வித்தியாசமானவன்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

சத்தி சக்திதாசன்


நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன்
உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன்
காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க
எண்ணுமவன்
நிச்சயமாக வித்தியாசமானவந்தான்

விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல்
விழியெல்லாம் விழிநீரை இறைத்துக்கொண்டே
பெயரற்ற ஊருக்கு பயணம் போகும் இவன்
நிச்சயமாக வித்தியாசமானவன்தான்

காதலைக்காசுக்கு பறிகொடுத்துவிட்டு இந்த
உலகின் வேஷத்திற்கு முகத்தை இழந்துவிட்டு
பொய்யான நாடகத்தின் உண்மைக் கதாபாத்திரமான
இவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவந்தான்

நேற்றைய உலகத்தை வேகமாய் தொலைத்துவிட்டு
இன்றைய உலகில் ஓர் விலாசமற்றவனாக அலைந்து
நாளைய உலகில் நம்பிக்கை கொண்டு நடக்குமிவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவன் தான்.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation