ரிப்பன் பக்கோடா
Published December 22, 2001 • By

கடலைமாவு –ஒன்றேகால் ஆழாக்கு
அரிசிமாவு –அரைஆழாக்கு
மிளகாய்ப்பொடி –1ஸ்பூன்
நெய் –2ஸ்பூன்
உப்பு –1ஸ்பூன்
கடலைமாவு, அரிசிமாவு இவற்றுடன் மிளகாய்ப்பொடி, நெய், உப்பு சேர்த்து நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
ரிப்பன் பக்கோடா அச்சினால் முறுக்கு போல் பிழிந்து எண்ணெயில் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.