வேர்வை

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

அனந்த்


வெண்பாவை மேனி வியர்த்திடச் செம்மையுறப்
பண்ணுதல் பார்ப்போம் வியந்து!

பொருள் 1: (அழகு மிகவேண்டும் என்பதற்காக) வெள்ளைக்கார மங்கை தன் உடம்பை வெயிலில் கிடத்தி வேர்வைசிந்தி, சிவப்புநிறமாக ஆக்குவதைக் கண்டு நாம் அதிசயிப்போம்.

பொருள் 2: தளைபோன்ற வரையறைகள் கொண்ட வெண்பா வகைச்செய்யுளைச் சிலர் உடலெல்லாம் வேர்த்து விறுவிறுக்கப் பாடுபட்டு மேலும்சிறப்புறச் செய்தல்கண்டு நாம் வியப்போம்.
இந்தச் சிலேடை வெண்பா அப்படிப் பாடுபட்டுச் செய்ததல்ல!
—-

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்