This entry is in the series 20101212_Issue

சிவகுமார்


ஐயா,

வணக்கம்.

வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன். இல்லை, அழுதேன், இல்லை படித்துக் கொண்டே
அழுதேன், இல்லை அழுதுகொண்டே படித்தே. இப்படியெல்லாம் கசக்கிப் பிழியலாமா?
வீட்டில் படிக்கும் நேரத்தில் யாருமே இல்லாதது ஒரு வசதியாகி விட்டது.

நேரு, காந்தி மறைந்தவுடன் ஒரு அதீத துயருடன் பேசினார். ஒளி மறைந்து
விட்டது, இல்லை நம்முடன் இருக்கிறது என்பார். முழுவதையும் ஒரே வீச்சில்
படிக்க முடியாது. நீர் மறைக்கும். கப்பலோட்டிய தமிழனில் இந்தத் தமிழன்
சிவத்தை, அம்மையுடன் இருக்கும் சிவத்தை, அது சிவமென்று தெரிந்தவுடன்
கட்டி அணைத்துக் கொள்வார். இதெல்லாம் ஏதோ சம்பந்தமற்றவை இல்லை. இதே
உணர்வுகளை இந்தக் கதையை சுவாசிக்கும் பொழுது நான் பெற்றேன்.

உங்களுக்கு நன்றி.

மறுபடியும் இந்தக் கதையப் படிக்க மாட்டேன். உள்ளுக்குள் விமர்சனப் புத்தி
உருவாகி விடும். வேண்டாம் அது.

சுவாசித்த,
சிவகுமார்.

Series Navigation