜீவிகளுக்கு நீங்கள் கொடுக்கும் உரிமைகளை இந்திய சமூகத்தில் இருக்கும் அறிவாளர்களுக்கோ, இந்து மதஸ்தாபனங்களில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? இரண்டும் கெட்டான் நிலை மேற்படி ‘திலகங்களின்’ அற்புதச் சிந்தனையாகக் கருதப்படும் என்றால் இரண்டும்கெட்டான் நிலை இந்தியர்களுக்கு மட்டும் ஏன் இழிவாகக் கருதப்படுகிறது? வெள்ளையருக்குக் கூடுதல் உரிமம், இந்தியருக்கு அதெல்லாம் கிடையாது என்பதாலா? அல்லது முற்போக்கு என்ற முலாம் பூசிக் கொண்டு சமத்துவம், புரட்சி என்று சொற்களை உதிர்த்துக் கொண்டு தனிப்பட்ட வாழ்வில் எல்லா வக்கிரங்களையும் கடைப்பிடித்தால் அது சாமர்த்தியம் அறிவுத் தீவிரம் என்றாகி விடுமா?
மரபு நிறுவனங்களின் பிறழ்வுகள் எதையும் உடனே பெரும் ஆரவாரத்துடன் கண்டிக்கும் மேற்படி அறிவு ஜீவிகள் தம் வாழ்வில் எந்தப் பிறழ்வையும் சமூகமும் தம் சக அறிவு ஜீவிகளும் கண்டுகொள்ளாமல் போவதோடு, அவற்றைத் தம் அசாதாரண மேதமையின் விளைவு என்றே ஏற்கவேண்டும் என ஏன் கருதுகிறார்கள்?
நித்யானந்தாவைத் தூக்கில் போடவும் இக் கூட்டம் துடியோ துடி என்று துடிக்கும், ஜயேந்திரர் என்று பெயர் சொன்னாலே பெண் எழுத்தாளர் பெயரைச் சொல்லி நக்கீரப் பார்வையும் பார்க்கும். (திண்ணையில் அது குறித்த கட்டுரை பார்க்க).
மோடியைத் தூக்கில் போடு, அஃப்ஸல் குருவை விடுவி, மதானியை விடுவி என்று சொல்லும் தமிழ் பத்திரிகையாளர்களை ’நேர்மையானவர்கள்’ உண்மையே பேசுபவர்கள் என்று சொல்லி, அமெரிக்க வாசிகளான தமிழ் அறிவு ஜீவிகள் வரவேற்பது போலத்தான் இதெல்லாமும்.
கருத்து நேர்மை என்பது என்ன? சார்த்தரே ழான் ஜெனே என்னும் குற்றம் செய்வதே வழக்கமான ஒரு ஃப்ரெஞ்சு எழுத்தாளரை ‘புனித ஜெனே’ என்றழைத்துக் கட்டுரை எழுதி அதற்கு ஒரு பாரம்பரியத்தையே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதாவது பிக்-பாக்கெட் அடிப்பதில் துவங்கி சிலரைக் கத்தியால் குத்துவது வரை சென்ற ஜெனே, தற்பால் உறவுக்காரர் என்பதால் சமூகத்தால் புறமொதுக்கப்பட்டவர், அதனால் குற்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது போன்ற அரைகுறை சமூக உளவியல் பார்வை சார்த்தருடையது. ஜெனேயே கூட தன்னால் குற்றம் செய்யாமல் இருக்க முடியவில்லை என்று ஒத்துக் கொண்டு எழுதியதாக என் நினைவு. அதாவது அவருடைய நாவல்கள் நன்கு வரவேற்கப்பட்டு நல்ல வருமானம் வந்து சமூக அந்தஸ்து கிட்டிய பின்னும் கூட ஜெனே, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை உடைப்பதில் குறியாக இருந்தவர். ஆனால் அவருடைய க்ஹெல்லென் டு ப்ஹெஸ்ட் (Querelle de Brest ) என்ற நாவலை ரைனர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் சினிமா இயக்குநர் எடுத்த ஒரு படத்தை அவர் இறுதி வரை பார்க்கவே இல்லையாம்- காரணம், திரைஅரங்குகளில் புகை பிடிக்கக் கூடாது என்று ஒரு விதி இருந்ததால் என்று சற்றும் நகைச்சுவை உணர்வின்றி விக்கிபீடியாவில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஜெனே இந்தக் குறிப்பைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
ஜெனே ஏதோ சாதாரணக் குற்றவாளி என்று நான் ஒதுக்குகிறேன் என வாசகர் கருத வேண்டியதில்லை. இத்தனை பேர் விரும்பிப் படித்து, புகழ்ந்து எழுதி, நாடகங்கள் அரங்கேற்றி, சினிமாக்களுக்கு மூலக்கதையாக எழுதியதாக இருந்த ஒரு எழுத்தாளர் ஏதோ தரமானவற்றை எழுதி இருப்பார் என எடுத்துக் கொள்கிறேன். அவருடைய இருநாவல்களை மொழிபெயர்ப்பில் என் இளமையில் படித்துப் பார்த்து இரண்டையும் பாதியில் கைவிட்டவன் நான். இன்று மறுபடி படித்தால் ஒருவேளை புரியுமோ என்னவோ. அவர் ‘முற்போக்கு’ என நாம் கருதும் ஒருவர் செய்யவேண்டிய பல செயல்களையும் தவறாமல் செய்திருக்கிறார் என்பதை மட்டும் இங்கு சுட்டுகிறேன். இந்த ஜெனே தொடர்ந்து தான் வாழ்ந்த சமுதாயத்தின் சாதாரண நெறிகளை உடைப்பதையும், அழிப்பதையும் கொண்டாடினார் என்பது மட்டும் இங்கு என் கருதுபொருள்.
இந்தவகை உடைப்பும் அழிப்பும் சோவியத் சமுதாயத்திலோ, மாவொயிசச் சீனாவிலோ, க்யூபாவிலோ, ஏன் இஸ்லாமிய சமுதாய்ங்களிலோ நடந்தால் ஜெனேயின் பாடு என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சில மாதங்கள் கூட உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். பூர்சுவா சமுதாயம் என்று இழிவு செய்யப்படும் சந்தை சமுதாயம் தன் அனைத்து வக்கிரங்கள், அசமத்துவங்கள், கொள்ளைகள், கொடுமைகள், வறுமைகள் நடுவே ஜெனேயின் ஒரு நாடகத்தை சுமார் 1400 நாட்கள் நிகழ்த்தி ஆதரித்திருக்கிறது என்பதைக் கவனிக்கக் கோருகிறேன். கருத்து சுதந்திரம் என்பதை பூர்சுவா சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது, அதே சுதந்திரம் ‘சோசலிச சமுதாயத்தில்’ எப்படி இருக்கிறது என்பதையும் காணக் கோருகிறேன். சார்த்தரை ‘பேனா பிடித்த கழுதைப்புலி (Hayena)’ என்று சோவியத் விமர்சகர் ஒருவர் எழுதினார். அந்த சார்த்தர் இறுதி வரை தன் ஆதர்ச சோசலிச சமுதாயம் எதிலும் வாழ இடம் பெயர்ந்து விடவில்லை. எப்படி சூஸன்னா ராய் தன் ஆதர்ச இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடம் பெயராமல் இந்து, ஜனநாயாக இந்தியாவில் இருந்து கொண்டு தன் உளறல் கருத்துகளைப் பொதுவில் கொட்டிக் கவிழ்த்துப் பொதுவெளியை ஆபாசமாக்கிக் கொண்டிருக்கிறாரோ அதே போன்ற நிலைதான் சார்த்தருடையது, ஜெனேயுடையது. தம் சமுதாயங்களைத் தாம் விரும்பும் புரட்சிகளுக்கு உள்ளாக்குவதே இவர்களுடைய லட்சியமே தவிர சோசலிச நாடுகள் எக்கேடு கெட்டால் என்ன? அவற்றில் போய் வாழ்ந்து அவற்றின் குறைகளை விமர்சிப்பது ஒன்றும் இவர்கள் வேலை இல்லையே. அங்கு மட்டும் ‘ஃப்ரெஞ்சு தேசியம்’ தலை தூக்குகிறது. தேசியம் என்பது இதரரிடம் இருந்தால் அது குறை, குற்றம். முற்போக்குகளிடமும், இந்துமதம் அல்லாத மதவாதிகளிடமும், சீனரிடமும், ரஷ்யரிடமும் இருந்தால் அது பெரிய வளம். இதுதான் இந்திய முற்போக்கு அறிவு சீவிகளின் வக்கிர மனோபாவம்.
யூரோப்பிய சமுதாயங்களில் ஓரளவு சமத்துவத்தைக் கொணர்ந்த நாடுகள் எனப்படும், யூரோப்பிய, ஸ்காண்டிநேவியப் பொருளாதாரங்கள் (எண்ணெய்=நார்வே, இரண்டாம் உலகப் போரில் குவித்த சம்பத்து=ஸ்வீடன், காலனியத்தில் அடித்த கொள்ளை=டச்சு, இன்னும் ஃபின்லந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் என்று நான் ஆராயப் போகவில்லை. அந்த நாடுகளெல்லாம் எந்த வளத்தின் பேரில் சமத்துவத்தை அடைய முயல்கின்றன என்று இன்னும் பார்க்கவில்லை.) முந்தைய சேமிப்பை சமத்துவம் என்ற பெயரில் வேட்டு விட்டுக் கொண்டிருந்தன. இப்போது உலகச் சந்தை நொறுங்கத் துவங்கியதும், ஜனத்தொகை விழத்துவங்கியதும், சீனாவுக்கு உற்பத்தி நகர்ந்ததும் இந்த நாடுகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. இங்கு இனவெறி மறுபடி தலை தூக்குகிறது. இந்த நாட்டு இடதுசாரிகள் திடீரென்று ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசி நாடகம் போடத் துவங்கி உள்ளனர். தம் வழி சோசலிஸ அமைப்பை எதிர்த்தனர் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான குடியானவர்களைக் கூட்டமாகக் கொளுத்திக் கரியாக்கிய ட்ராட்ஸ்கியை ஆதர்ச புருடராகக் கொள்ளும் ட்ராட்ஸ்கியைட்களெல்லாம் ’ஜனநாயகம்’ பற்றிப் பேசினால் அதை என்னவென்று எடுத்துக் கொள்வது?
இளைஞர்களை எல்லாம் ஒரு ‘கூறு’ என்று வைத்துப் பார்த்தால், ஏகப்பட்ட பொதுமைப்படுத்தல் செய்யாமல் இருந்தால் கூட, 20 வயதினருக்கு குறைந்தவர்களுக்குச் சில பிரச்சினைகள் உண்டு என்பது எனக்குத் தெரிகிறது. குறிப்பாக உளநிலைச் சமன்பாடு, பிறரை எடை போடுதல், எதிர்காலத்துக்குத் திட்டமிடுதல், வாழ்வுத் தேர்வுகள் குறித்த தொலைநோக்கு கொள்ளுதல் [emotional balance, judgement of others, planning for the future, perspective about life choices] என்பன இன்னும் சரியாகக் கூர்மைப்படவில்லை, அல்லது ஒருங்குபடுத்தப்படவில்லை என்பது அவர்களுடைய இயக்கங்களையும், வாதங்களையும், கருத்துகளையும், தேர்வுகளையும் பார்க்கையில் தெரிகிறது. சாமர்த்தியம், அல்லது வாதத் திறமை அல்லது கற்கும் திறன் அல்லது தர்க்கச் சுழல்களைக் கடப்பது என்பன ஒரு அருவப் பிரச்சினை [academic problem] ஆக இருக்கையில் இவர்களால் அவற்றை எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் நேரடி மனித உறவுகளில் இவற்றைப் பொருத்திப் பார்த்து,நல்ல தேர்வுகளைச் செய்ய இவர்களில் பெரும்பாலாருக்குக் குறைபாடுகள் உள்ளன.
பல தரப்பட்ட மூத்தவர்களோடு பழகி, அவர்களின் பல நிறை குறைகளை அறிந்த அனுபவம் குறைவாக இருப்பதால் இந்நிலை என்று நான் நினைக்கிறேன். ‘வளர்ந்தவர்கள்’ என்று அறியப்படுவோர் பலரும் அத்தனை சமநிலை அடைந்தவர்கள் [balanced people] அல்ல, அறம் சார்ந்த (Ethical) மனிதர்களும் அல்ல, பல நேரம் தம் நலனுக்காக எவரையும் பலி கொடுக்கும் மனிதராகவும் இருப்பவர்கள் என்றும் நிறைய வளர்ந்தவர்கள் உள்ளதால் சமுதாய்த்திலும் மனிதக்குழுக்களிலும் நிறையக் குறைகள் உள்ளன. அந்தக் குறைகள் இளைஞர்களின் குறைகளோடு சந்திக்கும் போது இளைஞர்கள் தம் வக்கிரங்களைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களிடம் எளிதே சிக்கிப் பலியாகும் வாய்ப்பு கூடுகிறது.
