றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

கணேசன்.சு, பாண்டிச்சேரி

(மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு,)

நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில் அனுமதியின்றி உலவிக்கொண்டிருக்கிறது. தங்குமிடங்களிலெல்லாம் அது தன் புரிதலை மாற்றி மாற்றி உணத்துகிற படியால் அதனை போகுமிடமெங்கும் துரத்தித்திருத்தும் தொழிலில் என்னை உடன்படுத்துகிறேன். தோல்வியால் துவலாமல். காகிதம் கணத்துக்கொண்டே இருக்கிறது. அதனுள் நகரும் எழுத்துக்களின் கனவும் விரிந்துகொண்டே இருக்கிறது. இதன் முடிவு எங்கே யாரால் எப்படி தீர்மானிக்கப்படுமோ என்ற பயமே இல்லாமல், பயத்தை அவ்வெழுத்தின் ஆதிவாசிக்கு கொடுத்துவிட்டு பயணித்துக்கொண்டே இருக்கிறது அதன் பொருள். து}க்கமில்லை உண்ட உணவும் ஞாபகத்தில் இல்லை. எழுத்தின் சிற்பியான என்னை அந்தக்காகிதம் மீண்டும் வந்து சேரவேண்டும் என்ற நிர்பந்தத்தால் காத்திருக்கிறேன். இன்னும் வரவில்லை.

(ஏதோ ஞாபகம் வந்தவனாக சிலிர்த்துக்கொண்டு பார்வையாளர்களைப்பார்த்து)

சே. இன்னும் நான் எழுதேவே இல்லை எப்படி திரும்பிவரும்.

(அப்போது அவனைப் போலவே உடையணிந்து அவனது மனசாட்சியாகத் தோன்றும்படி ஒருவன் மேடைக்குள் வருகிறான். நபர்1க்கு பின்னால் வந்து)

நபர்2:நிறைய கடுதாசிங்க எழுதப்படாமலே போயிருக்கு. நிறைய கடுதாசிங்க எழுதப்படாமலேயும் வந்திருக்கு.

நபர்1:எனக்கு அது மாதிரியான ஒரு அனுபவம் இருக்கு.

நபர்2:இருந்தா சரி.

நபர்1:ஏன் இல்லன்னா என்னை என்ன மனுசனில்லன்னு ஒதுக்கிடுவீங்களா!

நபர்2:யாரும் யாரையும் ஒதுக்கமுடியாது. தானா ஒதுங்கிக்கிறது தான் நடக்குது.

நபர்1:நீ போ. எனக்கு வேலயிருக்கு. எழுதனும்.

நபர்2:நான் பேறேன்.

நபர்1:சரி. சரி.

(நபர்2மவன் சென்றுவிட, நபர்1மவன் மேசைக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டு காகிதக்கட்டிலிருந்து ஒரு காகிதத்தை உருவி எழுதத்தயாராகிறான்.)

உயர்திரு.(யோசிக்கிறான்) மேதகுவைவிட உயர்திரு பொருத்தமானதுதான். மேதகு. . . மேதகுதான் ஒசத்தி. உயர்திருவுக்கும் மேதகுவுக்கும் ஐயாவுக்கும் மரியாதைக்குரியவுக்கும் . . . (சிரிக்கிறான். சப்தமாக சிரிக்கிறான்) நான் காகிதத்தில் எழுதக்கூடிய மரியாதைக்குரிய அடைமொழியினால் எழுத்தோட பொருளுக்கு சாதிக்கிறதுக்கான சாத்தியம் அதிகமாவுதுன்றது என்னோட மோலதிகாரியின் அனுபவம். அது உண்மையா இல்லையாங்கறது வேற விசயம். ஆனா அது அப்படி நடக்குதுன்றது வாஸ்தவம். என்ன செய்யறது ஒரு அடைமொழிய கொடுத்துடனும். ஏன்னுள்ளாம் கேக்கக்கூடாது. ஏன்னா, அதான் சரி. (குனிந்து எழுதுகிறான். எழுதுவதைச் சப்தமாக சொல்லிக்கொண்டே)

உயர்திரு.

(சட்டென ஏதோ யோசித்தவன் கோபத்துடன் பேனாவை மேசைமீது ஓங்கி ஒரு குத்துவிடுகிறான். பிறகு சப்தமாக)

இந்த அடைமொழியால நான் என்ன எழுதனுமோ அது சரியா வரவேமாட்டேங்குது. திரும்பத்திரும்ப உயர்திரு உயர்திரு உயர்திரு . . . சே. எல்லா எழுத்தும் ஒரே பொருளோட இருக்கு. உயர்திருவே நு}று தடவ . சே.

(மேசையில் தலைவைத்து சேர்ந்து சாய்ந்துவிடுகிறான்)

புதிய கதாபாத்திரம் உதவியாளன், உள்ளே வருகிறான். தன்னை மறைக்கும் பெரிய காகிதக்கட்டுடன். நேரே வந்து மேசைமீது வைக்க. அவன் காகிதக்கட்டினால் மறைக்கப்படுகிறான். அவன் எழாமல் அங்கிருந்தபடியே.

உதவியாளன்: (கையை மட்டும் காகிதக்கட்டின் மேல் து}க்கிக்காட்டி) பார்வையாளர்களே. நான் தெரிகிறேனா. நான் இங்கே தான் இருக்கிறேன். இது மறைத்துவிடும் என்று எனக்குத்தெரியும்.அதனால்தான் என் இருப்பை உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்துகிறேன். நான் இருக்கிறது தெரிகிறதா. (சிறிது மெளனம்) தெரியவில்லையா. தெரியாதுதான். ஆனால் நான் தான் காகிதத்தின் பின்னால் இருக்கிறேன் என்பதை உணர முடிகிறதா. (சிறிது மெளனம்) என்ன அதுவும் தெரியிவில்லையா. (பின் அவன் மறைப்பிலிருந்து எழுகிறான். அவனது தலைமட்டும் தெரியும் படி) இப்போ. (சிறிது மெளனம்) என்ன நான் முண்டமா. (சுதாரித்துக்கொண்டு) ஆமாம். கழுத்து மட்டும் தெரிந்தால் முண்டம் தான். ஆனால் நான் முண்டமில்லை. என்னால் தான் இந்த செயல்படுத்தக்காத்திருக்கும் அறிக்கைகளும் கோரிக்கைகளும் முடிவுக்கு வரப்போகிறது. சொல்லுங்கள். இப்போது நான் முண்டமா ?

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க.

(உதவியாளன் வேகவேகமாக நபர்1யை நோக்கி காகிதக்கட்டுக்குப்பின்னால் இருந்தவாரே)

உதவியாளன் : என்ன ஆச்சா என்ன ஆச்சான்னு கேட்டுக்கிட்டே இருக்காரே. என்ன ஆச்சா ?

(என கேட்க, ஒரு முறை அவனை முறைத்துவிட்டு காகிதத்தின் முன் யோசனையிலேயே இருக்கிறான்.)

மொறைப்பெல்லாம் ஏங்கிட்டதான் வேவும். அந்த _என்ன ஆச்சாக்கிட்ட_ வேவுமா ? என் தலையெழுத்து அங்க வசவவாங்கிக்கிட்டு இங்கியும் வசவ வாங்கவேண்டும்னு. சரி. சரி. வேலை ஆவட்டும். என்ன ஆச்சா. ஐயா கேக்கிறாரு.

நபர்1:உனக்குத்தெரியாதா வேல எந்த அளவுல இருக்குன்னு. நா வேற சொல்லித்தான் தெரியனுமா ? சும்;மா ஏம்பா டார்ச்சர் பண்ரீங்க. மனுசன் தான நானு, யோசிக்கவேணாம் ?

யாரு உன்ன மனுசனா இருக்கச் சொன்னது. மிசினா மாறிடு. மிசினா மாறினா வேல உடனே நடக்கும்ல. மிசினா மாறினா இன்னொரு செளகரியமும் இருக்கு. நீ பாட்டுக்கு வேல செஞ்சிக்கிட்டே இருக்கலாம். அங்க இங்க கொலறுபடி வந்துச்சின்னா வயித்தெரிச்சலோடு ரிப்பேர் பண்ணுவாணுங்களே ஒழிய மெசின திட்டமாட்டாங்க பாரு. மெசின திட்ற அளவுக்கு, மனுசனுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல இல்லையா ?

(நபர்1க்கு சிரிப்பு வந்துவிடுகிறது. உடனே உதவியாளனைப்பார்த்து)

நபர்1:உன்னால எப்படித்தான் இவ்ளோத்தியும் தாங்கிக்கமுடியுதோ.

உதவியாளன் : நாய் வேசம் போட்டா கொளச்சித்தான் ஆவனும்னு சொல்வேன்னு பாத்தியா. அதான் கிடையாது. நாயா வேசம் போட்டாலும் குதிரையா ஒரு சமயத்துல ஓடனும், பன்றியா பீயத்திண்ணனும், கழுதையா எட்டி ஒதைக்கனும். எல்லாத்தையும் செய்யனும். அவன் தான் உதவியாளன். இல்லன்னா உன்னமாதிரி ஆபீசரால்ல இருந்திருப்பேன். ஆபீசரா இருந்தா மட்டும் என்ன கிழியப்போவது. தோ. பொலம்புரீங்களே அதான் நடக்கும். என்னப்பாருங்க. அவரு சொன்னது உங்ககிட்ட சொல்லிட்டு நீங்க சொல்றத அவருக்கிட்டச் சொல்லப்போறேன். அவ்ளோதோன். இதுக்குள்ளேயும் அரசியல் இருக்கு. எப்படி யாருக்கிட்ட எதச்சொல்றேன்றதப்பொருத்து.

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க. (நபர்1:யைப்பார்த்து) என்ன சொல்ல. முடிஞ்சிடிச்சின்னு சொல்லவா.

நபர்1:(முந்திக்கொண்டு)இல்ல இல்ல

உதவியாளன் : அப்படின்னா முடியலன்னு சொல்லவா

நபர்1 : இல்ல அப்படிச்சொல்லாத.

உதவியாளன் : ஏதாவது சொல்லியாகணும். கேள்விக்கு சரியோ தவறோ ஏதாவதொரு பதிலைத்தந்தாகவேணும். சொல்லு. (நபர்1 அமைதிகாக்க) அப்படின்னா நானே சமயசந்தர்ப்பத்தப்பாத்து ஏதாவது சொல்லிடவா.

நபர்1:ம்

(உதவியாளன் சென்றுவிடுகிறான். நபர்1 தலையில்கையை வைத்துக்கொண்டு மேசையில் கவிழ்ந்துகொள்கிறான். நபர்2 மீண்டும் வருகிறான். வந்து நபர்1க்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு நபர்1 எழுதாமல் வைத்திருக்கும் காகிதத்தை எடுத்து அவன் எழுதுகிறான். நபர்1 இன்னும் யோசனையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க நபர்2 எழுதி முடித்துவிட்டதாக அவனது பாவனை வெளிப்படுத்துக்கிறது. அப்போது அவனது கையிலிருந்த பேனா அவனையறியாமல் மேசையில் வேகமாக விழ நபர்1 எழுந்துவிடுகிறான். எழுந்ததும் நபர்2 அருகில் இருப்பதைப்பார்த்து)

நபர்1:என்ன விசயம். ஏன் வந்தே. உன்ன நான் கூப்பிடலியே. இப்போல்லாம் உன்னோட தொந்தரவு அதிகமாயிட்டே வருது. அடிக்கடி வந்து என்ன அலகழிக்கிற.

நபர்2:அதுக்கு என்ன இப்ப. நான் வராம வேறயாரு உன்ன பாக்க வரப்போறா சொல்லு. நான் தான் நீ. நீ தான் நான். உனக்கு என்னத்தவிர வேறயாராவது என்ன மாதிரி நேர்மையா நீ நல்லா இருக்கணும்னு எதையாவது செய்வாங்களா ?

நபர்1:சும்மா பேசி என்னத்தொந்தரவு செய்யாத. நான் வேல செய்யனும். ஏற்கனவே ஒரு லெட்டர எழுதமுடியாம மண்டைய பிச்சிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆயிரத்தெட்டு தடவ ஆச்சா ஆச்சான்னு கேட்டு உசிர எடுக்கிறான். அந்தப்பாழப்போனவன். இது இல்லாம, நீ வேற.

நபர்2:லெட்டர் தான. (அவன் முன் இருந்த காகிதத்தை எடுத்துக்காட்டி) இந்த லெட்டரா. பாரு.

நபர்1 (காகிதத்தை எடுத்து அதில் எழுதியிருப்பதைப்பார்த்து) இதுல நான் எழுதவேயில்லையே. என்ன எழுதனும்னுல்ல யோசிச்சிக்கிட்டு இருந்தேன். எழுதியிருக்கே. இரு. இரு என்ன எழுதியிருக்குன்னு பாத்துர்றேன். (என அவன் அதைப்படிக்கத்தொடங்கும் முன் நபர்2 காகிதத்தைப் பார்க்காமலேயே சொல்லத்தொடங்குகிறான்)

நபர்2:இன்னார் இன்னார் பெற்ற இதைஇதையெல்லாம் இப்படிஇப்படி கொடுத்ததினால் என்னென்னவோ குளறுபடிகள் நிகழ்ந்தது என்பது என்னவோ உண்மைதான். அதனால் இதை இப்படி செய்ய முயற்சித்தோமானால், எல்லாவற்றுக்குமான தீர்வு சிக்கலில்லாமல் கிடைத்து, நமது அரசின் புதிய திட்டத்திற்கு ஏற்றவொரு திட்டத்தை அதாவது செயல் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றொரு வழியை இதன் முலம் பெறலாம். எப்போது என்றால், அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் அப்பணியைச் செய்வோருக்கு ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றால். ஆனால் இந்த திட்டம் வகுத்தலில் ஆரம்ப காலத் தவறுகள் முற்றிலும் நீக்கப்பட்டலும் எதிர்காலத்தில் தோன்றக்கூடியத் தவறுகளாக இன்னெ;னதென்று தெளிவாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவிற்கு அனுமானிக்கவாவது முடிகிறபடியால் அவற்றை ஒவ்வொன்றாக தாங்களின் பார்வைக்கு வைக்கிறேன், தங்கள் அதன் தேவையை உணர்ந்து உத்தரவுபோட்டால்.

(என அவன் வாசித்து முடிக்க நபர்1 மிகவும் சந்தோசம் அடைந்தவனாக அவனை மேசையிலிருந்தவாறே எக்கிக்கட்டி அணைத்து கன்னத்தைக்கிள்ளி ஒரு முத்தம் கொடுக்கிறான். நபர்2 முத்தத்தைத் துடைத்துக்கொண்டு)

நபர்2:எப்டி ?

நபர்1:எப்டின்னு நான் தான் கேக்கணும். இது எப்டி நடந்தது.

நபர்2:யாமிருக்க பயமேன்.

நபர்1:ஐயோ அப்பா சில சமயம் தொந்தரவா இல்ல ஆயிடுது.

நபர்2:அந்த சில சமயங்கல மட்டும்நீக்கிட்டு. நல்ல சமயங்கள் பல இருக்கிறதனால இனி என்னோட பேச்சக்கேட்டு சரியா நடந்துக்கோ.

நபர்1:உன்னக்கேக்கறதுன்னா என்ன ? என்னையே நான் கேட்டுக்கிறதுன்னா என்ன ? இரண்டும் ஒண்ணுதான. அதனால் இனி மேல் உன் பேச்சையே கேட்டு நடந்துக்கிறேன்.

( என அவன் சொல்லிவிட்டு மேசையிலிருந்த பெல்லை அழுத்துகிறான். உதவியாளன் மெல்ல ஆடியசைந்து வருகிறான். திமிறாக.)

உதவியாளன்:என்ன ஆச்சா.

நபர்1:ஆச்சுது.

(என சொல்லி அவனிடம் எழுதப்பட்ட காகிதத்தைக் கொடுக்கிறான். அவன் அதை உற்றுநோக்கி சில கணம் நபர்1யை வினோதமாகப்பார்த்துவிட்டு சப்தமாகச் சிரிக்கிறான்)

நபர்1 : ஏன் ஏன் எதுக்கு சிரிக்கிற ?

உதவியாளன் : சும்மா பொழுது போகணுமில்ல. அதான்.

நபர்1 : சரி சரி . அவரு தொந்தர தாங்கமுடியல. அவருக்கிட்ட இந்தக்கடுதாசியக்கொடுத்துடு (என அவன் சொன்னதும் உதவியாளன் மீண்டும் சப்தமாகச் சிரித்துவிட்டு கடுதாசியை அவனிடமே திருப்பிக்கொடுத்து)

உதவியாளன் : என்ன எழுதியிருக்கன்னு கொஞ்சம் படிச்சிப்பாரு.

(சட்டென கடுதாசியை வாங்கிப்பார்த்தவன் அதிர்ந்துபோகிறான், பின் அவனிடமிருந்து உதவியாளன் அதைவாங்கி)

உதவியாளன்:(கடுதாசியைப்பார்த்து படிக்கிறான்) அன்புள்ள பொண்டாடிக்கு,

அன்புள்ள கணவன் எழுதுவது. நிற்க. நான் இன்னும் ஒரிரு மாதத்திற்குள் பணியிட மாற்றம் பெற்று ஊரோடு வந்துவிடுவேன். கவலைப்படாதே. யாரையும் கல்யாணம் செய்துகொண்டுவிடாதே. கொஞ்சம் பொறுமையாய் இரு. வந்துவிடுகிறேன். நானும் இங்கே யாரையும் காதலிக்கவில்லை. அதனால் நீயும். . . என்ன . . . நமக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது மறந்துவிடாதே. குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் அவர்களை வையாதே. அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும். செலவு செய்யாதே. அடிக்கடி ஓட்டல்போகாதே. பணத்தை மிச்சப்படுத்திவை. என் சம்பளத்தை நான் இந்த முறையாவது அனுப்ப முயற்சிக்கிறேன். உன் அப்பனிடமிருந்து பணத்தை வாங்காதே. வீட்டுக்கு வாடகைத்தரவேண்டாம். நான் வந்து பார்த்துக்கொள்கிறேன். என்னைப்பற்றி வீட்டுக்காரரிடம் பேசு. அவர் புரிந்துகொள்வார். அப்படி அவர் புரிந்துகொண்டால் அவரிடமே பணம் கொஞ்சம் கடனாக வாங்கிக்கொள். வட்டித்தருகிறேன் என்று சொல். ஆனால் நாம் வாங்கிய முதலைக்கூட திருப்பித்தரப்போவதில்லை என்பதை மனசில் வைத்து இவற்றைச் செய். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று கடுதாசி போட்டார்கள். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. அவர்களும் இன்னும் சில நாட்களுக்குள் கவலைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பிறகு உனக்கு கவலையேயில்லை. வேலைக்குப்போகாதே. போனால் குழந்தைகளுக்கு யார் சமைத்துத்தருவது. அப்படியாராவது இருந்தால் அவர்கள் வீட்டிலேயே குழந்தைகளை சாப்பிடச்சொல்லிவிட்டு வேலைக்குப்போ. அவர்களது குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது கலகம் ஏற்படுத்திக்கொண்டேயிரு. அப்போதுதான் அவர்களது வீட்டிலிருப்போரில் யாராவது ஒருவர் உனக்கு உதவியாக இப்பர்.

இவ்வளவையும் நான் சொல்வது உனக்காக இல்லை. நம் குழந்தைகளுக்காக இல்லை. எனக்காகச் சொல்கிறேன். சொன்னபடி கேள்.

(இப்படியாகப் படித்துவிட்டு அவன் விழுந்துவிழுந்து சிரிக்கிறான்.)

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க. (நபர்1யைப்பார்த்து) ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான். என்ன சொல்ல இப்போ.

நபர்1 : ஆயிகிட்டே இருக்குன்னு சொல்லு.

உதவியாளன் : சரி. (என்று சொல்லிவிட்டு ஓடிவிடுகிறான்.)

(உதவியாளன் சென்றது நபர்1, நபர்2 வந்துபோன திசையைப்பார்த்து)

நபர்1:வரட்டும் அவன். அவன யாரு இதமாதிரி எழுதச்சொன்னது. (சட்டென ஞாபகம் வந்தவனாக) இப்படியொரு கடுதாசியை நான் எழுதநெனச்சது உண்மதான். ஆனா நான் எழுதவேயில்லையே. எழுதாத காகிதத்துல தான் ரகசியமா எழுதினதா பெறுமையோடு வாசிச்சானே. அது எங்கே காணேம். எழுத நினைச்சு எழுதாம விட்டது இருக்கிறப்போ, நெனக்கமுடியாதது எழுதப்பட்டு இப்ப இல்லாம போயிருக்கே இது எப்படி ?

(அப்போது மேடைக்குள் நான்குபேர் வருகிறார்கள். அவர்களை 1,2,3 மற்றும் 4 என்போம். அவர்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் வெள்ளை ஆடையணிந்திருக்கிறார்கள். வந்தவர்கள் தாம் கொண்டுவந்த நாற்காலியை நபர்1னின் மேசைமுன் போட்டு அமர்ந்துகொண்டு)

1:நாங்க

2:நம்மல தெரியாதா

3:(நபர்1யைக்காட்டி) இவர எனக்கு ஏற்கனவேத்தெரியுமே. இவரத்தான் சொன்னீங்களா.

4:இவர உனக்கு ஏற்கனவேத் தெரியுமா.

(நபர்1 அவர்களை ஆச்சர்யமாகப்பார்க்கிறான்)

3:அதான் சோமுயில்ல சோமு, அவரோட பண்ணைக்குப் பக்கத்தல இருக்காப்பல. இவரு அப்பாருக்கு அந்த ஊர்ல ரொம்ப பெரிய மறியாத. போன எலக்கசன்ல அவருமட்டும் நமக்கு ஒத்தாசையா இல்லன்னு வச்சிக்க ஒத்தஓட்டக்கூட வாங்கிருக்கமுடியாது. (நபர்1யைப்பார்த்து) என்ன தம்பி எப்படியிருக்க . . . அப்பா எப்படி இருக்காறு . . . வேலயெல்லாம் எப்படி போயிகிட்டு இருக்கு . . . (அவனோடு வந்த வெள்ளையாடை மனிதன்2யைப்பார்த்து) இங்கு வேல சுத்தமா நடக்குதுன்னா அதுக்கு மொதக் காரணம் யாரு தெரியுமில்ல. நம்ம புள்ளத்தான். இந்த புள்ள மட்டும் இங்க இல்லன்னு வச்சிக்கோயேன். எந்த வேலையும் நடக்காது. ( நபர்1யைப்பார்த்து) என்ன தம்பி நான் சொல்றது. (மீண்டு வெ.ம3யைப்பார்த்து) நம்பி ஒரு வேலையை கொடுக்கலாம்.

4:நாங்கூட கேள்விப்பட்டிருக்கேன். உங்க பேரு வந்து . . .

1:பேரு என்ன பேரு. பேரெல்லாம் செய்யற வேலையில இருக்கு. இந்தப்புள்ளய பத்திபேசிக்கிட்டிருக்கப்பவே தெரியுதே. இதுல பேரு என்ன வேண்டிகிடக்கு. இங்க இன்னாரு, இந்தந்த வேலையயெல்லாம் சரியா செய்வாறே அவரு யாருன்னு கேட்டா ஆளையே காட்டப்போறாங்க.

(நபர்1 அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்து)

நபர்1:நீங்க

2:நீங்க தான் நாங்க.

(மற்றவர்கள் சப்தமாகச் சிரிக்கிறார்கள்.அவன் ஏதும் புரியாமல் பேந்தப்பேந்த முழிக்கிறான். அவர்களே தொடர்ந்)

1,2,3 மற்றும் 4 கோரசாக: ஆமாங்க நீங்க தான் நாங்க. நீங்க இல்லாட்டி நாங்க இருக்க முடியுமா. இல்ல உங்களால இருக்கிற நாங்க இல்லாத தான் நீங்க இருக்கமுடியுமா. அதச்சொல்றோம். கொழம்பிக்கவேணாம்.

2:இப்ப உங்களுக்கு நாங்க யாருன்னு தெரிஞ்சிருக்குமே. தெரியாமப்போனாத்தான் என்ன கெட்டுடப்போவுது. இப்ப நாங்க எதுக்கு வந்துருக்கோம்னா.

3:இதெல்லாம் போயி சொல்லிக்கிட்டு. அவரு என்ன வேல செய்யறாரு. அவர பாக்கறவங்களுக்கு அவரு என்ன செய்யனும் செய்யப்பொறார்ங்கறத எல்லாம் .. . எதுக்குங்க இப்ப. சார். முடிச்சிடுங்க. பின்னால கவனிச்சிக்கிறோம்.

நபர்1:என்ன சொல்றீங்க.

4:ஆட நீ ஒண்ணு தம்பி. சத்தமா வெளரமாவா சொல்வாங்க. நாளைக்கு வரோம் முடிச்சி வையுங்க. என்ன ? அப்பாவக்கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வரேன். என்ன.

(என சொல்லிவிட்டு நால்வரும் அவனுக்கு வணக்கம் தெரிவிச்சிட்டு வந்த வழியே வந்ததுபோலவே சென்று மறைகிறார்கள். நபர்1க்கு யார் இவர்கள். எதுக்கு வந்தார்கள் என தெரியாமல் பார்வையாளர்களைப்பார்த்து)

நபர்1:இது என்னங்க அநியாயமா இருக்கு. நான் பாட்டுக்க வேலயச்செஞ்சிக்கிட்டு இருக்க இவங்க பாட்டுக்கு வந்து எதையோ செஞ்சிவைங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்களே. யாரு இவங்க. என்னத்தச்செய்யச் சொல்றாங்க. எதுக்கு அந்த வேலைய சொல்லாம போனங்க.

(என அவன் கேட்டுக்கொண்டே மீண்டும் தலையில் கையைவைத்துக்கொண்டு மேசையில் தலை கவிழ்க்கிறான். உறங்கிவிடுகிறான். அப்போது மீண்டும் உதவியாளன் உள்ளே வந்து அவனை எழுப்ப முயற்சித்துத் தோல்வியுற்ற அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்து காகிதங்களை எடுத்து ஆராய்கிறான். ஆதில் மிகவும் ஆழ்ந்துவிடுபவனாகக்காணப்படும் உதவியாளன் ஒரு கட்டத்தில் எழுந்து அங்குமிங்கும் நடந்தவாறு கடுதாசிகளைப்படிக்கிறான். அமைதியாக ஆரம்பத்தில் படித்துக்கொண்டிருந்தவன், பின் சப்தமாக படிக்கிறான். அவனது சப்தமானது வார்த்தைகளற்ற விதத்தில் இருக்கிறது. அவற்றிற்கு ஏற்ற முகபாவனையை வெளிப்படுத்துவாக அவனது நிலை இருக்கிறது.)

(அப்போது கழுத்துவரை கருப்பு உடையணிந்த ஒருவர் வேகவேகமாக மேடைக்குள் வருகிறார். அவர் அந்த அலுவலகத்தின் மேலதிகாரி. ஊழியனைத்தேடியபடி வந்தவர்அவனுக்கு அருகில் வந்து)

மேலதிகாரி: என்ன ஆச்சா!

(அவர் பின்னரங்கிலிருந்துதான் கேட்கிறார் என அவரைப்பார்க்காமல் உதவியாளன்)

உதவியாளன்: தோ ஆச்சுங்க

மேலதிகாரி: (மறைந்துகொண்டு) இன்னுமா

உதவியாளன் : இன்னுமான்னா. இன்னுந்தாங்க.

மேல்அதிகாரி : சீக்கிரம்

உதவியாளன் : சீக்கிரம்னா. ரொம்ப சீக்கிரமா. சாதாரண சீக்கிரமா.

மேல்அதிகாரி : ரொம்ப சீக்கிரம்.

உதவியாளன் : அப்டான்னா பாதி வேல முடிஞ்சிருந்தாலுமா ?

மேல்அதிகாரி : பரவாயில்ல. அவன் முடிச்சிட்டானா ?

உதவியாளன் : முடிஞ்சிட்டான்.

மேல்அதிகாரி : முடிச்சிட்டானான்னு கேட்டேன்.

உதவியாளன் : முடிச்சிருப்பான்.

மேல்அதிகாரி : முழுசாவா.

உதவியாளன் : இல்ல. கொஞ்சமா.

மேல்அதிகாரி : பாதியாவா.

உதவியாளன் : இருக்கலாம்.

மேல்அதிகாரி : அவன் இருக்கானா.

உதவியாளன் : இருந்தான்.

மேல்அதிகாரி : இப்ப அங்க இருக்கானா.

உதவியாளன் : அவன் இருக்கான்னு சொல்றதா. இருக்குன்னு சொல்றதான்னு தெரியல.

மேல்அதிகாரி : தெரிஞ்சிக்கிட்டு சொல்லு.

உதவியாளன் : கொஞ்சம் பொறுங்க சார்.

மேல்அதிகாரி : சரி.

உதவியாளன் : (அவன் தலைகவிழ்ந்திருப்பவனை எழுப்பி) சார் முடிச்சிட்டியான்னு கேக்கராறு.

நபர்1 : எத

உதவியாளன் : அறிக்கையைக்கான செயல்திட்டத்த.

அதிகாரி : மொதல்ல அறிக்கையே எனக்குப்புரியல.

உதவியாளன் : புரியாததுதான் அறிக்கை. இல்லன்னா. அதுவே செயல்திட்டமா இருந்து இன்னேரம் நடைமுறையில இருக்கும்ல.

நபர்1 : இரு. இரு. அவருகிட்ட அறிக்கைய விவரிக்க கேக்கறதுக்கு முன்ன, உனக்குத்தெரிஞ்சத சொல்லு.

உதவியாளன் : இது அவருக்குத் தெரிஞ்சிருந்துதுன்னா உன்கிட்ட வேலய கொடுத்திக்க மாட்டாரு.

நபர்1 : யாருக்கிட்ட கொடுத்திருப்பாருங்கற ?

உதவியாளன் : என்கிட்ட.

நபர்1 : அப்படி ஒருவேள நடந்திருந்ததுன்னா இன்னேரம் உலகத்துஅரசியல்கூட தரமானதா மாறியிருக்கும். வேலை செய்ய வேண்டிவன் கிட்டத்தான் வேலயக் கொடுக்கறாங்களே ஒழிய வேலய செய்யத் தெரிஞ்சவங்ககிட்ட ஒருபோதும் கொடுக்கறதில்ல ஏன்னா. நான்தான்அதுக்கு தகுதியானவன்னு என் படிப்பு முத்திரக்குத்திருக்குன்னு நம்பறாங்க. அப்படியேதான் நான் வாழ்நாள் பூரா இருப்பேன்னும் என்ன ஒரு சட்டத்துக்குள்ளாற முடக்கிப்போட்டுப் பார்க்கறாங்க. ஆனா அதுலேயும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்யுது. நான் ஆரம்பத்துல இந்த மாதிரியான அறிக்கைகள எல்லாம் நானே முன் வந்து வாங்கி செஞ்சதால என்னிட்டயே தொடர்ந்து பொறுப்ப ஒப்படச்சிட்டு என் முந்தய மேலதிகாரிங்களெல்லாம் ஒவ்வொரு கமிசனுக்கும் போயிட்டு கத்தைகத்தையா குறிப்புகள கொண்டுவந்து மேலும் மேலும் அறிக்கைகளாக என் மேசைமேல கொட்டிட்டுப் போயிடுவாங்க. எங்க போவாங்க தான் பொண்டாட்டிப்புள்ளக்குட்டிகள கூட்டிக்கிட்டு பீச்சு சினிமான்னும் கல்யாணம் கருமாதின்னும். நான் தான் எந்த விசேசத்துக்கும் போவ முடியாம வீட்ல எனக்கும் அவங்களுக்கு பெரிய இடவெளியே ஏற்படுத்திக்கிட்டு எதிலேயும் கலந்துக்க முடியாம வேலயே கதின்னு இரவு பகலுன்னும் பாக்காம இருந்தேன். இது தொடர்ந்து வந்த எல்லா மேலதிகாரிங்களாலும் இதேபோல நடத்தப்பட்டதால இப்ப நான் அதிலேர்ந்து விலகிக்க முயற்சிக்கிறேன். தெரியுமா. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூணு கடுதாசிங்கள பாத்துபதில் ஆனுப்பிட்டாப்போதும். அதுதான் என்வேல. அத இப்ப செய்ய முடிவு செஞ்சிட்டேன். இது அதிகபடியான மேலதிகாரிங்களோடு வேலய நானே தலையில போட்டுக்க தயாராயில்ல.

உதவியாளன்: இது உங்களுக்குன்னு இல்ல. எல்லாருக்கும் நடக்குது.

(மறைந்திருந்த மேலதிகாரி கோபத்தோடு வேளியேறுகிறார். நபர்1, மெல்ல தன் நாற்காலியைவிட்டு எழுந்து உதவியாளனுக்கு அருகே வந்து)

நபர்1: இது வரைக்கும்நான் சொன்னத எல்லாம் மறந்துடு. இனி சொல்லப்போறதுதான் நெஜம். (என சொல்லிவிட்டு தன்னை அதிசயமாகப்பார்க்கும் உதவியாளனைப் பொருட்படுத்தாமல், தன் மேசையிலிருந்த ஒரு கோப்புக்கட்டை கொண்டுவந்து அவனிடம் கொடுக்க, உதவியாளன்)

உதவியாளன் : என்ன இது

நபர்1 : அறிக்கைக்கான செயல்திட்டம்.

உதவியாளன் : முடிக்கல. முடிக்க முடியல. நீயாவது எனக்கு உதவி செய்யு அதுயிதுன்னு சொன்னீங்க ?

நபர்1 : அது அப்ப. அப்படிச் சொல்ல வேண்டிய சூழல் இங்க இருந்தது. சொன்னேன். இப்ப கத வேறு.

உதவியாளன் : என்னங்க புரியமாட்டேங்குதே.

நபர்1 : உன்னால செய்ய முடிஞ்சாலும் இதுமாதிரியான குழப்பத்தை உன்னால் ஏற்படுத்த முடியாததனாலதான் நீஉதவியாளனாகவே இருக்க, நான் உனக்கு அதிகாரியா இருக்கேன்.

(உதவியாளன் ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்துகொண்டே மேலதிகாரி சென்ற திசையை நோக்கிச்சென்று மறைகிறான். நபர்1 முன்மேடைக்கு வந்து)

நபர்1: (பார்வையாளர்களைப்பார்த்து) எனக்குத் தெரியாதுன்னு என்ன வேவுபார்த்தாறே. அவரு அறிக்கைய சரி ஞெ;சிட்டாலும் அந்த நாலுபேரு அதான் நாற்காலியோட வந்து நாற்காலியோட போனாங்களே அந்த நாலுபேரு வந்துபோன பின்னாடி, “என்ன ஆச்சா . . . என்ன ஆச்சா . . .” ன்னு அடிக்கடி கேக்க ஆரம்பிச்சதுதான் :அவரு அந்த ஆட்டம் ஆட்ராறுன்னு தெரிஞ்சுபோச்சு. அதனாலதான் கொஞ்சம் இழுத்தடிச்சேன். அவங்களுக்கு ஏததமாதிரி நாம வேலய செய்யறதுக்கு இருக்கோமா, இல்ல மக்களுக்கு ஏத்த மாதிரி செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கோமோ ? இன்னேரம் யேரிச்சிருப்பாரு. (என அவன் சொல்லிவிட்டு மீண்டும் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொள்கிறான். அப்போது மீண்டும் நாலுபேரும் வருகிறார்கள், அவர்கள் வரவும் மேலதிகாரி அவர்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவனைக் கவனிக்கிறார்)

1:தம்பி செளக்கியமா.

நபர்1 : இருக்கேன்ங்க. நீங்க பாட்டுக்கு என்ன ஏதுன்னு சொல்லாம கொல்லமா போயிட்டாங்களா எனக்கு கையும்ஓடல காலும் ஓடல. ஆனா கண்டுபிடிச்சேட்டேன் பாத்தீங்களா. வந்து சேந்துச்சா.

2:(கோபமாக) வந்து சேந்துச்சு. ஆனா நான் எதிர்பாத்தமாதிரி இல்லியே.

3:எங்களுக்குன்னு செய்யறதா எதிரிக்கு ஏத்தமாதிரி செய்ஞ்சிட்டியே தம்பி.

நபர்1:யாருங்க எதிரி.

2:அதன்ம்பா.

நபர்1 : புரியலிங்க.

4:கெட்டிக்காரந்தம்பி நீ. எங்க வாயாலேயே சொல்லவைக்கப்பாக்கிறியே.

நபர்1:நீங்க உங்கத் தேவைய உங்க வாயாலத்தானே சொல்லனும். வேற யாரு வாயால சொல்லறதா திட்டம்.

1:கிண்டல் வேணாம்பா.

2:இருந்தாலும் உங்கப்பா மாதிரி வராறது.

நபர்1:எதுங்க. எங்கப்பாமாதிரி வராது.

2:யாருக்கு என்னத் தேவன்னு தெரிஞ்சு செய்யறதுல அவரு கெட்டிக்காரு.

நபர்1:நானுந்தான். என்னையுந்தான் அப்படிச் சொல்றாங்க.

1:யாரு சொல்றது. எங்களுக்கு வேண்டாதவங்களா இருப்பாங்க.

நபர்1:யாருங்க உங்களுக்கு வேண்டாதவங்க. யாருன்னு சொல்லமா வெறுமனே வேண்டாதவங்க. வேண்டாதவங்கன்னு குத்துமதிப்பா பேசிக்கிட்டே இருக்கீங்களே.

4:ஒண்ணுந்தெரியாத பாப்பா பாரு நீ.

நபர்1:சொல்லறது புரியறமாதிரி சொல்லுங்க.

1:கேட்டுக்கோ. இப்பவும் நேரம் கடந்துடல. இன்னும் இரண்டு மூணுநாள் இருக்கு. அதுக்குள்ளாற எங்களுக்குச் சாதகமா மாத்தினீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்ல.

நபர்1:இல்லன்னா.

(நால்வரும் விறுவிறென கோபத்தோடு வெளியேற. இதுவரைப்பின்னால் ஒளிந்திருந்த மேலதிகாரியும் அவனுக்குத்தெரியாமல் உள்ளே சென்று மறைகிறார்)

நபர்1: (பெல்லை அடிக்கிறான் . உதவியாளன் உள்ளே வருகிறான். அவன் கூட நபர்2hன நபர்1னின் மனசாட்சியும் உள்ளே வருகிறது)

நபர்1: கோப்பு கொண்டு போனாயே என்ன ஆச்சு.

உதவியாளன்: மேலதிகாரியிடம் கொடுத்திருக்கேன்.

நபர்1 : என்ன சொன்னார்.

உதவியாளன் : ஒன்னும் சொல்லல.

நபர்2:போன் செஞ்சி அந்த நாலுபேரையும் வரச்சொல்லியது ஏன் ?

நபர்1: போன் செஞ்சி அந்த நாலுபேரையும் வரச்சொல்லியது ஏன் ?

உதவியாளன்: ஏன்னு எனக்குத்தெரிஞ்சா . . .சொல்லமாட்டேனா.

நபர்2:அப்ப போன் செஞ்சாரா ?

நபர்1: அப்ப போன் செஞ்சாரா ?

உதவியாளன் : ஆமாம் போன் செஞ்சாரு.

நபர்2 : அந்த நாலுபேருக்கா ?

நபர்1 : அந்த நாலுபேருக்கா ?

உதவியாளன் : அந்த நாலுபேருக்குத்தானான்னு தெரியாது.

நபர்2 : அவரு என்ன பேசினாரு

நபர்1 : அவரு என்ன பேசினாரு

உதவியாளன் : கோப்பு தயாராயிடுச்சு. ஆனா . . .ன்னாறு

நபர்1 : சரி நீ போவலாம்.

நபர்2 : சரி நீ போவலாம்.

உதவியாளன் : சார். இப்ப என்ன சார் நடந்துகிட்டு இருக்கு. எல்லாம் மாய மந்திரம் மாதிரி இருக்கே சார். எனக்கு ஏதாவது தொந்தரவு வருமா சார். புள்ளகுட்டிகாரன் சார்

அதிகாரி : உனக்கு ஒண்ணும் ஆகாது நீ போவலாம்.

உதவியாளன் : சரி சார்.

(என் சொல்லிவிட்டு அவன் சென்றதும் நபர்2 நபர்1ன்முன் வந்து)

நபர்2 : இங்க பார். இது எங்க போய் முடியப்போவுதோ. ஆனா நீ உன்ன பாதுகாத்துக்கோ. அதுதான் என்னால சொல்ல முடியும்.

நபர்1 : உன்னால மட்டுமில்ல யாரலும் இப்பத்திக்கு இதத்தான் சொல்ல முடியும். சரி. நாலுபேரு வந்துபோனப்போ நீ என்னக்காப்பாத்தியிருக்க. அதுக்கு உனக்கு நன்றி.

நபர்2 : நானா உன்னையா. என்னப்பா. நான் உன்னோடய மனசாட்சிப்பா நானு. என்னால அப்போப்போ ஏதாவது குறிப்பா சொல்லமுடியுமே தவிர வேறென்ன பெரிசா செய்ய முடியும் ?

நபர்1 : அந்த அவ்வப்போது குறிப்பா சொல்றதுதான் என்னக்காப்பாத்தியிருக்கு. ஆனா இன்னொரு பெரிய வேல பாக்கியிருக்க. மேலதிகாரியோட அடுத்த நடவடிக்கைய எதிர்பார்க்கிறேன். அதுமட்டும் சரியா வந்துடுச்சின்னா அப்புறம் நான் என் வேலய திருப்தியா செஞ்சிட்டதா திருப்தி வரும்.

(அப்போது அவனது மேலதிகாரி அவசரஅவசரமாக அவனை நோக்கி வருகிறார். ஒரு காகிதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு. அவனை நெறுங்கியதும் அந்தக்காகிதத்தை தன் பின்னே மறைத்துக்கொண்டு)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா ?

நபர்1 : ஆச்சு சார்.

மேல்அதிகாரி : என்ன ஆச்சு.

நபர்1 : நீங்க கேட்டதுசார்.

மேல்அதிகாரி : என்ன நான் கேட்டேன்.

நபர்1 : நீங்க கேட்டதுதான சார்.

மேல்அதிகாரி : நான் கேட்டது நடந்துடிச்சா. அப்படின்னா இனி நீ தேவையில்லை.

நபர்1 : சரி சார்.

மேல்அதிகாரி : நான் உன்ன வேண்டாம்னு சொல்றேன். சரிங்கிற.

நபர்1 : வேற என்ன சார் செய்யனும்.

மேல்அதிகாரி : போராடனும்.

நபர்1 : எனக்கு தேவையில்லை. சார்.

மேல்அதிகாரி : ஏன் தேவையில்லைங்கற.

நபர்1 : எனக்கு இந்த வேல திரும்ப வேணும்னாதானே சார் போராடனும்.

மேல்அதிகாரி : யே அப்பா. உன்ன ஒண்ணும் பண்ணமுடியாது.

நபர்1 : சரி சார். வெளரத்தச் சொல்லுங்க.

மேல்அதிகாரி : அப்ப இதுவரைக்கும் நான் வெளரமா இல்லைங்கிறியா ?

நபர்1 : உங்களுக்குத்தான் தெரியுமே. வெளரமா சொல்லுங்கன்னு சொன்னதும் நீங்களே சொல்லிக்கிட்டிருக்கிறத நிறுத்திட்டு வேற ஒண்ணுக்குத்தாவ தயாராகும் போதே தெரியலிங்களா சார். நீங்க இதுவரைக்கும் சும்மாதான் பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு. நான் என்னா சார். இன்னிக்குத்தானா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என் சர்வீஸ்ல உங்களமாதரி நெரையா அதிகாரிங்களப் பாத்துட்டேன் சார்.

மேல்அதிகாரி : ஆமாம்பா. நான் ஒத்துக்கரன். உன்னோட சர்வீசாலத்தான் இன்னிக்கு நாம நல்ல சேதிய பெறமுடிஞ்சிருக்கு.

நபர்1 : என்ன சார். அறிக்கையோட செயல்திட்டத்த தயாரிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களா ?

மேல்அதிகாரி : ஐயோ! எப்டிய்யா இது.

நபர்1 : அதுக்காகத்தான நாம இந்த நாடகத்தையே போட்டிருக்கோம். வந்த நாலு அரசியல்வாதிங்களையும் ஏமாத்தியிருக்கோம். உங்களுக்கு நான் எதிரானவனாகவும் எனக்கு நீங்க எதிரானவராகவும் அவர்கள் முன்னால போட்ட நாடகத்தால தான் இந்த நல்ல விசயம் நடந்திருக்கு. இல்லன்னா. அவங்க கேட்டுக்கிட்ட மாதிரி நாம மக்களுக்கு எதிரான ஒரு செயல்திட்டத்த கொடுத்திருப்போமே. டிரான்ஸ்பருக்குப்பயந்து.

மேல்அதிகாரி : ஆமாம்பா. அதே சமயம் நீ கொடுத்த ஒரு அறிக்கையை அவங்ககிட்ட கொடுத்தப்போ. அது செயல்படுத்த முடியாத திட்டம்னு எனக்கு தெரியும். அதனோட உள்நோக்கம் என்னன்னும் தெரியும். அதனால தான் அவங்ககிட்ட அப்படியே கொடுத்தேன். இப்போ அவங்களே அத நிரைவேற்ற முடியாதுன்னு, வேற ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி ஒதுக்கிட்டாங்க.

நபர்1 : ஆமாம் சார்.

(அப்போ உதவியாளன் உள்ளே வந்து)

உதவியாளன் : சார். உங்க நாடகத்துல என் தலதான் சார் ரொம்ப உருண்டிடுச்சு. என்னப்போட்டு கொட கொடன்னு இரண்டுபேரும் கொடஞ்சிட்டாங்களே. ஆனா ஒன்னு சார். மக்களுக்கு உழைக்கிற எண்ணம் இருக்கிறவங்க மக்களுக்கு எதிரான மறைமுக முதலாளிகள்ட்டேர்ந்து எப்படியெல்லாம் நாடகமாடி காரியத்த சாதிக்க வேண்டியிருக்குப்பாத்தீங்களா.

மேல்அதிகாரி : அதுசரி. காலையில ஏதோ கடுதாசி வந்துருக்குன்னு சொன்னியே எடுத்துவா போ.

(அவன் சென்ற வேகத்தின் மீண்டும் கையில் ஒரு கடுதாசியோடு வருகிறான்.)

மேல்அதிகாரி : அமைச்சரவையிலேர்ந்துதான். (அதைப்பிரித்தவர் சில நெடிகளுக்கு அப்படியே உறைந்துபோகிறார். அவரைப்பார்த்த எழுத்தர்)

நபர்1 : என்ன சார் அடுத்த அறிக்கை வந்திருக்கா. செயல்திட்டம் ஏற்படுத்தித்தரணுமா.

மேலதிகாரி: ஆமாம.;

நபர்1 : சரி அத படிங்க.

மேலதிகாரி: மக்கள் ஏழ்மையில் இருப்பதால் அவர்களது ஏழ்மையை ஒழிக்க, எல்லா மாநிலத்துக்கும் எல்லாத்தரப்பு மக்களுக்கும் இலவச மதிய உணவுத்திட்டம் பற்றியது.

(பின்னரங்கிலிருந்து அந்த நால்வரும் வரும் ஓசை கேட்க மேலதிகாரி தன் அறைக்குள் சென்றுவிட அதிகாரி தன் மேசையில் தலைமேல் கையை வைத்துக்கொண்டு மேசையில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, உதவியாளன் மேலதிகாரியின் அறைக்குள் சென்றுவிடுகிறான்)

திரை

Series Navigation

கணேசன்.சு பாண்டிச்சேரி

கணேசன்.சு பாண்டிச்சேரி

றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

கணேசன்.சு பாண்டிச்சேரி

(மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு>)

நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில் அனுமதியின்றி உலவிக்கொண்டிருக்கிறது. தங்குமிடங்களிலெல்லாம் அது தன் புரிதலை மாற்றி மாற்றி உணத்துகிற படியால் அதனை போகுமிடமெங்கும் துரத்தித்திருத்தும் தொழிலில் என்னை உடன்படுத்துகிறேன். தோல்வியால் துவலாமல். காகிதம் கணத்துக்கொண்டே இருக்கிறது. அதனுள் நகரும் எழுத்துக்களின் கனவும் விரிந்துகொண்டே இருக்கிறது. இதன் முடிவு எங்கே யாரால் எப்படி தீர்மானிக்கப்படுமோ என்ற பயமே இல்லாமல்> பயத்தை அவ்வெழுத்தின் ஆதிவாசிக்கு கொடுத்துவிட்டு பயணித்துக்கொண்டே இருக்கிறது அதன் பொருள். தூக்கமில்லை உண்ட உணவும் ஞுாபகத்தில் இல்லை. எழுத்தின் சிற்பியான என்னை அந்தக்காகிதம் மீண்டும் வந்து சேரவேண்டும் என்ற நிர்பந்தத்தால் காத்திருக்கிறேன். இன்னும் வரவில்லை.

(ஏதோ ஞுாபகம் வந்தவனாக சிலிர்த்துக்கொண்டு பார்வையாளர்களைப்பார்த்து)

சே. இன்னும் நான் எழுதேவே இல்லை எப்படி திரும்பிவரும்.

(அப்போது அவனைப் போலவே உடையணிந்து அவனது மனசாட்சியாகத் தோன்றும்படி ஒருவன் மேடைக்குள் வருகிறான். நபர்1க்கு பின்னால் வந்து)

நபர்2:நிறைய கடுதாசிங்க எழுதப்படாமலே போயிருக்கு. நிறைய கடுதாசிங்க எழுதப்படாமலேயும் வந்திருக்கு.

நபர்1:எனக்கு அது மாதிரியான ஒரு அனுபவம் இருக்கு.

நபர்2:இருந்தா சரி.

நபர்1:ஏன் இல்லன்னா என்னை என்ன மனுசனில்லன்னு ஒதுக்கிடுவீங்களா!

நபர்2:யாரும் யாரையும் ஒதுக்கமுடியாது. தானா ஒதுங்கிக்கிறது தான் நடக்குது.

நபர்1:நீ போ. எனக்கு வேலயிருக்கு. எழுதனும்.

நபர்2:நான் பேறேன்.

நபர்1:சரி. சரி.

(நபர்2மவன் சென்றுவிட> நபர்1மவன் மேசைக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டு காகிதக்கட்டிலிருந்து ஒரு காகிதத்தை உருவி எழுதத்தயாராகிறான்.)

உயர்திரு.(யோசிக்கிறான்) மேதகுவைவிட உயர்திரு பொருத்தமானதுதான். மேதகு. . . மேதகுதான் ஒசத்தி. உயர்திருவுக்கும் மேதகுவுக்கும் ஐயாவுக்கும் மரியாதைக்குரியவுக்கும் . . . (சிரிக்கிறான். சப்தமாக சிரிக்கிறான்) நான் காகிதத்தில் எழுதக்கூடிய மரியாதைக்குரிய அடைமொழியினால் எழுத்தோட பொருளுக்கு சாதிக்கிறதுக்கான சாத்தியம் அதிகமாவுதுன்றது என்னோட மோலதிகாரியின் அனுபவம். அது உண்மையா இல்லையாங்கறது வேற விசயம். ஆனா அது அப்படி நடக்குதுன்றது வாஸ்தவம். என்ன செய்யறது ஒரு அடைமொழிய கொடுத்துடனும். ஏன்னுள்ளாம் கேக்கக்கூடாது. ஏன்னா> அதான் சரி. (குனிந்து எழுதுகிறான். எழுதுவதைச் சப்தமாக சொல்லிக்கொண்டே)

உயர்திரு.

(சட்டென ஏதோ யோசித்தவன் கோபத்துடன் பேனாவை மேசைமீது ஓங்கி ஒரு குத்துவிடுகிறான். பிறகு சப்தமாக)

இந்த அடைமொழியால நான் என்ன எழுதனுமோ அது சரியா வரவேமாட்டேங்குது. திரும்பத்திரும்ப உயர்திரு உயர்திரு உயர்திரு . . . சே. எல்லா எழுத்தும் ஒரே பொருளோட இருக்கு. உயர்திருவே நூறு தடவ . சே.

(மேசையில் தலைவைத்து சேர்ந்து சாய்ந்துவிடுகிறான்)

புதிய கதாபாத்திரம் உதவியாளன்> உள்ளே வருகிறான். தன்னை மறைக்கும் பெரிய காகிதக்கட்டுடன். நேரே வந்து மேசைமீது வைக்க. அவன் காகிதக்கட்டினால் மறைக்கப்படுகிறான். அவன் எழாமல் அங்கிருந்தபடியே.

உதவியாளன்: (கையை மட்டும் காகிதக்கட்டின் மேல் தூக்கிக்காட்டி) பார்வையாளர்களே. நான் தெரிகிறேனா. நான் இங்கே தான் இருக்கிறேன். இது மறைத்துவிடும் என்று எனக்குத்தெரியும்.அதனால்தான் என் இருப்பை உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்துகிறேன். நான் இருக்கிறது தெரிகிறதா. (சிறிது மெளனம்) தெரியவில்லையா. தெரியாதுதான். ஆனால் நான் தான் காகிதத்தின் பின்னால் இருக்கிறேன் என்பதை உணர முடிகிறதா. (சிறிது மெளனம்) என்ன அதுவும் தெரியிவில்லையா. (பின் அவன் மறைப்பிலிருந்து எழுகிறான். அவனது தலைமட்டும் தெரியும் படி) இப்போ. (சிறிது மெளனம்) என்ன நான் முண்டமா. (சுதாரித்துக்கொண்டு) ஆமாம். கழுத்து மட்டும் தெரிந்தால் முண்டம் தான். ஆனால் நான் முண்டமில்லை. என்னால் தான் இந்த செயல்படுத்தக்காத்திருக்கும் அறிக்கைகளும் கோரிக்கைகளும் முடிவுக்கு வரப்போகிறது. சொல்லுங்கள். இப்போது நான் முண்டமா ?

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க.

(உதவியாளன் வேகவேகமாக நபர்1யை நோக்கி காகிதக்கட்டுக்குப்பின்னால் இருந்தவாரே)

உதவியாளன் : என்ன ஆச்சா என்ன ஆச்சான்னு கேட்டுக்கிட்டே இருக்காரே. என்ன ஆச்சா ?

(என கேட்க> ஒரு முறை அவனை முறைத்துவிட்டு காகிதத்தின் முன் யோசனையிலேயே இருக்கிறான்.)

மொறைப்பெல்லாம் ஏங்கிட்டதான் வேவும். அந்த ூஎன்ன ஆச்சாக்கிட்டூ வேவுமா ? என் தலையெழுத்து அங்க வசவவாங்கிக்கிட்டு இங்கியும் வசவ வாங்கவேண்டும்னு. சரி. சரி. வேலை ஆவட்டும். என்ன ஆச்சா. ஐயா கேக்கிறாரு.

நபர்1:உனக்குத்தெரியாதா வேல எந்த அளவுல இருக்குன்னு. நா வேற சொல்லித்தான் தெரியனுமா ? சும்;மா ஏம்பா டார்ச்சர் பண்ரீங்க. மனுசன் தான நானு> யோசிக்கவேணாம் ?

யாரு உன்ன மனுசனா இருக்கச் சொன்னது. மிசினா மாறிடு. மிசினா மாறினா வேல உடனே நடக்கும்ல. மிசினா மாறினா இன்னொரு செளகரியமும் இருக்கு. நீ பாட்டுக்கு வேல செஞ்சிக்கிட்டே இருக்கலாம். அங்க இங்க கொலறுபடி வந்துச்சின்னா வயித்தெரிச்சலோடு ரிப்பேர் பண்ணுவாணுங்களே ஒழிய மெசின திட்டமாட்டாங்க பாரு. மெசின திட்ற அளவுக்கு> மனுசனுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல இல்லையா ?

(நபர்1க்கு சிரிப்பு வந்துவிடுகிறது. உடனே உதவியாளனைப்பார்த்து)

நபர்1:உன்னால எப்படித்தான் இவ்ளோத்தியும் தாங்கிக்கமுடியுதோ.

உதவியாளன் : நாய் வேசம் போட்டா கொளச்சித்தான் ஆவனும்னு சொல்வேன்னு பாத்தியா. அதான் கிடையாது. நாயா வேசம் போட்டாலும் குதிரையா ஒரு சமயத்துல ஓடனும்> பன்றியா பீயத்திண்ணனும்> கழுதையா எட்டி ஒதைக்கனும். எல்லாத்தையும் செய்யனும். அவன் தான் உதவியாளன். இல்லன்னா உன்னமாதிரி ஆபீசரால்ல இருந்திருப்பேன். ஆபீசரா இருந்தா மட்டும் என்ன கிழியப்போவது. தோ. பொலம்புரீங்களே அதான் நடக்கும். என்னப்பாருங்க. அவரு சொன்னது உங்ககிட்ட சொல்லிட்டு நீங்க சொல்றத அவருக்கிட்டச் சொல்லப்போறேன். அவ்ளோதோன். இதுக்குள்ளேயும் அரசியல் இருக்கு. எப்படி யாருக்கிட்ட எதச்சொல்றேன்றதப்பொருத்து.

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க. (நபர்1:யைப்பார்த்து) என்ன சொல்ல. முடிஞ்சிடிச்சின்னு சொல்லவா.

நபர்1:(முந்திக்கொண்டு)இல்ல இல்ல

உதவியாளன் : அப்படின்னா முடியலன்னு சொல்லவா

நபர்1 : இல்ல அப்படிச்சொல்லாத.

உதவியாளன் : ஏதாவது சொல்லியாகணும். கேள்விக்கு சரியோ தவறோ ஏதாவதொரு பதிலைத்தந்தாகவேணும். சொல்லு. (நபர்1 அமைதிகாக்க) அப்படின்னா நானே சமயசந்தர்ப்பத்தப்பாத்து ஏதாவது சொல்லிடவா.

நபர்1:ம்

(உதவியாளன் சென்றுவிடுகிறான். நபர்1 தலையில்கையை வைத்துக்கொண்டு மேசையில் கவிழ்ந்துகொள்கிறான். நபர்2 மீண்டும் வருகிறான். வந்து நபர்1க்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு நபர்1 எழுதாமல் வைத்திருக்கும் காகிதத்தை எடுத்து அவன் எழுதுகிறான். நபர்1 இன்னும் யோசனையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க நபர்2 எழுதி முடித்துவிட்டதாக அவனது பாவனை வெளிப்படுத்துக்கிறது. அப்போது அவனது கையிலிருந்த பேனா அவனையறியாமல் மேசையில் வேகமாக விழ நபர்1 எழுந்துவிடுகிறான். எழுந்ததும் நபர்2 அருகில் இருப்பதைப்பார்த்து)

நபர்1:என்ன விசயம். ஏன் வந்தே. உன்ன நான் கூப்பிடலியே. இப்போல்லாம் உன்னோட தொந்தரவு அதிகமாயிட்டே வருது. அடிக்கடி வந்து என்ன அலகழிக்கிற.

நபர்2:அதுக்கு என்ன இப்ப. நான் வராம வேறயாரு உன்ன பாக்க வரப்போறா சொல்லு. நான் தான் நீ. நீ தான் நான். உனக்கு என்னத்தவிர வேறயாராவது என்ன மாதிரி நேர்மையா நீ நல்லா இருக்கணும்னு எதையாவது செய்வாங்களா ?

நபர்1:சும்மா பேசி என்னத்தொந்தரவு செய்யாத. நான் வேல செய்யனும். ஏற்கனவே ஒரு லெட்டர எழுதமுடியாம மண்டைய பிச்சிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆயிரத்தெட்டு தடவ ஆச்சா ஆச்சான்னு கேட்டு உசிர எடுக்கிறான். அந்தப்பாழப்போனவன். இது இல்லாம> நீ வேற.

நபர்2:லெட்டர் தான. (அவன் முன் இருந்த காகிதத்தை எடுத்துக்காட்டி) இந்த லெட்டரா. பாரு.

நபர்1 (காகிதத்தை எடுத்து அதில் எழுதியிருப்பதைப்பார்த்து) இதுல நான் எழுதவேயில்லையே. என்ன எழுதனும்னுல்ல யோசிச்சிக்கிட்டு இருந்தேன். எழுதியிருக்கே. இரு. இரு என்ன எழுதியிருக்குன்னு பாத்துர்றேன். (என அவன் அதைப்படிக்கத்தொடங்கும் முன் நபர்2 காகிதத்தைப் பார்க்காமலேயே சொல்லத்தொடங்குகிறான்)

நபர்2:இன்னார் இன்னார் பெற்ற இதைஇதையெல்லாம் இப்படிஇப்படி கொடுத்ததினால் என்னென்னவோ குளறுபடிகள் நிகழ்ந்தது என்பது என்னவோ உண்மைதான். அதனால் இதை இப்படி செய்ய முயற்சித்தோமானால்> எல்லாவற்றுக்குமான தீர்வு சிக்கலில்லாமல் கிடைத்து> நமது அரசின் புதிய திட்டத்திற்கு ஏற்றவொரு திட்டத்தை அதாவது செயல் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றொரு வழியை இதன் முலம் பெறலாம். எப்போது என்றால்> அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் அப்பணியைச் செய்வோருக்கு ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றால். ஆனால் இந்த திட்டம் வகுத்தலில் ஆரம்ப காலத் தவறுகள் முற்றிலும் நீக்கப்பட்டலும் எதிர்காலத்தில் தோன்றக்கூடியத் தவறுகளாக இன்னெ¢னதென்று தெளிவாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவிற்கு அனுமானிக்கவாவது முடிகிறபடியால் அவற்றை ஒவ்வொன்றாக தாங்களின் பார்வைக்கு வைக்கிறேன்> தங்கள் அதன் தேவையை உணர்ந்து உத்தரவுபோட்டால்.

(என அவன் வாசித்து முடிக்க நபர்1 மிகவும் சந்தோசம் அடைந்தவனாக அவனை மேசையிலிருந்தவாறே எக்கிக்கட்டி அணைத்து கன்னத்தைக்கிள்ளி ஒரு முத்தம் கொடுக்கிறான். நபர்2 முத்தத்தைத் துடைத்துக்கொண்டு)

நபர்2:எப்டி ?

நபர்1:எப்டின்னு நான் தான் கேக்கணும். இது எப்டி நடந்தது.

நபர்2:யாமிருக்க பயமேன்.

நபர்1:ஐயோ அப்பா சில சமயம் தொந்தரவா இல்ல ஆயிடுது.

நபர்2:அந்த சில சமயங்கல மட்டும்நீக்கிட்டு. நல்ல சமயங்கள் பல இருக்கிறதனால இனி என்னோட பேச்சக்கேட்டு சரியா நடந்துக்கோ.

நபர்1:உன்னக்கேக்கறதுன்னா என்ன ? என்னையே நான் கேட்டுக்கிறதுன்னா என்ன ? இரண்டும் ஒண்ணுதான. அதனால் இனி மேல் உன் பேச்சையே கேட்டு நடந்துக்கிறேன்.

( என அவன் சொல்லிவிட்டு மேசையிலிருந்த பெல்லை அழுத்துகிறான். உதவியாளன் மெல்ல ஆடியசைந்து வருகிறான். திமிறாக.)

உதவியாளன்:என்ன ஆச்சா.

நபர்1:ஆச்சுது.

(என சொல்லி அவனிடம் எழுதப்பட்ட காகிதத்தைக் கொடுக்கிறான். அவன் அதை உற்றுநோக்கி சில கணம் நபர்1யை வினோதமாகப்பார்த்துவிட்டு சப்தமாகச் சிரிக்கிறான்)

நபர்1 : ஏன் ஏன் எதுக்கு சிரிக்கிற ?

உதவியாளன் : சும்மா பொழுது போகணுமில்ல. அதான்.

நபர்1 : சரி சரி . அவரு தொந்தர தாங்கமுடியல. அவருக்கிட்ட இந்தக்கடுதாசியக்கொடுத்துடு (என அவன் சொன்னதும் உதவியாளன் மீண்டும் சப்தமாகச் சிரித்துவிட்டு கடுதாசியை அவனிடமே திருப்பிக்கொடுத்து)

உதவியாளன் : என்ன எழுதியிருக்கன்னு கொஞ்சம் படிச்சிப்பாரு.

(சட்டென கடுதாசியை வாங்கிப்பார்த்தவன் அதிர்ந்துபோகிறான்> பின் அவனிடமிருந்து உதவியாளன் அதைவாங்கி)

உதவியாளன்:(கடுதாசியைப்பார்த்து படிக்கிறான்) அன்புள்ள பொண்டாடிக்கு>

அன்புள்ள கணவன் எழுதுவது. நிற்க. நான் இன்னும் ஒரிரு மாதத்திற்குள் பணியிட மாற்றம் பெற்று ஊரோடு வந்துவிடுவேன். கவலைப்படாதே. யாரையும் கல்யாணம் செய்துகொண்டுவிடாதே. கொஞ்சம் பொறுமையாய் இரு. வந்துவிடுகிறேன். நானும் இங்கே யாரையும் காதலிக்கவில்லை. அதனால் நீயும். . . என்ன . . . நமக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது மறந்துவிடாதே. குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் அவர்களை வையாதே. அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும். செலவு செய்யாதே. அடிக்கடி ஓட்டல்போகாதே. பணத்தை மிச்சப்படுத்திவை. என் சம்பளத்தை நான் இந்த முறையாவது அனுப்ப முயற்சிக்கிறேன். உன் அப்பனிடமிருந்து பணத்தை வாங்காதே. வீட்டுக்கு வாடகைத்தரவேண்டாம். நான் வந்து பார்த்துக்கொள்கிறேன். என்னைப்பற்றி வீட்டுக்காரரிடம் பேசு. அவர் புரிந்துகொள்வார். அப்படி அவர் புரிந்துகொண்டால் அவரிடமே பணம் கொஞ்சம் கடனாக வாங்கிக்கொள். வட்டித்தருகிறேன் என்று சொல். ஆனால் நாம் வாங்கிய முதலைக்கூட திருப்பித்தரப்போவதில்லை என்பதை மனசில் வைத்து இவற்றைச் செய். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று கடுதாசி போட்டார்கள். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. அவர்களும் இன்னும் சில நாட்களுக்குள் கவலைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பிறகு உனக்கு கவலையேயில்லை. வேலைக்குப்போகாதே. போனால் குழந்தைகளுக்கு யார் சமைத்துத்தருவது. அப்படியாராவது இருந்தால் அவர்கள் வீட்டிலேயே குழந்தைகளை சாப்பிடச்சொல்லிவிட்டு வேலைக்குப்போ. அவர்களது குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது கலகம் ஏற்படுத்திக்கொண்டேயிரு. அப்போதுதான் அவர்களது வீட்டிலிருப்போரில் யாராவது ஒருவர் உனக்கு உதவியாக இப்பர்.

இவ்வளவையும் நான் சொல்வது உனக்காக இல்லை. நம் குழந்தைகளுக்காக இல்லை. எனக்காகச் சொல்கிறேன். சொன்னபடி கேள்.

(இப்படியாகப் படித்துவிட்டு அவன் விழுந்துவிழுந்து சிரிக்கிறான்.)

(பின்னரங்கிலிருந்து குரல்)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா.

(அவன் குரலுக்கு பயந்தவனாக)

உதவியாளன் : தோ ஆச்சுங்க. (நபர்1யைப்பார்த்து) ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான். என்ன சொல்ல இப்போ.

நபர்1 : ஆயிகிட்டே இருக்குன்னு சொல்லு.

உதவியாளன் : சரி. (என்று சொல்லிவிட்டு ஓடிவிடுகிறான்.)

(உதவியாளன் சென்றது நபர்1> நபர்2 வந்துபோன திசையைப்பார்த்து)

நபர்1:வரட்டும் அவன். அவன யாரு இதமாதிரி எழுதச்சொன்னது. (சட்டென ஞுாபகம் வந்தவனாக) இப்படியொரு கடுதாசியை நான் எழுதநெனச்சது உண்மதான். ஆனா நான் எழுதவேயில்லையே. எழுதாத காகிதத்துல தான் ரகசியமா எழுதினதா பெறுமையோடு வாசிச்சானே. அது எங்கே காணேம். எழுத நினைச்சு எழுதாம விட்டது இருக்கிறப்போ> நெனக்கமுடியாதது எழுதப்பட்டு இப்ப இல்லாம போயிருக்கே இது எப்படி ?

(அப்போது மேடைக்குள் நான்குபேர் வருகிறார்கள். அவர்களை 1>2>3 மற்றும் 4 என்போம். அவர்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் வெள்ளை ஆடையணிந்திருக்கிறார்கள். வந்தவர்கள் தாம் கொண்டுவந்த நாற்காலியை நபர்1னின் மேசைமுன் போட்டு அமர்ந்துகொண்டு)

1:நாங்க

2:நம்மல தெரியாதா

3:(நபர்1யைக்காட்டி) இவர எனக்கு ஏற்கனவேத்தெரியுமே. இவரத்தான் சொன்னீங்களா.

4:இவர உனக்கு ஏற்கனவேத் தெரியுமா.

(நபர்1 அவர்களை ஆச்சர்யமாகப்பார்க்கிறான்)

3:அதான் சோமுயில்ல சோமு> அவரோட பண்ணைக்குப் பக்கத்தல இருக்காப்பல. இவரு அப்பாருக்கு அந்த ஊர்ல ரொம்ப பெரிய மறியாத. போன எலக்கசன்ல அவருமட்டும் நமக்கு ஒத்தாசையா இல்லன்னு வச்சிக்க ஒத்தஓட்டக்கூட வாங்கிருக்கமுடியாது. (நபர்1யைப்பார்த்து) என்ன தம்பி எப்படியிருக்க . . . அப்பா எப்படி இருக்காறு . . . வேலயெல்லாம் எப்படி போயிகிட்டு இருக்கு . . . (அவனோடு வந்த வெள்ளையாடை மனிதன்2யைப்பார்த்து) இங்கு வேல சுத்தமா நடக்குதுன்னா அதுக்கு மொதக் காரணம் யாரு தெரியுமில்ல. நம்ம புள்ளத்தான். இந்த புள்ள மட்டும் இங்க இல்லன்னு வச்சிக்கோயேன். எந்த வேலையும் நடக்காது. ( நபர்1யைப்பார்த்து) என்ன தம்பி நான் சொல்றது. (மீண்டு வெ.ம3யைப்பார்த்து) நம்பி ஒரு வேலையை கொடுக்கலாம்.

4:நாங்கூட கேள்விப்பட்டிருக்கேன். உங்க பேரு வந்து . . .

1:பேரு என்ன பேரு. பேரெல்லாம் செய்யற வேலையில இருக்கு. இந்தப்புள்ளய பத்திபேசிக்கிட்டிருக்கப்பவே தெரியுதே. இதுல பேரு என்ன வேண்டிகிடக்கு. இங்க இன்னாரு> இந்தந்த வேலையயெல்லாம் சரியா செய்வாறே அவரு யாருன்னு கேட்டா ஆளையே காட்டப்போறாங்க.

(நபர்1 அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்து)

நபர்1:நீங்க

2:நீங்க தான் நாங்க.

(மற்றவர்கள் சப்தமாகச் சிரிக்கிறார்கள்.அவன் ஏதும் புரியாமல் பேந்தப்பேந்த முழிக்கிறான். அவர்களே தொடர்ந்)

1>2>3 மற்றும் 4 கோரசாக: ஆமாங்க நீங்க தான் நாங்க. நீங்க இல்லாட்டி நாங்க இருக்க முடியுமா. இல்ல உங்களால இருக்கிற நாங்க இல்லாத தான் நீங்க இருக்கமுடியுமா. அதச்சொல்றோம். கொழம்பிக்கவேணாம்.

2:இப்ப உங்களுக்கு நாங்க யாருன்னு தெரிஞ்சிருக்குமே. தெரியாமப்போனாத்தான் என்ன கெட்டுடப்போவுது. இப்ப நாங்க எதுக்கு வந்துருக்கோம்னா.

3:இதெல்லாம் போயி சொல்லிக்கிட்டு. அவரு என்ன வேல செய்யறாரு. அவர பாக்கறவங்களுக்கு அவரு என்ன செய்யனும் செய்யப்பொறார்ங்கறத எல்லாம் .. . எதுக்குங்க இப்ப. சார். முடிச்சிடுங்க. பின்னால கவனிச்சிக்கிறோம்.

நபர்1:என்ன சொல்றீங்க.

4:ஆட நீ ஒண்ணு தம்பி. சத்தமா வெவரமாவா சொல்வாங்க. நாளைக்கு வரோம் முடிச்சி வையுங்க. என்ன ? அப்பாவக்கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வரேன். என்ன.

(என சொல்லிவிட்டு நால்வரும் அவனுக்கு வணக்கம் தெரிவிச்சிட்டு வந்த வழியே வந்ததுபோலவே சென்று மறைகிறார்கள். நபர்1க்கு யார் இவர்கள். எதுக்கு வந்தார்கள் என தெரியாமல் பார்வையாளர்களைப்பார்த்து)

நபர்1:இது என்னங்க அநியாயமா இருக்கு. நான் பாட்டுக்க வேலயச்செஞ்சிக்கிட்டு இருக்க இவங்க பாட்டுக்கு வந்து எதையோ செஞ்சிவைங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்களே. யாரு இவங்க. என்னத்தச்செய்யச் சொல்றாங்க. எதுக்கு அந்த வேலைய சொல்லாம போனங்க.

(என அவன் கேட்டுக்கொண்டே மீண்டும் தலையில் கையைவைத்துக்கொண்டு மேசையில் தலை கவிழ்க்கிறான். உறங்கிவிடுகிறான். அப்போது மீண்டும் உதவியாளன் உள்ளே வந்து அவனை எழுப்ப முயற்சித்துத் தோல்வியுற்ற அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்து காகிதங்களை எடுத்து ஆராய்கிறான். ஆதில் மிகவும் ஆழ்ந்துவிடுபவனாகக்காணப்படும் உதவியாளன் ஒரு கட்டத்தில் எழுந்து அங்குமிங்கும் நடந்தவாறு கடுதாசிகளைப்படிக்கிறான். அமைதியாக ஆரம்பத்தில் படித்துக்கொண்டிருந்தவன்> பின் சப்தமாக படிக்கிறான். அவனது சப்தமானது வார்த்தைகளற்ற விதத்தில் இருக்கிறது. அவற்றிற்கு ஏற்ற முகபாவனையை வெளிப்படுத்துவாக அவனது நிலை இருக்கிறது.)

(அப்போது கழுத்துவரை கருப்பு உடையணிந்த ஒருவர் வேகவேகமாக மேடைக்குள் வருகிறார். அவர் அந்த அலுவலகத்தின் மேலதிகாரி. ஊழியனைத்தேடியபடி வந்தவர்அவனுக்கு அருகில் வந்து)

மேலதிகாரி: என்ன ஆச்சா!

(அவர் பின்னரங்கிலிருந்துதான் கேட்கிறார் என அவரைப்பார்க்காமல் உதவியாளன்)

உதவியாளன்: தோ ஆச்சுங்க

மேலதிகாரி: (மறைந்துகொண்டு) இன்னுமா

உதவியாளன் : இன்னுமான்னா. இன்னுந்தாங்க.

மேல்அதிகாரி : சீக்கிரம்

உதவியாளன் : சீக்கிரம்னா. ரொம்ப சீக்கிரமா. சாதாரண சீக்கிரமா.

மேல்அதிகாரி : ரொம்ப சீக்கிரம்.

உதவியாளன் : அப்டான்னா பாதி வேல முடிஞ்சிருந்தாலுமா ?

மேல்அதிகாரி : பரவாயில்ல. அவன் முடிச்சிட்டானா ?

உதவியாளன் : முடிஞ்சிட்டான்.

மேல்அதிகாரி : முடிச்சிட்டானான்னு கேட்டேன்.

உதவியாளன் : முடிச்சிருப்பான்.

மேல்அதிகாரி : முழுசாவா.

உதவியாளன் : இல்ல. கொஞ்சமா.

மேல்அதிகாரி : பாதியாவா.

உதவியாளன் : இருக்கலாம்.

மேல்அதிகாரி : அவன் இருக்கானா.

உதவியாளன் : இருந்தான்.

மேல்அதிகாரி : இப்ப அங்க இருக்கானா.

உதவியாளன் : அவன் இருக்கான்னு சொல்றதா. இருக்குன்னு சொல்றதான்னு தெரியல.

மேல்அதிகாரி : தெரிஞ்சிக்கிட்டு சொல்லு.

உதவியாளன் : கொஞ்சம் பொறுங்க சார்.

மேல்அதிகாரி : சரி.

உதவியாளன் : (அவன் தலைகவிழ்ந்திருப்பவனை எழுப்பி) சார் முடிச்சிட்டியான்னு கேக்கராறு.

நபர்1 : எத

உதவியாளன் : அறிக்கையைக்கான செயல்திட்டத்த.

அதிகாரி : மொதல்ல அறிக்கையே எனக்குப்புரியல.

உதவியாளன் : புரியாததுதான் அறிக்கை. இல்லன்னா. அதுவே செயல்திட்டமா இருந்து இன்னேரம் நடைமுறையில இருக்கும்ல.

நபர்1 : இரு. இரு. அவருகிட்ட அறிக்கைய விவரிக்க கேக்கறதுக்கு முன்ன> உனக்குத்தெரிஞ்சத சொல்லு.

உதவியாளன் : இது அவருக்குத் தெரிஞ்சிருந்துதுன்னா உன்கிட்ட வேலய கொடுத்திக்க மாட்டாரு.

நபர்1 : யாருக்கிட்ட கொடுத்திருப்பாருங்கற ?

உதவியாளன் : என்கிட்ட.

நபர்1 : அப்படி ஒருவேள நடந்திருந்ததுன்னா இன்னேரம் உலகத்துஅரசியல்கூட தரமானதா மாறியிருக்கும். வேலை செய்ய வேண்டிவன் கிட்டத்தான் வேலயக் கொடுக்கறாங்களே ஒழிய வேலய செய்யத் தெரிஞ்சவங்ககிட்ட ஒருபோதும் கொடுக்கறதில்ல ஏன்னா. நான்தான்அதுக்கு தகுதியானவன்னு என் படிப்பு முத்திரக்குத்திருக்குன்னு நம்பறாங்க. அப்படியேதான் நான் வாழ்நாள் பூரா இருப்பேன்னும் என்ன ஒரு சட்டத்துக்குள்ளாற முடக்கிப்போட்டுப் பார்க்கறாங்க. ஆனா அதுலேயும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்யுது. நான் ஆரம்பத்துல இந்த மாதிரியான அறிக்கைகள எல்லாம் நானே முன் வந்து வாங்கி செஞ்சதால என்னிட்டயே தொடர்ந்து பொறுப்ப ஒப்படச்சிட்டு என் முந்தய மேலதிகாரிங்களெல்லாம் ஒவ்வொரு கமிசனுக்கும் போயிட்டு கத்தைகத்தையா குறிப்புகள கொண்டுவந்து மேலும் மேலும் அறிக்கைகளாக என் மேசைமேல கொட்டிட்டுப் போயிடுவாங்க. எங்க போவாங்க தான் பொண்டாட்டிப்புள்ளக்குட்டிகள கூட்டிக்கிட்டு பீச்சு சினிமான்னும் கல்யாணம் கருமாதின்னும். நான் தான் எந்த விசேசத்துக்கும் போவ முடியாம வீட்ல எனக்கும் அவங்களுக்கு பெரிய இடவெளியே ஏற்படுத்திக்கிட்டு எதிலேயும் கலந்துக்க முடியாம வேலயே கதின்னு இரவு பகலுன்னும் பாக்காம இருந்தேன். இது தொடர்ந்து வந்த எல்லா மேலதிகாரிங்களாலும் இதேபோல நடத்தப்பட்டதால இப்ப நான் அதிலேர்ந்து விலகிக்க முயற்சிக்கிறேன். தெரியுமா. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூணு கடுதாசிங்கள பாத்துபதில் ஆனுப்பிட்டாப்போதும். அதுதான் என்வேல. அத இப்ப செய்ய முடிவு செஞ்சிட்டேன். இது அதிகபடியான மேலதிகாரிங்களோடு வேலய நானே தலையில போட்டுக்க தயாராயில்ல.

உதவியாளன்: இது உங்களுக்குன்னு இல்ல. எல்லாருக்கும் நடக்குது.

(மறைந்திருந்த மேலதிகாரி கோபத்தோடு வேளியேறுகிறார். நபர்1> மெல்ல தன் நாற்காலியைவிட்டு எழுந்து உதவியாளனுக்கு அருகே வந்து)

நபர்1: இது வரைக்கும்நான் சொன்னத எல்லாம் மறந்துடு. இனி சொல்லப்போறதுதான் நெஜம். (என சொல்லிவிட்டு தன்னை அதிசயமாகப்பார்க்கும் உதவியாளனைப் பொருட்படுத்தாமல்> தன் மேசையிலிருந்த ஒரு கோப்புக்கட்டை கொண்டுவந்து அவனிடம் கொடுக்க> உதவியாளன்)

உதவியாளன் : என்ன இது

நபர்1 : அறிக்கைக்கான செயல்திட்டம்.

உதவியாளன் : முடிக்கல. முடிக்க முடியல. நீயாவது எனக்கு உதவி செய்யு அதுயிதுன்னு சொன்னீங்க ?

நபர்1 : அது அப்ப. அப்படிச் சொல்ல வேண்டிய சூழல் இங்க இருந்தது. சொன்னேன். இப்ப கத வேறு.

உதவியாளன் : என்னங்க புரியமாட்டேங்குதே.

நபர்1 : உன்னால செய்ய முடிஞ்சாலும் இதுமாதிரியான குழப்பத்தை உன்னால் ஏற்படுத்த முடியாததனாலதான் நீஉதவியாளனாகவே இருக்க> நான் உனக்கு அதிகாரியா இருக்கேன்.

(உதவியாளன் ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்துகொண்டே மேலதிகாரி சென்ற திசையை நோக்கிச்சென்று மறைகிறான். நபர்1 முன்மேடைக்கு வந்து)

நபர்1: (பார்வையாளர்களைப்பார்த்து) எனக்குத் தெரியாதுன்னு என்ன வேவுபார்த்தாறே. அவரு அறிக்கைய சரி ஞெ¢சிட்டாலும் அந்த நாலுபேரு அதான் நாற்காலியோட வந்து நாற்காலியோட போனாங்களே அந்த நாலுபேரு வந்துபோன பின்னாடி> “என்ன ஆச்சா . . . என்ன ஆச்சா . . .” ன்னு அடிக்கடி கேக்க ஆரம்பிச்சதுதான் :அவரு அந்த ஆட்டம் ஆட்ராறுன்னு தெரிஞ்சுபோச்சு. அதனாலதான் கொஞ்சம் இழுத்தடிச்சேன். அவங்களுக்கு ஏததமாதிரி நாம வேலய செய்யறதுக்கு இருக்கோமா> இல்ல மக்களுக்கு ஏத்த மாதிரி செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கோமோ ? இன்னேரம் யோிச்சிருப்பாரு. (என அவன் சொல்லிவிட்டு மீண்டும் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொள்கிறான். அப்போது மீண்டும் நாலுபேரும் வருகிறார்கள்> அவர்கள் வரவும் மேலதிகாரி அவர்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவனைக் கவனிக்கிறார்)

1:தம்பி செளக்கியமா.

நபர்1 : இருக்கேன்ங்க. நீங்க பாட்டுக்கு என்ன ஏதுன்னு சொல்லாம கொல்லமா போயிட்டாங்களா எனக்கு கையும்ஓடல காலும் ஓடல. ஆனா கண்டுபிடிச்சேட்டேன் பாத்தீங்களா. வந்து சேந்துச்சா.

2:(கோபமாக) வந்து சேந்துச்சு. ஆனா நான் எதிர்பாத்தமாதிரி இல்லியே.

3:எங்களுக்குன்னு செய்யறதா எதிரிக்கு ஏத்தமாதிரி செய்ஞ்சிட்டியே தம்பி.

நபர்1:யாருங்க எதிரி.

2:அதன்ம்பா.

நபர்1 : புரியலிங்க.

4:கெட்டிக்காரந்தம்பி நீ. எங்க வாயாலேயே சொல்லவைக்கப்பாக்கிறியே.

நபர்1:நீங்க உங்கத் தேவைய உங்க வாயாலத்தானே சொல்லனும். வேற யாரு வாயால சொல்லறதா திட்டம்.

1:கிண்டல் வேணாம்பா.

2:இருந்தாலும் உங்கப்பா மாதிரி வராறது.

நபர்1:எதுங்க. எங்கப்பாமாதிரி வராது.

2:யாருக்கு என்னத் தேவன்னு தெரிஞ்சு செய்யறதுல அவரு கெட்டிக்காரு.

நபர்1:நானுந்தான். என்னையுந்தான் அப்படிச் சொல்றாங்க.

1:யாரு சொல்றது. எங்களுக்கு வேண்டாதவங்களா இருப்பாங்க.

நபர்1:யாருங்க உங்களுக்கு வேண்டாதவங்க. யாருன்னு சொல்லமா வெறுமனே வேண்டாதவங்க. வேண்டாதவங்கன்னு குத்துமதிப்பா பேசிக்கிட்டே இருக்கீங்களே.

4:ஒண்ணுந்தெரியாத பாப்பா பாரு நீ.

நபர்1:சொல்லறது புரியறமாதிரி சொல்லுங்க.

1:கேட்டுக்கோ. இப்பவும் நேரம் கடந்துடல. இன்னும் இரண்டு மூணுநாள் இருக்கு. அதுக்குள்ளாற எங்களுக்குச் சாதகமா மாத்தினீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்ல.

நபர்1:இல்லன்னா.

(நால்வரும் விறுவிறென கோபத்தோடு வெளியேற. இதுவரைப்பின்னால் ஒளிந்திருந்த மேலதிகாரியும் அவனுக்குத்தெரியாமல் உள்ளே சென்று மறைகிறார்)

நபர்1: (பெல்லை அடிக்கிறான் . உதவியாளன் உள்ளே வருகிறான். அவன் கூட நபர்2ான நபர்1னின் மனசாட்சியும் உள்ளே வருகிறது)

நபர்1: கோப்பு கொண்டு போனாயே என்ன ஆச்சு.

உதவியாளன்: மேலதிகாரியிடம் கொடுத்திருக்கேன்.

நபர்1 : என்ன சொன்னார்.

உதவியாளன் : ஒன்னும் சொல்லல.

நபர்2:போன் செஞ்சி அந்த நாலுபேரையும் வரச்சொல்லியது ஏன் ?

நபர்1: போன் செஞ்சி அந்த நாலுபேரையும் வரச்சொல்லியது ஏன் ?

உதவியாளன்: ஏன்னு எனக்குத்தெரிஞ்சா . . .சொல்லமாட்டேனா.

நபர்2:அப்ப போன் செஞ்சாரா ?

நபர்1: அப்ப போன் செஞ்சாரா ?

உதவியாளன் : ஆமாம் போன் செஞ்சாரு.

நபர்2 : அந்த நாலுபேருக்கா ?

நபர்1 : அந்த நாலுபேருக்கா ?

உதவியாளன் : அந்த நாலுபேருக்குத்தானான்னு தெரியாது.

நபர்2 : அவரு என்ன பேசினாரு

நபர்1 : அவரு என்ன பேசினாரு

உதவியாளன் : கோப்பு தயாராயிடுச்சு. ஆனா . . .ன்னாறு

நபர்1 : சரி நீ போவலாம்.

நபர்2 : சரி நீ போவலாம்.

உதவியாளன் : சார். இப்ப என்ன சார் நடந்துகிட்டு இருக்கு. எல்லாம் மாய மந்திரம் மாதிரி இருக்கே சார். எனக்கு ஏதாவது தொந்தரவு வருமா சார். புள்ளகுட்டிகாரன் சார்

அதிகாரி : உனக்கு ஒண்ணும் ஆகாது நீ போவலாம்.

உதவியாளன் : சரி சார்.

(என் சொல்லிவிட்டு அவன் சென்றதும் நபர்2 நபர்1ன்முன் வந்து)

நபர்2 : இங்க பார். இது எங்க போய் முடியப்போவுதோ. ஆனா நீ உன்ன பாதுகாத்துக்கோ. அதுதான் என்னால சொல்ல முடியும்.

நபர்1 : உன்னால மட்டுமில்ல யாரலும் இப்பத்திக்கு இதத்தான் சொல்ல முடியும். சரி. நாலுபேரு வந்துபோனப்போ நீ என்னக்காப்பாத்தியிருக்க. அதுக்கு உனக்கு நன்றி.

நபர்2 : நானா உன்னையா. என்னப்பா. நான் உன்னோடய மனசாட்சிப்பா நானு. என்னால அப்போப்போ ஏதாவது குறிப்பா சொல்லமுடியுமே தவிர வேறென்ன பெரிசா செய்ய முடியும் ?

நபர்1 : அந்த அவ்வப்போது குறிப்பா சொல்றதுதான் என்னக்காப்பாத்தியிருக்கு. ஆனா இன்னொரு பெரிய வேல பாக்கியிருக்க. மேலதிகாரியோட அடுத்த நடவடிக்கைய எதிர்பார்க்கிறேன். அதுமட்டும் சரியா வந்துடுச்சின்னா அப்புறம் நான் என் வேலய திருப்தியா செஞ்சிட்டதா திருப்தி வரும்.

(அப்போது அவனது மேலதிகாரி அவசரஅவசரமாக அவனை நோக்கி வருகிறார். ஒரு காகிதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு. அவனை நெறுங்கியதும் அந்தக்காகிதத்தை தன் பின்னே மறைத்துக்கொண்டு)

மேல்அதிகாரி : என்ன ஆச்சா ?

நபர்1 : ஆச்சு சார்.

மேல்அதிகாரி : என்ன ஆச்சு.

நபர்1 : நீங்க கேட்டதுசார்.

மேல்அதிகாரி : என்ன நான் கேட்டேன்.

நபர்1 : நீங்க கேட்டதுதான சார்.

மேல்அதிகாரி : நான் கேட்டது நடந்துடிச்சா. அப்படின்னா இனி நீ தேவையில்லை.

நபர்1 : சரி சார்.

மேல்அதிகாரி : நான் உன்ன வேண்டாம்னு சொல்றேன். சரிங்கிற.

நபர்1 : வேற என்ன சார் செய்யனும்.

மேல்அதிகாரி : போராடனும்.

நபர்1 : எனக்கு தேவையில்லை. சார்.

மேல்அதிகாரி : ஏன் தேவையில்லைங்கற.

நபர்1 : எனக்கு இந்த வேல திரும்ப வேணும்னாதானே சார் போராடனும்.

மேல்அதிகாரி : யே அப்பா. உன்ன ஒண்ணும் பண்ணமுடியாது.

நபர்1 : சரி சார். வெவரத்தச் சொல்லுங்க.

மேல்அதிகாரி : அப்ப இதுவரைக்கும் நான் வெவரமா இல்லைங்கிறியா ?

நபர்1 : உங்களுக்குத்தான் தெரியுமே. வெவரமா சொல்லுங்கன்னு சொன்னதும் நீங்களே சொல்லிக்கிட்டிருக்கிறத நிறுத்திட்டு வேற ஒண்ணுக்குத்தாவ தயாராகும் போதே தெரியலிங்களா சார். நீங்க இதுவரைக்கும் சும்மாதான் பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு. நான் என்னா சார். இன்னிக்குத்தானா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என் சர்வீஸ்ல உங்களமாதரி நெரையா அதிகாரிங்களப் பாத்துட்டேன் சார்.

மேல்அதிகாரி : ஆமாம்பா. நான் ஒத்துக்கரன். உன்னோட சர்வீசாலத்தான் இன்னிக்கு நாம நல்ல சேதிய பெறமுடிஞ்சிருக்கு.

நபர்1 : என்ன சார். அறிக்கையோட செயல்திட்டத்த தயாரிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களா ?

மேல்அதிகாரி : ஐயோ! எப்டிய்யா இது.

நபர்1 : அதுக்காகத்தான நாம இந்த நாடகத்தையே போட்டிருக்கோம். வந்த நாலு அரசியல்வாதிங்களையும் ஏமாத்தியிருக்கோம். உங்களுக்கு நான் எதிரானவனாகவும் எனக்கு நீங்க எதிரானவராகவும் அவர்கள் முன்னால போட்ட நாடகத்தால தான் இந்த நல்ல விசயம் நடந்திருக்கு. இல்லன்னா. அவங்க கேட்டுக்கிட்ட மாதிரி நாம மக்களுக்கு எதிரான ஒரு செயல்திட்டத்த கொடுத்திருப்போமே. டிரான்ஸ்பருக்குப்பயந்து.

மேல்அதிகாரி : ஆமாம்பா. அதே சமயம் நீ கொடுத்த ஒரு அறிக்கையை அவங்ககிட்ட கொடுத்தப்போ. அது செயல்படுத்த முடியாத திட்டம்னு எனக்கு தெரியும். அதனோட உள்நோக்கம் என்னன்னும் தெரியும். அதனால தான் அவங்ககிட்ட அப்படியே கொடுத்தேன். இப்போ அவங்களே அத நிரைவேற்ற முடியாதுன்னு> வேற ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி ஒதுக்கிட்டாங்க.

நபர்1 : ஆமாம் சார்.

(அப்போ உதவியாளன் உள்ளே வந்து)

உதவியாளன் : சார். உங்க நாடகத்துல என் தலதான் சார் ரொம்ப உருண்டிடுச்சு. என்னப்போட்டு கொட கொடன்னு இரண்டுபேரும் கொடஞ்சிட்டாங்களே. ஆனா ஒன்னு சார். மக்களுக்கு உழைக்கிற எண்ணம் இருக்கிறவங்க மக்களுக்கு எதிரான மறைமுக முதலாளிகள்ட்டேர்ந்து எப்படியெல்லாம் நாடகமாடி காரியத்த சாதிக்க வேண்டியிருக்குப்பாத்தீங்களா.

மேல்அதிகாரி : அதுசரி. காலையில ஏதோ கடுதாசி வந்துருக்குன்னு சொன்னியே எடுத்துவா போ.

(அவன் சென்ற வேகத்தின் மீண்டும் கையில் ஒரு கடுதாசியோடு வருகிறான்.)

மேல்அதிகாரி : அமைச்சரவையிலேர்ந்துதான். (அதைப்பிரித்தவர் சில நெடிகளுக்கு அப்படியே உறைந்துபோகிறார். அவரைப்பார்த்த எழுத்தர்)

நபர்1 : என்ன சார் அடுத்த அறிக்கை வந்திருக்கா. செயல்திட்டம் ஏற்படுத்தித்தரணுமா.

மேலதிகாரி: ஆமாம.;

நபர்1 : சரி அத படிங்க.

மேலதிகாரி: மக்கள் ஏழ்மையில் இருப்பதால் அவர்களது ஏழ்மையை ஒழிக்க> எல்லா மாநிலத்துக்கும் எல்லாத்தரப்பு மக்களுக்கும் இலவச மதிய உணவுத்திட்டம் பற்றியது.

(பின்னரங்கிலிருந்து அந்த நால்வரும் வரும் ஓசை கேட்க மேலதிகாரி தன் அறைக்குள் சென்றுவிட அதிகாரி தன் மேசையில் தலைமேல் கையை வைத்துக்கொண்டு மேசையில் சாய்ந்து அமர்ந்துகொள்ள> உதவியாளன் மேலதிகாரியின் அறைக்குள் சென்றுவிடுகிறான்)

திரை

கணேசன்.சு பாண்டிச்சேரி

Series Navigation

கணேசன்.சு பாண்டிச்சேரி

கணேசன்.சு பாண்டிச்சேரி