வேத வனம் விருட்சம் 82

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

எஸ்ஸார்சி


நிறைந்தோனே நீ
பசுவும் குதிரையும் பல்பொருளும் தந்து
மனிதத்தன்மையுடன்
பிறர்க்குதவும் புத்தியும் அருள்க
சத்திய பலமுள்ள மருத்துக்களே
வியர்வைச் சொட்ட உழைத்து
வாழ் பாட்டாளிக்கு
அவன் விரும்புவதளிக்கவும்
நண்பர் போற்றும் சத்தியம் செழித்தோங்குக
நண்பன் நிறைவுருக
இந்திரனே புறாவொன்று தன்காதல் பெடையுடன்
கூடுமாப்போலே
நீ என்னோடு அமைக
இந்திரனே நூறு சண்டைகளின் தளபதியே
எம்மைக்காத்திட
உம்மொடு இணைவோம்
மனிதர்களே உடல் ஒம்புக
நல்லவை கேட்கும் செவிகளிரெண்டும்
பொன்னால் செய்யப்பட்டவை உணர்க
சோமம் பிழி கற்கள் ஒயாமள் பணிசெய்கிண்றன
திருக்குளத்தில் மது நிறைகிறது
சக்கரம் சுழல் அழியாக் கிணறு
நனைபடுகிறது
வணக்கத்தோடு மதுவங்கே தெளிக்கப்படுகிறது ( சாம வேதம் 164)
இந்திரன் இடது இடுப்பில்
சாய்ந்தே இருப்பவன்
அக்கினிக்குச்சமானன்
அறிஞர்கள் சாமம் கூறுகின்றனர்
அறிஞர்கள் ராச்சியத்தில் அவன்
சத்தியமும் சக்தியும் போற்றப்படுகின்றன
ஆயிரம் முனிகள் அவனை
பலமுடனாக்குகிறார்கள்
அவன் சமுத்திரம் போலே ஆகிறான்
பசுவின் பாலில் ஒ இந்துவே
நின் நிறம் ஒளிரட்டும்
பட்சியை அசுரனக்கும்
எதிரிக்கும் தூரமாய் வைத்திடு ( சா.வே.165)
அக்கினியே நானாவிதமாய்
தேவர்கள் வணங்கப்பட்டாலும்
அவை எல்லாமாய் உன்னையே வந்துசேர்கின்றன
விஷ்ணுவே ஒளிக்கூட்டவாசியே
உன் வடிவம் மறைக்கடுவதேன்
அதன் ரகசியம் அறிவதாமோ
போரில் உருவம் வேறாதல் இயல்புதானே
விஷ்ணுவே நீ பெயர் பெற்றவன்
ஞானிகள் தெரிவர் நின்னை
இவ்வுலகம் தாண்டியும் நீ யே
நினக்கு என் துதிகள்
வஷட் சப்தம் செய்து என் அளிப்புக்கள்
நல் மொழிகள் உனக்கு
நற்சுகத்தால் காத்திடுக எம்மை ( சா.வே. 165)
எல்லையிலா இடமுறைவோன் விஷ்ணு
நண்பன் மித்திரன்
காலன் வருணன்
இந்திரனைத்துதிக்கின்றனர்
மருத்துக்கள் உடனாகிப்
பலமடைந்து ஆனந்திக்கின்றனர் ( சா.வே.168)
விஷ்ணு மும்முறை அடி அளந்தான்
அவன் புழுதி நிறை பாதமே எல்லாமும்
காப்போன் அவன்
தர்ம பரிபாலனும் அவனே ( சா.வே. 171)
இந்திரன் அக்கினி
இருவரிடமும் பலமும் ஞானமும்
உறைகின்ரன
சோமம் பருகிய இந்திரன்
கோட்டைகளைத்தூளாக்குபவன்
காட்டு யானை போலே
அடக்கவே முடியாதவன் இந்திரன்
துதி செய்திட
உடன் வருவோன் அவனே ( சா.வே.172)
அசுவினிகளே
உம் முச்சக்கரத்தேரில்
முவ்வாசனங்கள் அமைய
மது சுமந்து
எம் முன் வருக
பசு மக்கள் மேன்மை தருக ( சா.வே 178)
இரு முறை பிறந்தோன்அக்கினி
முவ்வுலகங்களையும் பிரகாசிக்கச்செய்கிறான்
அக்கினிக்குச் சமர்ப்பணம் செய்வோன்
சக்தி எல்லாம் பெறுகிறான்
குதிரையெனத்தலமையேற்போன்
கர்த்தாவாய் உதவுவோன்
ஒளியன் இருதயம் அணுகி
ஊஹ ஊஹ என கானம்
செய்வோம் அக்கினிக்கு ( 179)
அக்கினி விசால ஞானம் அளிப்போன்
நல் வீரமருளி
விதிபோன்றவனே சூரியன்
எதிரியை முடிப்போன்
சந்திரனை எழுச்சியாக்குவோன்
இந்திரன் காலத்தின் ஆன்மா
நேற்று மரித்தவன்
இன்று உயிர்ப்பவன்
கதிரோன் அறிக இதனை
சிவந்த பட்சி ஒர் பலவான்
வசிக்க நிலைத்த இடமில்லான்
சத்தியம் அறிந்தோன்
எதிரியை வீழ்த்திச் செல்வமருளி
சூரியன் மகான்
பெரிய பெரியோன்
எல்லோராலும் ஆராதிக்கப்படுவோன்
சூரியன் அசுரர் கொல்லி
தேவப்புரோகிதன்
அவன் ஒளி விண்ணெங்கும் ( சா.வே.180)
போரில் ஒரு நல்ல வில்லாளி
போன்றோனே அக்கினி ( 183)
எங்களைக்கொல்லும்
அன்னியனோ எங்களில் ஒருவனோ
யாவரேயாகினும்
தேவர்கள் இம்சிக்கட்டும்
பிரம்ம அறிவும் வலிமையும்
எம் கவசமாகட்டும்
எம் செவிகள் நல்லவை கேட்கட்டும்
எம் கண்கள் நல்லவை பார்க்கட்டும்
எம் அங்கங்கள் நின்னைத்துதி செய்யட்டும்
எம் ஆயுள் எமதே ஆகுக
எங்கும் விளங்கும் இந்திரன் ஆசி தருக
எங்கும் நிறைந்தோன் அருள்புரிக
வவிமையோன் கருடன் அமுதம் கொணர்க
எம் தலைவன் எமக்கு விழுமியம் சேர்க்கட்டும் ( சா.வே.187)
——————————————————

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி