கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )

This entry is part of 46 in the series 20050311_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘ மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும்

முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ‘

( பாகம்:1 )

நாங்கள் உவத்திரமிக்க-திமிர்த்தனமான கொடிய சுரண்டற் காலத்தில் வாழ்கிறோம்,கடந்த இருபது நூற்றாண்டுகளையும் மனிதர்கள் அதன் கொடிய யுத்தங்களாலும்,கொலைகளாலுமே எண்ணிக்கொள்ள முனைகையில் இருபத்தியோராம் நூற்றாண்டோ ‘இல்லை,இல்லை-நானும் அதே இரகம்தாம் ‘ என்றபடி.செப்டம்பர்11 ‘ க்கு பின்பு பற்பல காரியப் போர்களையும்,சமாதான சீட்டாட்டங்களையும்-பயங்கரவாதத்தின் பெயர்கொண்டு உலக மூலதனவாதிகளும், அவர்களின் பிராந்திய, கண்ட முகவர்களுமாக ஆற்றிவருகிறார்கள்.இந்நிலையில் நாம் இக்கட்டுரையை நிச்சியமாக கலீப் கார் Caleb Carr : ‘The Lessons of Terror ‘. பாணியல் A History of Warfare against Civilians: Why it Has Always Failed and Why it Will Fail Again என்று எழுதப்போவதில்லை.கலீப் கார் அமெரிக்க இராணுவத்தின் செலவில் இராணுவ வரலாறு புனையும் இராட்சத அறிவு விற்பனன்,எதையும் மக்களுக்காகவே -அவர்கள் நன்மைக்காகவே அமெரிக்கா அரசியல்|யுத்தஞ் செய்வதாகக் கயிறு திரிப்பதில் நம் நாடுகளின் அரசியல் வாதிகளுக்கே முன்னோடி.இந்த விபரீதப் புத்திஜீவியை ஜெர்மனிய மொழிக்குள் அறிமுகஞ் செய்யும் போது:: ‘Wer mehr ueber die Urspruenge des internationalen Terrorismus und die Strategien zu seiner Bekaempfung wissen will, sollte Caleb Carr lesen. ‘ என்று W Dr. Udo Ulfkotte எழுதுகிறார்.சர்வதேசப் பயங்கர வாதத்தின் ஆதித்தொடக்கம் பற்றி மிகுதியாகவும்கூடவே அதன் போராட்ட வியூகம் பற்றி எவரொருவர் அறியமுற்பட்டால் ,அவர் கலீப் காரை வாசிக்கவேண்டுமென்கிறார், அந்த ஜேர்மனிய எழுத்தாளர். நாம் கூறுகிறோம்: ‘எவரொருவர் அமெரிக்கப் போர்களையும், பயங்கரவாதத்தின் மூலவூற்றை -அவரது பாணியில் Ursprueng(Origin) தெரிந்து கொள்வதற்கு கீழ்வரும் நூலைப் படிக்கவும்: Lies and the Lying Liars who tell them. A Fair and Balanced Look at the Right by Al FRANKEN

பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம்!

‘…. ‘

இப்பொழுது நாம் யோசிப்பதென்னவென்றால் நாளாந்தம் மானுடம் குண்டடிபட்டுச் சாகிறது,சமாதனத்திற்கான, ஜனநாயத்திற்கான யுத்தஞ் செய்தவர்கள் – செய்கிறவர்கள் மீளவுமொரு வியூகத்துக்குள் இவ்வாண்டுமுதல் வருகிறார்கள் என்பதுதாம்.கொண்டிலீசா அம்மையாரும்,எங்கள் அருந்தவப் புதல்வன் ஐயா ஜோய்ச்சு புஷ்சும் ஐரோப்பாவைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்து போய்யாச்சு! ஈரான் அணுப்பிளந்து ஆயுதஞ் செய்யுமுன் அடக்கியாக வேண்டும்,வடகொரியா மாதிரி வாலாட்ட விட்டால் காரியம் கெட்டமாதிரித்தாம்.பிரான்சும்,ஜேர்மனியும் ‘ஆமாம் எல்லாத்துக்கும் நாம இருக்கிறோம் நண்பரே,இப்ப நீர் எம்முடைய தேங்கிப்போன சந்தைக்கு ஒரு வழி சொல்லும்! கொஞ்சம் ஈராக்கில் இடம் தாரும் பிறகு இந்தத் தப்பான கைகள் அணுக்குண்டோடு கோலாச்சுவதை நாம் ஒரு வழிபண்ணிடலாம் ‘என்று மடக்க ஐயா புஷ்சும் தலை சாய்க்க புதிய வியூகம் இன்னும் பாரிய அழிவை நோக்கி நடக்க நேர காலம் குறிப்பதுதாம் பாக்கி.

