வட்டத்தின் வெளி

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

எஸ் ரமேஷ்


தீர்மானமான எல்லைகள்
வகுத்துக் கொண்டு
‘எல்லையற்றவை ‘ குறித்து
தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின்
எதிரெதிர் புள்ளிகளில் நின்று…

வட்டத்தை உணர்ந்தபின்
பதறி போய் நகர்ந்து
‘வெளி ‘-
வட்டத்திற்குள்ளா வெளியிலா ? என
தர்க்கத்தை தொடர்வோம்

தானே வேறொரு வட்டம்
உருபெற்றதை அறிந்து
மறுபடி தள்ளிப் போய்
வெளி-குறித்து பேசுவதென்றும்
பேசமாட்டேன் என்றும்
முடிவெடுப்போம்…

இரு புள்ளிகளில்
வளையத்தின் விளையாட்டு
எப்போதும் தொடர்ந்திருக்க[:P]

-S.Ramesh
***

subramesh@hotmail.com

Series Navigation