லிஃப்ட் பைத்தியம்

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


லிஃப்டில் (எலிவேட்டர் ? அமெரிக்காவில் லிஃப்ட் என்றால் “எதை ? என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் !) நுழைந்து 28 என்ற எண்ணை அழுத்தினேன். 28 வது தளத்தில் எனது அலுவுலகம் உள்ளது. போகும் போது பல தரப்பட்ட மக்களைப் பார்ப்பதும் பேசுவதும் எனது பொழுதுபோக்கு.

கண்கள் நோக்கி பேசுவதும், சிற்சில கேள்விகள் கேட்பதும் எனக்கு சுவாரசியமாக உள்ளது. “இன்றைக்கு மழை ஜாஸ்தி இல்லை ?” “உன் மகள் கல்லூரிக்குப் போகின்றாளா ?”, “போன வாரம் மாமா பார்க்க போனியா ?” “உன் மகன் லீவுக்கு வருகின்றானா ?” போன்று சிலப் பல கேள்விகளைக் கேட்பதும் நகைசுவை உணர்வு மிக்கவர்களின் பதிலைப் பெறுவதும் வாடிக்கை. “இன்னும் மழை அதிகமாகி நியூ ஆர்லன்ஸ் போன்று படகில் செல்லவேண்டும்”, “என் மகள் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு முடிந்தால் வருவாள்”, “மாமியை பார்க்க பிடிக்கவில்லை. அதனால் போகவில்லை!” போன்ற சுருக்கமான பதில்களும் வருவதுண்டு. உடைகள் நன்கு உள்ளது. வார முடிவில் எங்கிருப்பாய் போன்ற “ஜொள்” விடும் தொடர்களும் இடம் பெறும். சினிமாவிற்கு வருகிறாயா ? சிறந்த ரெஸ்டாரண்ட்டிற்குப் போகலாம் போன்ற முடிவுகளும் எலிவேட்டரிலேயே எடுக்கப்படும். மேலதிகாரிகளைப் பற்றிய கமெண்ட்டுகளும், குற்றக் குறைபாடுகளும் பிட்டு பிட்டு இவிடத்திலேயே பறிமாறப்படும். வியாபாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளும், மற்றவன் கதைய முடிப்பது பற்றியும் எலிவேட்டரில் மக்கள் பேசுவார்கள்.

உலகில் பல நாட்டு மக்கள் சினேகத்துடன் முன் பின் தெரியாதவர்களிடம் நடக்கிறார்கள். ஜப்பானியர் குனிந்து மற்றவர்களை தன் பின் பக்கத்தால் இடிக்க கூடும். தமிழகத்திலலும் குனிந்து வணக்கம் கூறினால் அப்படி தான். ஆனால் நான் பார்த்த வரை நகரங்களை விட மற்ற ஊர்களில் தேவலை. (மற்ற ஊர்களில் 4 மாடி வந்தவுடன் வானம் வந்துவிடும்). நடைமுறையில் சென்னையில் நான் கண்ட நிலைமை எப்படி என்று பார்ப்போம். சென்னையில் நான் பார்த்த பல இடங்களில் முன்னே பின்னே பார்க்காதவர்களை விளித்து, சிரித்துப் பார்த்தால், பேசினால் சிறு புன்னகை கூட புரிய மாட்டார்கள்.

நாம சினேகப் பாவத்துடன் பார்த்து ஹலோ என்று புன்னகைத்தால் அவ்வளவு தான். முகம் போற போக்கை கூர்ந்து பாருங்க !. ஒரு பேய் அடித்து விடும். எம்.ஜி.ஆர். “இந்தப் புன்னகை என்ன விலை ?” என்று பாடியதால் மக்களும் மெதுவாகத் தயங்கியே புன்னகை பூப்பார்கள் போலும். ஏன் என்று சிந்தித்தேன். புன்னகைக்காதவர்களுக்காகச் சிந்தித்து பார்த்தேன். வியர்வை வழியே பல்லவனில் இடிந்து, ஒடிந்து வந்திருப்பார்கள். இங்கே வந்தால் “எப்படி இருக்கே ? செம வெயில் இல்லே ?” என்று கேள்வி கேட்பவனை அறையத் ஒருகால் அவர்களுக்குத் தோன்றலாம். ஒருவேளை நாம் மேல்நாட்டுச் சமுதாயப் பழக்க வழக்கங்களை ஒட்டி வாழ்ந்து “அந்நியனாக” வாழ்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ ?. சும்மா தெரிந்த மாதிரி மெதுவாகத் தலையை ஆட்டி, புன்னகைத்தால் “ரொம்ப சிரிக்கிறான் மச்சி!! இவன் சிரிப்பது நம்மை ஏமாற்றத் திட்டம் போடுவதற்கா ?” என்று முசுடுகள் நினைத்துக் கொள்ளுமா ?.

சும்மா ?ாய் என்பது, சிரிப்பது பிறகு கண்டு கொள்ளாமல் இருப்பது, போன்ற வெளி வேஷங்கள் போடும் ஆட்களைப் பிடிக்காமல் சில முசுடுகளுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். தெரிந்த ட்கள் நமக்குச் சில சமயம் ஹலோ சொல்லலாம். அதற்கும் பல சமயம் ஏங்க வேண்டியிருக்கின்றது. உங்கள் திருப்பார்வை எம்மீது படாதா ? என்று தவமிருக்க வேண்டும்.

“ம்ம். “ஓகே” என்பதற்கும் அதிகமாகப் பேச காசு கொடுத்தால் தான் நம் காரியம் நடக்கும். மனதில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். வெட்டிப் பேச்சு வீணர்களைப் பிடிக்காமல் இருக்கலாம். சிலதுகள், பதிலளிக்கும் போது சற்று நேரம் சிந்தித்து வேண்டா வெறுப்பாய் “ஏதோ ஓடுது …” என்று கூறுவதுண்டு. மெரினாவில் காலையில் கடலை நோக்கி ஓடும் எருமைகள் பற்றி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கும். “பதில் பேசினால் குறைந்தா போவீங்க ! ? என்று கேக்கத் தூண்டும். “இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்லணும்” என்று நினைப்பார்கள் போலும். நாம் மற்ற மனிதனைத் துச்சமாகக் கருதும் மனப்பான்மை கொண்டவர்களோ ? மக்கள் தொகை அதிகம் உள்ளதால் சக மனிதர்களிடம் வெறுப்பு வளர்கின்றதா ?. அவனுடன் பேச்சுக் கொடுத்து நம்ம கிட்ட நெருக்கமாகி நம்ம கிட்ட பேசிப் பழகி, கற்றுணர்ந்து நம்மையேக் கவிழ்த்து விடுவானோ ? இந்த மாதிரி நினைத்து ஒருகால் நம்மிடம் தற்காப்பாக இருக்க சும்மா இருக்கலாம்.

“எப்படி இருக்கீங்க ? “ என்று தமிழில் பேசினால் அவ்வளவு தான். பேச வருபவனும் அதிகம் பேச மாட்டான். “ெ ?ள ஆர் யூ” என்று கேட்பது புத்திசாலித்தனம். ஆங்கிலம் பேசுபவன் ஏமாற்ற முடியாது அல்லவா ?.அப்படியும் “ஏன் தான் பேச ஆரம்பிக்கின்றானோ ?” என்று உள் வெறுப்புடன் வெறுமையைத் தொடர்வார்கள்.

தெரியாத ட்களிடம் பயம், தயக்கம், வெறுமை, முறைப்பு, கண்டுக்காம விடல் (கண்டுகொள்ளாத மாதிரி இருப்பவர்கள் – நீண்டு எழுத சிரமம்), போன்றவற்றைக் கண்களில், முக பாவனைகளில் காண்பிப்பார்கள். ஒரு விரல், இரு விரல் காட்டி சங்கேத மொழியில் “சிக்னல்” காட்டித் தொலைப்பவர்களும் உண்டு. அது வேறு மாதிரி அர்த்தங்களைக் கற்பிப்பதுண்டு.

ஆண் பால், பெண்பால் இருவரும் லிஃடில் இருந்தால் வரும் சங்கடங்களும் உண்டு. (இதுக்குத் தான் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்காமல் “கோஎஜுகேஷனில் படித்திருக்க வேண்டும்) வேண்டாத சினேகம் வருமோ ?. எதற்கு சிரிப்பானேன் என்று தவிர்க்கும் ஆண்களும், பெண்களும் உண்டு. அதன் மூலமாய் மலரும் சினேகிதம் படுக்கை வரை செல்லும் வாய்ப்பு உள்ளது என்று இருவர்களுக்கும் தெரிய நியாயமில்லை தான். (சே ! என்ன ஒரு எண்ணக் கொழுப்பு! ஆண் என்று காட்டி விட்டேன் ! குஷ்பூ போன்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மன்னிப்பு கேட்கணும்! மன்னிச்சுக்கங்க தமிழ்க் காவலரே !).

?ாய், எப்படி இருக்க ? ஏன் கண் கலங்கியிருக்கு ?. ஆபிஸில் என்ன ஓவர் டென்ஷனோ ?. வா ! கொஞ்சம் காபி சாப்பிட்டு வரலாம் என்றெல்லாம் பேசுவது மனிதத் தன்மையோடு இருப்பது மாதிரி இருக்கின்றது. ஒன்றும் பேசாமல் இருப்பது தவறான எண்ணங்களை எனக்கு வளர்க்கின்றது. ஆகவே, நான் வந்தால் உஷாராக இருங்கள். ஒரு மனிதன் வருகின்றான். “நான் மனிதன் “ என்று ரஜினி ஸ்டைலில் சொல்ல ஆசை !

பெண்களாக இருந்தால், லிஃப்டில் பேசினால் அலுவுலகத்தில் சிரிச்சு பேசுபவள் அல்லது அதிகம் “நூல்’ விடுபவர்கள் என்று நமக்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு சிலர் பொதுவாகச் சிரிப்பார்கள். பெண்களிடம் பேச்சுக் கொடுத்தால் தப்பாக நினைப்பார்களோ என்று நினைக்கும் விடலைகளும் உண்டு. பெண்கள் கொஞ்சம் வாய் திறந்தால் போடும். கிடைத்த சந்தில் ரோடு போடும் திறன் படைத்தவர்கள் அதிகம். கொஞ்சம் “ரூட்” போட்டு பார்ப்போம். கிடைத்தால் லாபம் என்று கணக்குப் போடும் எத்தன்களும் உண்டு. வில்லங்கமாய் ஏதோ பேசப் போக வம்பை விலை கொடுத்த கதையாகப் போகலாம்.

ஏண்டா இவன் இப்படி பார்க்கின்றான் ?. என்ற பயத்துடன் இருப்பவர்கள் சிலர். மேலும் சிலரோ கண்களை நோண்டி எடுத்திடுவேன் என்பதைப் போன்று கடும் முக பாவனையுடன் இருப்பர். சிலரோ இவன் லூசாக இருக்க வேண்டும் என்று கண்களைப் பார்க்க தவிர்த்திடுவர். சோமாறி, மொள்ளைமாறி, வக்ரம் கொண்டவன், புத்தி பேதலித்தவன், பைத்தியக்காரன், பேக்கு, வேலை வெட்டி இல்லாதவன் போன்ற பல அடைமொழிகள் நமக்கு வரலாம். 28 மாடி வருவதற்கு பல விநாடிகளைக் கடந்தாகவேண்டும். இதில் மயான அமைதி காக்காமல் போன இடத்திற்குப் புண்ணியம் தேட, நான் பேச்சுக் கொடுப்பதுண்டு. பல மாடிக் கட்டடங்களில் வேலை பார்ப்போர், விமானம், நெருப்பு, பூகம்பம் போன்றவற்றோடு இம்மாதிரி மயான நந்தவனத்து ண்டிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன் கீழேயிருந்து மேலுக்கு கஷ்டப்பட்டு உழைத்தவன் கூட மற்றவன் அப்படி கஷ்டப்படாமல் தன்னுடன் லிஃப்டிற்கு வருவதைக் காலத்தின் கட்டாயமாகக் கருதுவான். வெறுப்பாக பார்த்தலை அனுபவத்திருப்பீர்கல் !

அலுவுலகத்தில் மேலதிகாரியாக இருப்பான். லிஃப்டில் கூட இவனுக்கு பிரிட்டிஷ் காலத்து “சார்!” போட்டு மரியாதயாக சல்யூட் அடிக்க வேண்டும். சிரித்துப் பேசிடக்கூடாது. மேலதிகாரிப் பெண்ணாக இருந்து விட்டால் “மேடம்” என்று பேசவேண்டும். அவள் குழந்தைகள், வீடு பற்றிப் பேசக்கூடாது. ஏன் ஒரு மேலதிகாரியை “குமார் ! எப்படி இருக்கீங்க ! ?” என்று பெயர் சொல்லி அழைக்க கூடாது. இதுவே பெண்ணாக இருந்தால் “பானு ! இப்படி இருக்கீங்க ?. “ என உசாவலாம். ஏன் “மேடம் என்று அழைக்க வேண்டும் ? எங்கப்பாவே பிரிட்டிஷ் காரனை (வெள்ளைக் காரனை) 47 ல் சின்னப் பையனாக இருக்கும்போது பார்த்திருப்பார். இப்போது நான் ஏன் “சார் !” போட்டு அழைக்க வேண்டும். பள்ளி ஆசிரியரைத் தவிர வேறு யாரையும் “சார்” போட்டு அழைக்க வேண்டியதிலை. ஐயா எனக்கு மிகவும் பிடித்தச் சொல். சென்னையில் புரியுமா என்று தெரியவில்லை ?. சார் தான் புரியும். அமெரிக்காவில் கூட எவனாக இருந்தாலும் “பாப் ! ஜான் !” என்று சிறு முதற் பெயராக இருந்தால் போதும். கூப்பிடலாம். சென்னையில் என் கேஷியர் கோபாலை “கோபால் சார்” என்று தான் லிஃப்டில் கூப்பிடமுடியும். ஸ்ரீதேவி என்பது ஸ்டெனோ பெயர். அவளை “ஸ்ரீதேவி மேடம்” !

சில நல்ல ஆத்மாக்களும் உண்டு. “எப்படி இருக்கிறீர்கள்” என்றால் கிடைத்த ஒரு நிமிடத்தில் ஒரு வாரச் சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்வதுண்டு. “குட் மார்னிங்” சார் என்று லிஃப்ட் பாய் என்று தவறாமல் அனைவருக்கும் பாரபபட்சமில்லாமல் செய்வான். தினமும் ஒரு குடை, ே ?ண்ட்பேக், காலில் சாண்டல், மற்றும் புடவை ஒரே நிறத்தில் உடுத்தும் லேடி ரிசப்சனிஸ்ட், அனைவருக்கும் ?ாய் என்று ஆங்கிலோ இந்தியப் பாணியில் சினேகமாகச் சொல்வதுண்டு. நெற்றியில் நாமத்துடன் வரும் ஸ்டெனோ ராகவன், எல்லோறையும் நமஸ்காரம் சார், நல்லா இருக்கீரா ? என்று வெற்றிலை காவிப் பற்கள் தெரிய விசாரிப்பதும், மார்க்கெட்டிங் மானேஜர் சந்திரமெளலி “நல்லா இருக்கியா ?” என்றூ சினேகத்துடன் கேட்பதும் எனக்குப் பண்பாகப் பட்டது. எல்லாவற்றையும் விட நமக்கு நெருங்கிய நண்பன் “என்னா ? மச்சி ? எப்டா கீறே ?” என்றாலே ஒரு தனி சுகம் தான். எங்களது ஜி.எம். “இன்னிக்கி எப்படி இருக்கே ? பேங்களுர் டிரிப் ஓகே வா ?” என்று வேலை சம்பந்தமாய் கேட்பதும் எனக்குப் பிடித்திருகிறது. பேசாமல் ஆசையுடன் புன்னகைக்கும் 24 வது தள பெண்ணையும் பிடித்திருக்கிறது. எப்படியும் அடுத்த தடவை பேசிவிட வேண்டும். பந்தாவாக இந்தக் கட்டுரை வேறு எழுதியிருக்கின்றேன்.

ஒருவேளைப் பயப்படாமல் இருப்பது பொது இடத்தில் நல்ல பண்போ ?. நான் அனைவருக்கும் சிரித்து பதில் சொல்ல வேண்டும் என மனதில் கங்கணம் கட்டிக் கொண்டேன். என் மனைவி என் சங்கல்பத்தைக் கேட்டவுடன், தலையில் கொட்டி, “பைத்தியமா ?” என்றாள். பேசாமல் பாண்ட்டில் கை போட்டுக் கொண்டு உதடுகளைத் திறக்காமல் சிரித்தும், சிரிக்காமல் புன் முறுவல் மட்டும் பண்ணுவது என்று முடிவெடுத்தேன்.

—-

kksash@aol.com

Series Navigation