வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அசுரன்


பூச்சிக் கொல்லிகள் என்பவை பூச்சிகளுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்திற்குமே ஆபத்தானவைதான். அவற்றின் வேதியல் சேர்க்கையைப் பொறுத்து இவை ஆர்கனோபாஸ்பேட், ஆர்கனோகுளோரின், கார்போனேட், சின்தடிக் பைரித்ராய்ட்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் தன்மையைப் பொறுத்து களைககொல்லிகள், எலிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துமே புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை அல்லது கருவையே பாதிப்பவை.

ஆனால், இத்தனை ஆபத்தான பூச்சிக்கொல்லிகளை நாம் பயன்படுத்தாமலா இருக்கிறோம். வயல்வெளிகள், தோட்டங்களில் மட்டுமல்ல வீடுகளிலும்-கொசுவிரட்டிகள், பாச்சை விரட்டிகள், எலி நஞ்சு, என நாம் இவற்றைப் பயன்படுத்தியே வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனமானது இவற்றின் நச்சுத் தன்மையைப் பொறுத்து இவற்றை மிக மிக ஆபத்தானது (தரம் 1அ), மிக ஆபத்தானது (தரம் 1ஆ) நடுத்தர அளவு ஆபத்தானது (தரம் 2), சிறிது ஆபத்தானது (தரம்3) என வகைபிரித்துள்ளது. இந்த வகைபாடே கூட சரியானதுதானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில், சிறிதளவு நஞ்சுகூட தொடர்ந்து நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டால் பெரும் கேட்டையே ஏற்படுத்தும்.

பல்வேறு வகை புற்றுநோய்கள், பிறப்புக் கோளாறுகள், ?ார்மோன் கோளாறுகள், நோயெதிர்ப்பாற்றல் சீல்குலைப்பு, ஒவ்வாமை, ஆண்மை குறைவு உள்ளிட்ட இனப்பெருக்கக் கோளாறுகள், கற்றலில் குறைபாடு, குறைந்த புத்திசாலித்தனம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படுத்தப்படுகின்றன.

இவை உயிரினங்களின் கொழுப்பு திசுக்களில் ஊடுருவுபவை, உணவுச் சங்கிலி மூலமாக பரவுபவை. பூச்சிக்கொல்லிகளின் எட்சங்களை நாம் காற்று, நீர், மண் என யாவற்றிலும் காண முடியும். அரியவகை கழுகுகள், மயில்கள், மீனினங்கள் உள்ளிட்ட நீர்வாழ்விகள், வேளாண் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகள், தேனீக்கள் என யாவும் இதற்குப் பலியாகின்றன. மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நீங்களோ அல்லது நானோ கூட நினைக்க முடியாத அளவுக்கு இவற்றின் தாக்கம் உள்ளது. ஏனென்றால், நீர், உணவு, பால் இறைச்சி என நம் உணவில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன பூச்சிக் கொல்லிகள்.

சரி, இப்படி ஏன் வேளாண்மையில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும் ? வேறு மாற்றே இல்லையா ?

இருக்கிறது.

மிக எளிதாக, பல பயிர்க் கலப்பு சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி முறைகளின் மூலம் இதற்கு தீர்வு கண்டிருந்தனர் நம் விவசாயிகள். ஆனால், ஓரினப்பயிர் சாகுபடி அதிகரித்ததன் தொடர்விளைவே பூச்சித் தாக்குதல். ஆனால், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் எந்த வகையிலும் விளை ?சல் அதிகரிக்கவில்லை.

சுகாதார ரீதியாகப் பார்த்தாலும் கூட, கொசு உருவாகும் முன்னரே வேறு நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி, அதன் புழுக்களை அழித்துவிட்டால் போதும். அதுபோல, வீட்டை காற்றோட்டமாக, தூய்மையாக வைத்திருந்தாலே பல பூச்சிகள் வராது. எனவே, பூச்சிக் கொல்லிகள் கட்டாயமல்ல.

இந்தியாவில், அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளை ? சேர்ந்த பேயர், மான்சான்டோ, சின்ஜென்டா, டோவ், டுபான்ட் போன்றவை பூச்சிக் கொல்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை இரட்டை நிலையில் செயல்படுகின்றன. அதாவது, தமது தாய்நாட்டில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகளைக கூட இங்கே தயாரிக்கின்றன.

இத்தனை மோசமானவையாக இருந்தபோதிலும் கூட, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அந்த வேளாண் சமூக மக்களிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகவும் குறைந்தளவு ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில், குப்பிக் குடிநீர், குளிர்பானங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூட, ஒரு நகர்ப்புறத்தைச் சேர்ந்த நுகர்வோரின் கோணத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் இக்கொடிய நச்சுக்களைப் பயன்படுத்தும் விவசாயிகளின் நிலை குறித்து ஆராய கிரீன்பீஸ் அமைப்பு முடிவெடுத்தது.

தளைபடுத்தப்பட்ட வள ?ச்சி (Arrested Development) என்ற பெயரில் கிரீன்பீஸ் அமைப்பு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் பருத்தி பயிரில் அதிகளவில் (55%) பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதால் அதிகளMல் பருத்தி பயிரிடப்படும் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள போடி வட்டாரத்திலுள்ள இராசிங்காபுரம், சிலமலை, விசுவாசபுரம் ஆகிய ஊர்களும், ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் அத்மாகூர் வட்டாரத்தில் உள்ள அத்மகுர், ஒக்லாபுர், பெட்டபுர், கர்நாடகத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கானாபுர், மஞ்செர்லா, பூர்திப்பிலி ஆகிய ஊர்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாதின்டா மாவட்டத்திலுள்ள 3 கிராமங்களும், குஜராத்தில் பரூச் மாவட்டத்திலுள்ள 3 கிராமங்களும் மராட்டியத்தில் யவத்மல் மாவட்டதிலுள்ள 3 கிராமங்களும் இந்த ஆய்விற்கென தேர்ந்தெடுக்கப்பட்டன.

2003-ஆம் ஆண்டு பருத்தி பயிரிடப்படும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 4-5 வயது குழந்தைகள் மற்றும் 9-13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வள ?ச்சி அளMடப்பட்டது. இந்த 18 கிராமங்களோடும், அதே தரத்திலான-ஆனால், பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைந்த கிராமங்கள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து பத்திரிகையாள ?களிடம் கருத்து தெரிவித்த முதன்மை ஆய்வாளர் கவிதா குருகந்தி, ‘4-5 வயது குழந்தைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்கள் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படாத சிறுவர்களைவிட 86% குறைந்த திறனுடனிருப்து கண்டறியப்பட்டது தெரியவந்தது. 9-13 வயதான குழந்தைகளில் இது 84.2% ஆக இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட மிக அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இந்தக் குழந்தைகளில் யாருமே பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்பட்ட வயல்களில் வேலை செய்தவர்களஙுல. மாறாக, பள்ளிக்கும் பாலர் பள்ளிக்கும் சென்றவர்களே. அவர்கள் கருவில் இருக்கும்போதே பல்வேறு வழிகளில் பூச்சிக் கொல்லிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ‘ என்கிறார்.

‘இந்த பாதிப்புகளை நாம் கண்களால் பார்க்க முடியாது. அவர்கள் வெளித்தெரியும் படியான ஊனங்களால் பாதிக்கப்படவில்லை. எனவே, மக்கள் இது குறித்து, பெரிதும் அக்கறை காட்டவில்லை. ஆனால் இது மிக மோசமான பாதிப்பாகும். இப்போதும் கூட நாம் குழந்தைகளின் மூளை வள ?ச்சியை இந்த பூச்சிக் கொல்லிகள் எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றன என்பதைச் சரியாக மதிப்பிட இயலாது ‘ என்கிறார் கிரீன்பீஸ் நிர்வாக இயக்குநர் அனந்தபத்மநாபன்.

இந்த ஆய்வில், குழந்தைகளின் ஆய்வுத்திறன், இயங்கும் தன்மை, மன ஒருமைப்பாடு, நினைவாற்றல் போன்றவை கணக்கிடப்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தளவில் இரு பிரிவிலும் தலா 75 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 4-5 வயதான குழந்தைகளிடம் 23 சோதனைகள் நடத்தப்பட்டன. 9-13 வயதான குழந்தைகளிடம் 20 சோதனைகள் நடத்தப் பட்டன. ஏறத்தாழ இவை அனைத்திலுமே (21,18) பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படாத பகுதிக் குழந்தைகள் சிறப்பாக விடையளித்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மோசமான நிலையையே வெளிக்காட்டினர்.

இவ்வகையில், முதன்முதலாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வுகள் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த நாட்டில் 5% பரப்பளவில் விளையும் பருத்தி 55% பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துகிறது. அதேவேளை வேறெந்தப் பயிரையும் விட பருத்தியில்தான் வேதி பொருட்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கும் வெற்றிகரமான, நல்ல மாற்றுகள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயற்கை முறை பருத்திக்கே அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே, சிக்கிமும் மிசோராமும் தம்மை, வேதிகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத இயற்கை மாநிலங்களாக அறிவித்து உள்ளன என்பதையும் மறந்துவிடக்கூடாது. இயற்கை முறைக்குத் திரும்புவோம்!நம் உடல்நலனையும் உலக நலனையும் காப்போம்!

இக்கட்டுரைகள் மே 2004 சுற்றுச்சூழல் புதிய கல்வி மாத இதழில் வெளியானவை.

தட்டச்சு: அசுரன் (asuran98@rediffmail.com)

சுற்றுச்சூழல் புதிய கல்வி- மாத இதழ்,

ஆண்டு சந்தா: ரூ. 75 (வெளிநாடுகளுக்கு: US $ 10)

நியூ-எட் பப்ளிகேசன்ஸ்,

ெ ?ச் 2-30, இராணிமங்கம்மாள் காலனி,

திண்டுக்கல்- 624001

தமிழ்நாடு, இந்தியா.

91-451-2461512

Series Navigation

அசுரன்

அசுரன்