வேத வனம் -விருட்சம் 71

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

எஸ்ஸார்சிபூவுலகே இறை தொழும்
மக்கள் யாம்
செடி கொடி விருட்சங்கள்
காப்பாற்றப்படுக
ஆடுமாடுகளின் கொட்டகைகள்
பேணப்படுக
வான் முகில் வளாது பெய்க
யாம் வெறுப்போரை
எம்மை வெறுப்போரை
புவியின் கோடிக்கு இழுத்துப்போய்
ஆயிரம் சங்கிலியால் பிணையுங்கள் ( சுக்ல யஜுர் 1/)
அக்கினி கவிகட்கு
நலன் சுமப்பவன்
பிதுருக்கள் இன்பம் பெறுக
காளைகள் தம் இருப்பிடம்
செல்வதொப்ப கம்பீரமாய்
வாரும் பிதுருக்களே
காளைகள் தம் வசமுள்ளவை
புசிப்பதொப்ப நீங்கள்
நும் பாகம் சுவையுங்கள்
தாமரை த்தார் சூடும்
குமாரனைத்தாருங்கள் எமக்கு ( சு.ய /2)
முக்கண்ணன் ருத்ரனை
தொழுதெழுவோம்
இனிய வளம் சேர்ப்போன் ருத்ரன்
வெள்ளரிக்கனி தன் தாய்ச்செடியின்
தண்டிலிருந்து இயல்பாய் பிரிவதொப்ப
யான் மரணத்தை அணுகுவேனாகுக
வாசம் கமழ்ந்து வளம் தரும் முக்கண்னன்
எம்மை என்றுமுள வையிடமிருந்து
நீங்காமல் காப்போன் ஆகுக ( சு. ய. /3)
அக்கினியே என்னை
அதர்மம் சூழாமல் காத்திடுக
அறந்தாங்கி யாய்
யான் திகழ
அக்கினியே எனக்கு அருளட்டும்
வருணனின் ஆணை
சோமன் அனைத்திலும்
விரவி வதிகிறான்
வனத்தில் வாயு
ஆவினங்களில் பால்
அசுவத்தில் விரைவு
மனமாளும் புத்தி
இல்லங்களில் ஒளி
மலையில் சோமன்
வானத்தில் கதிரோன்
கதிரோனின் கண்களில்
அக்கினியின் கூர்மை
ஞானியின் முக ஈர்ப்பு
நோகா நுகத்தடி சுமக்கும்
வயல் உழு எருதுகள்
எவ்வுயிரையும் இம்சிக்கா
பிராமணன் முன் செல
யாகம் செய்வோனில்லம்
யாம் விரைவோமாகுக ( சு.ய 4 )
————————————————————–

Series Navigation