வெளிநடப்பு!

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

கரு.திருவரசு


அரசியலில் வெளிநடப்பு – என்பது
அங்கங்கே நடப்பு!
அரசியலில் பலநடப்பு – சிறந்த
அழகான நடிப்பு!

கதிரவனின் வெளிநடப்பு – உலகைக்
கறுப்பாக்கும் துடிப்பு!
மதிமகளின் ஒளிநடப்பு – கவிதை
மாயங்களின் எடுப்பு!

கவிதையிலே வெளிநடப்பு – புதுக்
கவிதையெனும் மடிப்பு!
கவிஞர்களின் வெறும்மடக்கு – அது
கவிதைபோல நடிப்பு!

உயிர்மூச்சின் வெளிநடப்பு – மனிதன்
உலவும்கதை முடிப்பு!
செயலாற்றும் விறுவிறுப்பு – மனிதச்
*செலவுக்கொரு சிறப்பு!

*செலவு = பயணம்.
thiruv@pc.jaring.my

Series Navigation