பூவாஹ், சார்த்தர் போன்றார் இளம் பெண்களைப் பலியாடாக்கியதில் இரண்டு பிரச்சினைகள் உண்டு. ஒன்று, இளைஞர்கள் இவர்களிடம் ’பெருநாயகர்களை அணுகுகிறோம்’ என்ற மனோபாவத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி வருபவர்களைத் தம் கட்டுப்பாடற்ற நடத்தைக்குப் பலியாக்குவதில் இந்த இருவருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை என்பதோடு, அப்படிப் பலியாகுபவர்கள் பற்றி இந்த இருவரும் தமக்குள் கடிதப் பரிமாற்றத்தில் இழிவாகப் பேசிக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொன்னேன், அந்த நடத்தை மோசமான நடத்தை என்று. அதை ஒழுக்கக் கண்ணோட்டத்தில் பார்த்து பலரோடு பாலுறவு கொள்ளுதல் தவறு என்ற பார்வையில் சொல்லவில்லை. சார்த்தரும், பூவாஹ்ஹும் மணம் செய்து கொள்ளவில்லை, சேர்ந்து வாழ்ந்தார்கள், அல்லது தொடர்ந்து ஒரு ஜோடியாக இருந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு ஊர் மேய உரிமை இருந்தது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் <20 மாணவர்களைத் தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக் கொண்டு தூர எறிவது முதிர்ச்சியுள்ள மனிதர் செய்யும் வேலை அல்ல. அதற்குச் சுரண்டல் என்றுதான் பெயர். இதற்கு ஒப்பாக இன்று கதோலிக்கப் பாதிரிகள் பலர் உலகெங்கும் பல நாடுகளில் தம்மிடம் அறபோதனைக்கோ, இசைப் பயிற்சிக்கோ அல்லது மதச் சடங்குகள் கற்கவோ வந்த சிறுவரையும், இளைஞரையும் பாலுறவுக்கு அழைத்து அல்லது வற்புறுத்திய குற்றச் செயல்களைச் செய்தவர்கள் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கதோலிக்கச் சர்ச் அமைப்பு நெடுங்காலமாகப் பத்திரப்படுத்தியோ, அல்லது காத்தோ வந்திருக்கிறது, முறையாகக் காவல் துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று உலகெங்கும் கதோலிக்க ம்த அமைப்புகள் மீது பலரும் குற்ற வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வெகு காலமாக இவற்றை மறுத்தும் மறைத்தும் வந்த கதோலிக்க மத அமைப்பு இன்று போப்பரசரே பகிரங்கமாகத் தம் சபையினரிடம் மன்னிப்பு கோரும் நிலையில் கொண்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. தம் சொந்த வாழ்வில் அறப்பிறழ்வுகளைச் செய்தும், அப்படிப் பிறழ்வுகளைச் செய்யும் அரசியல்வாதிகளையும், அமைப்புகளையும் ஆதரித்தும் நின்ற, நிற்கும் இந்திய முற்போக்குகளும், சூஸன்னா ராய் போன்ற சிந்தனையாளரும், இந்து ச்முதாயத்தைத் தினம் இழிவு செய்யும் பிற மத விமர்ச்கர்களும், இந்தியரிடம் இதே போன்ற மன்னிப்பைக் கேட்பார்களா என்றால் அப்படி ஒரு கருத்து நேர்மையோ, நா நயமோ இந்த மனிதர்களிடம் எதிர்பார்ப்பது பகல்கனவு என்றுதான் என் கருத்து. இவர்களுக்குக் கருத்து நேர்மை என்றால் என்னவென்றே தெரியாது என்பது என் முடிவு. ஏனெனில் தாம் மட்டுமே நீதிபதிகளாக இருக்கத் தகுதி உள்ளவர், ம்ற்றெல்லாரும் இழிபிறவிகள் என்பதே இவர்கள் கருத்து. பிறரின் சட்டம் ஒழுங்கு எல்லாம் தமக்குப் பொருந்தாது, ஆனால் தாம் கருதும் ஒழுங்கு, சட்டம், அறம் எல்லாம் பிறருக்குப் பொருந்தும், ஏன் அதுவே கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூட இவர்கள் கருதுபவர்கள். உலகை இவர்களுடைய கண்ணாடிகள் வழியே மட்டுமே பார்க்கலாம், பிறருடைய கண் ஆடிகள் எல்லாம் கோணல். தாம் வழி பிறழ்ந்தால் அது சகஜமான மனிதக் குறைபாடு, பிற ‘எதிரிகள்’ பிறழ்ந்தால் அது மாபெரும் குற்றம், உடனே எல்லா சமுதாயங்களும் புரட்டிப் போடப்பட்டு, லட்சக்கணக்கான மனிதர் கொல்லப்பட்டு சமத்துவ சமுதாயம் நிறுவப்பட வேண்டும். யார் அந்த சம்த்துவ சமுதாயத்தை நிர்வகிப்பார்? இந்த ’மனித பலவீனம் சகஜம், அதனால் நான் பிறழ்ந்தேன், அதற்கு என்னைக் குறை சொல்ல முடியாது, நான் புனித ஜெனே போன்றவன்,’ என்று சொல்லும் ஆயுதபாணிப் புரட்சியாளர்கள். ஆட்சியாளர்களாகவோ, ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துபவர்களாகவோ அவர்களிருந்தால், அவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் உரிமையாவது யாருக்காவது உண்டா? நிச்சயம் கிடையாது. ஏனெனில் இவர்களுக்கு மட்டுமே உலக மனித உய்வு என்பது என்ன என்று தெரியும். மற்றெல்லாரும் மாக்கள். அப்படி யாரும் இருந்தால் அவர்கள் தெளிவாகவே ‘மக்கள்’ எதிரிகள். ஏனெனில் ‘மக்கள்’ என்ற சொல்லே இவர்களை மட்டும்தான் குறிக்கிறது. இதையேல்லாம் சற்று விடுவோம். சார்த்தர், பூவாஹ் ஆகிய இருவருக்கு மீண்டும் வருவோம். ஏதோ சரவணபவன் முதலாளி போன்றவர்கள் அல்ல இந்த இருவரும். அதிகார மமதையில் குற்றம் புரிந்து அகப்பட்டுக் கொண்டவர்கள் அல்ல. குற்றம் என்று நாம் ‘மத்திய வர்க்கப் பார்வையில்’ கருதும் எல்லாவற்றையும் புரிந்தபடியே, நம் போன்றவர்கள் இழிவானவர்கள் என்று நம்மிடம் சொல்லிய்வர்கள் இவர்கள். அதோடு, நம் போன்றவர்களின் அன்றாட உழைப்பால் ’ஒழுங்காக’ இயங்கும் உலகத்தின் எல்லா வசதிகளையும் துய்த்தபடி, அதன் பாதுகாப்பை அனுபவித்தபடியே, அதை இழிவு செய்தவர்கள். அதே நேரம் இந்த ஏற்கனவே ஏதோ காலப்போக்கில் அமைந்த ஒழுங்கில் இயங்கி வரும் சமுதாயத்தின் ஊழல்களை வெளிச்சமாக்கி, ’உண்மையில்’ அறம் என்பது என்ன என்று சொல்ல முனைந்ததோடு, யாரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியாத சுழல்சிக்கல்கள் கொண்ட மொழியில் தடித்த புத்தகங்கள் எழுதி பல்கலைகள், மேலும் அரசியல் சமூக பண்பாட்டுப் போராட்ட இயக்கங்களில் எல்லாம் ‘தாரகைகளாக’ பவனி வந்தவர்கள். வியத்நாம் போரில் சில கிராமங்களில் இருந்த பெண்கள், சிறாரை அமெரிக்க ‘ஏகாதிபத்தியப்’ படையினர் கொளுத்தியதற்கு, குண்டு வீசிக் கொன்றதற்கு மொத்த அமெரிக்காவும், ஏன் உலகுமே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் சார்த்தர். ஒவ்வொரு மனிதரும் பிற உலக மனிதரின் நலன் குறித்த பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டியது அவசியம், அப்படிப் பொறுப்பேற்க முடியாத நிலையில் நாமெல்லாம் இருக்கக் காரணம் இந்த வக்கிரமான சமூக அமைப்புகள் நம்மை நம் சக மனிதரிடம் இருந்து அன்னியமாக்கியது காரணம் என்று வாதிட்டவர். ‘The other is hell’ என்ற அவரது அறிக்கை வெறும் கதை வரி அல்ல. சரி சார்த்தர், நம் ஊரில் சொல்வார்களே, சவ ஊர்வலத்தில் கூட தானே நாயகமாக, சவமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் வகை மனிதர் ஆக இருக்கக் கூடும், எதையும் நாடகத்தனமாக அறிவித்துப் பழகியவராக இருக்கக் கூடும். அதற்காக, இந்த வஜனத்தை எடுத்து விட்டாரென்று நாம் அதை ஊதிப் பெருக்காமல் இருக்கலாம்தான். ஆனால் அவரும் சரி, பூவாஹ்ஹும் சரி, ‘மற்றவர்’ என்ற ஒரு கருத்து வடிவை மிகவுமே முக்கியமாகக் கருதிச் செயல்பட்டவர்கள் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டி இருக்கிறது. மற்றவர்களிடம் உறவு கொள்வதில் ஒரு வன்முறை தவிர்க்க முடியாதது என்று கூட பூவாஹ் எழுதி இருக்கிறார். அத்தனை தூரம் தன்மயம் என்பது சான்னித்தியம் கொண்டதா என்று நாமெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பின்னெப்படி ஸ்டாலினியம், கூட்டு சமுதாயம் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன? சார்த்தரைத்தான் கேட்க வேண்டும். பல நேரம் அப்படித்தான் சமூக அமைப்பு உள்ளது, அதாவது வன்முறை நிறைந்துள்ளது, மற்றவர் எல்லாம் நம் வாழ்வை நரகமாக்கவே முயல்கிறார் என்று இருவருமே கருதியவர். அதை நீக்க வேண்டும் அப்போதுதான் மனிதர், மனிதத்தை அடைந்ததாகக் கருத முடியும் என்று சொன்னவர்கள் சார்த்தர், பூவாஹ். அப்படி ஒரு மனிதர் தம்மிடம் கற்க வரும் மாணவர்களைத் தம் பாலுறவு ஆசைகளுக்குப் பலியாக்குவது இரு வளர்ந்த மனிதர்களின் சுதந்திரத் தேர்வு குறித்த பிரச்சினை அல்ல. உலகை அறப் பார்வையில் கண்டித்து விமர்சித்தவர் தம்மளவில் எந்த அறமும், பொறுப்பும் இல்லாத கேவல மனிதர் என்பதால் எழும் பிரச்சினை. சார்த்தர் தம் உடல் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாதவர், கட்டுப்படுத்துவது தேவையில்லாத ஒழுக்கப் பார்வை என்று கருதியவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் உலக மனிதருக்கு புரட்சி சமுதாயம் வெற்றி பெறக் கட்டுப்பாடும், தனிமனித விழைவுகள் ஒடுக்கப்படுவதும் அவசியம் என்று பேசியது ஒரு கேவலம் என்றுதான் நான் பார்க்கிறே. தன் கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொள்ள முடியாதவர், பல லட்சம் மக்கள் தம் வாழ்வைப் புரட்சிக்கு அடகு வைக்கவேண்டும் என்று கோர என்ன உரிமை கொண்டவராகிறார்? இவரை விடக் கேவலம் பூவாஹ் உடைய நடத்தை. எந்தக் காரணங்களால் பெண்கள் ‘அடிமைப்படுத்தப்’ படுகிறார்களோ அவற்றை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி, இரண்டாம் குடிமக்களாக எல்லாச் சமூகத்திலும் உள்ள பெண்களின் நிலையை மாற்றுவதே வாழ்நாளின் குறிக்கோள் என்று பேசிய மனிதர், இன்னொரு ஆணின் பொறுப்பற்ற சுரண்டலுக்குத் தம்மை ஆதர்ச மனிதராகத் தேடி வந்த இளைஞரைப் பலியாக அனுப்புவது வெறும் ஒழுக்கப் பிரச்சினை அல்ல. அடிப்படை மனித்நேயமற்ற மனிதர் அவர் என்றுதான் சுட்டுகிறது. அவருடைய மையக் கருத்தான அறப் பொறுப்பைப் போலிக் கருத்துப் பிரச்சாரம் என்று வெளிப்படுத்துகிறது இது. இதைச் சும்மா தேர்வுகளில் எழுந்த குறை என்று ஒதுக்க முடியாது. இது சந்தையல்ல. மனித உறவுகளில் நேர்ந்த சுரண்டல். எங்கல்ஸ் எப்படிச் சுரண்டலால் மோசமான நிலைக்கு வந்தவர்களை (விலைமாதரைத்) தாமும் அவர்களுடைய உடல்களை விலைக்கு வாங்கிச் சுரண்டினாரோ அதே போனற அறப்பிறழ்வுதான் இதுவும். எங்கல்ஸும் கூடத் தம் உடல் உந்துதலுக்கு வடிகாலாக இந்தியாவிலும், உலகிலும், குறிப்பாக மாவோயிசம் வழிநடத்திப் பூலோகச் சொர்க்கமாக இன்று உள்ள சீனாவிலும் பல கோடி இளைஞர்கள் பாலுறவுக்கு எந்த வழியும் இன்றி என்ன செய்கிறார்களோ அதைச் செய்து சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு விலைமாதர்களை அனுபவிப்பது அவசியமாக இருந்திருக்கிறது. இது தன் மையக் கருத்தியலின் மறுதலிப்பு என்பது அவருக்கும் விளங்கியதில்லை, அவருடைய குருநாதர் மார்க்ஸுக்கும் அதைக் கண்டித்து ஏதும் சொல்லத் தெரியவில்லை. கருத்துப் பரிமாற்றம் சுதந்திரமாக உள்ள இடத்தில்தான் கருத்து நேர்மை அவசியமாகிறது. சீனாவிலும், ரஷ்யாவிலும் சமரசம் செய்வாரை என்னால் ஏற்கக் கூட முடியும். வன்முறை அச்சுறுத்தும் போது எதிர்ப்பது பெருநாயகத் தன்மை என்பது உண்மையானாலும், அணு குண்டுகள் நாசமாக்கிய உலகில் பிழைத்து வரப்போகும் கரப்பான் பூச்சிதான் உண்மையில் சக்தி வாய்ந்த ஜீவராசி என்பதில் எனக்கு ஐயம் இல்லை. நாஜியிசம், ஃபாசிஸம், ஸ்டாலினியம் ஆகியவற்றில் ஓரத்தில் ஒளிந்து இருந்து தப்பியவர்கள் மீது எனக்கு எந்த இழிவுணர்வும் கிடையாது. தாமும் வன்முறை, சுரண்டல், காட்டிக் கொடுத்தல், அல்லது கொலை, கொள்ளையில் ஈடுபட்டாரை என்னால் ஏற்க முடியாமல் இருக்கலாம். கூட்டத்தோடு ஊர்வலம் போய் கோவிந்தா போட்டு விட்டு வீட்டுக்குப் போய ஒளிந்து கொணடவர்களின் ‘கோழைத்’ தனத்தை நான் வெறுத்ததில்லை. நான் முன் சொன்ன கருத்து நேர்மை தமக்கில்லாதவர், சுதந்திரச் சூழலில் பத்திரிகையாளராகவோ, கருத்துப் பிரச்சாரகர்களாகவோ, ஆய்வாளராகவோ இருக்கும் பட்சத்தில் பிறருக்கு அற போதனை செய்யாமல் இருந்தால், அவர்களை வெறுக்க அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் அடிப்படையில் நேர்மை அற்றவர்கள் என்று அறிந்து, அவர்களை ஆதரிக்காமல் இருக்கலாம். அதுவே போதும் என்று நினைக்கிறேன். தற்கொலைப் படைவாதி கருத்து நேர்மை கொண்டவனாக இருப்பது கடினம். சுற்றி உள்ள சாதாரண மனிதர்களைக் கொல்வதைக் குறித்து எந்த தர்மச் சங்கடமும் இல்லாத வெடிகுண்டுமனிதன், தான் கொல்லும் அக்கிரமக்காரர்களோடு எந்த விதத்திலும் வேறுபட்டவன் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு கொலையால் பல கோடி மனிதரை விடுவிக்கிறேன் என்று வீரம் பேசுவது எனக்கு ஏற்புடையதில்லை. ஆனால் எல்லாத் தருணங்களிலும் கத்தி வெட்டாக எது தார்மீகம் எது அறம் என்று தீர்மானிப்பது கடினம் என்ற் ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு எல்லா அறப்பிறழ்வுகளையும் நியாயப் படுத்துதல் நல்லதல்ல. கருத்து நேர்மை இல்லாதவர்களை அமெரிக்கச் சந்தை நுழைய விடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அமெரிக்க அரசே ஒரு மோசமான ஒட்டுண்ணியாக்த்தான் இருக்கிறது, அது என்ன பிற ஒட்டுண்ணிகளை சீர்தூக்க? ஆனால் சாதாரண மனிதரான நாம் இத்தகைய மனிதரைப் பூரண கும்பத்தோடு வரவேற்கப் போகத் தேவை இல்லை என்று கருதுகிறேன். அவ்வளவுதான். சார்த்தர், பூஹ்வா போன்றாரை விதந்தோதும் அறிவு சீவிகள், இந்து மடாதிபதிகள், மதப்பிரசாரகர்களின் நெறிப் பிறழ்வுகளைத் தாக்கி அவர்களைச் சிறைப்படுத்தியாக வேண்டும் என்று துடிக்கிறவர்கள். சார்த்தரின் ஸ்டாலினியம் சற்றும் உறுத்தாதவர்கள் என்பதில் எனக்கு வியப்பில்லை. ஆனால் பல லட்சம் மனிதரைக் கொன்றவரை நாயகராகக் கருதுபவர்கள், சில பத்துப் பேரைச் சுரண்டிய ஒருவரை ஏன் தூக்கில் போட்டால்தான் தம் ஜன்மம் சாபல்யமாகும் என்று வெளியில் நாடகம் ஆடுகிறார்கள்? அதிலும் குறிப்பாகப் பெண்ணியவாதிகள் சீமோன் டு பூவாஹ்ஹின் புத்தகங்களை ஏன் விவிலிய நூல போலத் தம் வகுப்புகளில் போதனைக்குப் பயன்படுத்துகிறார்கள்? திருடனுக்குப் போலிஸ் வேலை கொடுத்தால் அவன் திறம்பட நிர்வாகம் செய்வான் என்று ஒரு நம்பிக்கை உண்டு. இவர்களையும், இவர்களின் நூல்களையும் வைத்துக் கொண்டு, எது அறம், எது நேர்மை, எது சமத்துவம் என்றெல்லாம் போதிப்பது அப்படி ஒரு முரண் நிலை என நினைக்கிறேன். ஆனால் இந்த முரணை முன்வைத்து விட்டுப் பேசினால் இவர்களுக்குப் பெருநாயகத் தோரணை இல்லாது சாமானிய மனிதர்கள் என்ற நிலை பொதுவில் இருக்கும். அதாவது நீதி போதனை செய்வது அவர்களின் அறிவுத் திறன் குறித்தது. நடத்தையில் இழிவு காட்டுவது அவர்களின் உளநிலையில் முதிர்ச்சி இல்லாதது என்றாவது இந்த வகுப்புகளில் சுட்டுவார்களா என்றால் எனக்கு அதிலும் ஐயமே எஞ்சுகிறது. ஏனெனில் நாயக உருக்களைக் கவிழ்ப்பது அத்தனை சுலபம் இல்லை, அதிலும் முற்போக்குச் சாயம் பூசிய நாயக உருக்கள் ஏசுவாகவும், இறைதூதராகவும் கூட ஆகி விடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ ஸ்டாலினின் சகாப்தம் ரஷ்யாவில் மறுபடி துவங்கி இருக்கிறது, மாவோ ஒரு சுவரில் மாட்டி வணங்கப்படும் இறை உருவாகி விட்டிருக்கிறார். இந்தியப் புரட்சியாளருக்கு, வனவாசிகளுக்குக் காவலராகத் தாம் மட்டுமே என்று நடிக்க, வனவாசிகள், குடியானவர் ஆகியோரைக் கிள்ளுக் கீரையாக நினைத்த மாவோதான் நட்சத்திரமாகத் தெரிகிறார். மனித மனத்தின் இருண்மை என்னென்னவோ விசித்திரங்களைக் கொண்டது. அதே நேரம் எந்த மனிதரும் ஏதோ தருணங்களில் அசாதாரண நிலைகளை எட்டக் கூடும் வாய்ப்பும், ஏன் சாதனையையும் கூட அமையக் கூடியவ்ர் என்றும் இவர்களை வைத்து நிறுவ முடியுமோ என்னவோ. இவர்களை முன்வைத்துக் கொண்டு சமகால மனிதர்களைச் சீர்தூக்குவதைத்தான் நான் கண்டிக்கிறேன், அபத்தம் எனவும் சொல்கிறேன். இவர்களை என்று சொல்லும்போது இந்த இருவரை மட்டும் சொல்லவில்லை, இவர்களே போன்ற மேற்கின் நாயக முன்மாதிரிகளை எல்லாம் இப்படி ஆராய்ந்து நோக்குதல் வேண்டும் என்று சொல்கிறேன். இந்த மாதிரி மேற்கின் நாயக உருக்களைக் கொண்டுதான் தாம் ஊக்கம் பெறுவதாகச் சொல்லும் பல தமிழக அறிவு சீவிகளைக் கொண்டாடுவதையும் நாம் நம்மளவிலாவது நிறுத்திக் கொள்ளுதல் நம ஆளுமைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும் என்பதும் என் நிலை. ______________________ மேலும் கருதச் சில மேற்கோள்கள். “The erotic experience is one that most poignantly discloses to human beings the ambiguity of the condition; in it they are aware of themselves as flesh and as spirit, as the other and as the subject” (The Second Sex, 449). இன்னொரு கட்டுரையில் இருந்து. இதைக் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். மூலம் எது என்று குறிக்க விட்டுப் போயிற்று. The liberated woman must free herself from two shackles: one is the idea that to be independent she must be like men and the other is her socialization in passivity which makes her adverse to risking herself for her ideas/ideals. பயன்படுத்திய சில கட்டுரைகள், புத்தகங்கள்: Sartre against Stalinism- Ian Birchall (Berghahn Books, 2004) http://www.slate.com/id/2088648/pagenum/all/ http://www.thenation.com/article/sartres-roads-freedom

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

மைத்ரேயன்

மைத்ரேயன்