இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்
தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
டார்டர் வேகமாக கண்காணிப்பாளர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.சுகாவ் தந்திரமாக ஒழிந்துகொண்டான். இவனிடம் மாட்டினால் அவ்வளவுதான். அவ்வளவு சாதாரணமாக விடமுடியாது. தனித்து எந்த வேளையிலும் கண்காணிப்பாளர்கள் கண்களில் மாட்டக்கூடாது. குழுவுடன் இருந்தால் பரவாயில்லை. எந்த வேலையை செய்யக் கூப்பிட நோட்டம் விடுகிறார்களோ அல்லது தங்கள் எரிச்சலைக் காட்ட யார் மேல் விழுந்து பிடுங்குவார்களோ தெரியாது? இந்த குழாமை சுற்றி வந்து அவர்கள் படித்த புது விதிமுறைகளை மறக்க முடியுமா? கண்காணிப்பாளரைப் ஐந்து அடிகள் தள்ளிப் பார்க்கும்போதே தொப்பியை கழட்டி விடவேண்டும். அவரைத் இரண்டு அடிகள் தாண்டியப் பிறகே அணிந்துகொள்ளவேண்டும். சில காவலாளிகள் எங்கோ பராக்கு பார்த்த படி செல்வார்கள். ஆனால் சில புதிய காவலாளிகளுக்கு இந்த விதி கடவுளாக அவர்களுக்கு அனுப்பிய வரம். இந்த தொப்பி விவகாரத்தினால் எவ்வளவு கைதி்ளை சிறையில் அடைத்து சித்திரவதை செய்திருப்பார்கள்? வேண்டவே வேண்டாம், சற்று ஒதுங்கியே நிற்கலாம்.
டார்டர் கடைசியாக கடந்தவுடன், சுகாவ் மருத்துவர் குடிசைக்குள் நுழைய முடிவுசெய்தான்.அப்போதுதான் ஞாபகம் வந்தது. உயரமான லெட் குடிசை ஏழிற்கு வரச்சொல்லியிருந்தான். வீட்டிலே தயாரித்த புகையிலைச் சாறு சில குவளைகள் குடிக்கக் கூப்பிட்டிருந்தான். இதுவரை நடந்த கூத்தில் இதை மறந்துப் போயிருந்தான்.நேற்று மாலைதான் லெட்டிற்கு வீட்டிலிருந்து ஒரு பை நிறைய புகையிலை வந்திருந்தது. அடுத்த நாள் வரை எவ்வள்வு மீதமிருக்குமோ, அதற்காக ஒரு மாதம் வரை காத்திருக்கவேண்டியதுதான்.சாம்பல்-பழுப்பு நிறத்தில் லெட்டின் புகையிலை பலமான, அதே சமயம் வாசனையானதாகும்.
சுகாவ் தன் காலணியை அலுப்பில் உதைத்துக் கொண்டான்.அவன் வந்த வழியே திரும்பி லெட்டிடன் செல்ல வேண்டுமா? ஆனால் மருத்தவர் அறைக்கு மிகக் குறையான தூரமே இருந்தது. அதனால் மெல்லமாக ஓடத்தொடங்கினான். பனி சத்தத்துடன் அவன் காலணிக்குள் ,அவன் அறைக்குள் நுழைந்தபோது, மெதுவாக அதுவும் நுழைந்தது.
அந்த அறையின் தாழ்வாரம் மிகச் சுத்தமாக இருந்ததால் ஒவ்வொரு அடியை வைக்கும் போதும் பயமாக இருந்தது.சுவற்றில் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. மேலும் எல்லா தளபாடங்களும் வெள்ளையாகவே இருந்தது.
மருத்துவரின் அறை மூடியிருந்தது. மருத்துவர்கள் இன்னும் உறக்கத்தில் இருக்கக் கூடும். கோல்யா டோவுஷின் என்ற இளைஞன் தான் துணை மருத்துவர். அவன் சுத்தமான சிறிய மேஜையில் அமர்ந்திருந்தான். சின்ன வெள்ளைத் தொப்பி அணிந்து, அதே நிறத்தில் மேலங்கியுடன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.
அந்த இடத்தில் வேறுயாரும் இல்லை.
கண்காளிப்பாளர் முன்னால் இருப்பதைப் போல தொப்பியை கழட்டினான். மெதுவாக குழாமில் செய்வதை போல கண்களை மெல்லத் தாழ்த்தினான். கோய்லா நிதானமாக,வார்த்தைகளுக்கு நடுவே சமமான இடைவெளிவிட்டு காகிதத்தின் ஒரு மூலையிலிருந்து , ஒவ்வொரு வரியும் அந்த மூலையிலிருந்து சிறிது தள்ளி, கொட்டிலாக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.அப்போதுதான் கோய்லா அலுவலக வேலை எதுவும் செய்யவில்லை என சுகாவுக்கு புரிந்தது. ஆனால் இவனுக்கு அது தேவையில்லாதது.
‘அதாவது வந்து..எனக்கு உடம்பு சரியில்லாதது போல இருக்கு..’ அவமானகரமாக சொன்னான். ஏதோ தனக்குச் சேராத ஒன்றைப் பற்றி குறிப்பிடுவதுபோல்.
