விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

பரிமளம்


விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
பரிமளம்

கடந்த வாரம் ம.வெங்கடேசனின் நூல் கிடைக்குமிடம் பற்றிய கடிதத்தில் விஸ்வாமித்ரா இவ்வாறு எழுதுகிறார்.

{ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும் எனது காலம் கடந்த நன்றிகள்.}

திண்ணையில் கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்டமைக்கு ஆதாரங்கள் இருந்தால் சுட்டுமாறு விஸ்வாமித்ரா அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விஸ்வாமித்ரா குறிப்பிடும் விவாதத்தில் வசவுகளுடனும் தனிமனிதத் தாக்குதல்களுடனும் நீக்கங்கள் உண்டு என்ற குறிப்புடனும் வந்தவை விஸ்வாமித்ராவின் படைப்புகளே தவிர அவரை எதிர்கொண்ட என்னைப்போன்றவர்களின் பதில்கள் அல்ல.

janaparimalam@yahoo.com

(நீக்கங்கள் செய்யப்பட வசவுகள் மட்டும் காரணம் அல்ல – திண்ணை குழு)

Series Navigation

பரிமளம்

பரிமளம்