ஸூபி முஹம்மதிற்கு…..

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

பூவண்ணன்ஸூபி முஹம்மதிடமிருந்து ஹெச்.ஜி ரசூலுக்கு ‘பத்வா’ வழங்க முல்லாக்களூக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனக் கேள்விக்கணை தொடுத்திருந்தார். சூபிமுகமது எனும் பெயர் உண்மையாக் இருக்கும் பட்சத்தில் (சரியாக எழுதுவதென்றால் ஸூபி முஹம்மத் என்றிருக்க வேண்டும்) அவருக்கு காதில் பாங்கு சொல்லி ஸூபி முஹம்மத் என யார் பெயரிட்டார்களே அதே முல்லாக்கள்தாம்.தவிர உண்மையான் முஸ்லிம் ‘முல்லா’ என எழுத மாட்டான். ஆலிம் அல்லது பாக்கவி என எழுதுவான்.

ஹெச்.ஜி ரசூலின் ஊர்க்காரர்கள் அவரை ஊர்விலக்கம் செய்து விட்டார்கள் என எழுதியிருக்கிறார், கட்டுரையாளர். இதுவரை அவர் எழுதியது உண்மைதான், அதற்கு மேலே நடந்தது என்ன என்பதை எழுத மறந்து விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா ?

நடந்தது இதுதான், உள்ளூர் ஜமாத்தார்கள் ஊர்விலக்கம் செய்தவுடனேயே வழக்கம் போல ஹெச்.ஜி ரசூல் மீண்டும் ஊர் ஜமாத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, செய்தது தப்பு தான் இனிமேல் இனி இஸ்லாத்திற்கு புறம்பாக எழுத மாட்டேன் என மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதென்ன வழக்கம்போல என கேட்கத் தோன்றுகிறதா ! அது ஒன்றுமில்லை ‘மைலாஞ்சி’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டு விட்டு அதற்கும் இஸ்லாமிய சமுதாயத்தாரிடமிருந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு முதன் முறையாக ‘ஊர்விலக்கம்’ செய்த போது அய்யோ இதை கேட்பாரில்லையா என கனிமொழி,களந்தை பீர்முஹம்மது, மனுஷ்யபுத்திரன்,நக்கீரன் கோபால் இவர்களின் காலைப் பிடித்து ‘இந்தியா டுடே’ யில் விளக்கம் கொடுக்கச் செய்தார். ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் உள்ளூர் ஜமாத்திற்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து ஊரோடு சேர்ந்து கொண்டார்.

இன்னும் எத்தனை முறை மன்னிப்பு கேட்கப் போகிறாரோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.


madukkooran@gmail.com

(இந்தக் கடிதத்தை ஹெச் ஜி ரசூலுக்கு அனுப்பி உண்மை விவரம் தெளிவுபடுத்தக் கேட்டிருந்தோம். அவருடைய கடிதம் தனியே பிரசுரம் ஆகிறது.)

Series Navigation

பூவண்ணன்

பூவண்ணன்