“தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை

author
0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

A Ra சிவகுமாரன்


திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

அண்மையில் “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” என்னும் தலைப்பில் முனைவர் மு இளங்கோவன் தங்கள் திண்ணையில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். கு சுந்தர மூர்த்தியின் அருமை பெருமைகளை அறியச் செய்திடும் அருமையான ஒரு படைப்பு. தொல்காப்பியத்திலும் பன்னிரு திருமுறைகளிலும் அவர் கொண்டிருந்த நாட்டத்தைக் கட்டுரை நன்கு விளக்கப்படுத்தி உள்ளது. இலக்கணத்தை எட்டிக்காய் என நினைத்து ஒதுங்குவது இக்காலம். இருப்பினும் கு சுந்தரமூர்த்தி அதைப் பரிமாறினால் நான்கு மணி நேரம் ஆனாலும் இனிப்பாகத் திவட்டாமல் உண்ணலாம் என்னும் செய்தி வியப்பைத் தருகிறது. அவரது கற்பிக்கும் ஆற்றலை எண்ணித் தலைவணங்கச் செய்கிறது. அவரிடம் பாடம் கேட்டவர்கள் பேறு பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இளங்கோவன், பேராசிரியர் சுந்தர மூர்த்தியிடம் பாடம் கேடட் உணர்வைக் கட்டுரையில் உணர முடிகிறது.

தமிழகத்தில் தமிழ் படித்த தகுதியானவர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கின்றன என்னும் செய்தி மகிழ்ச்சி தருவதோடு தமிழுக்கு மறுமலர்ச்சி உண்டு என்பதைத் தங்கள் திண்ணை வெளிக்கொணர்கிறது.

பேராசிரியர் கு சுந்தரமூர்த்தியின் பெருமையைக் குன்றின் மேல் இட்ட விளக்காக எடுத்திக்காட்டிய முனைவர் மு இளங்கோவன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

நன்றி வணக்கம்
அன்புடன்
A Ra சிவகுமாரன்
தமிழ்த்துறைத் தலைவர்
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்

5-10-2007


sivakumaran.r@nie.edu.sg

Series Navigation

Similar Posts