விதைத்தது

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பவளமணி பிரகாசம்


நேற்று என்பது வெற்று நாளல்ல
இன்று வானினின்று குதிக்கவில்லை
நாளை ஊகம் செய்ய முடியாததல்ல

நேற்று என்பது விதைத்த விதை
இன்று முளைத்துவிட்ட நாற்று
நாளை முற்றித் தொங்கும் கதிர்

நட்டதுதானே முளைத்து நிற்கும் ?
முற்பகல் வினையே பிற்பகல் விளைவே!
நல்லதும் கெட்டதும் விதித்ததல்ல, விதைத்தது.

கள்ளிச்செடியில் குத்தும் முள்ளிருக்கும்
கனிமரத்தில் இனிப்பாய் பழம் பழுக்கும்
விபரமின்றி விதைத்து விபரமறிந்து வெதும்புவதென்னே!
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்