கோய்லா தன் பெரிய கரு விழிகளை காகிதத்திலிருந்து உயர்த்தினான். அவன் எண் மேல்சட்டையில் மறைந்திருந்தது.
’ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்? நேற்றிரவே ஏன் சொல்லவில்லை? காலையில் மருத்துவ நேரம் கிடையாது எனத் தெரியுமில்லையா? திட்டக் குழுவிடம் ஏற்கனவே உடம்பு சரியில்லாதவர்கள் பட்டியல் சென்றுவிட்டது.
சுகாவுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் அதே சமயம் மாலையில் அந்தப் பட்டியலில் இடம்பெறுவது கடினம் எனவும் தெரியும்.
‘ஆனால், பாருங்க கோய்லா, நேற்று வரும்படியாக … எனக்கு எதுவும் வலியில்லை’
‘இப்போ எந்த மாதிரி வலிக்கிறது?’.
‘இல்ல, அப்படி கேட்டீங்கனா எங்கேன்னு சொல்ல முடியவில்லை..உடம்பு முழுவதும்..’
சுகாவ் ஒன்றும் மருத்துமனையில் எப்போதும் தங்குபவன் கிடையாது. கோய்லாவுக்கு இது நன்றாக தெரியும். ஆனால் காலையில் இருவரை மட்டுமே வேலை செய்வதிலிருந்து விலக்கு கொடுக்க முடியும்; அதன்படி கொடுத்தும் விட்டான். அவர்கள் பெயரை தன் மேஜையின் கீழே பச்சையாக இருந்த பலகையில் எழுதி வைத்திருக்கிறான். அதற்கு கீழே கோடும் போட்டு விட்டிருந்தான்
’இதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும். கடைசி நேரத்த்தில், வேலை கொடுக்கும்போது சொன்னால் எப்படி? இந்தா இதை வாங்கிக் கொள்’
ஒரு உடம்பு வெப்பமானியை நன்றாக காய துடைத்துவிட்டு சுகாவிடம் கொடுத்தான். அதை வாங்கி சுகாவ் தன் அக்குளில் வைத்துக்கொண்டான்.
ஒரு மேஜையின் நுனியில் உட்கார்ந்ததினால் சுகாவ் அதை கவிழ்க்கப் பார்த்தான். மிக அசெளகரியமாக உட்கார்ந்து கொண்டு, தான் புதிதாக இந்த இடத்திற்கு வந்தது போலவும், ஏதோ சின்ன விஷயமாக வந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டு பண்ணினான்.
டொவோஷ்கின் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தான்.
இந்த நோயாளிகள் அறை ஒரு முகாமின் சத்தமே கேட்காதபடி ஓர் மூலையில் இருந்தது. அங்கே எந்தவிதமான கடிகாரங்களும் இல்லை. சிறைக் கைதிகளும் கடிகாரம் எடுத்துச் செல்ல முடியாது. காவலாளி தான் மணி பார்த்து சொல்ல முடியும். எலிகூட கீறும் சத்தம் கேட்காது. அதை இதற்காகவே வளர்க்கப்பட்ட மருத்துவமனையின் பூனை பார்த்து கொண்டது.
இதைப்போன்ற ஊசி நுனி சத்தம் கூட இல்லாத, வெளிச்சமான அறையில் ஐந்து நிமிடம் உட்காருவது கூட சுகாவிற்கு மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது.அறையின் சுவறில் பார்வையை செலுத்திய போது அவை வெறுமையாக இருப்பதைக் கண்டான். அவன் மேலங்கியின் எண் கிட்டத்தட்ட அழிந்து விட்டுருந்தது. அதை கவனிப்பார்கள். அதை கொஞ்சம் சரிசெய்ய வேண்டும். தன் தாடையைத் தடவியபோது கொஞ்சம் முரட்டுத் தனமாக இருந்தது. அவன் பத்து நாளைக்குமுன்னால் குளித்ததற்குப் பிறகு தாடி மிக வேகமாக வளர்ந்து விட்டது.
இன்னும் அடுத்த மூன்று நாட்களில் மறுபடி குளிக்க வேண்டும். அப்போது தாடியை மழித்துக் கொள்ளலாம். எதற்காக நாவிதனிடம் மழித்துக்கொள்ள வரிசையில் நிற்க வேண்டும்?
அப்படி யாருக்காக அழகு செய்ய வேண்டும்?
http://beyondwords.typepad.com
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6
- பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்
- வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்
- தேவதைகள் காணாமல் போயின
- துப்பாக்கிகள் குறி பார்கையில் ..
- முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- கே.பாலமுருகன் கவிதைகள்
- வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்
- ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>
- கோபங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1
- வேத வனம் விருட்சம் 37
- எம் மண்
- பேருண்மை…
- கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்
- துரோகம்
- கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலி
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)
- கடல் விழுங்கும் ஆறுகள்….
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் துருவம் திசைமாறும் போது பூமிக்கு என்ன நேரிடும் ?
- ஆன் ஃப்ராங்க் – யூத அழிப்பின் போது ஒளிந்திருந்து டயரிக் குறிப்புகள் எழுதிய சிறுமி
- சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை
- அறிவியல் புனைகதை-: அரசு நின்று சொல்லும்
- இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்
- உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது
- கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- துரோகத்தின் தருணம்