This entry is in the series 20110424_Issue

ப மதியழகன்


கை நீட்டி யாசித்தது மரம்
என்னிடம் கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை
வழிநெடுகிலும் என்னிடம்
பேசிக் கொண்டே வந்தது
தான் மரமான கதையையும்
தான் பார்த்த மனிதர்களையும்
பற்றி
மழையில் நனைவது குறித்து
இருவரது விருப்பமும்
ஒத்துப்போனது
வசந்த காலத்தில்
யாசகம் கேட்கும் நிலை
எனக்கு ஏற்படாது என்றது
வீட்டை அடைந்ததும்
மரத்தைப் பிரிந்தது
மனிதனைப் பிரிவதைவிட
துக்கத்தை அளித்தது.

Series Navigation