கடிதங்கள்

This entry is part of 47 in the series 20030510_Issue

மே மாதம், 10, 2003ஜெயமோகனின் புதிய நூல் குறித்த கட்டுரைகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.இத்தகைய நூல்கள் இன்று தேவை. ர.சு.நல்லபெருமாள் எழுதிய பிரம்ம ரகசியம், மதுரம் பூதலிஙகம்(கிருத்திகா) எழுதிய Had Shankra Been Alive Today ஆகிய இரு நூல்களை வாசகர்கள் கவனித்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.அகேதானன்த பாரதியின் நூல்கள் குறிப்பாக Light At The Center : Context and Pretext of Modern Mysticism சுவாரஸ்யமானவை.இன்று ஒற்றைப்பரிமாணமாக இதுதான் இந்தியக் கண்ணோட்டம் என்று சில பார்வைகள்முன்வைக்கப்படும் போது ஜெயமோகனின் நூல் வரவேற்கதக்கது.எனினும் இத்தகைய நூல்களுக்கான தேவைக்கு வேறு காரணங்களும் உள்ளன.

ஜெயபாரதன் அணுசக்தி துறை/அணுத்தொழில்நுட்பம் குறித்து கொண்டுள்ள நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கிறது. கடந்த 20/30 ஆண்டுகளாக சமுகஅறிவியலாளர்கள் risk,nuclear power and risk, technology,democracy and participation குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர்.இவை அணுத்தொழில்நுட்பம் குறித்த வேறு பரிமாணங்களை காட்டியுள்ளன.தொழில்நுட்ப அரசியலை தெளிவாக்கியுள்ளன.அவர் போல் நான் நம்பிக்கை கொள்ள இயலாததிற்கு இதுவும் ஒரு காரணம்.சமுகஅறிவியலாளரகள் முன்வைத்துள்ள வாதங்களை நாம் புறக்கணிக்க இயலாது.ஒரு விரிவான பதிலை அவர் கட்டுரை கோருகிறது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Salute to Mr. Mohan ‘s article: ‘PUvanesvari Valka! vijakanth Olika ‘. this is a male oriented world and his position on women ‘s point of view is respectable.

a reader


Series Navigation