வரவுயில்லாத செலவு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

மனஹரன் மலேசியா


மீண்டும் என் தூக்கத்தைக்

கலைத்துவிட்டாய்.

அந்தப் பழைய காயம்

காயும் முன்னே

இதென்ன மீண்டுமொரு

புதிய ….

பாசாக்கடையும்
வங்கி கணக்கும்

கற்றுக்கொடுத்த வாழ்க்கையை

காற்றில் பறக்கவிடலாமா ?

காகித அட்டையை

காசாக்க முடியாமல்

விழி பிதுங்கும்போது

இதென்ன மீண்டுமொரு

புதிய….

இரட்டைக் கனவாய்

உனது

ஒற்றைக்கோபுரம்

அச்சில்

ஏட்டுச் சுரைக்காயாய்

நோன்பின்போது

ஐஸ்கிரிம் விற்கும்

லாட்டின் கேலி சித்திரமாய்

உன்

தனிக்குரல் மிதிபடும்

உன்

சுயமரியாதை கோட்பாடு தீயிடப்படும்

நாயாக நீ

விரட்டப்பட்டபோதும்

மீண்டுமொரு முறை

வாலாட்டி புறப்பட்டுவிட்டாய்

இன்னொரு

ஜீபும்பா கவிதையோடு

முகமலர்ந்து ஓடிவரும்

அம்புகளின் திசை அறுக்க

இன்றே

செத்தவன் கணக்கில்

வரவு வைத்துவிட்டேன்

Series Navigation