விளிம்புகளில் நிற்பவர்கள்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

எஸ். வைதேஹி.


நகர்ந்து கொண்டிருக்கிறது
காலங்களும், பொழுதுகளும்

சுருங்கிக் போகிறது
இந்த
வெளி.

உதட்டுச் சிரிப்பின்
முழுமை மறையுமுன்
சிதறி விழுகிறது
அவ்வப்போது அணியும்
முகமூடி.

எச்சில் தடவிய
தரையெங்கும்
வார்த்தைகள்
அள்ளப்படுகிறது
இருள் சூழும்
கணங்களில்.

மனங்களையும்
சமயங்களில்
வெட்டிக் கொண்டிருக்கிறது
வலமும் இடமுமாய்
சுழன்று கொண்டிருக்கும்
காகிதக் கத்திகள்.

வட்டங்களையும்
சதுரங்களையும்
இருப்பிடம் தேடி
சுற்றிக்கொண்டிருக்கிறது
மனித மனங்கள்.
***
svaidehi@hotmail.com

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.