இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் – தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
சுதந்திரமாக இருப்பது கைதிகளுக்கு விருப்பமான ஒன்றுதான். அதை விட்டுப் பிரித்தாலும் மீண்டும் சுதந்திரத்தைத் தேடிச் செல்வார்கள். ஆனால் சில சமயம் ஒரே விஷயத்தை நோண்டிக்கொண்டிருப்பர். படுக்கையில் ஒழித்து வைத்த ரொட்டித் துண்டுகளை யாராவது கண்டு பிடித்துவிடுவார்களோ? டாக்டரிடம் செல்லும் போது ஏதாவது சாக்குச் சொல்லி வேலையிலிருந்து தப்பிக்க முடியுமா? புவோஸ்கியை மறுபடி லாக் அப்பில் அடைத்து விடுவார்களோ? எப்படி ட்ஸாருக்கு அவ்வளவு கதகதப்பான ஆடை கிடைத்தது?
சுகோவ் காலையிலிருந்தே நிம்மதியில்லாமல் இருந்தது. சிற்றுண்டியில் ரொட்டியில்லாமல், குளிர்ந்து போன உணவை முடித்திருந்தான். அதைப் பற்றிக் கவலைப்படக்கூடாதென இருந்தும், முகாமைப் பற்றி நினைப்பதையே நிறுத்த முயன்றான். அதனாலேயே வீட்டிற்கு எழுதப்போகும் கடிதத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.
கைதிகள் கட்டிய மரப் பலகைகளையும், புது மரச் சட்டங்களையும் தாண்டி காலை வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். தரையில் வெள்ளை நிறப் பனி சூழ்ந்திருந்தது. அந்த இறக்கம் முழுவதிலும் ஒரு மரம் கூட இல்லை.
1951. புது வருடம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வருடத்திற்கான இரு கடிதங்களை எழுத சுகாவுக்கு உரிமை உண்டு. கடந்த ஜூலை மாதம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான பதிலை அக்டோபரில் தான் பெற்றான். உஸ்ட்-இஸ்மா முகாமில் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுத முடியும்.ஆனால் எழுதுவதற்கு என்னதான் இருக்கிறது? இப்போதைவிட அப்போது நிறைய எழுதியிருந்தான்.
இவான் சுகாவ் 23 ஜூன் 1941 ஆம் ஆண்டு வீட்டை விட்டு கிளம்பினான். அதற்கு முந்தைய ஞாயிறு போலோம்னியா தேவாலயத்திற்கு சென்றபோது; யுத்தம்!! போலோம்னியாவிலாவது தபால் நிலையத்தில் விஷயத்தைக் கேள்விபட்டிருந்தார்கள். ஆனால் டெம்னெனோவாவில் ஒரு தந்தியில்லா தபால் நிலையங்கள் இல்லாததால், யாருக்குமே தெரியவில்லை. அப்போது எழுத்து வழியே எல்லோருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். இப்போது எழுதுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. கல்லில் எழுதி கடலில் போடுவது போலத்தான் முடியும். முழுகுவதைத் தவிர எதுவுமே நடக்காது. கடைசியாக நடப்பதும் அதுவாகத் தான் இருக்கும். உங்கள் குழுவைப் பற்றியோ, அதன் தலைவரான ஆண்ட்ரே ப்ரோகோஃபிவிச் பற்றியோ கண்டிப்பாக எழுத முடியாது. அவன் குடும்பத்தை விட கில்காஸுடன் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.
வருடத்திற்கு எழுதும் இரு கடிதங்களும் அவர்களின் வாழ்வு தரத்தைப் பற்றி எதுவும் பெரிதாகச் சொல்லாது.கோல்கோஸுக்கு புது குழுத் தலைவர் வந்துவிட்டான் – போன்ற தேவையில்லாத விஷயங்கள். அருகில் இருக்கும் நிலங்களை சேர்த்து விட்டார்கள், பிறகு? வேலைக்கான கணக்கை முடிக்காத விவசாயிகளுக்கு பழைய படி நிலங்களைக் கொடுக்க வில்லை.
குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!
ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.
எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.
அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.
104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.
ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.
‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’
அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.
சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு