வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பனசை நடராஜன்


‘தாய்மொழியில் பேசு ‘ என்று
வாய்கிழிய உபதேசம்- வீட்டில்
நாய்கூட மதிக்காது- இவர்கள்
‘வா ‘ என்று அழைத்தால்!
அதனால்தான்
‘வாழ்க ‘ கோஷம் போட்டுவிட்டு
வாரிசுகளை மட்டும்
வேறுமொழி பயில வைப்பார் !

பேரன் வரை வீட்டில்
பேசுவது வேற்று மொழி
பெயர்கள் எல்லாம் பிறமொழியில் !
உயிர் எந்தன் மொழியென்பார்!
ஊரை ஏமாற்றுகின்ற இந்தப்
பகல் வேடதாரிகள்!

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(panasainatarajan@yahoo.com)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்