This entry is in the series 20050206_Issue

குமரன்


உள்ளத்தில் வேண்டும் வேட்கை
உன்னை அறிந்திட!
உரமாய் வேண்டும் வேட்கை
ஊனம் அகற்றிட!
அழியா வேட்கை வேண்டும்
அறிவியல் அறிய!
அளவிலா வேட்கை வேண்டும்
அறிவு வளர்க்க!
தழலாய் வேண்டும் வேட்கை
தளர்வின்றி பணிதொடர!
தடையின்றி வேண்டும் வேட்கை
தடைகளை தகர்திட!
வேண்டும் வேண்டும் வேண்டும்
வேண்டும் அந்த வேட்கை
வேண்டுவன பெற்றிட!

-குமரன்
sub_kumaran@yahoo.com

Series Navigation