மழை
பத்ரிநாத்
ரவிச்சந்திரனின் வாழ்க்கையே ஒரு பெரும் கதைதான்.
நான் கும்பகோணம் வந்திருந்த போது நண்பர்களிடம் அவன் வடக்கிலிருந்து திரும்பி வந்து விட்டானா என்று விசாரித்தேன்..கடந்த முறை வந்த போது தனக்கு வடக்கே மாற்றல் ஆகி விட்டதென்றும் ஓரிரு வருடங்களில் திரும்பி வந்து விடுதாகச் சொன்னான்..ஏனோ இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பவேயில்லை. அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை..ஒரு வேளை அங்கே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துவிட்டானா தெரியவில்லை.
ரவிச்சந்திரன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரித் தோழன் மற்றும் என் ஆத்மார்த்த நண்பனும் கூட.. ஏனோ அவனை என்னால் மறக்கவே முடியாமல் அவன் மீது எனக்கு அதீத ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது. அதற்கு, அவன் பரோபகாரத்தன குணம் மட்டும் காரணம் அல்ல..எனக்கு என்னவோ ஒருவர் மீது தனிப்பட்ட அன்பு வருவதற்கு ஒரு விசயம் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பது என் கணிப்பு…
சிறு வயது முதல் அவன் சந்தித்த சோதனைகள், வேதனைகள். அத்தனை இருந்தும் அவன்
நிதானம், துவளாத தன்மை, பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் போன்றவை என்னை ஈர்த்திருக்கலாம்..ஒரு வேளை அவன் அத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்ததாலோ என்னவோ அப்படி பரோபகாரியாக இருந்தானோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
சிறுவயதிலேயே அவன் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது. அவன் தந்தை ஒரு ஸ்திரி லோலன்ி.. அவன் தாயை விரட்டிவிட்டுவிட்டார். நான்கு குழந்தைகளுடன் அவர் தாயார் தனித்து எங்கள் ஊருக்கு வந்தார்ி. அடுத்த வேளை உணவுக்குக்கூட உத்தரவாதமில்லாமல்..
மூத்தவன்தான் ரவிச்சந்திரன்..அந்தச் சிறிய வயதில் தாயுடன் சேர்ந்து குடும்ப பாரத்தை ரவி சுமந்து வந்தான்.. பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஏதாவது தொழிலில் ஈடுபட்டு வந்தான்.. காலை ஐந்து மணிக்கே எழுந்து கொண்டு பேப்பர் போடுவான்.. இரவு தாயுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சமையல் வேலைக்குச் சென்று விடுவான். சம நண்பர்களான நாங்கள் விளையாடிக் கொண்டு கொட்டமடித்துக் கொண்டிருப்போம்.. அவனோ ஏதோ வேலை செய்து கொண்டிருப்பான். நாங்கள் திருக்குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு ஓரே கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில், அவனோ திருக்குளப் படிகள் வழியாக இரண்டு கையிலும் இரண்டு தூக்குக்கில் சாம்பார் சட்னியைக் கொண்டு போய்க் கொண்டிருப்பான்..
‘ ‘ என்னடா குளிச்சிட்டியா.. வா ‘ ‘ என்பேன்..
‘ ‘நான் கருக்கல்லயே முடிச்சிட்டேன்… அம்மா இந்தத் தூக்கை காபி கிளப்பில கொடுத்துட்டு வரச் சொன்னார்.. ‘ ‘, என்பான்.. அவன் எடுத்துக் கொண்டு போகும் அந்தத் தூக்குகளை வாங்கிப் பார்ப்பேன்.. பேய் கனம் கனக்கும்.. ‘ ‘டேய்.. என்னடா எப்படி இத்தன பாரத்தைக் கொண்டு போற.. ‘ ‘, என்பேன்.. ‘ ‘என்னடா பண்றது.. பொழப்பு.. ‘ ‘, என்பான்.
சிறிய வயதில்தான் அப்படி என்றால், வளர்ந்த பிறகும் அதே நிலைதான்.. அவன் தங்கையைக் கட்டிக் கொடுத்த இடத்தில் வரதட்சணை தகராறு வந்து விட்டது.. பையன் வீட்டுச் சொந்தக் காரர் காவல் துறையில் இருந்தவராதலால், தகராறில் ரவி மீது போலி வழக்குப் போட்டு கைது செய்து விட்டார்கள். அவன் அதிலிருந்து மீண்டு, நடையாய் நடந்து தங்கையின் வாழ்க்கையில் சமரசம் செய்து வைத்தான்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலும் அப்படியே.. கல்விக் கட்டண உயர்வு என்றால் அதை எதிர்த்த போராட்டத்திலும் முதல் ஆளாக நிற்பான். ..நான் குடந்தையை விட்டு வரும் போது கூட, ஏதோ ஒரு ஆதரவற்றோர், மற்றும் முதியோர் காப்பகம் கட்டுவதற்காக அலைந்து கொண்டிருந்தான்.. அதன் திறப்பு விழாவிற்குக் கூட எனக்கு அழைப்பு வந்தது..
நாற்பதைத் தொடும் வயதில் எங்கள் நண்பர்கள் அனைவரும் குடியும் குடித்தனமுமாக இருக்கும் சமையத்தில், அவனோ திருமணத்தையே விரும்பவில்லை.. நான் பலமுறைகள் அவனை வற்புறுத்தி வந்த போது ‘ ‘என்னைப் போன்றவர்களுக்கு திருமணம் பெரிய தடைகல் என்றுதான் நினைக்கிறேன்.. ‘ ‘ என்று சொல்லி தட்டிக் கழித்து வந்தான்.. திடாரென்று ஒரு நாள் எங்கள் எவருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வந்தான்.. என்னிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொன்னான்..
‘ ‘சமீபத்தில பேப்பர்ல படிச்சுருப்பியே.. பல பெண்களை கல்யாணம் பண்ணிட்டு ஒருத்தன் ஏமாத்திட்டு, அப்பறம் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்னு.. அவன் ஏமாத்தியதுல ஒருத்திதான் என் மனைவி.. அந்தப் பெண்கள் கூட்டத்திலகூட என் மனைவிதான் பரம ஏழை வேற …இதெல்லாம் வெளியில, குறிப்பா எங்கம்மாகிட்டச் சொன்னா அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க.. அதான் யாருக்கும் அழைப்பே இல்லாம தாலி கட்டிக் கூட்டிட்டு வந்துட்டேன்.. ‘ ‘,
‘ ‘என்னடா திடார் திடார்ன்னு இந்த மாதிரியெல்லாம் செய்யற.. கல்யாணங்கறது ஒரு லைஃப் பிரச்சனையாச்சேடா.. ‘ ‘, என்றேன்.
‘ ‘ ஆமாடா.. பெரிய லைஃப்.. எங்கம்மாவ அப்பா தொறத்திவிட்டபோது பட்ட கஷ்டத்த நெனைக்கிற போது..வேற எதுதான் பிரச்சனைன்னு தோணுது..நீ நெனைச்சுட்டு இருக்கற மதிப்பீடுகள் படி நான் வாழறதுல்ல.. எனக்குன்னு சில மதிப்பீடுகள் வெச்சுருக்கேன்..அதனால உனக்கு நான் பண்றது பாத்தா ஏதோ பயங்கரமாகவும், நான் ஏதோ பரம வேதனை பட்டு எல்லாத்தையும் செய்யறமாதிரி தோணும்.. ஆனா உண்மையில் எனக்கு என்னவோ இதைப் போன்ற காரியங்கள்ல ஈடுபடற போது ஏற்படும் திருப்திக்கு ஈடா எதையுமே சொல்லத் தெரியல..இது ஒரு ஹிப்பாகரசி உலகம்.. பிறருக்கு வேதனைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லால், அதைப் பார்த்து ரசிப்பவர்கள் கூட நம்மிடம் அதிகம் இருக்கறாங்க.. அந்த மாதிரி மனிதர்களை வச்சிக்கிட்டு வாழும் உலகத்தோட தர்க்க நியாயங்களை நான் ஏற்றுக் கொள்ளவதில்லை..அதான் என் போக்கில வாழறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு..இது சமூக சேவையா அல்லது அப்படி ஏதாவது ஒரு தலைப்புகளில் கீழ் வருதான்னு பாத்துட்டு செய்யறதுல்ல..என்னைப் பொருத்தவரை நான் அன்றாடம் செய்யற பல கடமைகளில் ஒன்றாகச் செய்யறேன்.. ‘ ‘,
மனித மனங்களே வினோதமானது..இந்த விசித்திர உலகத்தில் இப்படியான வினோத மனங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லைதான்.. சமூகம் மோசமானவர்களை உருவாக்குகின்ற அதே சமயத்தில் இவனைப் போலவும் சிலரைச் சேர்த்து உருவாக்கிவிடுகிறது.. அதனால் தன் எடையை நிறை செய்து கொள்கிறது போலும்..
