இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்

This entry is part of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்லோவட் நதிவோரமாக இருந்த மருத்துவமனைக்கு தன் தாடை உடைந்தபோதுபோனது டோவுஷ்கின்னின் பனி போன்ற வெள்ளை நிற தொப்பியை பார்த்ததும் நினைவிற்கு வந்தது. என்ன ஒரு மடத்தனம் செய்திருந்தான்! தன் மோவாய் உடைந்திருந்தும் திரும்பவும் சண்டையிடச் சென்றான். விருப்பப்பட்டால் ஐந்து நாட்கள் ஓய்வு வாங்கியிருக்கலாம்.

ஆனால் இங்கோ இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு பெறலாமென கனவு கண்டுகொண்டிருக்கின்றான். அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மருத்துவமனைக்குச் சென்று படுக்கையில் மூன்று வாரங்கள் ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளலாம். அவற்களின் தண்ணீர் போன்ற சூப்பைக் கொடுத்தாலும் பரவாயில்லை.

முகானின் மருத்துவமனையில் கூட இப்போதெல்லாம் படுத்து ஓய்வெடுக்க விடுவதில்லை என்பது இப்போதுதான் நினைவிற்கு வந்தது.ஸ்டீபன் ரிகோரிச் என்ற புது மருத்துவர் வந்துள்ளார். தன் கனத்த எருமைக் குரலை உடைய அவன் தானும் நிம்மதியில்லாமலு அங்கு வரும் நோயாளிகளின் நிம்மதியையும் பறித்து வருகின்றான். தங்கள் காலால் நிற்கக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவமனையின் உள்ளும் வெளியேயும் பல புது வேலைகளை உருவாக்கினான். தோட்டத்தை நடுவது, மண் பாதைகள் வகுப்பது, மலர் செடிகளுக்கு கீழே மண் நிரப்புவது என வெய்யில் காலத்திலும், பனி தடுப்பு நடுவதை குளிர் காலத்திலும் கொடுத்தான். எவ்விதமான நோய்க்கும் உழைப்பே முதன்மையான மருந்து எனக் கூறிவந்தான்.

ஒரு குதிரையைக் கூட அதிக வேலைகொடுத்து கொல்ல முடியும். அந்த மருத்துவருக்கு அது புரிய வேண்டும். ரத்தம் சிந்தி கற்களை அடுக்கினால் நிச்சியமாக சத்தம் அடங்கிப் போவான்.

டோவுஷ்கின் எழுதிக்கொண்டேயிருந்தான். தன் வேலையை தவிர வேறேதோஒரு சொந்த வேலை தான் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் அது சுகாவிற்கு தேவையில்லாதது. அதற்குமுன் நாள் மாலை எழுதிய கவிதையின் திருத்தமான பிரதியை எழுதிக்கொண்டிருக்கிறான். இன்றைக்கு வேலையே மருந்து என அறிவுரை செய்த மருத்துவர் ஸ்டீபன் ரிகோரிச்சிடம் காட்டுவதாக வாக்கு அளித்திருந்தான்.

முகாமில் மட்டுமே நடக்கக்கூடியது இந்த ஏமாற்றுத்தனம். டோவுஷ்கின் துணை மருத்துவரே அல்ல. இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனான அவனை இரண்டாம் ஆண்டு போது கைது செய்தார்கள். ஸ்டீபன் ரிகோரிச் இவனுக்கு நரம்பினுள் போடும் ஊசி முறையைக் கற்றுத் தந்து, தன்னிடமிருந்த அப்பாவி கைதிகளின் மேல் பரிசோதித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தார். சுதந்திரமாய் எழுதமுடியாததை இங்கு சிறையில் எழுதி வந்தான்.

இரண்டு தடுப்புகளிருந்த பனி இறுகிய ஜன்னலின் வழியே வேலை செய்வதற்காக வந்த சிமிஞை கேட்கவில்லை.ஒரு பெருமூச்சுடன் சுகாவ் எழுந்து நின்றான். இன்னும் ஜுர சிலிர்ப்பு இருந்தாலும் வேலையை தட்டிக் கழிக்க முடியாது.

டோவுஷ்கின் வெட்பமானியை எடுத்துப் பார்த்தான்.

`ஹும்..இரண்டுகெட்டான் நிலை.முப்பத்து ஏழு புள்ளி இரண்டு. முப்பத்து எட்டு இருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்கும். உன்னை விட முடியாது. இங்கு நிற்பது ஆபத்து. மருத்துவர் வந்து உன்னைச் சோதிப்பார். உனக்கு ஜுரமிருக்கிறது என அவர் முடிவு செய்தால் தப்பிப்பாய். இல்லையேல் விடமாட்டார். லாக் அப் அறையில் அடைத்து விடுவார். வேலைக்கு இப்போது செல்வதே உனக்கு நல்லது`

சுகாவ் ஒன்றும் சொல்லவில்லை. தலைக் கூட ஆட்டவில்லை. தன் தலைக்குமேல் தொப்பியை கவிழ்த்துக்கொண்டு வெளியேறினான்.

குளிரில் இருப்பவனை கதகதப்பில் இருப்பவன் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

குளிர் ஊடுருவியது. கடுமையான பனி மூட்டம் சுகாவைச் சுற்றிக்கொண்டு அவனை கடுமையாக இரும்ப வைத்தது. வெளியில் -27 டிகிரி. சுகாவோ 37 டிகிரி இருந்தான். சண்டை வலுத்தது.

மெதுவாக ஓடிக்கொண்டே தன் குடிசையை அடைந்தான். பயிற்சி தளமும், முகாமும் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் தான் எல்லோரும் ஒரு போலியான நிம்மதியில் இருப்பார்கள். முகாமின் அணிவகுப்பு அன்று இருக்காது என்ற நிம்மதியே அது. காவலாளிகளோ தங்களின் வெப்பமான அறைக்குள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் தூங்கும் தலை துப்பாக்கியின் மேல் சாய்ந்திருக்கும். அந்த குளிரான கண்காணிப்பு உயரமேடைகளில் அவர்களுக்கு ஒன்றும் பாலும் தேனும் போல் இனிப்பாக இருக்காது. வாசல் கதவின் முன்னேயிருக்கும் காவலாளியோ நெருப்பில் கரியை அள்ளிப் போடுகிறான். முகாமைத் தேடுவதற்குமுன், அதன் காவலாளிகள் கடைசி சிகரெட்டைப் பிடித்தார்கள்.கைதிகளோ தங்களின் வலைகளில், இடுப்பில் கயிறும், தாடைமுதல் கண்வரை மூடிய துணியுமாய் காலணி அணிந்துகொண்டு தங்கள் படுக்கையில் காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பதோ குழுத் தலைவனிடமிருந்து – ‘வெளியே போங்கள்’ என்ற கத்தலுக்காக.

104ஆம் குழு ஏழாம் குடிசையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. பாவ்லோ என்ற துணை குழுத்தலைவர் பென்சிலை தன் உதட்டில் பொருத்தியபடியும், சுகாவின் சுத்தமான நண்பனுமான அய்லோஷா ஒரு நோட்டு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபடி முழித்துக்கொண்டிருந்தனர். அந்த நோட்டில் பைபிள் புதிய ஏற்பாட்டை தானே பிரதி எடுத்திருந்தான்.

பாவ்லோவின் படுக்கையை நோக்கி நேராகச் சத்தமேதும் போடாமல் சுகாவ் சென்றான்.

பாவ்லோ தலையைத் தூக்கிப் பார்த்தான்.

‘ஆ! இவான் டெனிசோவிச் , உன்னை லாக் அப் அறையுள் போடவில்லையா? நலமா நண்பா?’ – உக்ரேனிய வட்டார வழக்கில் கேட்டான். அப்படிக் கேட்டது மேற்கு உக்கிரேனியற்கள் சிறையில் கூட இப்படி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

சுகாவின் ரொட்டி அளவை எடுத்து அவனிடம் நீட்டினான். அந்த குவியலின் மேல் ஒரு கரண்டி சக்கரை இருந்தது. நேரமில்லாததால் சுகாவ் ஒழுங்காக பேசினான் (துணைக் குழுத்தலைவர் கூட் இந்த முகாமில் முக்கியமான அதிகாரி தான்). அவசரத்திலிருந்தாலும் சக்கரையை ரொட்டியின் மேலிருந்து நக்கியபடி, தன் படுக்கையில் ஏறி படுத்தான். ஐம்பத்து ஐந்து கிராம் இருக்கிறதாயென பார்த்தவாறு தன் ரொட்டியைச் சாப்பிடத்தொடங்கினான். பல ஆயிரம் முறை இதைப்போல பல சிறைகளிலும், முகாமிலும் எடையை தராசில்லாமல் பார்த்திருந்தாலும், இந்த ரொட்டிகளில் உண்மையான எடை வராதென அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு ரொட்டியிலும் குறைவாகவே இருக்கும். எவ்வளவு குறைவு என்பதுதான் முக்கியம். உங்கள் ஆதமாவை தேற்றுவாற்கள் என தினமும் நினைப்பீர்கள் – இன்றைக்கு எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.

ரொட்டியை இரண்டாய் உடைத்தபோதுதான் இருபது கிராம் குறைவாக இருப்பது தெரிந்தது. ஒரு பாதியை தன் காலணியின் மறைவானதொரு இடத்தில் ஒழித்து வைத்தான். சிற்றுண்டியுடன் சாப்பிடாமல் வைத்த மற்றொரு பாதியை அப்போதே சாப்பிட முடிவு செய்தான். வேகவேகமாக முழுங்கும் சாப்பாடு உணவே அல்ல. அது நிறைவைத் தராது. தன் காலணி பைக்குள் அதைத் திணிக்கலாமென நினைத்தான். அந்த நினைப்பை எதிர்த்து சாப்பிடத் தொடங்கினான். இரண்டு காவலாளிகளை உணவைத் திருடியதற்காக உதைத்தார்கள் என நினைவிற்கு வந்தது.

அந்த குடிசை பொது பூங்காவைப் போல பெரியது.


http://beyondwords.typepad.com

Series Navigation