ஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

ராய்ட்டர்ஸ்


மருத்துவத்திற்காக குளோனிங் (நகல்) செய்வதை அனுமதிக்க திட்டம் இருக்கிறது என்று ஸ்பானிய மருத்துவ அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவு அரசாளும் சோசலிஸ கட்சிக்கும், சக்தி வாய்ந்த ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே புதிய சண்டை வர வாய்ப்பை அதிகரித்துள்ளது.

எல் முண்டோ என்ற பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், இந்த சட்டம் அடுத்த வருடமே சட்டப்பூர்வமாகும் என்று இவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘சர்ச் எப்போதுமே அறிவியல் முன்னேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. தனால் நாம் இன்று முன்னை விட நன்றாக வாழ்கிறோம் ‘ என்று இவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ குளோனிங் முறையில் கருக்களை உருவாக்கி அவற்றில் இருக்கும் தண்டு செல்களை அறுவடை செய்து நோய்களை தீர்க்க பயன்படுத்துவார்கள். இந்த முறை மிகவும் விவாதத்துக்குரியது. ஏனெனில் அந்த கருக்கள் பின்னால் தூக்கியெறியப்பட்டுவிடுகின்றன.

பிரிட்டன், பெல்ஜியம், சிங்கப்பூர், சீனா ஆகிய அரசாங்கங்கள் இந்த முறை டையபடிஸ், அல்சைமர், முதுகுத்தண்டு பாதிப்பு போன்ற நோய்களுக்கு மிகச்சிறந்த மருத்துவம் என்று கூறுகின்றன.

ஆனால், அமெரிக்காவின் புஷ் அரசாங்கமும், அங்கிருக்கும் கர்ப்பசிதைவு எதிர்ப்பாளர்களும் இது மனித உயிர்களைக்கொல்வது என்று கருதுகிறார்கள்.

ஸ்பெயினில் அனுமதிக்கப்படும் இந்த ஆராய்ச்சிக்கும், அதன் பயனுக்கும் மிகவும் கட்டுப்பாடான விதிகள் விதிக்கப்படும் என்று மருத்துவ அமைச்சர் சால்காடோ தெரிவித்தார்.

தெராபடிக் குளோனிங் என்னும் மருத்துவ நகல் முறைதான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்துக்காக நகல் முறை நிச்சயம் அனுமதி மறுக்கப்படும் என்று இவர் தெரிவித்தார்.

ஓரின பாலுறவு திருமணங்கள் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக ஆக்கி, ஸ்பெயினில் ஆட்சி செய்யும் சோசலிஸ்டுகள் இந்த நாட்டின் கத்தோலிக்க திருச்சபையைக் கோபப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பாலான ஸ்பானியர்கள் பெயரளவுக்கு கத்தோலிக்கர்களாக இருந்தாலும், தாராளவாத அணுகுமுறையையே சமூகத்தில் கடைபிடிக்கிறார்கள்.

—-

Stanford page on Stemcell

Series Navigation