திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
அறிவிப்பு
தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளைத் ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் (http://www.thinnai.com)மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi )( http://www.maraththadi.com ) இணைந்து அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் தமிழில் நடத்த உள்ளன .
இப்போட்டியில் நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர, தமிழில் அறிவியல் புனைகதைகளின் முன்னோடி சுஜாதா மகிழ்வுடன் இசைந்துள்ளார்.
போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:
பரிசுத்தொகை
1. முதல் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் பத்தாயிரமும் (Rs.10,000/-) , இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஏழாயிரமும் (Rs.7000/-), மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஐயாயிரமும் (Rs.5,000/-) பரிசுகளாக வழங்கப்படும்.
2. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அறிவியலைப் பின்புலமாகவோ கருவாகவோ கொண்ட தமிழ்ச் சிறுகதைகளாக, சொந்தக் கற்பனையாக, ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
3. போட்டிக்கு ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப இயலும்.
4. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் TSCII 1.7 தமிழ் எழுத்துருவில் (TSCII 1.7 enabled fonts) மின்னச்சு செய்யப்பட்டு மின்கோப்பாக (TSCII 1.7 Electronic Text file or Murasu Rich Text File with TSCII 1.7 fonts), tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (e-mail) அனுப்பப்பட வேண்டும்.
5. போட்டிக்கான படைப்புகள் tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரக் கடைசி நாள்: ஜனவரி 15, 2005 .
6. கையெழுத்துப் பிரதிகளை ஜனவரி 15, 2005 க்குள் கிடைக்குமாறு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் :
திண்ணை-மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி
உயிர்மை
11/29 சுப்பிரமணியபுரம்
அபிராமபுரம்
சென்னை – 600 018
போட்டி : முழுமையான விதிகள் கீழ்க்கண்ட இணைய தளங்களில் கிடைக்கும் :
www.thinnai.com
www.maraththadi.com
எல்லா தொடர்புகளுக்கும் மின் அஞ்சல் முகவரி : tamil_scifi@yahoo.com
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005