வடக்குவாசல் – யமுனா அறிவிப்பு

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்http://www.vadakkuvaasal.com

14 ஆகஸ்டு 2008 அன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் புது டெல்லியில் வடக்கு வாசல் இணையதளம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் இதழ்களை தவறாமல் பதிவேற்றம் செய்து வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்யப்படும் வடக்கு வாசல் மாத இதழ் தவிர, யமுனை என்ற பெயரில் புதிதாக வாரப்பதிப்பு ஒன்றையும் இந்தத் தளத்தில் வலையேற்ற இருக்கிறோம். கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சிறந்த வலைப்பூக்கள், இணையதளங்கள் பற்றிய அறிமுகம் எனப் பன்முகத் தன்மையுடன் புதிய பொலிவுடன் வடக்கு வாசல் இணையதளம் எதிர்வரும் 20ம் தேதி முதல் இணையத்தில் பதிவேற்றப்படும். யமுனை வாரப்பதிவு ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இவை தவிர தினசரி செய்திப் பகுதியும் உண்டு.

படைப்பாளிகள் தங்கள் கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்களை vadakkuvaasal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்
வடக்கு வாசல்
5A/11032, Gali No.9,
Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.

Series Navigation