நேற்று ஆவ்கானிஷ்தானில் நடாத்தப்பட்ட அமெரிக்காட்டுமிராண்டிப்போரானது 11செப்டம்பரில் உலக வர்த்தக மையத்தில் இறந்த ‘வெளிநாடுகளின்|அமெரிக்காவின் ‘ மக்களைவிட அதிகமான மக்களைக் கொன்றது! இங்கு பாவிக்கப்பட்ட யுத்தத் தளபாடங்கள் 1997 இல் சர்வதேசத்தால் கவனித்தொதுக்கப்பட்ட மிகக் கொடுமையான ‘Typ CBU-89 of Typ Gator ‘என்ற குண்டுகளாகும்.இவை முறையே 94 உயர்வெடிப்புப் பன்சர் மற்றும் ஆளழிப்புக் கண்ணிகளைக் கொண்டு தாக்கும் வல்லமையுடையவை.கூடவே உலகத்தால் ஒதுக்கப்பட்ட Splitterboms பாவிக்கப்பட்டது.இதை அம்பலப்படுத்திய Prof.Marc Herold (New Hampshire பல்கலைக்கழகம்)அவர்களது கணிப்பீட்டின்படி அமெரிக்கக் குண்டுகளாற் கொல்லப்பட்ட ஆவ்கான் அப்பாவிகள் கிட்டத்தட்ட 5000.தனியே ஒரு கிராமத்தில்(கோரூம்)மட்டும் 200 அப்பாவிகள் மீது போடப்பட்ட குண்டால் துடிக்கத் துடிக்க அனைவரும் மாண்டு போயினர்.சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விடுதி கூட விதி விலக்கற்று குண்டுகளால் தாக்கப் பட்டது.

ஈராக்கில் இதுவரை நடைபெறும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகளின் கொடிய அழிவுயுத்தத்தால் பல உயிர்கள் பலியாகின்றன,என்றுமில்லாதவாறு சூழல் மாசாக்கப் படுகிறது.தாள்வீச்சு அணுக்குண்டுகளால் அப்பிராந்தியமே உயிர்வாழமுடியாத கதிரியக்க வலயமாக மாறுகிறது.எனினும் ஈராக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியாத அமெரிக்க , ஐரோப்பிய ஏகாதிபத்யங்கள் ஈராக்கின் எல்லை நாடுகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகின்றன.இதன் ஆரம்பம் ஈரானில் கைவைப்பதாக இருக்கும்.எல்லை தாண்டி வரும் குண்டுகளையும்,தற்கொடைஅரபுத்தேச பக்தர்களையும் தடுப்பதற்கான வியூகமாக இந்தப் போர் மையங்கொள்கிறது.ஈராக்கின் பல்லினங்களுக்கிடையில் கட்டவிழ்த்து விடப்படும் இனவாதம் பல் நூறு உயிர்களை நாளொன்றுக்கு கொன்றபடி,இதே கதைதாம் இன்றைய ஆசிய|ஆபிரக்க-இலத்தீன் அமெரிக்கப் பகுதிகளிலும் கூடமே கிழக்கைரோப்பிய நாடுகளிலும்.இந்த யுத்தம் எதன் பொருட்டால் நிகழ்கிறது ?ஏனிந்தப் படுபயங்கர நிலை பூமிப்பந்துக்கும்,உயிர்களுக்கும் ? இதன்வாயிலாகப் பேசப்படும் ‘சமாதானம் ‘ எனும் ஏட்டுச்சுரக்காய் எப்போதாவது கறிக்குதவியதாக உலக வராலாற்றில் நாம் அறிந்தோமா ? இது குறித்து சற்று நோக்குவோம்:

சண்டைகளும்,சமாதானக்கூச்சல்களும்:

மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இங்கு மக்கள் அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும் மாற இந்த வலிமை உதவியுள்ளது.இந்த வலிமையை உணராத மனிதக்குழுக்கள் பின்னாளில் இருந்த இடம்தெரியாது அழிக்கப்பட்டார்கள்.உதாரணமாக:சமீப கால வரலாறு சிந்துநதிப் பள்ளத்தாக்கு மக்களினதாகும்(அண்மைக்கால அமெரக்க / அவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கும் இது பொருந்தும்).சிந்து நதி நாகரீகம் பற்றி ஜெர்மனிய ஆவணம் கூறுவதைப்பார்ப்போம்:

Durch die Ausgrabungen im Indischen Fuenfstromland und am unteren Indus wurden in neuerer Zeit schriftbehabte Hochkulturen ermittelt,so besonders in Mohenjo Daro und Harappa, vermutlich die Mittelpunkte zweier Herschaftsbereich.ueber die Traeger dieser Kulturen herrscht noch keine einheitliche Meinung,so dass man auch ueber ihre Herkunft nicht Bestimmtes ermitteln kann, waehred die starken Verbindungen mit der sumerisch-akkadischen Kultur erlauben,den Beginn dieser indischen Kulturen கவனிக்க:இந்தியக் கலாச்சாரங்கள் என்ற பன்மைத்துவத்தை. . auf etwa 2500 vC. zu datieren.Ihr politisches Ende fand sie um die Mitte des 2.jahrtausends. Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet.Die zahlreichen Baeder -es wurde auch ein Grossbad mit einem 12m langen, 7m breiten und 2,5m tiefen Becken ermittelt-weisen auf eine Kultische Bedeutung hin.Es wurden mehrere Goetter verehrt,unter denen eine Muetergoetin hervorragt.Die Schrift Konnte bis heute noch nicht entziffert werden.

DIE wahrscheinlichen Zerstoerer dieser Reiche sind INDOARIER.Um 1500 vC.war die Einwanderung in das Indusgebiet abgeschlossen.Der in dem Epos MAHA BHARATA geschilderte Kampf deutet darauf hin, dass die Kraefte der vorarischen Bevoelkerung allmaehlich wieder starker wurden …(G.Dunbar,Gesch.INDIENS -Eng.1936/Dt.1937;Herders KonversationsLexikon Seite:66/67).

