கே ஆர் மணி
நிறைய குறுஞ்செய்திகள் ஜெயின் நண்பர்களிடமிருந்து வந்தது. வீர் நீண்ட நெடிய மின்னஞ்சலும் அனுப்பியிருந்தான். ஜெயினசத்திற்கான எந்த வாய்ப்பையும் அவன் விடுவதில்லை. அதை சர்வசாதரணமாய் செய்து வருவதுதான் எனக்கு நிறைய நேரங்களில் ஆச்சரியமளிக்கும்.
மதம் மீது பற்று கொண்டவர்கள் மீதான என் ஆச்சரியப்பார்வையும் அவர்களின் ஈடுபாட்டை நோண்டிப்பார்ப்பதில் உள்ள ஆனந்தமும் எனக்கு அதிகம்தான்.
அவர்களுக்கான பர்யூசன். வேலை காரணமாக வீர், கடைசி மூன்று நாளில் வீரும் வெறும் வென்னீரோடு தான் வசித்தான். அதுவும் ஆறு மணி மாலைக்கு முன் குடித்துவிடவேண்டும். ஆனால் அவன் மனைவி 40 நாட்களுக்கு மேலாக வெறும் வென்னீர் மட்டுமே குடித்து, மாட்டு வண்டியில் ஊர்வலம் போய் தனது பக்தியை காட்டிக்கொண்டபோது அவளது மாமியாரே அவள் காலில் விழுங்கி வணங்கியது வித்தியாசமான காட்சியாகயிருந்தது.
அடுத்த ஆறுமாதங்களில் நெய்யும், முந்தரி போட்ட பட்சணங்களும் தின்று இழந்ததை பெற்றுக்கொண்டாள். ‘ 40 நாளில் விட்டதை நாலு மாதத்தில் பிடித்துவிட்டாயே ‘ என்றதில் அவர் மத நம்பிக்கையை குத்தியதாக ‘மதராசிகளுக்கு என்ன தெரியும்’ என்று திட்டினாள்.
என்னிலிருந்த அந்த உள்மன வன்மமே, அப்படிப்பட்ட கிண்டலாய் வந்திருக்கவேண்டும். ஏன் அந்த வன்மம். ?
நிறைய வன்மமாய் கணை தொடுத்திருக்கிறேன்.
‘என்னடா வீரு.. ஜெயின் ஆம்லெட் சாப்பிடலாமா..”
‘ பெண்டாட்டி எச்சில் பரவாயில்லையாடா..”
‘ அவர்கள் ஜெயின்கள். சுத்த சைவம். மனிதர்களை சாப்பிடுவார்கள் “
அவன் அப்பா ஒரு சின்ன வியாபாரா காந்தம். இன்னும் முகத்தில் பன்றி காய்ச்சல் இல்லாதபோதே முகமுடியோடு காணப்படுவார். ஒரு பெரிய உணவுத்தொடர் கம்பெனியோடு அவர்கள் ஒரு கடை வைப்பதாக எல்லாம் முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட மூன்று கோடி மூலதனம். இரண்டு அல்லது மூன்று வருடங்களில் வருகிற நிகர லாபமும் அதற்கு பிறகான பிராண்ட் குட்வில்லும் மிகப்பெரியது. அவனது அப்பா எல்லாவற்றையும் எனக்கு காட்டினார். எனது ஆலோசனைகளை நிறைய எடுத்துக்கொண்டு பேசினார்.
அந்த நிறுவனம் கடைசியில் அசைவ பதார்த்தங்களையும் கடையில் வைக்கவேண்டுமென சொன்னது. அப்படித்தான் எங்களது உலக மெனுக்களின் பழக்கம் என்று அந்த கம்பெனியின் உயரதிகாரிகள் பேசினார்கள். இனிப்பாய் பேசினார்கள்.
‘ நீங்கள் கடைக்கு வரப்போவதில்லை சந்தம் ஜெயின் சாப்.. பணத்திற்கு அசைவ வாடை அடிக்காது “ என்றெல்லாம் சொன்னார்கள். சந்தம் ஜெயின் சார் வெறுமனே கைகூப்பி நன்றி சொல்லி, அவர்களது நேரத்தை எடுத்ததற்காக வருத்தம் சொல்லி அந்த ஒப்பந்தத்தை திருப்பி அனுப்பினார்.
நான் ஆடிப்போனான். நான்சென்ஸ்.. என்ன பெரிய வாய்ப்பு.. ச்சை.. சந்தம் அங்களிடம் சண்டை போட்டேன்.. முட்டாள் செயின்கள் என்று சொல்லாமல் சொல்லி சண்டை போட்டேன். அந்த வீடு எனக்கு அந்த உறவை கொடுத்திருந்தது. அங்கிள் ஏதோ மென்று ஓரு சிரிப்பு சிரித்து என்னை புறம் தள்ளினார்.
அவரின் மன உறுதி ஆழமான விழுமியங்கள் மேல் எனது இயலாமையால் மெல்லிய பொறாமையோடு கூடிய மதிப்பு கவிந்திருக்கலாம். ஹீம். எனக்குள் எதுவோ என்னவோ செய்தது.
*
சொல்லப்போனால், நான் பெளத்தனாக, ஆச்சராமில்லாத பக்தியில்லாத பணக்கார ஜெயினாக வாழ விருப்படுபவன். யாராக விருப்பமோ, அவர்களை நமது உள்மனம் வெறுக்க சொல்லும்போல. வெறுத்தலின் மூலம் தான் நான் அவர்களை நிறைய நெருங்கியிருக்கிறேன். வீரின் அறிவில் எனக்கு பாதியிருந்தது.
அவர்களோடு நான் நெருங்கி பழகுபவனாக, அவர்களின் நிறைகளை ஆராதிப்பவனாகயிருகிறேன். எவ்வளவு நல்ல மனிதர்கள். என்ன விசாலமான பெளத்த, ஜைன மதங்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா இந்து பிரிவுகள்போல வெளிப்பார்வைக்கு வந்துவிட்டாலும் அதன் வளர்ச்சிகள் ஆச்சரியபடுத்துகின்றன. சிரிப்பாய், நகைச்சுவையாய் வெளிப்பட்டாலும், என் வன்மம் வார்த்தையாய், ச்சை..
மிச்சாமி துக்தம் – ஜானு பேன்.
*
சின்னவயதில் நானிருந்த ஸ்டோரில் சில ஐயங்கார் குடும்பங்களும் உண்டு. எந்த கிலேசமும் இன்றி நகமும், சதையுமாய் அவர்களோடு வளர்ந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் வன்மம் இருக்கத்தான் செய்தது. அதுவும் தமிழக பிண்ணனியில் உயர்வகுப்பை திட்ட யோசிக்கவே வேண்டாம். மென்மையாய், கடுமையாய் திட்டலாம்.
“ என்னடா, சீனு, இன்னிக்கு கப்படிக்கிறே.. ஆத்துல.. மீனா..”
சீனு கெட்டவார்த்தையால் என்னை உதாசினப்படுத்திவிடுவான். அவனது வீட்டிலே ஒரு முறை கேட்டேன்.
“என்னடா. சீனு. இன்னிக்கு.. வடகலை மீனா, தென்கலை மீனா.. “
அவன் அப்பா சிரித்துக்கொண்டே எழுந்து போனார். மாமி ‘ உன் தலை’ என்று சொல்லியபடி என் தலையில் பாசமாய் குட்டினாள். தாத்தாவிற்கு கொஞ்சம் கோபம். மீன் பற்றி பேசியதை பற்றியல்ல. தென்கலை மீனோடு ஓப்பிட்டதற்கு..
ஆனாலும், சிறுவனின் சிறுபிள்ளைதனம் தாண்டி அவர்களுக்கு வலித்திருக்கலாம்..
மிச்சாமி துக்தம் சீனு & பேமிலி.
*
வாகித் கான் ரொம்ப மென்மையானவன். ஏற்கனவே சொல்லியிருந்தான், இந்த மாசம் எனக்கு ஈவனிங் பிக்ச் பண்ணாதிங்க சார்.. இனிக்க இனிக்க பேசி சரி சொல்லிவிட்டு, ஆல் த பெஸ்ட் கை கொடுத்துவிட்டு எனது ஆபரேசன் டீமுக்கு எதுவும் சொல்லவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணட்டும் என்ற சிந்தனைதான், வேறென்ன,
ஒரு நாள், ஏற்கனவே சோம்பிப்போயிருந்த அவனை, ஒரு வாடிக்கையாளர் நீண்ட நேரம் காக்கவைத்து வதக்கியிருக்கிறார். அவனுக்கு தலைபோகிற காரியமானாலும், ஆறுமணி பிரார்தனைக்கு போயாகவே வேண்டும். மும்பையின் பலயிடங்களிலும் நடக்கும். அங்கேயே முடித்துவிட்டு வேலைக்கு போகிறவர்களும் உண்டு. ஆனால் வாகித்திற்கு தனது வீட்டில் மட்டுமே செய்ய ஆசை. பிரார்த்தனை முடிந்து அவர்களோடு உண்டு, பேசி கழிப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சியை, மன்னிக்க, கடமையை, அவன் இழக்க தயாராகயில்லை.
என்னை வறுத்தெடுத்துவிட்டான்.
“ என்னய்யா முடியும்.. கேன.. வேலை.. வேண்ணா.. நாளைக்கு வந்து லெட்டரை தூக்கியெறியறேன்.. எனக்கு என்னோட தர்மம் முக்கியம்.. எல்லாத்தையும் விட.. “
நான் கோபமாகி, மிக கோபமாகி, மிக மிக கோபமாகி மெளனமானேன். அதீத மெளனத்தால் வன்மம் அதிகரித்தது. சில வலதுசாரி இதழ்களில் இதைப்பற்றி படித்தபோது அது பெரிய மிகைப்படுத்துதல் என்று நினைத்து இடக்கையால் தள்ளினேன்.
உண்மை. மத நம்பிக்கைகள் சரியோ, தவறோ ரொம்ப ஆழமானவை.
அவனின் ஆழமான பிடிப்பின் மீதுதான் எனக்கு பொறாமை வந்திருக்கவேண்டும்.
அடுத்தநாள் அவனின் சோர்வான முகத்தை பார்த்தவுடன் மறுபடியும் இளகிப்போனேன். வாகித் நல்ல நேர்மையான, திருகுதாளம் இல்லாத தொழிலாள நண்பன். பாவம் என்ன பசியோ கோபமாகி கத்தியிருக்கிறேன்.
எல்லாம் மறந்து பேசிக்கொண்டேயிருந்தேன். அவனிடம் மேலாளார் புத்தி தடுக்க கடைசி வரை சொல்லவேயில்லை.
வாகித் மிச்சாமி துக்தம்.
*
எழுத்தால், எண்ணத்தால், மனதால், உடம்பால், காயேநவாச, அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், மனசே இந்திரியர்வா,
காமிமீ சவி ஜீவா ( எல்லா உயிர்களையும் மன்னிக்கிறேன்)
சவி ஜீவா காமாந்து மீ ( எல்லா உயிர்களும் என்னை மன்னிக்கட்டும்)
மித்தி மீ சவி பியேசு ( எல்லா உயிர்களிடம் நான் அன்பு பாராட்டட்டும்)
இதெல்லாம் சரி, அடுத்த வரிதான் – எங்கயோ கொண்டு போகிறது.
வயிரம் மஜாகம் ந கினே ( எனக்கென்று பகையே எதுவுமில்லை)
வாகித் மிச்சாமி துக்தம்
—
mani@techopt.com
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)