வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

கே. செல்வப்பெருமாள்


பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் சிகரத்தை தொட்டிருக்கிறது இளைஞர்களின் போராட்டம். கடந்த ஒரு மாதமாக பல லட்சக்கணக்கான இளைஞர்களும் – மாணவர்களும் – தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 17ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சியை மீன்டும் நினைவூட்டுவதாக கூறப்படுகிறது.

ஏன் இந்தப் போராட்டம் ?

பிரான்கு அரசாங்கம் மார்ச் 7 அன்று கொண்டு வந்த “முதல் வேலைவாய்ப்பு ஒப்பந்த சட்டம்” (CPE – First Employment Contract Act ) தான் மாணவர்கள் – இளைஞர்களின் கோபத்தீயை இந்த அளவிற்கு உசுப்பி விட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சராத்தின் அடிப்படையே “யூகு அண்ட் த்ரோ” (உபயோகப்படுத்து – னக்கியெறி)என்பதுதான். அதைத்தான் தற்போது வேலை எங்கே கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கக்கூடிய இளைஞர்கள் மீது சுமத்தியிருக்கிறது பிரான்கு அரசு.

“இந்தச் சட்டத்தின் படி 26 வயதிற்கு கீழே இருக்கக்கூடிய இளைஞர்களை முதன் முதலில் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் போது, இரண்டு ஆண்டு காலத்திற்குள் அந்த இளைஞர்களை எந்தவிதமான காரணத்தையும் கூறாமல், எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கிக் கொள்ளும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சட்டம் 20 பேருக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறுகிறது.”

மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு அதி நவீன அடிமைத்தனமே தவிர வேறு எதுவும் இல்லை! அதுமட்டுமின்றி பிரான்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் – முதலாளிகளுக்கும் துடிதுடிப்போடு இருக்கக்கூடிய இளம் ரத்தத்தை தொடர்ந்து உறிஞ்சி கொழுத்திட வழிவகை செய்துள்ளது இந்தச் சட்டம்.

பிரான்சில் வேலையின்மை

உலகமயமாக்கல் சொர்க்கத்தை கொண்டு வரும் என்று பூச்சாண்டி காட்டி வரும் ஏகாதிபத்தியவாதிகளின் முகமூடி பிரான்சில் கிழித்தெறியப்பட்டுள்ளது. பிரான்சில் வேலையின்மை விகிதம் 10 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த விகிதம் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடத்தில் மட்டும் 18 சதவீதத்திற்கு மேல் நிலவுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. இது தவிர பிரான்சின் பல புறநகர் பகுதிகளில் – ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இந்த விகிதம் 50 சதவீதத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாகி வருகின்றன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு அரசு எந்தவிதமான முயற்சியும் எடுப்பதில்லை.

பிரான்சில் வேலையின்மை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக் கொண்டே வந்தாலும், அதைவிட பன்மடங்கு பிரான்கு பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் பெருகிக் கொண்டே வந்துள்ளது. 2005ஆம் ஆண்டு மட்டும் 84 பில்லியன் யூரோ (8,400 கோடி யூரோ) அளவிற்கு அவர்கள் லாபமடைந்துள்ளதாக காம்பகு புரோகிரகு என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

வேலையின்மையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டு வந்ததாக பிரான்கு பிரதமர் டோமினிக் டெ வில்ப்பன் கூறுகிறார். இது வெந்தப் புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவதுபோல் உள்ளது என்ற கூறி, பிரதமரின் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள பல்கலைக் கழக மாணவர்கள் – பள்ளி – கல்லூரி மாணவர்கள் – இளைஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். பிரான்சில் உள்ள 84 பல்கலைக் கழக மாணவர்களும், பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சட்டத்தை வாபகு பெற வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் – வலுவடைந்து வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பிரான்கு அரசு. பிரான்சில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஐரோப்பா முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் பிரஞ்சுப் புரட்சியின் போது “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்று உயர்த்திப் பிடித்த பதாகைகளை மீண்டும் உயர்த்தத் துவங்கியுள்ளனர்.

“மீண்டும் தெருக்கள் வென்றிருக்கின்றன” என்று கூறுமளவிற்கு போராட்டத்தின் வீச்சு பிரான்கு முழுவதும் வியாபித்திருக்கின்றன. இந்தப் போராட்டம் குறித்து சோசலிகுட் கட்சியைச் சார்ந்த செய்தி தொடர்பாளர் ஜூலியன் ட்டிரே கூறும் போது, “இளைஞர்கள் தெருவில் இறங்கி விட்டால் என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது…” என்று வர்ணித்துள்ளார்.

பொங்கியெழுந்து வரும் போராட்டத்தை அடக்குவதற்கு முயலும் பிரான்கு போலீசை தடுத்து நிறுத்த தங்களது மேசைகளையும், நாற்காலிகளையும் தடுப்பு அரண்களாக மாற்றி வருகின்றனர். போலீசுக்கு எதிராக தொடர்ந்து கல்வீச்சுக்களும், தீ வைப்பு சம்பவங்களும் – புகை மூட்டமுமாக பிரான்கு முழுவதும் காட்சியளிக்கிறது.

மார்ச் 18 அன்று நடைபெற்ற ஊர்வலம் – ஆர்ப்பாட்டங்களில் மட்டும் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பாராசில் மட்டும் 80 ஆயிரம் முதல் 4 லட்சம் மாணவர்கள் – இளைஞர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பிரான்கு தெருக்கள் முழுவதும் மாணவர்கள் – இளைஞர்கள் வசப்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதை உணர்ந்த பெற்றோர்களும் இந்த எதிர்ப்பியக்கங்களில் லட்சக்கணக்கில் பங்கேற்று வருகின்றனர்.

“உங்கள் தொண்டைக்கு அருகில் கத்தியை வைத்துக் கொண்டு வாழ முடியாது” என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 21 வயது திரைப்பட கல்லூரி மாணவர் ஸோபி கோஜன் இந்த சட்டத்தின் கொளர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரான்கு முழுவதும் உள்ள 84 பல்கலைக் கழகங்களில் 21 பல்கலைக் கழகங்கள் இழுத்து மூடப்பட்டு விட்டன. 37 பல்கலைக் கழகங்கள் மிக மோசமான அளவிற்கு பாதிக்கப்பட்டு – போராட்டக் களமாகியுள்ளது.

இன வேறுபாடும் – நவம்பர் போராட்டமும்

பிரான்கு கடந்த ஓராண்டு காலமாகவே போராட்டங்களின் மையமாக திகழ்ந்து வருகிறது. 2005 அக்டோபர் மாதம் இரண்டு கருப்பின இளைஞர்களை போலீகு துரத்தி சென்றதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் மின்சார டிரான்குபார்மர்கள் மீது ஏறும் போது இறந்ததைத் தொடர்ந்து பிரான்சின் புறநகர் பகுதிகள் பற்றி எரிந்தன. இந்தப் போராட்டம் பிரான்சில் நிலவும் இன வேறுபாட்டையும், பெருகி வரும் வேலையின்மையையும், பிரான்சின் புறநகர் பகுதிகள் வெறும் பன்றித் தொழுவங்களாக காட்சியளிப்பதையும் உலகுக்கு உணர்த்தியது.

பிரான்சில் கருப்பின மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமான வழலிலேயே இன்றைக்கும் வைக்கப்பட்டுள்ளது. உலக நாகரிகத்தின் சின்னமாக தங்களை புகழ்ந்துக் கொண்டிருந்தாலும், பிரான்சின் புறநகர் பகுதிகள் நாறிக் கொண்டிருப்பதைத்தான் அந்நாட்டின் நிலவும் இன வேறுபாடுகள் நிரூபிக்கின்றன. பிரான்சில் வாழும் கருப்பின மக்களை பேருந்திலும், ரயிலிலும், தெருக்களிலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போலீகு சோதனையிடலாம். அவர்கள் முழுக்க முழுக்க இரண்டாம் தரமாகவே நடத்தப்படுகின்றனர். பிரான்சிலேயே பிறந்து வளர்ந்து – பிரஞ்சு குடிமகனாகவே இருந்தாலும் கருப்பின இளைஞர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. ஒரு கருப்பின இளைஞன் வேலை கேட்டு 100 விண்ணப்பங்களை கொடுத்திருந்தாலும் அதில் 14 இடங்களில் இருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தாலே அவன் பெரும் அதிர்ஷ்டக்காரன்தான். பிரான்சு புறநகர் பகுதி முழுவதும் கிட்டத் தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் இவர்கள் அனைவரும் பிரான்சின் குடிமக்கள்தான். இவர்கள் வாழும் தெருக்கள் அழுக்கடைந்தும், நாறிக் கொண்டும்தான் இருக்கின்றன. இவர்கள் எலிகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு வாழும் வாழ்க்கையையே மேற்கொள்கின்றனர்.

