This entry is in the series 20100206_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



வார்த்தையில் இல்லை
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லையா?
ஒவ்வொரு தோலும்
உயிர்களில்லையா?

ஆயுள் வாழ்க்கை
ஆறடிதானா?
உயிரின் திரையில்
ஒரு படம் தானா?

வெட்டிய விருட்சம்
விறகுகள்தானா?
வித்துக்கள் என்பது
பருப்புக்கள் தானா?

சிறைகள் என்பது
தண்டனை தானா?
கருவறை என்பதும்
சிறைகள் தானா?

ஆசைகள் என்பது
அழிவின் வித்தா?
அள்ளித் தருவது
ஆசையின் விளைவா?

வேதனை என்பது
பாவத்தின் விலையா?
பிரசவத்திற்கும்
அதே விலை தானா?

தி¤ருட்டு என்பது
தண்டனைக் குற்றமா?
உள்ளம் திருடலும்
அதை ரகம் தானா?

வானமாய்க் கேள்விகள்
சூரியனாய் ஒரே பதில்
‘வார்த்தையின் அர்த்தம்
வார்த்தையில் இல்லை’

Series Navigation