நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஆசாரகீனன்


இஸ்லாமிய அறிஞரும், விசுவாசமான நம்பிக்கையாளருமான நாகூர் ரூமி, மைலாஞ்சி கவிதைகள் பற்றிய தனது விமர்சனத்தில், ஹெச். ஜி. ரசூல் என்ற ‘பாமர ‘ இஸ்லாமியரின் ‘மத அறிவின் ‘ போதாமையைப் பற்றி அங்கலாய்த்ததோடு விட்டிருக்கலாம். மொழியியல் அடிப்படையிலான அல்லாஹ்-வின் பால் சார்பு (Gender) பற்றிய தனது ஆய்வு முடிவுகளையும், மாத விலக்கு நாட்களில் பெண்கள் தொழுகை உட்பட எந்த ஒரு தீவிரமான(!) விஷயத்திலும் ஏன் கவனம் செலுத்த முடியாது என்பது பற்றிய தனது உடற்கூறு/மனநல நிபுணத்துவம் பற்றியும் பறை சாற்றிக் கொண்டுள்ளார்.

எத்தனையோ மதங்களில் பழங்காலம் தொட்டு, பெண்களின் உடற்கூறு சார்ந்த இஇயல்பான அம்சங்களை ஒரு ஊனமாகப் பாவிக்கும் மூடத்தனம் இஇருந்திருக்கிறது, இஇருக்கிறது. பெண்களின் உடல் படைக்கும் புதுத் தலைமுறைகள் மட்டும் வேண்டுமாம், ஆனால் அப்படித் தலைமுறைகளைப் படைத்து மனித குலம் நசிக்காமல் பாதுகாக்க உதவும் ஓர் அதிசயமான உடற்கூறு இஇயக்கம் – மாதவிடாய் எனத் தமிழில் அதை ஏன் அழைக்கிறார்கள் என்பது நமக்கு இஇன்னமும் கேள்வியாகத்தான் இஇருக்கிறது – மட்டும் வேண்டாமாம்.

இஇந்த வகை கற்கால ஆணாதிக்க மனப்பாங்கு, உலக மாந்தரை உய்விக்க வந்திருப்பதாகப் பாரெங்கும் பறைசாற்றும் இஇஸ்லாத்திலும் தப்பாமல் இஇருக்கிறது என்பதைத் தம் நிபுணத்துவத்தின் துணை கொண்டு நமக்குத் தெரிவிக்கும் ரூமியைப் பாராட்டத்தான் வேண்டும். நன்கு படித்து பல துறைகளில் சிறந்த வல்லுநர்களாகத் திகழ்ந்து பெரு வெற்றி பெற்று வரும் தற்காலப் பெண்கள், தம் பால்-அடையாளத்திலோ, உடற்கூறிலோ எந்தக் குறையும் இஇருப்பதாகக் கருதாத அளவுக்கு மனவலிமை உள்ள பெண்கள், விவரம் முழுமையாகத் தெரியாமல் உய்வு கிட்டும் என்று தவறாகக் கருதி விசுவாசமான இஇஸ்லாமியராக ஆகும் விபத்தை ரூமி போன்ற நிபுணர்கள் உடனடியாகத் தவிர்த்து விடுகிறார்கள். உலகப் பெண்கள் சார்பாக அவருக்கு நம் வாழ்த்துகள்.

ஆனால் மத சம்பந்தமில்லாத ஒரு சாதாரணமான ஐயம் நமக்கு எழுகிறது. வாயில் எச்சில் ஒழுகும் ஆண்கள், மனதில் காமம் ஒழுகும் ஆண்கள், சிந்தனையிலும் நடத்தையிலும் வன்முறையில் எந்நேரமும் களிக்கும் ஆண்கள், அதிகார வெறியும், ஆணவமும் பொங்கும் ஆண்கள், மனிதரை அடிமையாக நடத்துவதில் எந்த நாணமும் அற்று விளங்கும் ஆண்கள், எந்தக் கோணலை எப்படிப் பயன்படுத்தி எந்த சட்டத்தை எப்படி உடைத்து எவரைச் சுரண்டலாம் என்று எந்நேரமும் தேடும் ஆண்கள் (தாவுத் இஇப்ராஹிம் ?) இஇஸ்லாமியர்கள் என்ற பெயரில் உலவுவதற்கு ரூமி எந்த எதிர்ப்பும் எழுப்புவதில்லை. ஆனால் கர்ப்பப்பையில் இஇருந்து இஇயற்கையாகச் சிறிது கசிவது ஆண்டவனை முழு மனதோடு கருதுவதைத் தடுக்கும் என்று கவலைப்படுகிறார். உடலில் இஇத்தகைய ‘குறை ‘ இஇல்லாத வயதான பெண்கள், சிறுமிகள் போன்ற பெண்களை கல்விக் கூடம் என்பதையொத்த பெயர் கொண்ட பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதற்கு என்ன தடையாம் ? இஇதையும் ரசூல் ஒரு கேள்வியாக எழுப்புகிறார் என்று ஏன் ரூமி எடுத்துக் கொள்ளவில்லை ? மேலும் மாதம் முப்பது தினமும் பெண்களுக்கு உடலில் உதிரம் கசிவதில்லை. சில தினங்கள் மட்டுமே. இஇதர தினங்களில் அவர்கள் எல்லா மனிதருடனும் சமமாகப் பொதுத் தொழுகை இஇடங்களில் தொழலாமே ?

பகுத்தறிவுக்கும் மதங்களுக்கும் இஇடையில் வெகு தூரம் என்பதை ரூமி அனாயாசமாகவே நிறுவுகிறார். அதற்கும் நாம் அவருக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். இத்தகைய ஒரு குறைபாடுடன் பெண்களைப் படைத்து, அவர்களைத் தன்னைத் தொழக்கூட தகுதி இல்லாதவர்களாக ஆக்கிய இந்த எல்லாம் வல்ல கடவுளின் கருணையும், சமத்துவமும், ரூமியைப் போன்று பல நாடுகளிலும், இஇந்தியா முழுவதும் பரவி உள்ள மத அறிஞர்களின் தாராள மனப்பாங்கும் என்னைப் போன்ற மருந்துக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட புல்லரிப்பை ஏற்படுத்தக் கூடியது.

மத நம்பிக்கைகளோ, இறைத் தூதர்களோ கேள்விகளுக்கும், கேலிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று நம்பும் ‘அருளிப் போந்தாரே ‘ மன நிலையில், அடக்கி வாசிக்க வேண்டும் என்று ரசூலை அறிவுறுத்தியிருக்கிறார் ரூமி. போகிற போக்கில் சல்மான் ருஷ்டி பற்றி சில வார்த்தைகள் அருளாமல் இருந்திருந்தாலாவது, ‘அமைதி ‘ நாடும் ஒரு மதத்தின் நீதியாளராகவும், தலைமைத் தொழுகையாளராகவும் அறியப்பட்ட அயதுல்லா கொமேய்னி போன்றவர்களின் கொலை வெறி பிடித்த ‘கொலைத் தண்டனைப் பிரகடனம் ‘ பலருக்கும் நினைவு வந்து தொலைத்திருக்காது.

சல்மான் ருஷ்டிக்கு மட்டும்தான் இஇந்த நிலை என்றில்லை. எகிப்து தேசத்தின் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட மஹ்பூஸ் இஇதே போன்ற ஒரு கொலை வெறி பிடித்த மதத் தலைவரின் ஃபட்வாவை எதிர் கொள்ள நேரிட்டது. அவரை ஒரு மத வெறியன் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றான். ஒரு 80 வயது எழுத்தாளரால் ஒரு மதம் அழிந்து போகும் என்று மதத்தலைவர்கள் பயந்தார்களானால் அதை என்ன என்று கொள்வது ? மதங்கள்தான் எத்தனை மெலிவானவையாக இஇருக்க வேண்டும் ? இஇந்தியாவில் ராமபக்தர்கள் கடவுளைக் காப்பாற்ற எந்த வன்முறையும் கைக் கொள்ளலாம் என்று குதிக்கிறார்கள். இஇன்னொரு நாட்டில் ஒரு மார்க்கத்தின் சுத்தத்தைக் காப்பாற்ற யாரையும் கொல்லலாம் என்று வெறியர்கள் அலைகிறார்கள்.

கீழே சில சுட்டிகளைத் தருகிறேன் – அவகாசம் உள்ளவர்கள் படிக்கலாம்.

http://www.upenn.edu/pennnews/current/features/1994/111794/mahfouz.html

http://www.islamonline.net/english/news/2002-03/10/article31.shtml

இஇன்னொரு தளத்தில் உலக இஇஸ்லாமிய அரங்குகளில், பெண்கள் இஸ்லாமிய சமுகங்களில் தமக்கு இஇழைக்கப்படும் அநீதிகள் பற்றி எழுதவே செய்கிறார்கள்:

http://www.islamonline.net/Discussion/English/bbs.asp ?action=maintopic&aParID=4805&aPathID=400&aTpID=4805&aGroupID=1190&aSubject=Injustice+in+Islam

இஇதர இஸ்லாமியர் அப்படி ஏதும் அநீதி இஸ்லாத்தில் இஇல்லை என்று பதில் எழுதுகிறார்கள். ஒரு குறிப்பிடத்தக்க விவரம் இஇதில் என்னவென்றால், உடல் உறவு சம்பந்தமான விவரங்களைப் பெண்களும் ஆண்களும் கூச்சம் இஇன்றித் தெளிவாக விவாதிக்கிறார்கள். இஸ்லாத்தில் எப்போது எத்தகைய விதங்களில் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்படுகிறது, எந்தெந்த வகை உறவுகள் அனுமதிக்கப்படுவது இஇல்லை என்பன தேவையற்ற கூச்சமோ, கிளுகிளுப்போ, அருவருப்போ அல்லது கண்டனங்களோ இஇல்லாது விவாதிக்கப்படுகின்றன. இஇந்த வகை விவாதங்களின் முன்னால் ரசூலுக்கு எதிரான ரூமியின் விவாதங்கள் சற்று அபத்த நாடகங்களாகத்தான் தெரிகின்றன. இஇருவருமே உலக இஸ்லாம் போன தூரங்களை முதலில் கடந்து விட்டு இஇந்த வாதப் பிரதிவாதங்களைப் பொது அரங்கில் வைத்தால் நம் எல்லாருக்கும் சற்றாவது பயன் இஇருக்கும்.

இந்தியாவில் வெளியிடப்படும் முன்னரே வன்முறையாலும், வெறியாட்டங்களாலும் தடை செய்ய வைக்கப்பட்ட புத்தகமான ‘சாத்தானின் கவிதை ‘களைப் படிப்பது போன்ற ‘மார்க்க விரோதமான ‘ செயலை ரூமி போன்ற எத்தனை விசுவாசிகள் செய்திருப்பார்கள் என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம். Satanic Verses நாவலின் கதை இதுதான் : விமானம் ஒன்று கடத்தப்பட்டு நடு வானிலேயே தகர்க்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்து உயிர் பிழைக்கும் Gibreel Farishta என்பவன் தன்னை ஓர் இறைத் தூதராகக் கருதிச் செயல்படத் தொடங்குகிறான். அவ்வப்போது அவனுக்கு ஏற்படும் தடுமாற்றங்களையும், குழப்பங்களையும் தனக்கே உரிய கேலியும், கிண்டலுமான பாணியில் எழுதியிருப்பதே சல்மான் ருஷ்டி செய்திருக்கும் ஒரே தவறு(!). இந்தப் புத்தகத்தில் இஸ்லாம் பற்றியோ, முகமது நபி பற்றியோ ஏதேனும் நேரிடையாக எழுதப்பட்டுள்ளதா, அப்படி இருந்தால் அது எந்த விதத்தில் அவதூறு செய்கிறது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துவது சல்மான் ருஷ்டியை இஸ்லாமிய விரோதியாகச் சித்தரிக்க முயல்பவர்களின் கடமை.

மஹ்பூஸ் ஒரு நாவலை எழுதி அதில் முற்கால நபிகளின் வாழ்வில் எழுந்த பல பிரச்சினைகளை அலசி இஇருந்தார். நபிகளின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் பூடகமாகக் குறிக்கப்பட்டு இஇருந்த அந்த நாவல் 60களில் இஇருந்து 90கள் வரை எகிப்தில் தடை செய்யப்பட்டிஇருந்தது. இஸ்லாம் பகுத்தறிவு மதம் என்று என்னதான் அதன் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்தாலும், புத்தகங்களைத் தடை செய்வதில் அதன் பயிற்சியாளர்கள் காட்டும் பேரார்வம் அது என்ன வகைப் பகுத்தறிவு என்று நம்மைச் சந்தேகிக்க வைக்கிறது.

இத்தகைய புத்தகங்கள் இஸ்மாத்துக்கு எதிரானது, முகமது நபியை இழிவு படுத்துவது என்பது போன்ற பேருண்மைகள் சாதாரண மனிதர்களுக்குப் புலப்படாதுதான். நாகூர் ரூமி போன்ற தீவிர விசுவாசப் பேரறிஞர்கள் ஏதோ ஒரு மலை உச்சியில் பெற்ற ஞானோதயம், சாதாரணமானவர்களின் மூளையைத் தீண்டாதவரை அவர்கள் எவரும் மிகக் கேவலமான முறையில் ‘ஆங்கிலமறிந்த அயோக்கியன் ‘ ருஷ்டி என்றெல்லாம் பேசப்போவதில்லை என்பதே இப்போதைக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

Thank God, I am an Atheist.

——————————————-

aacharakeen@yahoo.com

நாகூர் ரூமி கட்டுரை

  • மைலாஞ்சி பற்றி

    Series Navigation

  • ஆசாரகீனன்

    ஆசாரகீனன்