விடியாக்கனவு

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ஷம்மி முத்துவேல்


நினைவுகளின் பொதி சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே
நடந்து வருகிறாள் …
கனவுகளின் சாயல் கொண்டு

கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம்
மழைகளின் சாரல்களில் சில
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள்
அவைகளின் பாரத்தில்
நிலம் தன் சரிவை கூட்டியது
மனிதர்களை விழுங்கியும்
கோர பசி தனிய மறுத்தது அவற்றின்

பயந்து போனவள்
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும்

அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில்
ஆலகால விஷமும் அதில் கலந்தது
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி
விழுங்க எத்தனித்த படி

சிக்கிய வார்த்தைகள் அவளின்
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை
அகோர பசி கொண்ட நாகங்கள்
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்