வேத வனம் விருட்சம் 36

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

எஸ்ஸார்சி




இந்திரன் நூறுமுறை
உதவும் அவன்
எங்கள் போருக்கு த்துணை
சொர்க்கம் உறுதிப்படும்
போரிலே ஆர்யனுக்கு க்காவல்
விதிப்படி வாழாக்
கருப்பர்களின் தோலைத்துணிப்பவன்
பேராசைக்காரர்களை
துன்பம் தருவோரை
சாம்பலாய்ச் சமைப்போன் -ரிக் 1/130

மனிதர்களைச்செயல்களால்
படித்து
அவரவர்க்குத் தகு பணிதரும்
அறிஞன்
பகவர்களை கொன்றுமுடிப்போனும்
அவனே
இந்திரனுக்கு அளிக்கப்படும்
அவியே
குழந்தைச்செல்வம் கொணர்கிறது
இந்திரனொடு தேவர்களை அடையும்
அணிவரிசையில் முன்னே
செலுத்துகிறது ஒருவனை. –ரிக் 1/132.

அக்னியோ பேறறிஞன்
சர்வ வியாபி
யாதும் தெரிய ச்சொல்லுபவன்
விலக்கவேண்டியதை விலக்குபவன்
போகம் வழங்கி
உணவொடு வலிமை அளிப்போன்
செயலுக்குத்துணைவன் -ரிக்145.

அக்னியே
தானும் ஈயாது
பிறர் ஈகயை விலக்குவோன்
மந்திரம் அவனுக்கே விலங்காகட்டும்.

எம்மை க்காப்பாய்
அக்னியே ஆற்றல் மைந்தனே
வஞ்ச மனத்தோடு
மனமறிந்து தீச்சொல் உரைப்போன்
தூரம் போகட்டும் எம்மிலிருந்து. -ரிக் 1/147


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி