வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

வ.ந.கிாிதரன்


எனக்குச் சில சமயம்
ஆச்சர்யமாகத்
தானிருக்கிறது
என்னை நினைத்தால்.
ஏன்
நம்மை நினைத்தால்.
ஏன் இந்த உலகை
இந்த வெளியை
இந்த விாிவை
இந்த அறிவை
இன்னும் என்னால் நினைக்க
முடிந்த, அறிய முடிந்த,
உணர முடிந்த, மகிழ முடிந்த
எதை நினைத்தாலும்

எனக்கு ஆச்சாியமாகத் தான்
இருக்கிறது.

இந்த
வயது மாற மனமும்
மாறுமோ ? மனதில்
முகிழ்க்கும் நினைவும்
மாறுமோ ? அறிவும்
மாறுமோ ?
எனக்கு ஆச்சாியமாகத்
தானிருக்கிறது.
பொருளே சக்தி.
சக்தியே பொருள்.
பொருளின்றி சக்தியில்லை.
சக்தியின்றிப் பொருளில்லை.
இருப்பின்
சக்தியை ஆக்கிய பொருளெது ?
பொருள் படைத்த சக்தியெது ?
மூன்றிற்குள் முடங்கிக்
கிடப்பதினால் மூன்றை
ஏன் இரண்டை ஏன் ஒன்றினைக் கூட
உணராலாம். நான்கை ஐந்தை
ஆறினை… அறிவதெப்படி ?
இருந்தால்
பொருளில்லாத சக்தியை
சக்தியில்லாத பொருளை
அறிவதில் புாிவதில்
சிரமமற்றுச் சிறகடித்திடல்
சாத்தியமோ ?
பாிமாணம் மீறாத
தவளை நான் ஏன்
நீயுந்தான். மீறாதவரை
கிணறு தாண்டாத
தவளைதான். கிணற்றுத்
தவளைதான். நான்
கிணற்றுத் தவளைதான்.
நாம் கிணற்றுத் தவளைதான்.
மாாிமழை நிறைக்கும்
கிணறு நீங்கி
வெளி காணும் தவளைகள்.ஆயின்
வெளி தாண்டாத் தவளைகளே!
வெளி பார்த்து வெளி தாண்டாத்
தவளைகளாய் வளையவருவோம்.
வயிறு வீங்கி வெடிக்கும் வரை
கத்திக் கத்தி வெடித்துச்
சிதறி ஓய்வோம்.

To

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்