வேண்டாம் புத்தாண்டே..!

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

பனசை நடராஜன்


‘கடல் தாயே..!’ என வணங்கி

‘கரை மடியில்’ வாழ்ந்தோரை

‘அலை கரத்தால்’ தாலாட்டி

இரை கொடுத்து வளர்த்துப் – பின்

எதிர்பாரா சீற்றத்தோடு

பலிகொண்ட கொடுமை வேண்டாம்..!

கண்காணாக் கிருமி, உயிர்க்

காவுவாங்கும் நோய்கள் வேண்டாம்..!

இனப்பகையைத் தூண்டுகின்ற

இழிந்தவர்கள் இருக்க வேண்டாம்..!

வளம் சுரண்ட அப்பாவிகள்

உயிர்க் குடிக்கும் போர்கள் வேண்டாம்..!

வஞ்சகரே உலகாளும் வல்லரசா ?

வேண்டாம்..! வேண்டாம்..!!

இரக்ககுணம் தொலைத்து விட்டு

இயந்திரம்போல் வாழ்வதுதான்

இன்று நாகரிகம் என்றால் – அது

எங்களுக்கு வேண்டாம்..! வேண்டாம்..!!

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –

– (feenix75@yahoo.co.in)

Series Navigation