ஐந்து நதிகளுடைய நாடான இந்தியா மற்றும் சிந்துவெளி அகழ்வராட்சியினூடாகச் சிந்துவெளிப் பண்பாடு புதிய காலத்துள் எழுத்துடைய உயர் பண்பாடுடையதென அறிவிக்கிறது.பிரத்தியேகமாக மொகஞ்சதார-கரப்பா சாத்தியமான வரை இருவேறு ஆளுமைகளின் ஸ்த்தானமாகவிருக்கும்.இரு பண்பாட்டைத் தாங்கியவர்களிடமும் ஒருமித்த கருத்தற்ற நிலை அவர்களது மூலத்தோற்றம் குறித்த வெளிப்படுத்தலுக்கான முயற்சிக்கு.சுமேரியர்-அக்காடிய(மூன்று நதிகளுடைய நாடு- மரித்த மொழியான அக்காடி)பண்பாடுகளின் பலமான இணைவுகளின் அனுமதித்தலோடு ஆரம்பிக்கிறது இந்தியப் பண்பாடுகள்.அது கிட்டத்தட்ட கி.மு.2500 ஆகும்.இவர்களது அரசியல் வாழ்வின் முடிவு இரண்டாவது ஆயிரமாமாண்டின் மத்தியிலாகும்(கி.மு.1500).நகரங்கள் அனைத்தும் இறுக்கமாகவும் கூடவே 4-10 மீட்டர் அளவிலான வீதிகளையும் கொண்டு ஊடறுத்தவை.இலகுவான கட்டட வடிவங்கூட ஒரு ஒழுங்கமைந்த நுட்பத்தைக் கொண்டமைந்திருந்தது.மிகுதியான குளியலறைகள்-அத்தோடு ஒரு பெரும் நீச்சல் தடாகம்-12மீ.நீளத்துடனும்7மீ.அகலத்துடனும்2,5மீ.ஆழத்துடனும் இருந்திருக்கிறது.இவை பண்பாட்டு அர்த்தத்தை பறை சாற்றுபவை.பற்பல தெய்வ வழிபாடுகள்இருந்திருக்கிறது,இதற்குள் தாய்மைக்(கொற்றவை ?)கடவுள் வழிபாடும் வெளிவருகிறது.இவர்களது எழுத்து வடிவம் இன்று வரையும் வாசிக்கமுடிவதில்லை(இப்போது தமிழகப் பேராசியர்கள் இவற்றைப் படித்து அறிந்துள்ளதாகக் கேள்வி,கூடவே அது தமிழ்தானாம்! நாம் தமிழைத் தாய் மொழியாகக்கொண்டதனால் இதைக் கேட்க மகிழ்ச்சிதாம்.ஆனால் உண்மையில் இந்த வாசிப்பு சரியானதா ?சந்தேகம்!)

இந்தப்பண்பாட்டைச் சிதைத்தவர்கள் நிச்சியமாக இந்தோ ஆரியர்கள்தாம்;,இவர்கள் கி.மு.1500 ‘ம் ஆண்டளவில் சிந்துவெளிநாகரீக வலயத்துள் குடியேறியதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதிகாசப் புராணமான மகாபாரதம் காட்சிப்படுத்தும் யுத்தத்தினது அர்த்தம் தோற்கடிக்கப் பட்ட இந்திய மக்களின் மீள் எழிச்சியோடு சம்பந்தப்படுகிற…-ஜீ.டுன்பார்,இந்திய வரலாறு:ஆங்கிலமூலம் பதிப்பு1936|டொச்சுப்பதிப்பு1937:கேர்டர்லெக்சிக்கோன் பக்கம்:66|67 -1957|2004.).

இங்கெழும் கேள்வி வலிமை பற்றியது!ஒரு பெரும் பண்பாடு-உயர் பண்பாடுமிக்க மக்களினம் எங்ஙுனம் சிதறடிக்கப் பட்டது ?வரலாறு தொட்டு யுத்தங்கள் மானுடர்தம் வாழ்வை-உயிரைப் பறித்துள்ளது.இது ஏன் ? அடிப்படையில் பொருள்தாம் காரணியாகிறது!சுகமான வாழ்வு வேண்டிப் போரிட்ட வரலாறு முழுமையும் இருப்பவனுக்கும் இல்லாதானுக்குமான போரே.இருப்பவன் அதைப் பெருக்கவும்,இல்லாதான் அதைப் பெறவும் போரிடவேண்டிய நிலையில் உலகம் சுழன்றபடி.சுமேரியர்கள் கி.மு.3000 ‘ம் ஆண்டளவில் பாரிய வெள்ளப் பெருக்கினால் தமது அதியுயர் பண்பாட்டு நிலத்தையிழந்தே சிந்துவெளி நோக்கி இடம்பெயர்ந்து சிந்துவெளி நாகிகத்துடன் கலந்திருக்கிறார்கள்,இவர்களது தோற்றம்-நாடு இதுவரையும் சரியாக அறிய முடியவில்லை.கி.மு.3000 ‘ம் ஆண்டளவில் சிந்து சமவெளியூடாய் மெசோபடாமின் நாடுவரை இடம்பெயர்ந்துள்ளனர். Mesopotamien ஒரு மோசமான தரைத்தோற்றதோடுதாம் இருந்தது,1000கி.மி.நீளமான Euphrat/Tigris நதிகளால் இப்பிரதேசம் தொடர்ந்து மூழ்கிய நிலையில் மிகப் பிற்காலத்தில்தாம் கிழக்குப் புறத்தில் சுமேரியர்களும் குடியேறியுள்ளனர்.இவர்கள் குடியேறிபோது மிக முன்னேறிய அறிவுடை மக்களாக இருந்திருக்கிறார்கள்.மொசோபடேமியன் பண்பாட்டோடு இணையும்போது இரட்டிப்பு வீரியது;தோடு அறிவு|வலிமை வளர்கிறது.சுமேரிய-யூப்ராட்|திகேரிய பண்பாடுகள் தாம் பாபிலோனியப் பண்பாட்டின் விருத்தியை ஏற்படுத்தியிருக்கிறது.சுமேரியர்கள் இறைவழிபாட்டைக் கடைப்பிடித்த மக்ககட்டொகுதியாகவே இருந்திருக்கிறார்கள்.இவர்களின் ஆரம்பகால அறயியல்-அறிவியல் சமூகம்,அரசியல் பொருளியலென விரிகிறது.இதுதாம் மேற்குலகின் இன்றைய வலிமைக்கான விதையும்.சுமேரியர்கள் இந்தியா(அன்றைய அகண்ட நிலப்பரப்பு) ஊடாகவே இடம்பெயர்ந்துள்ளார்கள்,அப்போது பற்பல சிறு தெய்வ வழிபாடுகளையும்,அறிவியலில் வியத்தகு நிர்மாணிப்புடைய சிந்துவெளி பண்பாட்டின் கூறுகளையும் கற்றுச்சென்றுள்ளனர்.Hammurapi(1728-1686vC.)கமூராபி ஆட்சியின் வலிமை சுமேரியர் பிச்சை.பாபிலோனிய யுத்தவீரியம் இன்று வரை பற்பல வடிவங்களில்,அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உளவியல் கமூராபியன் பிரதிநகலென்பது தெட்டத்தெளிவானது,ஏனெினல் கவ்போய் வடிவ ஏற்புகளும்,வாழ்வுமுறைமைகளும் கமூராபி மன்னனோடு ஒற்றுமையுடையது.

‘Der Schatten Gottes ist der Fuerst,und der Schatten des Fuersten sind die Menschen. ‘-Babylonische Herrschaftauffassung.seite:62.

‘இறைவனது நிழலே அரசனாகும்(இரண்டும் ஒருமை.),அதேபோன்று அரசர்களின் நிழலே மனிதர்கள்(பலவும்:பன்மை,நூலிழையுடைப்புத் தேவை.).-பாபிலோனிய அரசியலொழுங்கு.

இப்போது கி.மு.1500 அளவிற்றிடபெயர்ந்த இந்தோ ஆரியர் கூற்றுக்களைக் கண்முன் கொணர்ந்தால் அவர்கள் கமுராபிகாலத்தில் தொடர்புடைய ஒழுங்குகளைப் பேசுவது புலனாகும்.இங்கும் வலிமைக்கும் வலிமைக்கும்தாம் போராட்டம்.எதுவும் நாடோடி நிலையிலில்லை.

இரண்டாவது உலக மகாயுத்தத்தை நடாத்தி கிட்டத்தட்ட ஆறுகோடி மக்களைக் கொன்ற அடேல் கிட்லர் என்ன கூறுகிறா(ன்)ர் பார்ப்போமா ?

02/03.03.2005

வூப்பெற்றால்

ஜேர்மனி. -ப.வி.ஸ்ரீரங்கன்

srirangan@t-online.de

Series Navigation