This entry is in the series 20061116_Issue

கரு. திருவரசு


எடுப்பு
வீணைமகளே என்னோடு பாட வா
வாழும்வரை நான் உன்னோடுதா னம்மா!
கண்ணிகள்
நாத சுகமே என்னை நாடுதம்மா
நாளை என்பதே எங்கோ ஓடுதம்மா
வேத ஒலியே எங்கும் பாடுதம்மா
பேதை மனமோ உன்னைத் தேடுதம்மா
கோயில் மணியில் தினம் ஆடுகின்றாய்
கூட்டுக் குயிலை எங்கோ தேடுகின்றாய்
பாயும் நதியில் இசை கூட்டுகின்றாய்
பாடும் சுவரங்கள் என்னுள் மீட்டுகின்றாய்


thiru36@streamyx.com

Series Navigation