ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

மன்சூர் ஹல்லாஜ்


தமிழ்மக்களுக்கு மீன்காரத்தெரு நாவல் மூலம் அறிமுகமான இளம் நாவலாசிரியர்
கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவு இது.

தக்கலையில் உள்ள மத அடிப்படைவாதிகளால் ஹெச்.ஜி.ரசூல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். இது அவருடைய மைலாஞ்சி கவிதைத் தொகுப்பு வெளியான காலத்திலிருந்து தொடர்கிறது.

இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரையை எழுத நேர்ந்ததற்கான சந்தர்ப்பம் குறித்து அவர் குமுதம் ரிப்போர்ட்டர் 12- 8 – 2007 இதழில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது இதை எழுத வேண்டியதற்கான அவசியம் என்ன வந்தது,, என்று கேட்கிற புத்திமான்களுக்கு ஒன்று கேட்கிறேன். எப்போது எதை எழுத வேண்டும் என்று படைப்பாளிகளுக்கு அட்டவணை தர நீங்கள் யார்?

குரானின் கருத்துக்களை நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு வளைத்து பல்குத்திக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் படைப்பாளிகள் பரந்து பட்ட பார்வையுடன் எடுத்து ஆரோக்கியமாக விவாதிக்க வந்தால் உங்கள் சண்டியர்த்தனங்களை பிரயோகித்து எங்களை சந்தியில் நிற்க வைப்பீர்கள்..

அப்படி என்ன இஸ்லாம் சமூகத்தில் கள்ளுண்ணாமை கட்டுக்கோப்பாக இருக்கிறது..?எங்கே ஒரு ஆய்வு நடத்திப் பாருங்களேன்… உங்கள் அடிப்படைவாத பர்தாக்களை பொத்தி சில தலைமுறைகளை பாழாக்கியது போதும்

ரசூலுக்குப் பின்னால் ஜமாத் இல்லாமல் இருக்கலாம். சத்தியம் இருக்கவே இருக்கிறது.

ஒரு பேனாமுனையை முறிக்கப் பார்ப்பதும் சமுதாயத்தை இருட்டு உலகத்தில் போட்டுப் புதைப்பதும் ஒன்றுதான்.


Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்