விமர்சனத் தீ
மீ.வசந்த்,இந்தியப் பெருங்கடல்.

வெறும் கல்
கலையுடன்
நல் சிலையாகலாம்,
சிற்றுளிகளுடன்
நற்சிற்பிகள் தேவை.
நிற்பதென்னவோ
செருப்புகளுடன் பொறுக்கிகள்!!.
பரந்த உலகில்
விரிந்திருக்கும் சமூகம்,
காண்பதற்குப் பொது.
நம் பார்வை
திசைகளைப் பொருத்தது.
சபைநலம் கருதி,
சண்டைகள் குறைக்க
காத்திருக்கும் விரல்கள்,
வார்த்தைகளை கூராக்கி
நெஞ்சு துளைக்கவும்
அஞ்சுவது இல்லைமெிக
அவசியமான நேரங்களில்.
நீ
சுடர்மிகு அறிவுடன்
முற்போக்குவாதியாஎ,
கை தட்டி
பாராட்டுகிறேன்.
நானோ
சராசரியை விட
சற்றே கீழ்.
மன்னிக்கவும்,
எனக்காய் என்னிடம்
முகமூடிகள் இல்லை.
சுற்றிக் கொண்டிருக்கும்
இச்சின்ன உருண்டையில்,
இன்றே கூட
நாம்
சந்திப்பது சாத்தியம்!!,
புன்முறுவல் வேண்டாம்,
குறைந்த பட்சம்
முறைக்காமல் இருப்போம்.
***
MSV001@MAERSKCREW.COM