வார்த்தை

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

தேவமைந்தன்


ஆதியில் வார்த்தை இருந்தது.
நேற்றும் கேட்டது காதில் –
எங்கள் வீட்டுக் குழாய்
சொட்டிக் கொண்டு
இருந்த பொழுது.
கால்வாளி நீர்நிரம்பிய
பிளா ?டிக் வாளியில்
‘பதம் ‘ ‘பதம் ‘ ‘பதம் ‘ என
‘ரிதம் ‘உடன் விழுந்தன
வார்த்தைகள்.
மற்ற வீட்டு ஒழுகும் குழாய்கள் –
தரையில், குடம் வைக்க
வட்டமாய்க் குழிந்த குழிகளில்
வெவ்வேறு வார்த்தைகள்
சொட்டவும் கூடும்.
நாளையும் வார்த்தை இருக்கும்.
மைக்ரோசாஃப்ட்
ஆண்டுதோறும் புதுப்பிக்கிறது
‘வார்த்தை ‘யை.
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

வார்த்தை

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

மலர்வனம்


‘மலரின் வாசமா ‘
உன் வார்த்தை – அதை
சுவாசிக்கத்தான் ஆசை……..
‘தேனின் சுவையா ‘
உன் வார்த்தை – அதை
சுவைக்கத்தான் ஆசை……..
‘இதய துடிப்பா ‘
உன் வார்த்தை – உன்
இதயத்தின் துடிப்பாக ஆசை………..
‘தாயின் தாலாட்டா ‘
உன் வார்த்தை – உன்
மடியில் உறங்க ஆசை………..
‘உயிரின் உறவா ‘
உன் வார்த்தை – உன்னுடன்
உறவாட ஆசை……
உன் வார்த்தைக்கு காத்திருந்தேன்..
உறக்க சொல்லி – என்
உயிரை உறங்க வைத்தாய்!

malar_vanam@sify.com

Series Navigation