வேத வனம் விருட்சம் 10

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

எஸ்ஸார்சிஉலகம் என்பது
இரண்டு நாள் சந்தை
வாழ்க்கை என்பது
இரு நொடி நாடகம்
மானுட உடல்
மூன்று நொடி நிலைக்கும்
நீர்க்குமிழ்
நட்பு நிலம்
செல்வம் அதிகாரம்
பெயர் புகழ் வீடு
மனைவி பிள்ளை
காணும் கனவுக்காட்சிகள்
எழும் விழும்
காளான்கள் போல்.

பாலினுள் வெண்ணெய் போல்
ஆன்மா
உறைந்துகிடக்கிரது
தூய நுண் அறிவுக்
கூர்மையொடு
அனுபவமாகிறது அது.

ஆன்மா விவாதித்துப்
பெறமுடியாது
பெருஞானமும் பேரறிவும்
கொணாரா ஒன்று
மனம் அடங்க
உணர்வுகள் ஒடுங்க
தியானம் செய்
அனுபவமாகும் அது

விருப்பம் மெய்யாய்
மனம் அமைதியாய்
எண்ணம் நேர்மையாய்
ஒழுக்கம் கைவர
உணர்வுகளை வென்றிட
ஐக்கியமாகும் அமைதி
உயர்ந்த நெடிய
தியானத்தால் மட்டுமே
ஆன்மாவை அடையலாம்

நீயே அதுவென்பது
மகா வாக்கியம் .

மனம் செம்மையாதலே
வீடு பேறு
அச்சமும் இச்சையும்
ஔய்வுற
செம்மைப்டும் மனம்
பூண்டு வைக்கப்பட்ட
கலம்
பெற்றுவிடாது மணம்
ஆன்மாவும்
உயிரும் அதுபோலவே

அறிவோன் அறிபொருள் அறிவு
மூன்றும் கட
பிடிபடும் பரம்
காட்சியும் காண்பொருளும்
ஒன்றாகில்
விமர்சனங்கள் ஏது
மகிழ்ச்சியும் துக்கமும் ஏது

மரணம் கவலை தராது
வாழ்க்கை அச்சம் தராது
விவகாரங்கள்
சூழ்ந்து விகாரப்படுத்தாது
எல்லாம் விஞ்சிட
எஞ்சுவது வாழ்க்கை
யானும் எனதும்
விடைபெற்றபின்
ஏமாற்றம் சோகம்
எங்கே காண்பாய்
எதனை விட
எதனைப்பெற
ஆகச் சுயம்புவாய் அது.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி