This entry is in the series 20031106_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ நன்றாக அடிக்கப்பட்ட புது தயிர்

3 மேஜைக்கரண்டி பேஸன் என்னும் கடலைமாவு

1 தக்காளி

1/2 வெங்காயம்

1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

3 பச்சை மிளகாய்கள்

1/4 கொத்து கொத்துமல்லி (அல்லது 1 கோப்பை இலைகள்)

1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்

உப்பு ருசிக்கேற்ப

***

தாளிக்க

1/4 கோப்பை எண்ணெய்

1/2 வெங்காயம் தூளாக நறுக்கியது

4 பூண்டு பற்கள்

1 முழு சிவப்பு மிளகாய்

1 தேக்கரண்டி சோம்பு (cumin)

6 7 கறிவேப்பிலை இலைகள்

செய்முறை

கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி, தயிர், கடலைமாவு, இஞ்சிப்பூண்டு விழுது வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் இதனை ஊற்றி அத்துடன் 3 கோப்பை தண்ணீர், உப்பு, மஞ்சள், சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை ருசிக்கேற்ப சேர்த்து வேகவைக்கவும். அவ்வப்போது கிளறிவிட்டு கொதி நிலை வரும் வரைக்கும். அதன் பின்னர் நிதானமான தீயில் கெட்டியாகும் வரைக்கும் வேக வைக்கவும்.

தாளிக்க, எண்ணெயை சூடு செய்யவும். அத்துடன் வெங்காயம் போட்டு பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். மீத தாளிப்பு பொருட்களை போட்டு வறுத்து பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். கடைசியில் கறிவேப்பிலை போட்டு மூடவும். உடனே இதனை தயிர் கறிமீது கொட்டவும்.

Series Navigation