“ஜடப்பொருளின் உரை”

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

கே.பாலமுருகன்


“வணக்கம்! வணக்கம்!
வந்தோருக்கு வணக்கம்!
நான்
உலகத்தின் மகத்தான
பலவீனமான ஜடப்பொருள்களின்
பிரதிநிதி!
உங்களுக்காக செய்தி
கொண்டு வந்திருக்கிறேன்!

கடந்த நூற்றாண்டு
தொடங்கி
இன்றுவரை
ஜடப்பொருள்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
பெருகிக் கொண்டே போகிறது!

ஒவ்வொரு நாளும்
குறைந்தது 10 000
ஜடப்பொருள்கள்
மருத்துவமனையில்
பிறந்து தொலப்பதால்
எங்கள் குலம்
எங்கள் ஜடப் பொருள்
தலைமுறை
ஆனந்த மகிழ்வில்
கிடக்கிறோம்!

வாருங்கள்
புதிய ஜடங்களே
வளருங்கள்
பாலூட்டி
சீராட்டி
கட்டுபாடுகள் விதித்து
அறையில் அடைத்து
கலாச்சாரத்தில் சிக்கி
கடைசியில் வந்து
சேர்வது
ஜடப்பொருளாகவே!


ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation