This entry is in the series 20060609_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


வானத்தை வளைத்துப்போடும்
வளைகர வளையல்…

வானத்தின் வாயில்…

மனசு ஊஞ்சல் கட்டியாடும்
வான வீட்டின்
வண்ண உத்திரம்.

வானம்
தொட்டுவிடும் தூரமென்று
தொட்டுவிட்ட கை…

வானம் இடியாய்
அடித்துக்கொண்டிருக்கையில்
பூப்பறித்துக் கொண்டிருக்கும் கை…

மழையில் வெளுத்த
ஒளியின் நிறம்…

வானப்பட்டத்தின்
வால்.

நூலேணி.

வானத்திலென்ன
வயல் காட்டிலும்
வானவில் நிறம் விளைய
வேண்டும் மழை
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation