This entry is in the series 20090212_Issue

எஸ்ஸார்சி


பூரண அமைதி
பூரணானந்தம்
பூரண ஞானம்
பூரண விடுதலை
பொய்யுடல் தாண்டிய
பரிபூரணமிங்கு.
வசமாகில் உனக்கு

நீ உடல் மட்டுமே
என்றெண்ண
வெற்றுடலாகிறாய்
சச் சித் ஆனந்தம்
என்றெண்ணவோ
பிரம்மமாகிறாய்

வெற்றுச்சதையா நீ
வெற்று உடலா நீ
சூக்கும காரண
பந்தம் மட்டும்தானா
பேரன்மாவுடன்தானே
நினக்குப் பந்தம்
பேரமைதியும் பேரானந்தமும்
வாய்க்க
நின் வாழ்க்கை நிறைவுரட்டும்.

புண்ணிய பாவம்
இன்ப துன்பம்
எல்லாம் மன பந்தம்
கொணர் கோதுகள்
செயல் நினதா
சேமங்கள் நினதா
நான் செய்தேன்
நானே உண்டேன்
தொலைப்பாய் இவை
மெய்யாய் நீயோ
எப்போதும்
தப்பாமல் ஒரு பறவை.

அவித்தை
அவா
ஆற்றும் பணிப்பந்தம்
அறுபடக்கிட்டும்
அழியா ஆனந்தம்
அழியா அமைதி
அழியா அறிவு
அழியா அப்பூரணம்.

தன்னை அறிந்தவன்
தண்மை உணர்பவன்
ஆசை அகன்றிட்ட
அழகுக் குழவியாய்
அகிலம் சுழல்பவன்
யான் நான் தாண்டு
தொடுப்பும் விடுப்பும்
நின்னைத் தொலயக் காண்பாய். விசாரபிந்து உபநிசத்- 7-12


Series Navigation