வாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

ஜீவா


சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய கட்டுரை பற்றி சில விஷயங்களைச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது . ஊட்டியிலிருந்து எனக்கும் ஜெயமோகனுக்கும் பொதுவாக த் தொிந்த மலையாள மொழிபெயர்ப்பாளர் போனில் கூப்பிட்டு சொன்னார் .இதற்கு பதில் சொல்லும்படி படி நான் ஜெயமோகனுக்கு எழுதினேன். அவர் பேச விரும்பவில்லை. சாருநிவேதிதாவின் style மிக தரமற்றதாக இருப்பது அவருக்கு சிரமமாக இருந்தது . ஆனால் வாசகன் என்ற முறையில் சில விஷயங்களை சொல்லவேண்டிய அவசியம் உள்ளது . காரணம் இவ்விஷயங்களை பலவாறாக நண்பர் வட்டாரத்தில் கடிதங்கள் மூலம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் .

சாரு நிவேதிதாவின் வாசிப்பினைப்பற்றி ஜெயமோகன் கூறிய கருத்து அவரை மிகவும் கோபமடைய வைத்திருப்பதாக அறிந்தேன். அந்தக் கோபம் இணைய வாசகர்களுக்காக சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று சொல்லலாம்.காரணம் தமிழ் நாட்டில் இதே கருத்தை பலர் பலபடியாக ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் . எனக்கு சாரு நிவேதிதா அறிமுகமானதே பழைய நிறப்பிாிகை இதழ்களில் விவாதங்களில் அவர் உதிர்த்த அபத்தமான கருத்துக்களை ஒட்டித்தான் .அதைப்பற்றி அப்போது இப்போதைய திண்ணை ஆசிாியர் கோ. ராஜாராம் கூட ஜெயமோகன் சொன்னது போன்ற அதே கருத்தை சொல்லியிருந்தார் என்று நினைவுகூர முடிகிறது. சாரு நிவேதிதா புத்தகங்களைப்பற்றியும் இசையை பற்றியும் சொல்லக்கூடியவை எதுவும் சுய வாசிப்பு அல்லது அனுபவம் சார்ந்தவை அல்ல என்பது அவரது நெடுநாள் நண்பர்களும் குருநாதர்களுமான பிரேம் ரமேஷ் ஆகியோரால் பல இடங்களில் சொல்லப்பட்டதுதான் . அவரது வாசிப்பு ஐயத்துக்கு உாியது என அவருடன் நெருக்கம் உள்ள பலர் மேடைகளில் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆகவே ஜெயமோகன் ஒன்றும் புதிதாக சொல்லிவிடவில்லை .

சாரு நிவேதிதா கோபிப்பது போல ஒருவர் வாசிக்கிறாரா இல்லையா என்று இன்னொருவர் சொல்வது கஷ்டம்தான் . ஆனால் ஜெயமோகன் அவரது வாசிப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை . அவரது கருத்துக்களில் வாசிப்பின் விளைவு தொியவில்லை என்றுதான் சொல்கிறார் . பதினைந்து வருடங்கள்முன்பு சாரு நிவேதிதா மேலும் பலருடன் சேர்ந்து அமைப்பியைலை பற்றி நிறைய பேசியிருக்கிறார் .பிறகு பின் நவீனத்துவம் பற்றி சொல்ல ஆரம்பித்தார் . அங்கே இங்கே கிடைக்கும் உதிாித் தகவல்களை சமத்காரமான பத்திாிகை அரட்டைநடையில் [அந்துமணி ஸ்டைல் ] சவடாலாக எழுதுவது அவரது பாணி . பிறகு அமைப்பியலைப் படிக்கமுற்பட்ட எல்லாருமே சாரு நிவேதிதா சொன்னவற்றுக்கும் அமைப்பியலுக்கும் பின் நவீனத்துவத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கண்டிருக்கிறார்கள். இதை பிரேமிடமே பலர் மேடைகளில் கேட்டுள்ளார்கள் .அவர்கள் தங்கள் கருத்துக்களை சாரு நிவேதிதா அரைகுறையாக புாிந்துகொண்டு தவறாகச் சொல்லி அவப்பெயரை உண்டாக்கிவிட்டார் என்று வருத்தமும் தொிவித்திருக்கிறார்கள். அமைப்பியலின் எதிாிகளிடம் இருந்து அமைப்பியலை கற்றவர் என்று சாரு நிவேதிதாவைப்பற்றி அவரது நண்பர்களே எழுதியிருக்கிறார்கள் .இதெல்லாம் தமிழ் சிற்றிதழ் வாசகர்களுக்கு புதிய விஷயமும் அல்ல .

யார் வாசிக்கிறார்கள் யார் வாசிப்பதில்லை என்பதெல்லாம் சில்லறை விவாதங்கள் ஜெயமோகன் சொன்னதற்கு காரணம் உண்டு.சாரு நிவேதிதாவை படித்துவிட்டு பலர் பாமரத்தனமாக பின் நவீனத்துவம் என்பது சந்தர்ப்பத்துக்கேற்ப எதையாவது எதிர்த்து எழுதுவதும் காம வக்கிரங்களை எழுதுவதும் மட்டும் தான் [அதாவது கலகம் ] என்ற புாிந்துகொண்டிருக்கிறார்கள் . பின் நவீனத்துவம் என்பது அடிப்படையில் மையப்படுத்துதல் , தத்துவமாக்கல் முதலியவற்றுக்கு எதிரான ஒரு தர்க்கப்போக்கு என்றும் , பின் நவீனத்துவத்தில் அறம் , ஒழுக்கவியல் போன்றவற்றுக்கும் இடம் உண்டு என்றும் [ …it is essentially didactic என்று லெஸ்லி ஃ பீட்லர் சொல்கிறார் ] சொல்லுவதற்கு கண்டிப்பாக சாரு நிவேதிதா போன்றவர்கள் சொன்ன அரைகுறை அர்த்தங்களை மறந்துவிடுங்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் உள்ளது . எடுத்துக்க ‘ட்டு ஒன்று சொல்லலாம் . உன்னதமாக்கல் [sublimation] பின் நவீனத்துவத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு கருத்து . ஆனால் சாரு நிவேதிதா போன்றவர்களால் இங்கு அதிகமாக கிண்டல் செய்யப்பட்ட வார்த்தையே அதுதான் . சாரு நிவேதிதா டெல்லிவாசத்தின் போது சகவாசதோஷத்தால் புாிந்து கொண்ட தாதாயிசத்தையே சந்தர்ப்பத்துகேற்ப அமைப்பியலாகவும் பின் நவீனத்துவமாகவும் சொல்லி வருகிறார் என்று விளக்கவேண்டிய அவசியம் உண்டு . பின் நவீனத்துவத்தைப் பற்றி பேசிய பலரும் நோயல் இருதயராஜ் , க .பூரணசந்திரன் ,பிரேம் எல்லாருமே முதலில் சாரு நிவேதிதா சொன்னதெல்லாம் முற்றிலும் தவறு என்று சொல்லிவிட்டுத்தான் மேலே சொல்கிறார்கள். [பர்க்க பழைய ‘மேலும் ‘ இதழ்கள் ] ஜெயமோகன் அப்படித்தான் சொல்கிறார் .

தன் எழுத்தில் அவ்வப்போது பெயர்களை எடுத்து விடுவது சாரு நிவேதிதாவின் உத்தி . மற்றபடிஅவரது எழுத்து திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்ற தமாஷ்தான் . அவரது அந்துமணி பாணி எழுத்தை தீவிர இலக்கியம் படிப்பதானபாவனையுடன் படிக்கும் அசடுகளுக்கு அது பிடிக்கவும் பிடிக்கலாம். ஒருவர் சீாியஸாக படிக்கிறாரா என்பதற்கு அவரது எழுத்தே ஆதாரம் அல்லவா ? சாரு நிவேதிதா எழுத ஆரம்பித்து இருபது வருடம் ஆகிறது .இன்று வரை எந்த மேற்கத்திய நூலைப்பற்றியாவது சுயமான , பொருட்படுத்தும் படியான ஒரு மதிப்பீட்டை முன்வைக்க அவரால் முடிந்திருக்கிறதா ? சிந்திப்பவர்கள் கருத்தியல் ாீதியாக பொருட்படுத்தும் எதையாவது சொல்லமுடிந்திருக்கிறதா ?அவரது எழுத்தை வைத்து முடிவுக்கு வருவோம். மேற்கத்திய மீடியா நூல்களைப்பற்றி உருவாக்கும் hype ஐ அப்படியே திருப்பிச் சொல்கிறார் . அவருக்கு அங்குள்ள எல்லா எழுத்தாளர்களும் ஒரே தரம் தான், புல்லாிப்பு பிராண்ட் . சிக்கலான வரலாற்றுச் சிருஷ்டியாளரான ‘பாவிக் ‘ கையும் மெல்லிய நகைச்சுவை மாறாத விமாிசகரான ‘குந்தேரா ‘வையும் விமாிசனமில்லாமல் ஒரேமூச்சில் சொல்பவர் இருவரையுமே அறியாதபாமரன் என்று சொல்ல என்ன தயக்கம் ? பெயர்கள் எந்த போலிசுக்கும் கிடைக்கும் .

=====

(திண்ணை குறிப்பு: கோ ராஜாராம், திண்ணை ஆசிரியர் குழுவில் ஒருவர்)

Series Navigation

ஜீவா

ஜீவா