வன்மழை

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

நெப்போலியன்


ரகசியம்
ஒன்று
என் காதில்
சொன்னாய்….
என்
காதுகள் நீளமானது !

அதிசயம்
ஒன்றை
பார்க்கச் சொன்னாய்….
என்
கண்கள் நீலமானது !

வசியமந்திரம்
ஒருதடவை
உச்சரிக்க சொன்னாய்….
என்
வாய் வானமானது !

நீண்ட காதுகளின் வழியே
நீலக்கதிர்கள் பாய
நம் வானமெங்கும்
வன்மழை.
—- நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்