கார்கோ கல்ட் அறிவியல் -1

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

ரிச்சர்ட் ஃபெயின்மன்

‘Cargo Cult Science ‘ Richard Feynman

ரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. ‘Surely You ‘re Joking, Mr. Feynman! ‘ புத்தகத்திலிருந்து.

மத்தியக்காலங்களில் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனமான கருத்துகளும் இருந்தன. ரினோசரஸின் கொம்பைச் சாப்பிட்டால் வீர்யம் பெருகும்-இது போல. அப்புறம், இந்தக் கருத்துக்களை இரண்டாகப் பிரிக்கும் ஒரு முறை தோன்றியது. அதாவது எது வேலை செய்யும், எது வேலை செய்யாது என்று பரிசோதித்துப் பார்க்கும் முறை. இந்த முறை ஒழுங்குக்கு வந்து, ஆமாம், அறிவியலானது. இது நன்றாக முன்னேறி, இப்போது நாம் அறிவியலின் யுகத்தில் இருக்கிறோம். இந்த அறிவியல் யுகத்தில் இருக்கும் நமக்கு, எப்படி ஒரு காலத்தில் சூனியக்கார மருத்துவர்கள் இருந்திருப்பார்கள் என்று புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதுவும் அவர்கள் சொன்ன எதுவும் வேலை செய்யாத பட்சத்தில், அல்லது அவர்கள் சொன்னதில் மிகமிகக்குறைவானதே வேலை செய்யும் பட்சத்தில்.

ஆனால், இன்றும் நான், பறக்கும் தட்டுக்கள், ஜோதிடம், அல்லது இது போன்ற ஏதாவது மாயமந்திரம், புதிய மனம், தொலை உணர்தல், ஆகிய விஷயங்களைப் பற்றி என்னிடம் பேச வரும் பலரையும் சந்திக்கிறேன். ஆகவே, நான் இது ஒரு அறிவியல் உலகமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

பெரும்பாலான மக்கள் மிகவும் ஆச்சரியமான விஷயங்களை நம்புவதால், நானும் இவைகளை ஏன் நம்புகிறார்கள் என பரிசோதிக்க முடிவு செய்தேன். ஆர்வம் காரணமாக பரிசோதிக்கச் சென்ற இடங்களில் இருக்கும் ஏராளமான குப்பைகளால் முழுக்கப்பட்டு பல பிரச்னைகளில் மாட்டியிருக்கிறேன். முதலில் நான் மிஸ்டிஸிஸம் அல்லது மிஸ்டிக் அனுபவம் ஆகியவற்றை ஆராய முடிவு செய்தேன். ஆக நான், பல மணி நேரம் தனிமை அறைகளில் உட்கார்ந்து மனப்பிரமைகளை அடைந்திருக்கிறேன். ஆகவே, எனக்கு இதைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். பிறகு நான் எஸாலனுக்கு(Esalen)ச் சென்றேன். அங்குதான் இது போன்ற சிந்தனைகளுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. உண்மையிலேயே அழகான இடம். நீங்களும் அங்கு சென்று பாருங்கள். அங்கு நான் முழுகிப்போய்விட்டேன். இவ்வளவு அதிகம் விஷயங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது.

ஏஸலனில் பெரிய நீச்சல் குளங்கள் இருக்கின்றன. அதுவும் கடற்கரையை ஒட்டி, அதற்கு மேல் 30 அடி உயரத்தில். அந்த நீச்சல்குளத்தில் உட்கார்ந்து கொண்டு அலைகள் கடற்கரையில் இருக்கும் உயர்ந்த மலைப்பாறைகளில் அலை மோதி உடைவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், மேலே இருக்கும் தூய நீல வானத்தை வேடிக்கப்பார்த்துக்கொண்டும் இருப்பதும், ஒரு அழகான நிர்வாணமான பெண் ஒருத்தி அங்கு தோன்றி என்னுடைய நீச்சல்குளத்தில் உட்கார்ந்ததை கூர்மையாக வேடிக்கைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த சந்தோஷமான அனுபவங்கள்.

ஒருமுறை நான் நீச்சல்குளத்தில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு அழகான பெண், பரிச்சயம் அற்ற இன்னொரு ஆணுடன் உட்கார்ந்திருந்தாள். நான் உடனே, எப்படி இந்த அழகான நிர்வாணமானப் பெண்ணிடம் பேச்சுக்கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

என்ன சொல்வது என்று நான் யோசிப்பதற்குள், அவள் அருகில் இருந்தவன், ‘நான் மஸாஜ் எப்படிச் செய்வது என்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் செய்து பார்க்கவா ? ‘ என்றான்.

‘நிச்சயமாக.. ‘ என்று அவள் சொன்னாள். அவள் நீச்சல் குளத்திலிருந்து மேலே வந்து அங்கு இருக்கும் மஸாஜ் மேஜை மீது படுத்தாள்.

நான் யோசித்தேன், ‘சே, என்ன அழகான கொக்கி. என்னால் இப்படி யோசிக்கக்கூட முடியாது ‘ அவன் அவளது பெரிய கால்கட்டைவிரலை தடவ ஆரம்பித்தான். ‘எனக்கு கட்டையாகத் தெரிகிறது ஏதோ.. இது பிட்யூட்ரடி சுரப்பியா ? ‘ என்றான். என்னால் தாங்க முடியவில்லை. ‘பிட்யூட்டரியிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிறாய் ‘ என்று உளறிவிட்டேன்.

அவர்கள் என்னை திகிலுடன் பார்த்தார்கள். சே, நான் என்னுடைய முகமூடியை உடைத்துவிட்டேன். தப்பிக்க, ‘ரிஃப்ளெக்ஸாலஜி ‘ என்றேன்.

நான் உடனே என் கண்களை மூடி தியானம் செய்வது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தேன்.

இதுமாதிரியான விஷயங்கள் தான் என்னை முழுக்கடிக்கின்றன. தொலை உணர்தல், PSI விஷயங்கள் ஆகியவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். சமீபத்திய புயல் யூரி கெல்லர் என்ற விரல்களைத் தடவியே ஸ்பூன்களை வளைக்கும் மனிதர். ஆகவே, நான் இவரது ஹோட்டல் அறைக்குச் சென்றேன். இவர் எப்படி மனத்தாலேயே ஸ்பூன்களை வளைக்கிறார் என்பதையும், என் மனத்தை எப்படி படிக்கிறார் என்பதையும் பார்க்க அவர் அழைப்பின் பேரிலேயே சென்றேன். அவர் என் மனத்தை வெற்றிகரமாகப் படிக்கவில்லை. யாரும் என் மனத்தைப் படிக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னுடைய பையன் ஒரு சாவியை கெல்லர் முன் நீட்டினான். அவர் அதனைத் தடவினார். ஒன்றும் நடக்கவில்லை. அது தண்ணீருக்குள்தான் சிறப்பாக நடக்கிறது என்று சொன்னார். அவரது குளியலறை தொட்டியில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருப்பதையும், அவரது கையை தண்ணீருக்குள் ஒரு சாவியை தேய்த்துக்கொண்டு இருப்பதையும் நாங்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதையும் கற்பனை செய்து பாருங்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே, நான் அவரது வேலையை ஆராய முடியவில்லை.

வேறென்ன நம்புவதற்கு இருக்கிறது என்று நான் அப்புறம் சிந்திக்க ஆரம்பித்தேன்( நான் சூனியக்கார மருத்துவர்களைப் பற்றிச் சிந்தித்தேன். எத்தனை பேருக்குக் குணமாகிறது என்பதை வைத்து எவ்வளவு எளிதாக அவர்களை பரிசோதித்து விடலாம்!) ஆகவே, இன்னும் அதிகமான மக்கள் நம்பும் விஷயங்களை கண்டறிந்தேன். உதாரணமாக வேகமாகப் படிக்கச் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள். படிக்கும் முறைகளுக்கும், கணிதம் செய்வதற்கும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இருப்பினும், பொதுவாக எத்தனை பேர் சரியாக கணிதம் போடவும், படிக்கவும் செய்கிறார்கள் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கைக் குறைந்துகொண்டேதான் போகிறது. இதுவும் ஒரு சூனியக்கார மருத்துவர் சமாச்சாரம். வேலை செய்யாத சமாச்சாரம். எப்படி அவர்களது முறை வேலை செய்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் ? இன்னொரு உதாரணம், எப்படி குற்றவாளிகளைத் திருத்துவது என்பது. நாம் உண்மையில் எந்த விதமான முன்னேற்றத்தையும் அதில் செய்யவில்லை. ஏராளமான தத்துவங்கள். உண்மையான முன்னேற்றம் கொஞ்சம் கூட இல்லை. நாம் குற்றவாளிகளை நடத்தும் முறையால், குற்றங்கள் குறையவே இல்லை.

இருப்பினும், இந்த விஷயங்களை அறிவியற்பூர்வமானவை என்று கூறுகிறார்கள். நாம் அதனை படிக்கிறோம். மேலும், பொது அறிவுள்ள சாதாரண மக்கள் இதுபோன்ற பொய் அறிவியல்களால் பயமுறுத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். தன் குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது பற்றி ஒரு நல்ல கருத்து இருக்கும் ஒரு ஆசிரியை, பள்ளிக்கூட அமைப்பால் கட்டாயப்படுத்தப்பட்டு தன் முறைய மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுவும், தன்னுடைய முறை தவறானது என்று தானே நம்பும்படிக்கும் அந்த பள்ளிக்கூட அமைப்பால் முட்டாளடிக்கப்படுகிறாள். அல்லது ஒரு கெட்டபிள்ளைகளின் பெற்றோர்கள் ஏதேனும் ஒரு முறையில் அந்தப்பிள்ளைகளை ஒழுங்கு செய்ய முயன்றுவிட்டு, பின்னர் வாழ்நாள் முழுவது, ‘சரியான முறையில் ‘ ஒழுங்கு செய்யவில்லை என்று குற்ற உணர்வோடு இருக்கிறார்கள்.

ஆகவே, நாம் எந்த தேற்றங்கள் வேலைசெய்யவில்லை என்பதை கவனமுடன் பார்க்கவேண்டும். அதே போல அறிவியல் அல்லாத ‘அறிவியல்களை ‘ கவனமாகக் கண்டறியவேண்டும்.

மேற்கண்ட கல்வி மற்றும் மனதத்துவ ஆராய்ச்சிகளை நான் ‘கார்கோ கல்ட் அறிவியல் ‘ என்று அழைப்பதின் உதாரணங்கள். பசிபிக் கடலில் இருக்கும் தீவுகளில் கார்கோ கல்ட் மக்கள் இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் போது அவர்கள் ஏராளமான விமானங்கள் நிறைய பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தன. அதே மாதிரி இப்போதும் நடக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே அதே மாதிரி விமானம் இறங்கும் தளங்கள், விமானம் இறங்கும் சாலைஓரம் விளக்குகள், கண்ட்ரோல் டவர் போல ஒரு குடிசை கட்டி அங்கு ஒரு மனிதனை வேறு உட்காரவைக்கிறார்கள். அவன் தலையில் ஹெட்போன் போல மரத்தால் செய்து வைக்கிறார்கள். மூங்கில் குச்சிதான் ஆண்டெனா. இவன் கண்ட்ரோலர். அப்புறம், விமானம் இறங்கக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவிட்டார்கள். வெளி உருவ அமைப்பு சரியாகத்தான் இருக்கிறது. முன்னர் எது போல இருந்ததோ அதே போலத்தான் இருக்கிறது. ஆனாலும் வேலை செய்வதில்லை. எந்த விமானமும் இறங்குவதில்லை. ஆகவே, இந்த விஷயங்கலை நான் கார்கோ கல்ட் அறிவியல் என்று அழைக்கிறேன். ஒரு அறிவியல் ஆராய்ச்சி போல எல்லா வெளித்தோற்றமும் இருக்கிறது. இருப்பினும் ஏதோ ஒன்றை அவர்கள் விட்டுவிடுகிறார்கள். ஏனெனில் விமானங்கள் இறங்குவதில்லை.

– மீதி அடுத்த வாரம்

Series Navigation