இந்தப் பின்னணியில் நடைபெற்ற அக்டோபர் – நவம்பர் மாத எழுச்சி மிகு போராட்டங்களில் 5000த்திற்கும் மேற்பட்ட கார்கள் பற்றி எரிந்தன. அப்போதே பிரான்சில் நடைபெற்ற இந்தப் போராட்டம் குறித்து ஆய்வாளர்கள் கூறும் போது, “இந்தப் போராட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வெடித்திருக்க வேண்டும்” என்று கூறினர். பிரான்சில் நிலவும் வேலையிண்மைதான் இந்தப் போராட்டத்தின் மையப் புள்ளி என்று வலியுறுத்தினர். இந்தச் வழ்நிலையில்தான் பிரான்கு அரசின் புதிய வேலைவாய்ப்பு சட்டம் அனைத்து தரப்பு இளைஞர்களிடத்திலும் கோபாவேசத்தை கிளறி விட்டுள்ளது. வேலைசெய்யும் தகுதியுள்ள ஒவ்வொரு இளைஞனும் இரண்டு ஆண்டு காலத்தில் “செகன்ட் ஹான்ட்” இரண்டாம் தர இளைஞனாக மாற்றிடும் வழ்நிலையை இந்தச் சட்டம் உருவாக்கியுள்ளது.

இந்தச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் 2007ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் தற்போதைய பிரதமர் டோமினிக் டி விப்பனின் ஆதரவும் – செல்வாக்கும் பெருமளவுக்கு சரிந்துள்ளது. அதே சமயம் இந்தச் சட்டத்தை ஆதரித்தும் இன்னொரு குரல் எழுகிறது. அது பாசிகுட்டுகளின் குரல், நிக்கோலகு சர்கோசி இவரும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறார். இவர் ஏற்கனவே இசுலாமிய மக்களுக்கு எதிராகவும், கருப்பின மக்களுக்கு எதிராகம் கடும் வெறுப்பை உமிர்ந்து கொண்டிருப்பவர். கருப்பின மக்கள் சுவர்களின் மேல் படிந்து கிடக்கும் அழுக்குகள் – அவற்றை அகற்றியே ஆக வேண்டும் என்று கூறக்கூடியவர். இந்த சட்டத்தை வாபகு வாங்க மாட்டோம் என்று பிரதமர் விப்பன் கூறினாலும், போராட்டத்தின் வீச்சினால் தற்போது அதில் மாற்றம் கொண்டு வருவதாக கூறியுள்ளார். இது கூட இந்தப் போராட்டத்தின் வீச்சை தணிப்பதற்கு தானேயன்றி வேறல்ல என்று மாணவர்களும் – இளைஞர்களும் ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பிரான்சில் உள்ள ஐந்து பெரும் தொழிற்சங்கங்களும் – மாணவர் – இளைஞர் அமைப்புகளும் – சோசலிஸ்ட்டுகளும் மார்ச் 28-யை “நடவடிக்கை நாள்” (ஆக்ஷன் டே) எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முன் அரசு இந்த சட்டத்தை வாபகு பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு செல்லும்!

உலகமயமாக்கலும் தொழிலாளர் சட்டங்களும்

உலகமயமாக்கலின் ஆதார சுருதியே பன்னாட்டு நிறுவனங்களின் லாபமும், தடையற்ற சுரண்டலும்தான். இதற்கு உத்திரவாதப்படுத்துவதே உலகமயமாக்கல். இதற்கு தலைமை பூசாரியாக செயல்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியம் – உலகமயமாக்கலின் கொடும் கரங்கள் நீளும் வளரும் நாடுகளில் மட்டும் அல்லாது தங்களுடைய முகாம்களுக்குள்ளேயே கூட இந்த சுரண்டலுக்கு உத்திரவாதப்படுத்திக் கொள்வதில் பெரும் கவனமாக இருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அதன் ஒரு பகுதிதான் தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது.

இந்தியாவில் கூட முதலாளிகள் தம் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும், ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்திடவும், தம் விருப்பத்திற்கு ஏற்ப நிறுவனங்களை மூடிக் கொள்வதற்கு ஏற்ப தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டி நிற்கின்றனர். நம் நாட்டில் “ஹைர் அண்ட் பயர்” நடைமுறையை கொண்டு வர மாட்டோம் ஆளும் வர்க்கம் கூறி வந்தாலும் தொழிலாளர் சட்டத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிறப்பு ஏற்றுமதி மண்டலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் எட்டாத இடமாக மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இடதுசாரிகளின் தலையீட்டால் அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் இருக்கின்றன.

முதலாளித்துவ சமூகத்தால் வேலையின்மைக்கும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்விற்கும் எக்காலத்திலும் முடிவு கட்ட முடியாது என்பதைத்தான் பிரான்கு அனுபவம் உணர்த்துகிறது. பிரஞ்சுப் புரட்சியின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் மாணவர்கள் – இளைஞர்களின் எழுச்சி உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்ட தீவிரப்படுத்துவதாகட்டும், வேலையிண்மைக்கு எதிரான பிரான்கு இளைஞர்களின் போராட்டத்தோடு நம்மையும் இணைத்துக் கொள்வோம்!

—-

ksperumal@gmail.com

****

Series Navigation

author

கே. செல்வப்பெருமாள்

கே. செல்வப்பெருமாள்

Similar Posts