ஃஃஃ
வெகுநாட்கள் கழித்து ஒரு நான் சென்னையில் ஓர் உணவகத்தில் அவனைச் சந்தித்தேன்.. பார்த்தவுடன் வந்து கட்டிப் பிடித்துக் கொண்டான்..
‘ ‘ரவி.. போன மாசம் கும்பகோணம் போனேன்.. நீ திரும்பி வந்துருப்ப.. பாக்கலாம்னு நெனச்சேன்.. என்னது வடக்கப் போனவன் போனவன்தானா.. ‘ ‘, என்றேன்.
‘ ‘அடுத்த வருஷம் வந்துடலாம்னு இருக்கோம்.. ‘ ‘, என்றான்.. அப்போதுதான் கவனித்தேன்.. அவன் மனைவியின் கையில் ஒரு குழந்தை இருந்தது..
‘ ‘ அட .. குழந்த எப்ப பொறந்தது…. ‘ ‘, என்றேன்.. அந்தச் சின்னஞ்சிறு தளிர், என்னைப் பார்த்து பூவைப் போல மென்மையாகச் சிரித்தது..
‘ ‘எங்களுக்குப் பொறக்கல.. தத்து எடுத்து வளர்க்கிறோம்.. ‘ ‘, என்றான்..
‘ ‘மறுபடியும்..ஏதாவது பழைய மாதிரியா.. ‘ ‘, என்றேன்.
‘ ‘ம்ம்.. சமீபத்தில நடந்த குஜராத் கலவரத்தில இந்தக் குழந்தை அனாதை ஆயிடுச்சு..யாரு அப்பா அம்மா.. என்ன ஜாதி, மதம், இனம் எதுவும் தெரியாது..பாக்க பாவமா இருந்துச்சு.. ‘ ‘, என்றான்..
இதோ.. ரவிச்சந்திரன் தன் அன்றாட கடமைகளில் இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறான்.. அவன் செய்யும் காரியங்கள் மத்தாப்பு போல ஜொலிப்பதில்லை..அதனால் பிறருக்குத் தெரிவதும் இல்லை.. ஆனால் ஒரு மெழுகுவர்த்தியைப் போல நிரந்தரமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது..
அவன் வாழ்க்கை கதை அல்ல.. தொடர்கதை..
****
prabhabadri@yahoo.com
- மாலை
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- டயரி
- பார்வைகள்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- இப்படிக்கு தங்கபாண்டி…
- மழை
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- சிதைந்த கனவுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- அவன் ஒரு அகதி
- மதுரை உயர் நீதிமன்றம்
- Bonjour le Canada
- மெய்மையின் மயக்கம்-11
- பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி
- பாலூட்டும் பூச்சிகள்
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- இயற்கைக் காட்சி
- துப்பாக்கி முனையில்….
- புணரி
- நளாயனி
- பாஞ்சாலியின் துயரம்
- சலனங்கள்
- அப்பா – ஆலமரம்
- காத்திருப்பு
- முழு சுகாதார திட்டம்
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்
- சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12
- கடிதம் ஆகஸ்ட் 5,2004
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் : பிரபஞ்சன் பங்கு பெறும் இலக்கிய நிகழ்ச்சி – ஆகஸ்ட் 8,2004
- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.
- கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004
- இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்
- ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?
- கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்
- மிஷன் இம்பாஸிபிள்
- ஸ்பைடர்மேன் தெலுங்கு டப்பிங் படத்தில் சேர்க்கப்பட்ட காட்சி
- பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
- தீர்வு ஞானம்
- கடிதம் ஆகஸ்ட் 5, 2004
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- நேசித்தவன்
- திரைகடலோடியும் …
- கவிதைகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- வேடம்
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வறண்டது காவிரி மட்டுமா ?
- பெரியபுராணம் – 3
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )